தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 December 2018

அகில இலங்கை ரீதியில் 2ம் - 3ம் இடங்களைப் பெற்ற முஸ்லிம் மாணவர்கள்













நேற்றிரவு வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் உயிரியல் தொழிநுட்ப பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தையும் சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவன் முஹைதீன் பாவா ரிசா முஹமத் பெற்றுள்ளார் (வலது).
இதேவேளை, உயிரியல் விஞ்ஞானத்துறையில் அகில இலங்கை மட்டத்தில் மூன்றாமிடத்தை மாத்தளை சாஹிரா மாணவன் முஹம்மத் ரிஸ்மி ஹகீம் கரீம் பெற்றுள்ளார் (படம் - இடது).
இவை தவிரவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பௌதீக, உயிரியல் விஞ்ஞான பிரிவுகளிலும் முறையே ஹனீபா முஹம்மத் பர்ஹாத் (மட். புனித மிக்கேல்) மற்றும் பாத்திமா சுக்ரா ஹிதாயத்துல்லா (ஏறாவூர் அலிகார்) ஆகியோர் உட்பட ஒன்பது மாவட்டங்களில முஸ்லிம் மாணவர்கள் மாவட்டரீதியில் முதலிடங்களைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Source :sonakar.Com

A/L பரீட்சையில் தேசிய ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர்கள்


2018 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (29) வெளியாகின. அதற்கமைய தேசிய ரீதியாக முதலிடம் பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வௌியிடப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடத்தை பிடித்த மாணவர்களின் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உயிரியல் விஞ்ஞான பிரிவு
முதலாம் இடம் - கலனி ராஜபக்ஷ - கம்பஹா ரத்னவெலி மகளிர் பாடசாலை இரண்டாம் இடம் - ரவிந்து ஷஷிக - கொழும்பு டீ.எஸ். சேனாநாயக்க கல்லூரி மூன்றாம் இடம் - ஹக்கீம் கரீம் - மாத்தளை சாஹிரா கல்லூரி
பௌதிக விஞ்ஞான பிரிவு
முதலாம் இடம் - சத்துனி விஜேகுனவர்தன - கொழும்பு விசாகா மகளிர் வித்தியாலயம் இரண்டாம் இடம் - சமிந்து லியனகே - காலி ரிச்சட் கல்லூரி மூன்றாம் இடம் - தெவிந்து விஜேசேகர - கொழும்பு ரோயல் கல்லூரி
வர்த்தக பிரிவு
முதலாம் இடம் - கசுன் விக்ரமரத்ன - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் இரண்டாம் இடம் - உச்சினி ரணவீர - கம்பஹா ரத்னாவலி மகளிர் பாடசாலை மூன்றாம் இடம் - மலிதி ஜயரத்ன - கொழும்பு மியுசியஸ் கல்லூரி
கலை பிரிவு
முதலாம் இடம் - சேனதி அல்விஸ் - பாணந்துறை லைஸியம் சர்வதேச பாடசாலை இரண்டாம் இடம் - சித்துமினி எதிரிசிங்க - குருணாகல் மலியதேவ வித்தியாலயம் மூன்றாம் இடம் - இஷானி உமேஷா பிட்டிகல - கண்டி மஹாமாயா மகளிர் பாடசாலை
பொறியியல் தொழில்நுட்பலியல் பிரிவு
முதலாம் இடம் - யசாஸ் பத்திரன - கொழும்பு ஆனந்தா கல்லூரி இரண்டாம் இடம் - தரிந்து ஹேஷான் - கொழும்பு ஆனந்தா கல்லூரி மூன்றாம் இடம் - சேஷான் ரங்கன - நிக்கவரெட்டிய மஹாசேன் கல்லூரி
தொழில்நுட்பவியல் பிரிவு
முதலாம் இடம் - சந்துனி கொடிப்பிலி - கம்புருப்பிட்டிய நாரன்தெனிய மத்திய மகா வித்தியாலயம் இரண்டாம் இடம் - ரிஸா மொஹமட் - சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயம் மூன்றாம் இடம் - விசிந்து லக்மால் - ஹோமாகம மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயம்.





Source:ada derana

22 November 2018

நாவுக்கு இலகுவானதும் மீசானுக்கு பாரமானதும் இறைவனுக்கு விருப்பமானதுமான ஒரு திக்ர்


ஊட்டச்சத்து குறைபாடு: ஏமனில் மூன்று வருடங்களில் 85,000 குழந்தைகள் பலி





ஏமனில் கடந்த மூன்றாண்டுகளாக நடந்து வரும் போரின்போது மட்டும், கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 85,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்று மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னணி தொண்டு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.

ஏமனில் உயிரிழந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை, பிரிட்டனின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான பர்மிங்ஹாமிலுள்ள ஒட்டுமொத்த ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கைக்கு சமம் என்று 'சேவ் தி சில்ரன்' என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
ஏமனில் அதிகபட்சம் 14 மில்லியன் மக்கள் பஞ்சத்தின் பிடியில் சிக்கியுள்ளதாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்திருந்தது.
உலகிலேயே மோசமான மனிதாபினாம நெருக்கடியாக கருதப்படும் மூன்றாண்டுகளாக நடந்து வரும் ஏமன் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஐநா சபை முயற்சித்து வருகிறது.

19 November 2018

400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கிறதா மஹாமேரு புஷ்பம்?- சமூக வலைதளங்களில் படங்களுடன் வைரலாகும் வதந்தி


சதுரகிரி மலையில் மஹாமேரு புஷ்பம் என்ற ஒருவகை பூக்கள் 400 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்படும் புகைப்படங்கள் போலியானவை என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

19 October 2018

குடும்ப உளவியல் - Family Psychology ᴴ


கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சினைகளை கலைந்து, நமது குடும்பத்தை மகிழ்ச்சியான குடும்பமாக உங்களால் மாற்றியமைக்க இயலும். இந்த வீடியோவை பாருங்கள். (இறைவன் நாடினால்) நிச்சயம் உங்களை மாற்றிக்கொள்ள விரும்புவீர்கள்! பிறருக்கும் பகிர்வீர்கள்!.

வழங்குபவர்: அஷ்ஷைக், ஆதில் ஹஸன்
இலங்கை இஸ்லாமிய ஆய்வு மையத்தின் பணிப்பாளர் மற்றும் பிரபல மனோதத்துவ நிபுணர்

18 October 2018

டிஸ்லெக்சியா... பெற்றோர்கள் அவசியம் அறியவேண்டிய தகவல்கள்! #Dyslexia

டிஸ்லெக்சியா

ம் கல்வி முறையில், எழுத்துத் தேர்வுக்கே முக்கியத்துவம். ஆனால், டிஸ்லெக்சியா குழந்தைகள், படிக்கவும் எழுதவும் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்களால் தேர்வுகளைச் சரியாகக் கையாள முடியாது. இப்படி மாணவர்களின் படிப்பையே ஆட்டுவிக்கும் டிஸ்லெக்சியாவை எதிர்கொள்வது பற்றிச் சொல்கிறார், குழந்தைகள் நலச் சிறப்பு மருத்துவர், எஸ்.சுப்ரமணியன். 
“கற்றலில் ஏற்படும் குறைபாடே, 'டிஸ்லெக்சியா'. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் படிக்கச் சிரமப்படுவார்கள். புத்தகத்தில் வார்த்தைகள் தெரிந்தாலும், அதற்கான அர்த்தங்கள் புரிந்தாலும் அதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியாது. உதாரணமாக, 'walk' என்கிற வார்த்தையைச் சொன்னால், அதற்கான அர்த்தத்தை, ஸ்பெல்லிங்கை உடனே சொல்வார்கள். அதே 'walk' வார்த்தையை எழுதிக் காண்பித்து கேட்டால், அவர்களால் படிக்க முடியாது. அதற்காக, படிக்கத் தெரியாது என்று அர்த்தமில்லை. ஆங்கில எழுத்துக்களோ, தமிழ் எழுத்துக்களோ நன்றாகவே தெரியும். அந்த எழுத்துக்களைப் படித்து உள்வாங்கும் ரெஸ்பான்ஸை அவர்களால் கொடுக்கமுடியாது.

11 October 2018

Saudi Arabia’s Haramain High-Speed Railway opens to public



JEDDAH: Saudi Arabia’s new Haramain High-Speed Railway opened to the public on Thursday, whisking Muslim pilgrims and other travelers between Makkah and Madinah.
The SR60 billion ($16 billion) mega project is the biggest railway in the Middle East and will transport 60 million passengers a year.
The train also has stops at Jeddah, King Abdul Aziz International Airport, and King Abdullah Economic City (KAEC). Rumaih Al-Rumaih, chairman of the Public Transport Authority (PTA), said the opening to passengers “marks a historical national shifting point in the Kingdom’s modern transportation industry.”

08 October 2018

ரெட் அலர்ட் என்றால் என்ன? மற்ற நிற எச்சரிக்கைகள் என்ன கூறுகிறது?

சிவப்பு எச்சரிக்கை -

வானிலை ஆய்வு மையம் பிறப்பிக்கும் மிகவும் அதிகபட்ச எச்சரிக்கையே சிவப்பு எச்சரிக்கை எனப்படும்.
அதாவது, மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும், சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு சேதத்தையும் விளைவிக்கும் வகையிலான மோசமான வானிலையை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இச்சூழ்நிலையின்போது, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கான சூழ்நிலை உள்ளதால் மக்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ஆம்பர் எச்சரிக்கை -

சிவப்பு எச்சரிக்கையை விட சற்றே குறைந்த வீரியமுடைய எச்சரிக்கை ஆம்பர் எச்சரிக்கை என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையிலும் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருந்தாலும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

மஞ்சள் எச்சரிக்கை -

மோசமான வானிலையை குறிப்பதற்கே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் நாளிலிருந்து அடுத்த 2-3 தினங்களுக்கு நிலவும் வானிலையை மக்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.

பச்சை எச்சரிக்கை -

சாதாரண மழைப்பொழிவை தெரிவிப்பதற்காகவே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை.

இலங்கைக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை! (ஆம்பர்)

2018 ஒக்டோபர் 09ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு
(2018 ஒக்டோபர் 08ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.)
**********************************************
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை நாளை மேலும் அதிகரிக்குமென
எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

10 July 2018

தாய்லாந்து குகை: மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவு


கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தாய்லாந்தின் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை இன்னும் சற்று நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்.
முக்குளிப்பு வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Source :BBC

09 July 2018

தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: தொடக்கம் முதல் நடந்தது என்ன?


தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக நேற்று மீட்டு வந்தனர். மீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது
தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து, மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

08 July 2018

தாய்லாந்து குகை: "சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு"


கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது அந்த பகுதியில் பொழிந்து வரும் பருவமழை தொடர்ந்தால், குறுகிய பாதையை கொண்டுள்ள குகை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் என்ற கவலை நிலவுகிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.
குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம்
குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

29 May 2018

சகோதரர் ALI BANAT வபாத்தானார்

இன்று இறைவனடி சேர்ந்தார் சகோதரன் அலிபனாட்..!

ஆஸ்திராலியாவில் பிறந்த இந்த சகோதரன் தனக்கு கேன்சர் இருப்பதை தெரிந்த பின்னர் தனது வாழ்க்கை முறையை மாற்றி தனது சொத்துக்களை MATW Project என்ற அமைப்பின் மூலம் மக்களுக்கு அள்ளி வழங்கி மக்களுடன் மக்களாக வாழ்ந்து வந்தார்.

கடந்த சில வருடங்களாக கேன்சரினால் அவதிப்பட்டு வந்த இந்த சகோதரனை நீங்கள் சமூக வளைய தளங்களில் பார்த்து இருப்பீர்கள் ஆனால் இந்த ரமலானில் அல்லாஹ் அவரை தன் பக்கம் எடுத்துக் கொண்டான் யா அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து இவரின் சேவைகளை பொருந்தி கொண்டு உன் கருணையால் இவருக்கு ஜன்னதுல் பிர்தவுஸ் என்ற சொர்க்கத்தை வழங்கி விடு ரஹ்மானே.
நன்றி முஜாஹித் நியூஸ்

Assalamualaikum Brothers And Sisters InThis Video We Will Show You A Emotional Story Of Ali Banat Who Died On Maghrib..!!

24 May 2018

மழை காலத்தில்அதானும் தொழுகையும்


இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும்.

21 May 2018

ரமழானும் குர்ஆனும்



ரமழானும் குர்ஆனும்

ஜும்மா பயான்

மவ்லவி இம்தியாஸ் ஸலபி
தாருல் ஹிக்மா மஸ்ஜித்
இந்திரிலி கொட
மக்கொன.
18.05.2018






வீடியோ உதவி ரம்ஸான்

18 May 2018

நோன்பின் சட்டங்கள்

நோன்பின் சட்டங்கள்

வழங்மகுபவர்:மவ்லவி ஹஸன் அலி உமரி
பாகம்-1





பாகம் -2



14 May 2018

அல் குர்ஆன் ஓதுவதற்கு ஒரு சிறந்த APP.கட்டாயம் முயற்சிக்கவும்


ரமழானை எதிர்நோக்கியுள்ள இந்நேரம் அல் குர்ஆனை சரியாக ஓதத்தெரியாதே என்று கவலையா?நீங்கள் இதைக் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.ஒரு அருமையான APP.இதை Download. செய்துகொள்ளுங்கள்.இன்னும் சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.
கட்டாயம்  நண்பர்களிடம் பகிரவும்.

08 May 2018

சுகப்பிரசவ குழந்தைகள் மட்டும்தான் நோய் எதிர்ப்பு தன்மையுடன் இருக்குமா?


ஜேம்ஸ் காலகெர்

பிபிசி அறிவியல் மற்றும் சுகாதார செய்தியாளர், ரேடியோ 4

அனைத்து சூழ்நிலைகளிலும் போராடும் சக்தியை மனிதனுக்கு வழங்கியிருக்கிறது இயற்கை. தாயின் கருவறையில் இருந்து வெளிவர முயற்சி செய்யும்போதே குழந்தையின் போர் குணம் தொடங்கிவிடுகிறது.

27 April 2018

ஷஃபான் மாதத்தின் சிறப்பு

*ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்*
_____________________________

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு நபி ஸல் அவர்கள் கூறிய சிறப்புக்கள் என்ன..? இன்று சமூகத்தில் நடந்தேரும் வணக்கங்களின் நிலை என்ன ..? என்ற தகவல்களை ஆதார பூர்வமாண ஹதீஸ்களில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

07 April 2018

புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது?

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

*புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
*மது அருந்தும் பழக்கம்
*அதிக உடல் எடையுடன் இருப்பது
குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
உடல் உழைப்பு இல்லாமை
மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

'உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்'- ஆய்வாளர்கள்
உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?
மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாகும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Source BBC

01 March 2018

The Patience of Ayyub




Every person is faced with trials and tribulations at one point or another in their lives. It is patience that helps the believer cope. When calamity befalls a patient believer, it does not crush him. Instead, the believer endures, persists, and has hope in the mercy of Allah and the rewards that are awaiting him on the Day of Judgment.
Patience is a virtue that you can work on to develop.
There is much to learn from the story of Prophet Ayyub, as he is the ideal example of the afflicted believer who remained patient and faithful to His Lord.

26 February 2018

சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் முறைப்பாடு.



சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தை உடன் நிறுத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்
அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முறைப்பாடு ஒன்றை தென்கிழக்குப் பல்கலைகழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி தயாரித்துள்ளார்.
இதில் உங்கள் கையொப்பத்தை இட்டு சிரிய மக்களுக்கு உதவுங்கள். அதிக கையொப்பங்கள் பெறப்படின், உடனடியாக செயலாளருக்கு அறிவிக்கப்படும். அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்.


இணைப்பு

https://www.change.org/p/ant%C3%B3nio-guterres-secretary-general-of-the-united-nations-stop-syria-civil-war?recruiter=859667166&utm_source=share_petition&utm_medium=copylink&utm_campaign=share_petition&utm_term=share_petition


நண்பர்களுடன் பகிரவும்:


Source:madawala news

05 February 2018

பாவங்களும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளும்

பாவங்களும் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகளும் | மௌலவி ML முபாறக் மதனி Ph.D





19 January 2018

நாம் எமது குடும்பத்துடன் சுவர்க்கம் புக வேண்டாமா?


நாம் எமது குடும்பத்துடன் சுவர்க்கம் புக வேண்டாமா?

நாம் ஈமான் உள்ளவர்கள் என்று கூறிவிட்டால் போதுமா? அந்த ஈமான் எப்படி எம்மிலிருந்து வெளிப்பட வேண்டும், அஷ்ஷேஹ் ஆதில் ஹஸன் அவர்களின் ஜும்மாபயான் (19-11-2017)தாருல் ஹிக்மா ஜும்மா மஸ்ஜித் மக்கொன . கட்டாயம் கேட்டுப்பாருங்கள், மற்றவர்களும் பயன்பெற பகிர்ந்துவிடவும்.





வீடியோ உதவி :ரம்ஸான்