காலி கிந்தொடயில் 17ம் திகதி இடம்பெற்ற கலவரத்தில் முஸ்லிம்களின் பள்ளிவாயல், வீடுகள், வியாபார நிலையங்கள் என்பன தீ வைக்கப்பட்டும், கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாகியும் இருந்தன. பொலிஸார் குவிக்கப்பட்ட போதும் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனால் அப்பகுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.