நேற்று மாலை சீரற்ற காலநிலையின் விளைவில் நிர்மாணப் பணிகளுக்காக மஸ்ஜிதுல் ஹரத்தைச் சுற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 கிரேன்களில் ஒன்று குடை சாய்ந்து 107 பேர் உயிரிழந்தும் 238 பேர் காயமடைந்திருப்பதாகவும் (இதுவரை) தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விபத்து நேரத்தில் மஸ்ஜிதில் 8 லட்சம் பேர் இருந்ததாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றும், மழையுமாக இருந்த போதிலும் பாதுகாப்பு அச்சமற்ற சூழ்நிலையே இருந்தமையும் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தவிரவும், இரத்த தானம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வரும் நிலையில் தூதரகங்கள் தமது நாட்டுப் பிரஜைகள் தொடர்பில் தகவல்கள் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையென தகவல வெளியிடப்பட்டுள்ள அதேவேளை பங்களதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பலர் காயமுற்றிருப்பதாக அந்நாடுகளின் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
ஹஜ் கடமைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் 2.2 மில்லியன் பேர் ஒரே நேரத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் விஸ்தரிப்புப் பணிகள் அங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
source:sonakar.com
No comments:
Post a Comment