இன்று ஈதுல் அல்ஹா தினம் மினாவில் ஏற்பட்ட நெரிசலில் குறைந்தது 717 ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்ததாகவும்,805க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஸவூதி சிவில் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளனர்.மேலும் 4000 மீற்புப்படையினறும் 220 ஆம்புலஸ் வண்டிகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இதுபற்றிய வீடியோ கீழே
ஊர் செய்திகள்
date
24 September 2015
18 September 2015
மஸ்ஜிதுல் அக்ஸாவுக்காக போராடும் நம் சகோதரர்கள்(வீடியோ)
புனித இறைஇல்லம் அல் அக்ஸாவை பாதுகாப்பதற்காகப்
இஸ்ரேல் இராணுவத்துடன் போராடும் இம் முஸ்லிம்களுக்
காக அல்லாஹ்விடம் பிரார்திப்போம்,
இவ் வீடியோக்காட்சி சென்ற 15-09-2015 அல் ஜஸீரா
நிருபரால் பிடிக்கப்பட்டது,
17 September 2015
சிலியில் பூகம்பம், சுனாமி: பத்து லட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேற்றம்
தென்னமெரிக்காவிலுள்ள சிலியில் வலுவான பூகம்பம் ஏற்பட அந்நாட்டின் சில பகுதிகளை நாலரை மீட்டர் வரை உயரமான சுனாமி அலைகள் தக்கிய நிலையில், கடலை ஒட்டி வாழ்பவர்கள் சுமார் பத்து லட்சம் பேர் கரையோரப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பூகம்பத்திலும் சுனாமியிலுமாக குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரை தெரியவந்துள்ளது.
8.3 வலுக்கொண்ட நிலநடுக்கம் தலைநகர் சந்தியாகோவுக்கு வட மேற்காக 250 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருந்தது.
பூகம்பத்தின் பின்னரும் 6 புள்ளிகள் அளவுக்கு வலுவான பல பின் அதிர்வுகள் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளன.
கொகிம்போ, வல்பரைஸோ போன்ற இடங்களில் போன்ற ஊருக்குள்ளே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டுகின்றன.
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள், தாழ்வான பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அதிபர் மிஷெல் பஷெலெட் வலியுறுத்தியுள்ளார்.
BBC
16 September 2015
பாம்புக் கடியும் விஷ முறிவு மருந்தும்: ஒரு புரிதல்
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேர் வரை பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர்.
பாம்பின் நஞ்சு மிகவும் கடுமையானதாக இருக்கும் நிலையில், விஷமுறிவு மருந்துகளின் தயாரிப்பும் குறைந்துவருவதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
ஆண்டொன்று ஐம்பது லட்சம் பேர் பாம்புக் கடிக்கு இலக்காகின்றனர், அதில் ஒரு லட்சம் பேர் உயிரிழப்பதோடு, நான்கு லட்சம் பேர் முடமாக்கப்பட்டோ அல்லது உருக்குலைந்தோ போகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பாம்பு விஷத்தில் என்னவுள்ளது?
பாம்பு விஷமானது பல நூறு புரதங்களால் ஆனது. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மனித உடலின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஒரே வகையைச் சேர்ந்த பாம்புகளில்கூட ஒவ்வொரு பாம்பின் விஷத்தின் வீரியமும் மாறுபடும்.
விஷத்தை வெளியிடும் மற்ற எந்த விலங்கினத்தைக் காட்டிலும் பாம்புகளே மனிதர்களுக்கு மிகவும் அருகில் சென்று தாக்கி கூடுதலான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளன.
உடலை எப்படி தாக்கும்?
பாம்பு மனிதர்களை கடித்து விஷத்தைச் செலுத்தியவுடன் அது இரண்டு வகைகளில் மனிதர்களின் உடலைத் தாக்கும்.
ஒன்று, ரத்த ஓட்டத்தை தாக்கி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் அல்லது நரம்பு மண்டலத்தை முடக்கும். இவை இரண்டு மரணம் வரை இட்டுச் செல்லக் கூடும்.
ரத்தத்தில் பாம்பின் விஷம் கலக்கும்போது அவை சிற்சிறு அளவில் ரத்தம் கட்டிப்போகச் செய்து, ரத்தக் குழாய்களில் துளைகளை ஏற்படுத்தி அதன் மூலம் ரத்தக்கசிவை ஏற்படுத்தி மரணம் ஏற்படலாம்.
சிலவகை நஞ்சுகள் நரம்பு மண்டலத்தை விரைவாகத் தாக்கி உடலில் மற்ற பகுதிகளுக்கு நரம்புகள் மூலம் கொண்டுசெல்லப்படும் சமிஞ்கைகளை பாதித்து உடலை முடங்கிப் போகச் செய்யலாம். மரணமும் ஏற்படக் கூடும்.
விஷமுறிவு மருந்து
பாம்பு கடித்தவுடன் எவ்வளவு விரைவாக விஷமுறிவு மருந்து கொடுக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விஷ முறிவு மருந்து என்பது பாம்பின் நஞ்சிலிருந்தே தயாரிக்கப்படுகிறது.
பாம்பிலிருந்து எடுக்கப்பட்ட நஞ்சானது நீர்த்துப்போகச் செய்யப்பட்டு பின்னர் குதிரைகள் அல்லது செம்மறி ஆடுகளில் செலுத்தப்பட்டு, அதன் உடலில் உருவாகும் நோய் எதிர்ப்புச் சக்திகளைப் பிரித்தெடுத்து, அதிலிருந்து விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆனால் உலகளவில் மிகக் குறந்த அளவுக்கே விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுவதும் அவற்றில் விலை மிகவும் அதிகமாக உள்ளதும் பாம்புக் கடி பட்டவர்களை காப்பாற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
source:BBC
14 September 2015
துல் ஹிஜ்ஜா தலைப்பிறை தென்பட்டது
இலங்கையின் பலபாகங்களிலும் ஹிஜ்ரி 1436 துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டதால் 24-09-2015 ஹஜ்ஜுப்பெருநாள் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே 23-09-2015 அரபா தினமாகும்.
இதேவேளை சவூதிஅரேபியா உற்பட அரபு, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் வியாழக்கிழமை, 24 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
இதேவேளை சவூதிஅரேபியா உற்பட அரபு, ஆபிரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் வியாழக்கிழமை, 24 ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.
12 September 2015
விபத்து நேரத்தில் ஹரம் ஷரீபில் 8 லட்சம் பேர்!
நேற்று மாலை சீரற்ற காலநிலையின் விளைவில் நிர்மாணப் பணிகளுக்காக மஸ்ஜிதுல் ஹரத்தைச் சுற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 15 கிரேன்களில் ஒன்று குடை சாய்ந்து 107 பேர் உயிரிழந்தும் 238 பேர் காயமடைந்திருப்பதாகவும் (இதுவரை) தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் விபத்து நேரத்தில் மஸ்ஜிதில் 8 லட்சம் பேர் இருந்ததாக தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்றும், மழையுமாக இருந்த போதிலும் பாதுகாப்பு அச்சமற்ற சூழ்நிலையே இருந்தமையும் எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இவ்விபத்து தொடர்பில் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தவிரவும், இரத்த தானம் செய்வதற்காக ஆயிரக்கணக்கானோர் படையெடுத்து வரும் நிலையில் தூதரகங்கள் தமது நாட்டுப் பிரஜைகள் தொடர்பில் தகவல்கள் திரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லையென தகவல வெளியிடப்பட்டுள்ள அதேவேளை பங்களதேஷ், பாகிஸ்தான், இந்தியா மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பலர் காயமுற்றிருப்பதாக அந்நாடுகளின் தூதரகங்கள் தெரிவித்துள்ளன.
ஹஜ் கடமைகள் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ள நிலையில் 2.2 மில்லியன் பேர் ஒரே நேரத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் வகையில் விஸ்தரிப்புப் பணிகள் அங்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
source:sonakar.com
05 September 2015
புதிய அமைச்சர்கள் விபரம்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் எட்டாவது பாராளுமன்றத்துக்கான அமைச்சரவை நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றது.
இது இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அமைக்கப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையாகும்.
44 பேர் கொண்ட புதிய அமைச்சரவையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 களும் ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த 33 களும் அங்கம் வகிக்கின்றனர்.
வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர ஏற்கனவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்த நிலையில் 43 அமைச்சர்களே சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டியிருந்தது. இதில் பாராளுமன்ற உறுப்பினர் மலிக் சமரவிக்கிரமவை தவிர்ந்த ஏனைய 42 பேரும் நேற்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
புதிய அமைச்சரவையில் கட்சித் தலைவர்களான மனோ கணேசன், பி. திகாம்பரம், ரவூப் ஹக்கீம். ரிஷாட் பதியுதீன், சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கும் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன.
மேற்படி உத்தியோகபூர்வ அரச நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நேற்று பிற்பகல் 12.10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஆரம்பமானது.
அமைச்சரவை அமைச்சர்களாக நிய மனம் பெறுவதற்கு அங்கு வருகை தந்திருந்த பிரதமர் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் தத்தமது மொழிகளில் உறுதிமொழி எடுத்தனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய அமைச்சரவை கள் சத்தியப் பிரமாணம் செய்தனர்.
புதிய அமைச்சர¨யில் பி. திகாம்பரம், மனோகணேசன் மற்றும் டி. எம். சுவாமிநாதன் ஆகிய மூன்று தமிழ் களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோன்று ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் மொஹமட் ஹாசிம் ஆகிய நான்கு முஸ்லிம் களுக்கும் அமைச்சரவை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை 45 பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க களை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி அளித்துள்ள போதும் நேற்றைய தினம் இவர்கள் சத்தியப் பிரமாணம் வழங்கவில்லை. பிறிதொரு நாளில் அவர்கள் சத்தியப் பிரமாணம் எடுக்க ஏற்பாடு செய்யப் படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
1. தேசிய கொள்கை மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் அமைச்சு - ரணில் விக்ரமசிங்க
2. சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கிறிஸ்தவ சமய அமைச்சு - ஜோன் அமரதுங்க
3. நிலைபேறு அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சு - காமினி ஜயவிக்ரம
4. போக்குவரத்து அமைச்சராக - நிமால் சிறிபால டி சில்வா
5. சமூக நலன்புரி மற்றும் சமூக வலூவூட்டல் அமைச்சு - எஸ்.பி. திஸாநாயக்க
6. தொழிலாளர் மற்றும் தொழில் நலன்புரி அமைச்சு - டப்ளியூ.ரி.ஜே. செனவிரத்ன
7. பல்கலைக்கழக கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சு - லக்ஸ்மன் கிரியெல்ல
8. அனர்த்த முகாமைத்துவ அமைச்சு - அநுர பிரியதர்சன யாபா
9. தொழில்நுட்பம், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் அமைச்சு - சுசில் பிரேமஜயந்த
10. நீதி மற்றும் சமாதான மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சு - திலக் மாரப்பன
11. சுகாதார, போசணை, சுதேச மருத்துவ அமைச்சு - ராஜித சேனாரத்ன
12. நிதி அமைச்சு - ரவி கருணாநாயக்க
13. திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சு - மஹிந்த சமரசிங்க
14. உள்நாட்டலுவல்கள் அமைச்சு - வஜிர அபேவர்தன
15. உள்ளக அபிவிருத்தி, வடமேல்மாகாண அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சு - எஸ்.பி நாவின்ன
16. மாநாகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு - சம்பிக ரணவக
17. கடற்றொழில், நீரியல் வள அமைச்சு - மஹிந்த அமரவீர
18. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு - நவீன் திஸாநாயக்க
19. மின்வலு மற்றும் மீள் புதுப்பிப்பு அமைச்சு - ரஞ்சித் சியம்பலாபிட்டிய
20. கமத் தொழில் அமைச்சு - துமிந்த திஸாநாயக்க
21. புத்தசாசன அமைச்சு - விஜயதாஸ ராஜபக்ஷ
22. கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சு - பி. ஹரிசன்
23. அரச பரிபாலனம் மற்றும் முகாமைத்து அமைச்சு - ரஞ்சித் மத்தும பண்டார
24. பாராளுமன்ற புனரமைப்பு, ஊடகத்துறை அமைச்சு - கயந்த கருணாதிலக
25. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சு - சஜித் பிரேமதாஸ
26. துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு - அர்ஜுண ரணதுங்க
27. காணி அமைச்சு - எம்.கே.டி.எஸ். குணவர்தன
28. மலையக கட்டுமான அடிப்படை வசதிகள், சமூக அபிவிருத்தி அமைச்சு - பி. திகாம்பரம்
29. பெண்கள் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு - சந்திராணி பண்டார
30. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு - தலதா அத்துகோரள
31. கல்வி அமைச்சு - அகில விராஜ் காரிய வசம்
32. புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம், இந்து சமய அமைச்சு - டி.எம். சுவாமிநாதன்
33. பெற்றோலிய மற்றும் பெற்றோலிய வாயு - சந்திம வீரக்கொடி
34. விளையாட்டு அமைச்சு - தயாசிறி ஜயசேகர
35. தெற்கு அபிவிருத்தி அமைச்சு - சாகல ரத்நாயக்க
36. தொலைத்தொடர்புகள் டிஜிற்றல் அடிப்படை வசதிகள் அமைச்சு -ஹரீன் பெனாண்டோ
37. தேசிய கலந்துரையாடல் அமைச்சு - மனோ கணேசன்
38. ஆரம்ப கைத்தொழில் அமைச்சு - தயா கமகே
39. கைத்தொழில் வாணிப அமைச்சு - ரிஷாத் பதியுதீன்
40. அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு - கபீர் ஹாஸிம்
41. நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு - ரஊப் ஹக்கீம்
42. தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சு – அப்துல். ஹலீம்
ஏற்கனவே வழங்கப்பட்டவை
43. வெளிவிவகார அமைச்சு - மங்கள சமரவீர
44. நீதி அமைச்சு - விஜயதாஸ ராஜபக்ஷ
மற்றும்
45. அபிவிருத்தி உபாய மார்க்கம் மற்றும் சர்வதேச வர்த்தகம் - மலிக் சமரவிக்ரம (பதவி ஏற்கவில்லை)
நன்றி:தினகரன்
Subscribe to:
Posts (Atom)