தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 12 Apr 2025

29 April 2014

தென்கொரிய கப்பல் விபத்து; மூழ்கும் கப்பலில் இருந்து தப்பிச் செல்லும் கெப்டன் (Video)

கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலின் கெப்டன்
தப்பிச் செல்லும் காணொளி ஒன்றினை தென்கொரிய கடலோர
பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது. 69 வயதுடைய கெப்டனும் அவருடன்
மற்றுமொருவரும் கப்பல்
மூழ்கும் தருணத்தில் சிறிய படகொன்றில் தப்பிச் செல்லவது அந்த
காணொளியில் பதிவாகியுள்ளது.
தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே இன்செயான்
துறைமுகத்தில் இருந்து ஜெஜு என்ற சுற்றுலாதீவுக்கு 476
பேருடன் புறப்பட்ட கப்பல் கடந்த 16 ந்தேதி நடுக்கடலில்
மூழ்கியது. இதில் பயணம் செய்தவர்களில் 300 க்கும்
மேற்பட்டவர்கள் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் ஆவார்கள். கப்பலில்
மூழ்கியவர்களிச்ல் 174 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மற்றவர்களை தேடும் பணியில் நீச்சல் வீரர்கள்
ஈடுபட்டு வருகிறார்கள். இதுவரை 188 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
114 பேரின்
நிலைமை தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் இல்லை.
இதேவேளை குறித்த கப்பலின் கெப்டன்
கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Thanks:

-newsfirst

-mumbaitamilnews

No comments:

Post a Comment