எச்.ஐ.வி. மற்றும் எயிட்ஸ் நோயினால் இதுவரை 307 பேர் இலங்கையில்
இறந்துள்ளதோடு 1649 எச்.ஐ.வி. பீடிக்கப்பட்டோர் அடையாளங்
காணப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க
தெரிவித்தார். அவர்களிடயே எயிட்ஸ் நிலைக்கு தள்ளப்பட்டோர் 432 பேர்
இருப்பதாகவும் அவர் கூறினார். வாய்மூல விடைக்காக பீ. ஹெரிசன் எம்.பி.
எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது 2010ல் 121
எச்.ஐ.வி. நோயாளர்களும் 2011ல் 146 பேரும் 2012ல் 186 பேரும் அடையாளம்
காணப்பட்டனர். 2010ல் 44 பெண்களும் 77 ஆண்களும் அடையாளங் காணப்பட்டதோடு
2011ல் 64 பெண்களும் 82 ஆண்களும் அடையாளங் காணப்பட்டனர். 2012ல் 66
பெண்களும் 120 ஆண்களும் அடையாளங் காணப்பட்டார்கள். கொழும்பு, கம்பஹா,
குருநாகல், கண்டி, களுத்துறை, காலி, புத்தளம் மாவட்டங்களிலேயே
கூடுதலானவர்கள் அடையாளங் காணப்பட்டனர். ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில்
இலங்கையில் எயிட்ஸ் நோய் பரவுவது குறைவாகவே உள்ளது. பாடசாலை மட்டம் முதல்
எயிட்ஸ் குறித்து அறிவூட்டப்படுகிறது.
Source:http://adf.ly/a5qM1
ஊர் செய்திகள்
date
30 November 2013
21 November 2013
கொட்டைகளை சாப்பிட்டால் ஆயுள் அதிகம்
பாதாம், வால்நட் போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய்
மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக்
குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை
சாப்பிடுகிறோமோ
அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம்
என்று "நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை"யில்
வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. அமெரிக்காவில் 30
ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20
ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த
முடிவுகள் வந்துள்ளன. தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த
ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில்
குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. கொட்டைகளை உண்பவர்கள்
மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக
சற்று கூடுதலாக உடல் நலன் குறித்து அக்கறையுடன்
இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அவர்கள் அதிகம்
புகைப்பதில்லை, கூடுதலாக
உடற்பயிற்சி செய்யக்கூடியர்களாக இருக்கிறார்கள், பழங்கள்
மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் ---
இவையெல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில்
எடுத்துக்கொள்ளப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
Thanks:bbc

17 November 2013
இலங்கையருக்கு பிரகாசமான வால் நட்சத்திரத்தை காணும் வாய்ப்பு
இன்று முதல் ஏழு நாட்களுக்கு பிரகாசமான வால்
நட்சத்திரமொன்றை காண்பதற்கான சந்தர்ப்பம்
இலங்கை மக்களுக்கு கிட்டவுள்ளது. இந்த நூற்றாண்டில் மிகவும் பிரகாசமான
வால் நட்சத்திரமாக
இது கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. ஐசோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த
வால் நட்சத்திரத்தை இன்று முதல்
ஒரு வாரத்திற்கு கிழக்கு வான் பரப்பில்
அதிகாலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில்
காண முடியும் என கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Source:newsfirst .lk

02 November 2013
எயர் அராபிய விமானத்தில் குழந்தை பிரசவித்த இலங்கை பெண் (வீடியோ இணைப்பு)
துபாயிலிருந்து இலங்கையைநோக்கிப் பறந்து கொண்டிருந்த எயர் அராபிய
விமானத்தில் இலங்கை வீட்டுப் பணிப்பெண் பிள்ளையொன்றைப் பிரசவித்த
சம்பவமொன்று (31-10-2013) இடம்பெற்றுள்ளது விமானத்தை அவசரமாகஓமானில்
தரையிறக்கி அப்பெண்ணையும் குழந்தையையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதிக்க
ஏற்பாடு செய்ததாம். துபாயில் பணிப்பெண்ணான இந்த கர்ப்பிணிப்
பெண்,இவ்விமானத்தில் இலங்கைக்கு வரும் போது மேல் வானில ட பிரசவ வலி
ஏற்படவே விமானத்தில் இருந்த பணியாட்கள் மற்றும் இலங்கை பனிப் பெண் ஒருவர்
அருகில் இருந்துள்ளனர்.
Thanks: jaffna muslim,Hiru

01 November 2013
சஹாரா பாலைவனத்தில் 'நடந்துமுடிந்த' சோகக் கதை
ஆப்பிரிக்க நாடான நைஜர், உலகில் உள்ள வறுமையான நாடுகளில்
ஒன்றாகும். இங்குள்ள மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக
பட்டினியால் வாடி வருகின்றனர். வறுமையின் கொடுமை தாங்காத
அவர்களில் சுமார் 30 ஆயிரம் பேர் அகடெஸ் நகரிலிருந்து கடந்த
மார்சு முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலக்கட்டங்களில் ஐரோப்பிய
நாடுகளுக்கு குடிபுக பல்வேறு குழுக்களாக வாகனங்களில் இடம்
பெயர்ந்துள்ளனர்.
அவ்வாறு செல்பவர்கள் உலகின் மிகப்பெரிய பாலைவனமான
சஹாரா பாலைவனத்தை கடந்து செல்லவேண்டும். பல குழுக்களாக
சென்ற அவர்கள் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த
சஹாரா பாலைவனத்தில் சிக்கிக்கொண்டனர்.
உயிர்தப்பிய
சிறுமி ஒருத்தி தங்களின் கொடூரமான பாலைவனப்
பயணத்தை பிபிசியிடம் விபரித்துள்ளார். தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் அவள்
பாலைவனத்துக்கு பலிகொடுத்துள்ளாள். இவர்கள் செப்டெம்பரின் கடைசி அல்லது
அக்டோபரின் முற்பகுதியில்
நைஜரின் ஆர்லீட் நகரிலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர். நைஜர் ஊடாக
சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியாவை அடைய
முயன்ற 90க்கும் மேற்பட்டவர்கள், இடைநடுவில் தங்களின் வாகனம்
பழுதடைந்ததால், பயணத்தைத் தொடரமுடியாமல், பல நாட்களாக தண்ணீர்
தாகத்தால் தவித்து உயிரிழந்தனர்.
தொழில்தேடி புறப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக
52 சிறார்களும் 33 பெண்களும் இந்த பாலைவன பயணத்தில்
உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. வெப்பம் எரிக்கும்
பாலைவனத்தில், வாகனம் பழுதடைந்த
இடத்திலிருந்து இரண்டு நாட்களாக நடந்துசென்ற தமக்கு, அந்த
வழியால் வந்த ஒரு வாகனம் கூட உதவவில்லை என்று உயிர்தப்பிய
14 வயது சிறுமி ஷாஃபா பிபிசியிடம் கூறினாள். வரும்வழியில் உயிரிழந்த
தாயையும் இரண்டு சகோதரிகளையும்
தானே புதைத்துவிட்டு வந்ததாக அந்தச் சிறுமி தெரிவித்தாள். தேடுதல்
பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்கள், மக்கள்
கூட்டம் கூட்டமாக உயிரிழந்து காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் தாங்கள் செல்ல வேண்டிய,
அல்ஜீரியா நாட்டு எல்லைக்கு அருகில் வெறும் 3 கி.மீ. தூரத்திலேயே இறந்து
கிடந்துள்ளனர். கடந்த
திங்களன்று இதுபோன்று 30-க்கும் மேற்பட்டோர்
இறந்து கிடந்தது குறிப்பிடத்தக்கது. வறுமை காரணமாக
மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய
நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள
அல்ஜீரியா அல்லது லிபியா நாட்டு கடற்கரையை நோக்கி செல்கின்றனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
Thanks:bbc,maalaimalar

Subscribe to:
Posts (Atom)