தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 August 2013

சிரிய இரசாயன தாக்குதல்: தீவிர நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கூட்டு நாடுகள் ஆலோசனை

சிரிய இரசாயன தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்கா மற்றும் அதனது கூட்டு நாடுகள் எவ்வாறு பதிலளிப்பது என்பது தொடர்பில் பராக் ஒபாமா தனது ஆலோசகர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூடனும் நேற்று முன்தினம் தொலைபேசியூடாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது சிரியா தொடர்பில் தேவையான நடவடிக்கையை எடுப்பது குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரு நாட்டு தலைவர்களும் எவ்வாறான நடவடிக்கையை எடுப்பது என்பது பற்றி ஆலோசித்ததாக அந்த செய்திக் குறிப்பில் விபரிக்கப்படவில்லை. அதேபோன்று இந்த விடயத்தில் தீர்மானம் எட்டுவதற்கு ஒபாமா நிர்வாகம் கால எல்லையை நிர்ணயித்ததா? என்பது பற்றியும் தெளிவுபடுத்தப் படவில்லை. ஆனால் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு ஒபாமா தீர்மானித்தால் பென்டகன் அதற்கு தயார் நிலையில் இருப்பதாக அமெரிக்க பாதுகாப்புச் செய லாளர் சக் ஹேகல் நேற்று தெரிவித்தார். பாதுகாப்பு அமைச்சுக்கு தயாராக இருக்கும்படி ஜனாதிபதி ஒபாமா கோரினால் நாம் அனைத்து திடீர் முடிவுகளுக்கும் தயாராகவே இருக்கிறோம். எந்த வகையான தேர்வாக இருந்தாலும் நாம் அதற்கு தயாராகவே இருக்கிறோம். அதனை செயற்படுத்துவோம் என்று ஹேகல் வலியுறுத்தினார். எனினும் சிரிய தலைநகர் டமஸ்கஸின் புறநகர் பகுதியில் கடந்தவாரம் நடத்தப்பட்ட இந்த இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை திரட்டுமாறு ஒபாமா கோரியுள்ளார். இந்த தாக்குதலில் சுமார் 1300 பேர் அளவில் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. “நட்பு நாடுகள், தாக்குதல் சம்பவத்தை நேரில்கண்ட ஆதாரங்கள் மற்றும் கொல்லப்பட்டோரது பிரேத பரிசோதனைகளை கொண்டு அமெரிக்க உளவு பிரிவு சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை திரட்டி வருகிறது" என அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி, சிரிய வெளியுறவு அமைச்சர் லபித் அல் முவல்லம்மை கடந்த வியாழக்கிழமை தொடர்புகொண்டு இரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பகுதிகளில் ஆய்வு நடத்த ஐ. நா. நிபுணர் குழுவுக்கு அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தார். “இந்த விடயத்தில் சிரிய அரசுக்கு மறைக்க ஒன்றுமில்லை என்றால் பாதிக்கப்பட்ட பகுதியை முடக்கிவைத்து தாக்குதல் நடத்துவதை நிறுத்தி, அங்கு சோதனை நடத்த உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்” என்று கெர்ரி வலியுறுத்தினார். இதனிடையே பிரிட்டன் பிரதமர் கெமரூனின் பேச்சாளர் ஒருவர் வெளியிட்ட தகவலில், சிரியாவில் இராசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு கடுமையாக பதிலளிக்க பிரிட்டன் பிரதமருக்கும், ஒபாமாவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். புதன்கிழமை டமஸ்கஸ ¤க்கு அருகில் சிரிய அரசினால் தனது சொந்த மக்கள் மீதே நடத்தப்பட்ட இரசாயன தாக்குதல் குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர் என்று மேற்படி பேச்சாளர் கூறியுள்ளார். டேவிட் கெமரூன் இது தொடர்பில் கனடா பிரதமர் ஸ்டிபன் ஹாப்பருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதில் சிரியாவின் தற்போதைய நிலவரத்திற்கு சரியான பதிலடிகொடுக்க இரு தலைவர்களும் இணங்கியதாக கெமரூனின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இரசாயன ஆயுதம் பயன்படுத்தியிருந்தால் அவர் சிகப்பு எல்லையை தாண்டிவிட்டதாக தொடர்ந்து எச்சரித்துவரும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இது சிரியாவுக்கு எதிரான கட்டாய நடவடிக்கைகளுக்கு இட்டுச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த இரசாயன தாக்குதல் உறுதி செய்யப்படும் பட்சத்தில் 1980 களில் சதாம் ஹுஸைனின் ஈராக் அரசு, குர்திஷ் கிளர்ச்சியாளர் பகுதியில் ஈரான் படைகளுக்கு எதிராக நடத்திய இரசாயன தாக்குதலுக்கு பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாக வரலாற்றில் இடம்பிடிக்கும். எனினும் சிரிய அரசு இந்த தாக்குதலை நிராகரிப்பதோடு, கிளர்ச்சியாளர்கள் மீது அது பலி சுமத்தி வருகிறது. இந்த தாக்குதல் சிரியா மீது இராணுவ நடவடிக்கைக்கு சாத்தியத்தை ஏற்படுத்தியிருப்பதாக சக் ஹேகல் கடந்த வெள்ளிக்கிழமை எச்சரித்திருந்தார். ஆனால் அவ்வாறான ஒரு இராணுவ நடவடிக்கை அமெரிக்கா மத்திய கிழக்கில் மேலுமொரு நீண்ட யுத்தத்திற்கு முகம்கொடுக்கவேண்டியதாக இருக்கும் என ஒபாமா கூறியிருந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கூறிவரும் குற்றச்சாட்டு உறுதியாகும் பட்சத்தில் அந்நாட்டின் மீது இராணுவத் தாக்குதல் நடத்தலாம் என்று பிரான்ஸ் கருத்து தெரிவித்துள்ளது. இதனிடையே ஐ. நா. துணைச் செயலாளர் ஏஞ்சலா கெய்ன் சனிக்கிழமை சிரியா தலைநகர் டமாஸ்கஸ் சென்றடைந்தார். சிரியாவில் இரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து ஐ. நா. நிபுணர்கள் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு அந்நாட்டு அரசிடம் அவர் கோர உள்ளார். இதற்காக சிரியா அரசுப் பிரதிநிதிகளுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்துவார். சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து பாரபட்சமற்ற விரிவான விசாரணை தாமதமின்றி நடத்தப்பட வேண்டும் என்று பான் கீ மூன் ஏற்கெனவே வலியுறுத் தியுள்ளார். நன்றி:தினகரன்

25 August 2013

ஷஹீதான தனது மகள் அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தை முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி பிரதமர் கண்ணீர் விட்டு அழுதார்.

எகிப்தில் ஜனநாயகத்தை மீட்டெடுக்கக் கோரி அமைதியான போராட்டம் நடந்து கொண்டிருந்த போது சர்வாதிகார இராணுவம் நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில் கொல்லப்பட்ட அஸ்மா பெல்தாகிக்கு அவரது தந்தையும், இஃக்வானுல் முஸ்லிமீனின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்ட்டியின் பொதுச் செயலாளருமான முஹம்மது பெல்தாகி எழுதிய கடிதத்தை பார்த்து துருக்கி
பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் கண்ணீர் விட்டு அழுதார். தனியார் தொலைக்காட்சி சானலின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட எர்துகானிடம்,
அஸ்மாவுக்கு அவரது தந்தை எழுதிய கடிதம் வாசித்துக் காட்டப்பட்டது. கடிதத்தை படிப்பதை கவனமாக கேட்ட எர்துகானின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. சில நிமிடங்கள் மவுனமாக இருந்த எர்துகான், பின்னர் கண்ணீரை துடைத்துவிட்டு நிகழ்ச்சியை தொடர்ந்தார். முஹம்மது பெல்தாகி, தன் அன்பு மகள் அஸ்மாவுக்கு எழுதிய கடிதம்: நேசத்துக்குரிய என்னருமை மகளே! எனக்கே ஆசானாக மாறிய ஷஹீதா அஸ்மா
பெல்தாகியே! நான் உனக்கு பிரியாவிடை வாழ்த்து சொல்ல வரவில்லை. நாளை நாம் சந்திப்போம் என்று சொல்லத்தான் வந்தேன். நீ அநியாயத்திற்கெதிராக தலைநிமிர்ந்து வாழ்ந்தாய். அதன் அனைத்து விலங்குகளையும் நிராகரித்தாய். எல்லையற்ற சுதந்திரத்தை காதலித்தாய். இந்த உம்மத்தை மீளெழுச்சி பெறச் செய்யும் வழிகளையும் அது தன் சொந்த நாகரீகத்தை மீளவும் புதிதாய் அடைவதற்கான புதிய
திசைகளையும் அமைதியாக தேடினாய். உன்னுடைய வயதை ஒத்தவர்கள் ஈடுபட்டிருந்த செயற்பாடுகளில் நீ ஈடுபடவில்லை. பாரம்பரிய
கல்வி முறை உமது அபிலாஷைகளை, உனது நலன்களை நிறைவேற்றாதபோதிலும், எப்போதும் நீதான் வகுப்பில் முதலாவதாக வந்தாய். உனது இந்த சொற்ப வாழ்நாளில் உனக்கருகே இருந்து அன்பை சுவாசிக்க முடியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கவும் உனக்கருகே இருந்து கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்கவும் எனது நேரம் இடம் தரவில்லை. கடைசியாக நாம் சாவதானமாக அமர்ந்திருந்த றாபியா மைதானத்தில் வைத்து
நீ என்னிடம் ஆதங்கப்பட்டாய்:
"எங்களுடன் இருந்து கொண்டே நீங்கள் பிஸியாக இருக்கிறீர்கள்." நாம் பரஸ்பரம் சந்தோஷமாயிருந்து அனுபவிப்பதற்கு இந்த வாழ்வு நமக்கு இடம் தராது என நான் சொன்னேன். நாம் அருகருகே இருந்து பரஸ்பரம் மகிழ்வுறும் இன்பம் சுவனத்தில் நமக்கு கிடைக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்தித்தேன். நீ
ஷஹீதாவதற்கு இரு நாட்களுக்கு முன்பு உன்னை நான் மணமகள் ஆடையுடன் கனவில் கண்டேன். அதில் வர்ணிக்க முடியா அழகுடன் பளிச்சிட்டுக் கொண்டிருந்தாய். நீ எனக்கருகில் தூங்கிக் கொண்டிருந்த வேளை, "இந்த இரவு உனக்கு திருமண நாளா?" என்று நான் உன்னிடம் இரகசியமாகக் கேட்டேன். ஆனால், மாலையில் அல்ல, பகல் நேரத்திலே என்றுஎனக்கு நீ சுவனத்து திருமண
நாளை அறிவித்துவிட்டு விடை பெற்றுவிட்டாய். வியாழனன்று பகல் நேரத்தில் உன்னுடைய ஷஹாதத் செய்தி கேட்டபோது என் கனவின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன். அல்லாஹ் உனது ஷஹாதத்தை ஏற்றுக் கொண்டான் என்ற நற்செய்தியையும் நீ சொல்லித்தான் சென்றாய். நாம் சத்தியத்திலே இருக்கிறோம். நமது எதிரி அசத்தியத்தில் இருக்கிறான் என்ற நம்பிக்கையை நீ மேலும் அதிகரித்து விட்டாய். உனது
கடைசிப் பிரியாவிடையில் இருக்கக் கிடைக்கவில்லை. அந்தப் பிரியாவிடையை எனது இரு கண்களால் பார்க்க கிடைக்கவில்லை. உனது நெற்றியில் கடைசி முத்தமொன்றை தரமுடியாமல் போய்விட்டது. உனக்கு இமாமத் செய்யும் கண்ணியத்தையும் பெற முடியவில்லை. இவை எல்லாம் என்னை வாட்டி வதைக்கிறது. அல்லாஹ் மீது ஆணையாக, என்னருமை மகளே என்னை தடுத்தது வாழ்க்கை மீதான அச்சமோ அநியாயக்காரனின் சிறை
பற்றிய பயமோ அல்ல. நீ எதற்காக உனது இன்னுயிரை நீத்தாயோ, அந்தத் தூதினை முழுமைப்படுத்தும் பேராசைதான் என்னைத் தடுத்தது. அந்தத் தூதுதான் நாம் வெற்றி பெறப் போகின்ற – இலக்குகளை நிறைவேற்றப்போகின்ற – புரட்சியை முழுமைப்படுத்தும் பணியாகும். நீ தலைநிமிர்ந்து முன்னோக்கி சென்ற நிலையிலே உனது உயிர் பிரிந்திருக்கிறது. ஏமாற்றத்தின் தோட்டாக்களை உன் மீது பாய்ச்சிய அந்தக்
கொடிய அநியாயக்கார்களை நீ மிகக் கடுமையாக எதிர்த்த நிலையிலே உன்னை ஷஹாதத் வந்தடைந்திருக்கிறது. இந்தக் கவலை எவ்வளவு உயர்ந்தது. எவ்வளவு தூய்மையான உள்ளம் இது. நீ அல்லாஹ்வை உண்மைப்படுத்தினாய், அல்லாஹ்வும் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஷஹாதத்தை கண்ணியப்படுத்துவதற்காக நமக்கு முன்னால் அவன் உன்னைத் தெரிவு செய்திருக்கிறான்.
கடைசியாக, பாசம் நிறைந்த என்னருமை மகளே! என் ஆசானே! நான் உனக்கு பிரியாவிடை சொல்ல வரவில்லை. மீண்டும் சந்திப்போம் என்று சொல்லவே வந்தேன். அன்பு நபியின் நீர்த்தடாகத்தில் அவர்களின் தோழர்களுடன் மிக விரைவில் நாம் நீரருந்துவோம். ஆட்சியதிகாரமும் வல்லமையும் கொண்டவனிடம் உண்மையின் சிம்மாசனத்தில் மிக விரைவில் உட்காருவோம். அந்த சந்திப்பில்தான் நமது பேராசைகள்
நிறைவேறப்போகின்றன. அன்றுதான் நாம் நமது அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியைப் பருக முடியும். அதன் பிறகு நமக்கு தாகமென்பதே கிடையாது. இவ்வாறு முஹம்மது பெல்தாகி, தன் அன்பு மகள் அஸ்மாவுக்கு உருக்கமாக எழுதியிருந்தார்.







thanks:Jaffna Muslim

22 August 2013

புதிய கல்விக் கொள்கையின் முக்கிய சில பரிந்துரைகள்

5 வயது முதல் 16 வயது வரையான சகல பிள்ளைகளுக்கும் கல்வியினை கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாத பெற்றோரை தண்டிக்க சட்டம் அமைக்க வேண்டும் எனவும் கல்விச் செயற்பாடுகள் தொடர்பான விசேட பாராளுமன்ற செயற்குழு பரிந்துரை செய்துள்ளது. முதலாம், இரண்டாம் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு வேலை (Home work) கட்டாயமாக்கப்படக்கூடாது எனவும் பாட சாலைப் பிள்ளைகள் கையடக்கத் தொலை பேசியினைப் பயன்படுத்துவது தடை செய்ய வேண்டுமெனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையொன்றை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஆளும் கட்சி எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அடங்கிய 23 பேரடங்கிய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் அறிக்கையை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனை அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்த அமைச்சர், அரசாங்கம் மாறும்போதும், கட்சிகளின் ஆட்சிகள் மாறும் போதும் கல்விக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாதவாறு புதிய கல்விக் கொள்கை மற்றும் யோசனைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆளும் மற்றும் எதிர்க் கட்சியைச் சேர்ந்த 23 உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழு இப்புதிய கல்விக் கொள்கை தொடர்பில் விரிவாக ஆராய்ந்தே இதனைத் தயாரித்துள்ளது. மதத் தலைவர்கள், கல்வி மான்கள், பாடசாலை அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை தெரிவுக் குழுவுக்கு அழைத்து அவர்களின் சாட்சிகள் மற்றும் யோசனைகளைப் பெற்றே இப்புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இலவசக் கல்வியை மேலும் பலப்படுத்தும் வகையிலும் ஆட்சிமாறும் போது மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறு இப்புதிய கல்விக் கொள்கையை நாம் தயாரித்துள்ளோம். இப்புதிய கல்விக் கொள்கைக்கு கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இப்புதிய கொள்கையின் மூலம் இலவசக் கல்வியைப் பெறும் 40 இலட்சம் மாணவர்கள் நன்மையடைவதுடன் இலவசக் கல்வியும் பலப்படுத்தப்படும். இதன் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை சட்டமூலம் தயாரிக்கப்படும் என்றார். புதிய கல்விக் கொள்கையில் கல்வி முறைமை, கல்வி முகாமைத்துவம், தலைமைத்துவம், கல்வித் தரம், கல்வித் துறைசார் சேவைகள், அடங்கலாக கல்வித் துறையுடன் தொடர்புடைய சகல விடயங்களையும் உள்ளடக்கி இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்தினூடாக கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீட்டை 5 வீதமாக உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் ஆரம்பப் பாடசாலை கல்வி மத்திய அதிகாரப் பிரிவினால் மேற்பார்வை செய்யப்பட வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய சில பரிந்துரைகள்,
* பண்புசார் தரமிக்க சமநிலைமையான கல்வியினைப் பெறுவதற்காக சகல பிள்ளைகளுக்கும் நியாயமான சந்தர்ப்பங்களை வழங்குவது அரசின் பொறுப்பாகும்.
* சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்விச் சந்தர்ப்பத்தினை உறுதி செய்து பாதுகாப்பது அரசின் பொறுப்பாகும்.
* பெரும்பான்மையான இலங்கை சிறார்களின் தாய்மொழி மற்றும் தேசிய மொழி சிங்களம் அல்லது தமிழாக இருக்க வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச இணைப்பு மொழியாக ஆங்கிலம் கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடசாலைகளில் தமது சமயத்தைக் கற்க மற்றும் பின்பற்றவும் மாணவர்களுக்கு உரிமை இருக்க வேண்டும்.
* பாடவிதானம், கற்றல் - கற்பித்தல் ஒழுங்கு விதிமுறைகள், நேரசூசிகள் என்பன சகல 5 வருடங்களுக்கும் ஒருமுறை மாற்றப்பட வேண்டும்.
* சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் கிடைக்கும் பெறுபேறு களுக்கு அமைய பிள்ளைகளுக்கு உயர்தர கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பயிற்சிப் பாடநெறிக்கு வகைப்படுத்தி உள்ளடக்கப்பட வேண்டும்.
* உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பிள்ளைகள் பொருத்தமான பல்கலைக்கழகக் கல்விக்கு ஏனைய மூன்றாம் நிலைக் கல்விக்கு அல்லது பாடசாலையை அடிப்படையாகக் கொண்ட தொழில்சார் பாட நெறியில் வகைப்படுத்தி ஈடுபடுத்த வேண்டும்.
* பரீட்சைத் திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடக்கும் பரீட்சைகளின் கால எல்லை மீளாய்வு செய்யப்பட வேண்டும். எந்தப் பரீட்சை பெறுபேறுகளை மதிப்பிடும் கால எல்லை 10 வாரங்களில் இருந்து 8 வார காலமாக குறைத்து பெறுபேறு வழங்கப்பட வேண்டும்.
* குறைந்த பட்சம் நாளொன்றில் ஆரம்பப் பிரிவு வகுப்புகள் 5 மணித்தியாலங்களும் இடை நிலைப் பிரிவுக்காக 6 மணித்தியாலங் களும் கற்பிக்கப்பட வேண்டும்.
* பாடசாலை பையின் நிறையை குறைப்பதற்கான ஒழுங்குகள் வகுக்கப்பட வேண்டும். புத்தகங்க ளின் பருமனை குறைக்கக் கூடியவாறு அவற்றை சிறிய பிரிவுகளாக அச்சிடுவது மிக முக்கியமாகும்.
* கனிஷ்ட இடைநிலை மட்டங் களுக்கு மேற்பட்ட பாடங்களை ஆங்கில மொழி மூலம் கற்பித்தலை முடியுமான அளவு ஊக்குவிக்க வேண்டும்.
* உயர்தர வகுப்புகளுக்காக கணிப்பொறி (Calculator) பயன்படுத்த இடமளிக்க வேண்டும்.
* சகல மாணவர்களதும் பாடசாலை சமுகமளிப்பு 80 வீதத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
* தேசிய கல்விக் கல்லூரிகளின் பாடநெறிக்கால எல்லையை 4 வருடங்கள் வரை நீடித்து அதனை பட்டப்பாடநெறியாக மாற்ற வேண்டும்.
* பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்க்கையில் தேசிய கல்வி நிறுவகத்தினூடாக 3 மாதங்களை விட கூடுதல் காலம் முழு நேரப் பயிற்சி வழங்குவது கட்டாயம்.
source:தினகரன்

20 August 2013

மக்கொனையில் விசேட வைத்திய நிபுணர்கள்

தற்பொழுது மக்கொனையில் பின்வரும் விசேட வைத்திய நிபுணர்களின் சேவைகளை குறிப்பிட்ட தினங்களில் பெற்றுக்கொள்ளலாம்.குழந்தை நல மருத்துவ நிபுணர்கள்,தோல் நோய் மருத்துவ நிபுணர்,மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் [சகல போயா தினங்களிலும்],மற்றும் ஞாயிறு தோறும் பல் வைத்தியர்







pediatrician Dr.Anoma weerasinghe Monday
pediatrician Dr.suroopi Abegunawardana ---
Dermatologist Dr.chintha Perera ---
V.O.G Dr.Rani Sithambarapillai poya day
Dental doctor ----- sunday



மேலதிக விபரங்கலுக்கு:

ST.THERESE MEDICAL CENTRE
GALLE ROAD
MAGGONA.
TEL:034-2277185 / 077-2293931

18 August 2013

1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நேற்று வெளியிட்ட அறிக்கை

ஊடக அறிக்கை

09.10.1434

17.08.2013


1434 ஷவ்வால் மாத தலைப்பிறை
சம்பந்தமாக ..




அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை சம்பந்தமாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அதனது கிண்ணியா மற்றும் திருகோணமலை மாவட்டக் கிளையுடன் இணைந்து வெளியிடும் அறிக்கை. இலங்கையில் தலைப்பிறை பார்த்தல் தொடர்பாக கடந்த காலங்களில் வேறுபட்ட நிலைப்பாடுகள்
இருந்து அதனால் வந்த சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கோடு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடந்த 2006ஆம் ஆண்டு சகல தரப்பு உலமாக்களினது அங்கீகாரத்தோடும் உடன்பாட்டோடும்
ஐந்து தீர்மானங்களை மேற்கொண்டது என்பதையும் முஸ்லிம் சமூகம் அறிந்துவைத்துள்ளது என நம்புகிறோம். இத்தீர்மானங்களின் அடிப்படையிலேயே கடந்த ஆண்டுகளில் தலைப்பிறைத் தொடர்பான முடிவுகள் பெறப்பட்டு வந்தன. இவ்வாண்டு றமழான் மாதத் தலைப்பிறையும் ஷவ்வால் மாதத் தலைப்பிறையும் வழமைபோல் குறித்த தீர்மானங்களின் அடிப்படையிலேயே முடிவ செய்யப்பட்டன. ஆயினும் இம்முறை
ஷவ்வால் மாதத் தலைப்பிறை முடிவு செய்யும் விடயத்தில் பிறையை வெற்றுக் கண்ணால் கண்ட சாட்சிகளை உறுதிசெய்யும் விடயத்தில் உலமாக்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றியமை உண்மையாகும். இவ்வாறு குறித்த விடயத்தில் சில உலமாக்கள் முரண்பட்ட போதிலும் தலைப்பிறையைக் கண்டதாக கூறிய சாட்சிகளை தீர விசாரித்து உறுத்திப்படுத்தியதைத் தொடர்ந்து பிறையைத் தீர்மானிக்கும்
அதிகாரம் பெற்ற பெரிய பள்ளிவாயல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா முஸ்லிம் சமயப் பண்பாட்டலவல்கள் திணைக்களம் ஆகிய முப்பெரும் நிறுவனங்களையும் பிரதி நிதித்துவப்படுத்துவோரின் ஏகமனதான உடன்பாட்டுடன் இவ்வருட ஷவ்வால் மாதத் தலைப்பிறை 09.08.2013 ஆந்திகதி வெள்ளிக் கிழமை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டதான செய்தி அப்பிரதேச
உலமாக்களோடு 17.08.2013.08.17ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற சந்திப்பின்போது உறுதிபடக்கூறப்பட்டது. பிறைகாணப்பட்டதை உறுதி கொண்ட மக்கள் பெருநாள் கொண்டாடியதை சரியெனவும் மற்றோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் அறிவித்தலின்படி நோன்பை நிறைவேற்றியவர்களும்
சரியாகவே நடந்துள்ளனர் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இது பற்றி உலமா சபைத் தலைவர் அவர்கள் 2013.08.08 ஆம் திகதி 01:00 மணிக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன
சேவையில் ஆற்றிய உரையின் சில வார்த்தைகள் கிண்ணியா மூதூர் பிரதேச மக்களுக்கு வருத்தத்தைக் கொடுத்துள்ளது என்பதை உணர்ந்த தலைமையகம் வருந்திக் கொள்கிறது. இன்ஷா அல்லாஹ் எதிர்காலத்தில் இந்தச் சபையில் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளைக் கருத்திற்கொண்டு செயற்பட இரு சாராரும் இணங்கி இதனை பகிரங்கப்படுத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
source:www.acju.lk/news.php?nid=57

17 August 2013

எகிப்து: கெய்ரோ பள்ளிவாசலுக்குள்இருந்தவர்கள் அகற்றப்பட்டனர்

பள்ளிவாசலுக்குள்ளிருந்து வெளியேற்றப்பட்ட
பலர் கைதாகியுள்ளனர் எகிப்தில், தலைநகர் கெய்ரோவில் நூற்றுக்கும்
மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிருந்துகொண்டு
வெளியில் வர மறுத்துவந்த அல் ஃபட்டா பள்ளிவாசலுக்குள்ளே இராணுவத்தினர்
அதிரடியாக நுழைந்து அனைவரையும் இன்று மாலை அகற்றிவிட்டனர். பலர் கைது
செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாட்டவர்களும் அடங்குகின்றனர்.
முன்னதாக, பள்ளிவாசலின் மினாரட் கோபுரத்தின் உச்சியில;
ஏறியிருந்தவர்களுக்கும்
இராணுவத்தினருக்கும் இடையே பரஸ்பர துப்பாக்கிச்சூடு நடந்தமை குறிப்பிடத்தக்கது
. நேற்று வெள்ளிக்கிழமை இரவு பள்ளிவாசல் வளாகத்துக்குள் புகுந்த
இராணுவத்தினர் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால்
வெளியேறிய சிலர் கைதுசெய்யப்பட்டதை அடுத்து, மற்றவர்கள் வெளியேற
மறுத்துவந்தனர். 173 பேர் பலி, 1000 பேர் கைது இதனிடையே, எகிப்தில் கடந்த
24 மணிநேரத்தில் 173 பேர் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1200க்கும்
மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். அதேபோல்
எகிப்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி
ஆதரவாளர்களை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். இவர்களில் அல்கைதா இயக்கத்தின்
தலைவர் அய்மான் அல் சவாஹிரியின் சகோதரரும் கைதாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த போராட்டங்களின்போது பயங்கரவாத செயற்பாடுகளில்
ஈடுபட்டுள்ளதாக உள்துறை அமைச்சு இவர்கள் மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியை சட்டபூர்வமாக கலைத்துவிடுவதற்கு அரசாங்கம்
திட்டமிட்டுவருவதாக அரசாங்க பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். நேற்று
வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டவர்களில், முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின்
முன்னணித் தலைவர்களில் ஒருவரான மொஹமட் பாடியின் மகனும் அடங்குகிறார். ஒரு
வாரகால போராட்ட அழைப்பு முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியினர் இன்று முதல்
ஒருவார காலத்துக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு
விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
. இதற்கிடையே, போராட்டங்களில் ஈடுபடுவோர் மீது நிஜ துப்பாக்கி ரவைகளைக்
கொண்டு தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையாளர்
நவி பிள்ளை கூறியுள்ளார். அதேவேளை, போராட்டக்காரர்களையும் அமைதி
காக்குமாறும் பழிவாங்கல் நோக்கோடு செயற்பட வேண்டாம் என்றும் நவி பிள்ளை
கேட்டுக் கொண்டுள்ளார். எகிப்தில் முதன்முதலான ஜனநாயக முறைப்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மொஹமட் மோர்ஸி, கடந்த மாதம் இராணுவ சதி மூலம்
அகற்றப்பட்டார். தடுத்து வைக்கப்பட்டுள்ள மோர்ஸியை மீண்டும்
பதவிக்குகொண்டுவருமாறு முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி தொடர்ந்தும்
நடத்திவரும் போராட்டங்களில் நூற்றுக்கணக்கான உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன.
Source:bbc

15 August 2013

கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன்பரிசோதனை

தற்போது எல்லோர் கைகளிலும்
காணக்கிடைக்கின்ற நவீன கைத்தொலைபேசிகளைக்
கொண்டே கண்களைப்
பரிசோதித்து பிரச்சினைகளை கண்டுபிடிக்க
முடிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாக
இருக்கும்? அது விரைவில் சாத்தியமாகும் என்பது போன்ற
ஒரு கண்டுபிடிப்பை லண்டன் ஆராய்ச்சியாளர்கள்
செய்துள்ளனர். ஆமாம், பார்வைத்திறன்
பரிசோதனையை பலருக்கும் கொண்டுசேர்க்கும்
விதமான கைத்தொலைபேசி அப்ளிகேஷன்
ஒன்றை லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட்
டிராபிக்கல் மெடிசினைச் சேர்ந்த ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். Portable Eye Examination Kit சுருக்கமாக PEEK
என்று சொலப்படுகின்ற அப்ளிகேஷன்
ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வைத் திறன்
பரிசோதனை கைத்தொலைபேசியில் வருவதால்
ஏற்படக்கூடிய நன்மைகள் யாவை? புதுச்சேரி அர்விந்த் கண் மருத்துவமனையின்
தலைமை மருத்துவ அதிகாரியும், கண்
அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர்
ரெங்கராஜ் வெங்கடேஷ்
நவீன கைத்தொலைபேசிகளில் இருக்கும்
காமெராக்களையும் ஃபிளாஷ்ஷையும்
பயன்படுத்தி இந்த அப்ளிகேஷன் கண்ணின்
விழித்திரையை ஸ்கேன் செய்கிறது. தவிர ஒருவருடைய பார்வைத் திறனை அளக்க
உதவும் சின்னதாகிக்கொண்டே போகும்
எழுத்துக்களும் இந்த அப்ளிகேஷனில் உண்டு. இந்த அப்ளிகேஷனைப்
பயன்படுத்தி ஒருவரது விழித்திரையையும்
பார்வைத் திறனையும் சோதிக்கும்போது அந்த
விவரங்கள்
கைத்தொலைபேசியிலேயே பதியப்படுகின்றன. அந்த விவரங்களை ஒரு மருத்துவருக்கு மின்
அஞ்சல் செய்ய முடியும். பீக் அப்ளிகேஷனைக் கொண்டு கென்யாவில்
பலருடைய கண்களைப் படமெடுத்து, அந்தப்
படங்கள் லண்டனிலுள்ள மூர்ஃபீல்ட் கண்
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. மிக அதிக விலைகொண்ட கண் பரிசோதனைக்
கருவிகளின் படங்களையும் இந்தப்
படங்களையும் நிபுணர்கள்
ஒப்பிட்டபோது கைத்தொலைபேசி எடுத்த
படங்களைக் கொண்டும் கண்
கோளாறுகளை ஓரளவுக்கு கண்டுபிடிக்க முடிந்தது. இந்த ஆய்வு இன்னும்
முழுமை அடையவில்லை என்றாலும்,
கைத்தொலைபேசி எடுத்த
படங்களை வைத்து ஆயிரத்துக்கும்
அதிகமானோருக்கு ஏதோ ஒரு வகையில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. பார்வைத் திறன் பாதிப்பு - உலக நிலவரம் உலக அளவில் 28 கோடிப்பேருக்கும்
அதிகமானவர்கள்
கண்பார்வை பாதிக்கப்பட்டோ இழந்தோ
இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம்
கூறுகிறது. பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில்
குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகள்தான்.
பொருத்தமான
கண்ணாடியை அணிவதாலோ புரை நீக்க
சிகிச்சை மூலமாகவோ அவற்றை
குணப்படுத்திவிட முடியும். ஏழை நாடுகளிலும்கூட பெருநகரங்களிலும்
ஊர்களிலும் கண் மருத்துவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஏழை மக்களும் கிராமவாசிகளும் கண்
மருத்துவர்களைச் சென்று பார்ப்பதில்லை. உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90
சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இந்தியா ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் கண்
மருத்துவர்கள், கண் பார்வைத்திறன்
பரிசோதகர்கள் போன்றோவர்களால் கொஞ்சம்
பேருக்கேசேவை வழங்க முடிகிறது ஏனென்றால்
குறைவானவர்களே இவர்களிடம் வருகின்றனர். அந்த வகையில் இந்த புதிய தொழில்நுட்பம்
முன்னேற்றம் கண்டால் பெரிய பலன் இருக்கும் என
நிபுணர்கள் கூறுகின்றனர்.
Source:bbc

12 August 2013

எரிகல் பொழிவை வெறும் கண்களால் நீங்களும்பார்க்கலாம்!

வானில் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளில்
ஒன்றான பூமி மீது எரிகல் விழும் எரிகல்
பொழிவு இடம்பெறுகிறது.
இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் இதனை மக்கள்
வெறும் கண்களால் பார்க்கலாம்
நள்ளிரவு நேரங்களிலும், நிலவின் வெளிச்சம் குறைவாக இருக்கும் போதும், தெளிவாக
தெரியும் என அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து
கொண்டுதான் இருக்கிறது. இதில் சில
நேரங்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்
சிதைந்த வால் நட்சத்திரங்கள், வானில் விண் எரிகற்களாக உலா வருகின்றன.
இவ்வாறு சுற்றி வரும் போது, அதன் வால்
பகுதியில் உள்ள கற்கள் புவியின்
ஈர்ப்பு விசையின் காரணமாக
இழுக்கப்பட்டு பூமியில் விழுவது வழக்கம்.
அதேபோல், 130 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுவரும்
"ஸ்விப்ட் டட்டில்´ என்ற வால் நட்சத்திரத்தின்
பாதைக்கு நெருக்கமாக,
நேற்று பூமி கடந்து சென்றது.
இதனால் அதன் துகள்கள் பூமியின்
மீது தொடர்ந்து விழுகிறது. அப்படி விழும் கற்கள், பூமியிலிருந்து சுமார் 80 கி.மீ.
உயரத்திலேயே எரிந்து விடுவதால்,
பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

11 August 2013

பள்ளிவாசலை அகற்ற கூடாது, சம்பிக்ககாட்டமானவார்த்தைகளை பிரயோகிப்பதை நிறுத்தவேண்டும்: தவ்ஹீத் ஜமாத்

கொழும்பு, கிராண்ட்பாஸ்
மோலவத்தை பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து எ
க்காரணம் கொண்டும் அகற்ற கூடாது. மேலும் இந்த
பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்
அமைச்சர்களும் எம்.பி.க்களும்
தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் எம்.பி.
அமைசர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டிய
நிலை உருவாகும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
எமது இணையத்தளத்திற்கு தெரிவித்ததாவது, நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக்
கொண்டிருந்த போது பெரும்பான்மை மக்களில்
ஒரு குழுவினர் காவியுடையணிந்த சிலரும்
இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக
திரண்டனர்.
மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள்
பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும்
அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.
பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக்
கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக
நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும்
வரை அவர்கள் எந்தவிதமான எதிர்
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின்
கேட் அகற்ப்பட்டு அருகில்
இருந்து அழுக்கு ஓடைக்குள்
வீசியெறியப்பட்டுள்ளது.
பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும்
முயற்சியில் குறித்த குழுவினர் முகாமிட்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்த
அக்குழுவினரை பொலிசார் வெளியேற்றாமல்
அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சென்ற தவ்ஹீத் ஜமாத்
நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின்
இடத்தை விட்டும்
அவர்களை அப்புரப்படுத்துமாறு பொலிசாரிடம்
வேண்டிக் கொண்டார்கள். இருப்பினும் போலிசார்
அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில்
இருந்து வெளியேற்றவோ முயலவில்லை. ஆனால் பள்ளியை உடைக்க வந்த
காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளிய
ை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய
முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட
வேண்டும் என்பதில் பொலிஸார் கருத்தாக
இருந்தார்கள். பல தடவை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுடன்
கலைந்து செல்லுமாறு பொலிசார்
பேச்சுவார்தை நடத்தினார்கள். இருப்பினும்
பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும்
வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள்
உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும்
ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று காலை சிஹல ராவய
இயக்கத்தினர் பாதிப்பை உண்டாக்க வந்தார்கள்.
பொலிசார் அவர்களை தடுத்து அனுப்பினார்கள்.
எனினும் இந்த தாக்குதல் பின்னணியில் சிங்கள ராவய இருக்கின்றதோ எனவும் எமது சந்தேகம்
ஏற்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் சம்பிக்க
சம்பவத்தை பெரிதும் படுத்தும் வகையில்
காட்டமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இன உறவை பாதிக்கும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை அமைச்சர்
சம்பிக்க உடனடியாக நிறுத்த வேண்டும்
எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
கோரிக்கை விடுத்துள்ளது.
source:virakesari

07 August 2013

ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாத தலைப்­பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பி­
றையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்
மாலை மஃரிப் தொழுகையின் பின்னர்
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள
ஹமீதிய்யா மத்ரஸா மண்டபத்தில் நடைபெறும்.
உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம், - இய்யத்துல்
உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்,
ஸாவியா தக்கியா மற்றும் மேமன் ஹனபிப்
பள்ளி வாசல் ஷரீஆ கவுன்சில் ஆகியவற்றின் பிர­
திநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்­
ளனர். இன்று புதன் மாலை மஃரிப் தொழுகை நேரமா­
கிய 6.29 மணி முதல் ஷவ்வால் மாதத்தின் தலைப்­
பிறையைப் பார்க்குமாறும் தலைப்பிறை கண்ட­
வர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரிலோ அல்­
லது 011 5234044, 2432110, 0112 2390783, 0777
366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடா­ கவோ அறியத் தருமாறு சகல முஸ்லிம்களையும்
கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்
கொள்கின்றது.
Source:virakesari

03 August 2013

நியுஸிலாந்து பால்மாவில்பாக்டீரியா கலப்படம்:நுகர்வோர்க்கு எச்சரிக்கை

நியுஸிலாந்தின் முன்னணி பால் உற்பத்திப்
பொருட்கள் நிறுவனம் ஃபோன்டெர்ரா




நியுஸிலாந்தின் மிகப் பெரிய
பால்மா நிறுவனத்தின் குழந்தைப் பால்
மா உள்ளிட்ட பொருட்களில் பாட்டுலிஸம் என்ற
நோயைத் தரவல்ல
பாக்டீரியா கிருமி கலந்திருக்கலாம் என
அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது. பாட்டுலிஸம் என்பது சில நேரம்
உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்ல ஒருவகை வாத
நோய். பாதிப்புள்ள பால்மா பொருட்களை கடைகளில்
இருந்து உடனடியாக திரும்பப் பெற
சீனா உத்தரவிட்டுள்ளது. நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும்
பொருட்கள் மீது தீவிர
பரிசோதனைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா,
வியட்நாம், சௌதி அரேபியா உட்பட பல
வெளிநாடுகளிலும்
தமது வாடிக்கையாளர்களுக்கு தகவல்
கொடுத்துள்ளதாக நியுஸிலாந்தின்
முன்னணி பால் உற்பத்திப் பொருட்கள் நிறுவனமான ஃபோன்டெர்ரா கூறுகிறது. சீனாவில் குழந்தைகள் பால்மா ஒன்றில் மெலமின்
கலப்படம் ஏற்பட்டு 2008ல் பிள்ளைகள் 6 பேர்
கொல்லப்பட்டதை அடுத்து இறக்குமதி
செய்யப்பட்ட பால்மாவுக்கு சீன நுகர்வோர்
மாறியிருந்தனர். நியுஸிலாந்திலிருந்து பால்மா இறக்குமதி
செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
Thanks:BBC