தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 13 Apr 2025

26 August 2012

நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்


நிலவில் முதன் முதலில்
காலடி எடுத்து வைத்தவர் என்ற
பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல்
ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள
வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த
ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழகத்தில்
இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர்
தன்னுடைய 30-ம் வயதில்
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் படிப்படியாக
முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்
நிலவு குறித்த
பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பல்லோ விண்கலம் தயார்
செய்யப்பட்டது. அப்பல்லோ ஒன்று மற்றும்
இரண்டு என தயாரிக்கப்பட்டு இறுதியில்
அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் விண்ணில்
பறந்தார். அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகையில்
ஆறில் ஒரு பங்கு மட்டுமே கொண்டிருந்த
காலகட்டத்தில் 1969 ஆம் ஆண்டு ஜுலை 20
ஆம் திகதி முதன்முதலாக சந்திரனில்
காலடி எடுத்து வைத்தார்.நிலவில் இறங்கி நடக்க
தொடங்கியதை அடுத்து 20
நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக
விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் சென்றுஇணைந்து கொண்டு நடந்து ‌ நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் பாறை மாதிரிகள்
மற்றும் புகைப்படங்களை எடுத்து கொண்டார். பின்னர் பூமிக்கு திரும்பி ஆம்ஸ்ட்ராங்
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பபிரிவில்
ஆலோசகராக பணிபுரிந்தார். அதன்பின்
சின்சினாட்டி பல்கலைகழகத்தில்
இன்ஜினியரிங் பாட பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக இதய நோயால்
அவதிப்பட்டு வந்த அவருக்கு இந்த மாத
தொடக்கத்தில் தான் இதய அறுவைச்
சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
manithan.com

No comments:

Post a Comment