தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 August 2012

Cookies என்றால் என்ன?

பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது. இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்? மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.
சில இணைய தளங்களைப் பார்வையிடும்போது அந்த வெப் சேர்வர் ஒரு குக்கீ பைலை உமது கணினியின் ஹாட் டிஸ்கில் சேமித்து விடுகிறது. இதன் மூலம் அந்த குக்கீ பைலுக்குரிய நபர் நீங்கள் தான் என்பதை சேர்வர் நினைவில் கொள்ளும். இங்கு குக்கீ பைல் ஒரு அடையாள அட்டை போல் செயல்படுகிறது. மீண்டும் ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட தளத்தைப் பார்வையிடும்போது உங்கள் வெப் பிரவுசர் அந்த குக்கீயை சேர்வருக்கு அனுப்பி விடுகிறது. இதன் மூலம் வெப் செர்வர் அந்த இணைய தளத்தில் நுளைந்திருப்பது முன்னர் வந்து போகும் நபர்தான் என்பதை உறுதிப் படுத்திக் கொள்வதோடு அந்த இணைய தளத்தில் எந்த ஒரு பக்கத்தைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தாலும் உங்களை சேர்வர் இனங காணும் முன்னர் பார்வையிட்ட ஒரு இணைய தளத்தை மறுபடியும் பார்வையிடும்போது குக்கீஸ் நமக்கு உதவுகின்றன. உதாரணமாக ஒரு பயனர் பெயரை குக்கீ பைலாக நமது கணினியில் சேமித்தவுடன் அந்த பயனருக்குரிய பாஸ்வர்ட், இமெயில் முகவரி, தற்போதைய தேர்வுகள் போன்ற வேறு விவரங்களை சேர்வரில் உள்ள தரவுத் தளத்தில் பதியப்பட்டு விடும்.. அந்த குக்கீயில் பதியப்பட்ட பயனர் பெயரைக் கொண்டு அவரின் பாஸ்வர்டை மறுபடியும் டைப் செய்யாமலேயே அவர் பற்றிய விவரங்கள அறிந்து கொள்கிறது, இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்திற்குள் ஒருவரின் செயற்பாட்டை அறிந்து கொள்ளவும் நேரத்தை சேமிக்கவும் முடியுமாயுள்ளது. அவ்வாறே இணையம் மூலம் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போதும் (online shopping) அந்த
தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை குக்கீஸில்
போட்டு விடுகிறது. இதன் மூலம் அந்த தளங்களை மறுபடியும் பார்வையிடும்போது உங்கள் பெயர் விவரங்களை மறுபடியும் வழங்க வேண்டிய அவசியம் ஏற்படாது. குக்கீஸ் இனையத்தில் உங்கள் செயற்பாட்டை அவதானிக்கவே உருவாக்கப்படுகின்றன..
ஒரு குக்கீயை உருவாக்கும்போது அவ்விணைய தளத்தின் பெயரும் அந்த குக்கீயில் பதிவாகிவிடும். . அதன் மூலம் அந்த குக்கீயைத் திறந்து பார்க்க அவ்விணைய தளத்திற்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும். ஏனைய் தளங்களால் அந்த குக்கீயைப் பார்வையிட முடியாது. சில இணைய தளங்கள் வியாபார நோக்கம் கொண்ட நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்ந்து அவர்களின் குக்கீகளை நமது கணினியில் சேமித்து விடும். இவை மூன்றாம் தரப்பு குக்கீ (Third party cookies) எனப்படும். இதன் மூலம் அவ்வியாபார நோககம் கொண்ட நிறுவனங்கள் தங்கள் குக்கீகளை பயன்படுத்துவோரின் இணைய் செயற்பாட்டை அவதானிப்பதோடு அவர்களை இணையத்தில் பின் தொடர்ந்து கொண்டேயிருக்கும். . அதாவது நீங்கள் எவ்வாறான இணைய பயனர், உங்கள் விருப்பு என்ன, எவ்வகையான பொருட்களை இணையத்தின் வ்ழியே கொள்வனவு செய்கிறீர்கள போன்ற விவரங்களைப் பெற்றுக் கொள்ளும். எடுத்துக் காட்டாக ஒரு இணைய் தளத்திலிருந்து ஒரு டிஜிட்டல் கேமராவை வாங்கி விடுகிறீர்கள். அப்போது குக்கீயைப் பகிர்ந்து கொள்ளும் வேறு நிறுவன இணைய தளங்களும் கேமரா போன்ற வேறு இலத்திரனியல் சாதனங்களை உங்களுக்கு விற்பனை செய்ய முயலும். ஒரு இணைய தளத்தில் இமெயில் முகவரியை வழங்கும் போது அதன் சக நிறுவனங்களும் அதனை அறிந்து கொண்டு நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு வேண்டாத குப்பை அஞ்சல்களையெல்லாம் உங்களுக்கு அனுப்பி விடும். உங்களைப் பற்றி இவர்கள எப்படி அறிந்து கொண்டார்கள் என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள். குக்கீஸ் என்பவை மிகச் சிறிய டெக்ஸ்ட் பைல்களே. இவை .txt எனும் பைல் நீட்டிப்பைக் கொண்டிருக்கும். அது ஹாட் டிஸ்கில் சேமிக்கப்பட் டிருக்கும். விண்டோஸில் குக்கீ பைல்கள் c - சீ ட்ரைவில் Documents and Settings போல்டரில் உள்ள பயனர் கணக்கிற்குரிய Cookies போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். எனினும் இவற்றால் கணினிக்கு எந்த வித பாதிப்பம் ஏற்படாது. இவை வெறும் டெக்ஸ்ட் பைல்களேயன்றி .இதன் மூலம் வைரஸை கணினியில் பரவச் செய்திட முடியாது. நீங்கள் ஒரு இணைய தளத்தில் வழங்கிய தகவல்களை அந்த இணைய தளம் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்து கொள்ளாதவரை குக்கீஸால் எந்த வித பாதிப்பும் இல்லை. இணைய தளங்கள் உங்களைப் பற்றிய விவரங்களை நினைவில் வைத்திருக்க குக்கீஸ் உதவுவதால், உங்கள் கணினியை உபயோகிக்கும் வேறொரு நபரால் நீங்கள் ஏற்கனவே பார்வையிட்ட இணைய தளங்களைப் பர்வையிட வழி கிடைத்து விடுகிறது. குக்கீஸ் மேல் உங்களுக்கு நம்பிக்கையில்லையானால் அதனை அனுமதிக்காது விடலாம் அல்லது குக்கீஸ் எனும் வசதியை வெப் பிரவுசரிலிருந்து முடக்கி விடலாம். எனினும் இவ்வாறு செய்வதால் வேறு சில வசதிகளைப் பெற முடியாது போய்விடும். சிலர் தங்கள் கணினியில் பதிவாகியிருக்கும் குக்கீஸை அவ்வவப்போது அழித்து விடுவதும் உண்டு. இவ்வாறு அழிப்பது சில வேளை சிக்கலை ஏற்படுத்தவும் கூடும். ஏனெனில் சில தளங்கள் குக்கீஸ் இல்லாது தமது தளத்தை அணுக விடாது.. அனேகமான வெப் பிரவுசர்களில் குக்கீஸைக் கட்டுப் படுத்துவத்ற்கன வசதியுள்ளது., இதன் மூலம் குறிப்பிட்ட சில பாதுகாப்பான இணைய தளங்களிலிருந்து மட்டும் குக்கீஸை அனுமதிக்கலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் குக்கீகளை எவ்வாறு தடுப்பது? இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில் Internet Options தெரிவு செய்யுங்கள். அங்கு Privacy டேபின் கீழ் ஸ்லைடர் கொண்டு குக்கீ அளவினைக் கட்டுப்படுத்தலாம். Block All Cookies, High, Medium High, Medium, Low, Accept All cookies என ஆறு தெரிவுகள் இருக்கும். (Block All Cookies) தெரிவு செய்வதால் அனைத்து குக்கீகளையும் தடுக்க முடியும்.. இத்தகைய செயலமைப்பால், எந்தவொரு இணைய தளமும் கணிணிக்குள், குக்கீகளை உட்புகுத்தி சேமிக்க இயலாது. அனைத்து குக்கீகளையும் தடுத்தால், மிகுதியான
இணைய தளங்களை பார்வையிடுவதை தடுக்க நேரிடும்.. அடுத்த இரண்டு நிலைப்பாடுகளான, உயர்வு (High), மிதமான உயர்வு (Medium High), ஆகியவை மிக்க பொருத்தமானவையாகும். மேலும் ஒரு குறிப்பிட்ட தளத்திற்கான குக்கீயை மட்டும் தடுக்கவும் இயலும். பழைய குக்கீகளை நீக்கல் முன்பு ஹாட்டிஸ்கில் சேமிக்கப்பட்ட குக்கீகளை அகற்றும் வரை அவற்றைப் படிக்க இயலும். அனைத்து குக்கீகளையும் அகற்றுவதற்கு, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Tools மெனுவில், Internet Options தேர்ந்தெடுக்கவும். General டேபின் கீழ் Temporary Internet Files பகுதியில், Delete Cookies என்பதை தேர்ந்தெடுத்து ஓகே சொல்லி விடுங்கள்

No comments:

Post a Comment