தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 August 2012

வானில் நிகழும் அற்புத நிகழ்வு! இன்று நிலவு நீல நிறத்துடன் தோன்றும்!

வான்வெளியில் எப்போதாவது நிகழும் அற்புத
நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் வன்ஸ் இன் ப்ளூ மூன்
என்ற அர்த்தத்தில் நீல நிலாக் காலத்தில்,
என்று குறிப்பிடப்படுகிறது. வானில் வெண்மையாகத் தோன்றும் நிலவு நீல
வர்ணத்தில் தோன்றுவது எப்போதாவதுதான் என்ற
பொருளில் இந்த வாசகம் அமைந்துள்ளது. அப்படியான ஓர் அரிய
நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை
இடம்பெறவுள்ளதாக புதுடில்கியில் உள்ள
அறிவியல், கல்வி தகவல்
பரப்பு அமைப்பு அறிவித்துள்ளது.. இன்று இரவு தோன்றும் நிலவு நீல நிறத்தில்
இருக்கும் என்று வானியல் வல்லுநர்கள்
தெரிவித்துள்ளனர். இந்த மாதத்தில்
முழு நிலவு இரு முறை வானில் தோன்றுகிறது. இது இலங்கை, இந்தியா உள்ளிட்ட தெற்காசிய
நாடுகளில் வாழும் மக்களால் அவதானிக்க
கூடியதாக இருக்கும் என
அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2-ம் திகதி முதல் முறையும்,
இன்று இரண்டாம் முறையும் தோன்றுகிறது. இவ்வாறு ஒரு மாதத்தில்
இரண்டாவது முறை தோன்றும்போது,
நிலவு நீலமாகத் தோற்றமளிக்கும்
என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். வாயு மண்டலத்தில் படிந்துள்ள எரிமலையின்
சாம்பல் துகள்கள், புகை ஆகியவை காரணமாக
இந்த நிறம் ஏற்படும் என்று அறிவியல்,
கல்வி தகவல் பரப்பு அமைப்பான ஸ்பேஸ்
தெரிவித்துள்ளது. அடுத்த நீல நிலவு 2015-ம் ஆண்டு ஜூலை மாதம்
தோன்றும் என்று அந்த அமைப்பின் வானியல்
ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை நீல நிலவு மாலை 6.13
மணி தொடக்கம், இரவு 7.28 மணிவரை தோன்றும்
என்று இந்திய வானியல் சங்கத்தின் இயக்குநர்
என். ஸ்ரீரகுநந்தன் குமார் தெரிவித்துள்ளார்..

29 August 2012

Cookies என்றால் என்ன?

பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை தற்போது பார்வையிடுகிறார் என்பதை அந்த இணைய தளம் சேமிக்கப்பட்டுள்ள வெப் செர்வர் அறிந்து கொள்கிறது. இவ்வாறு பல இணைய பக்கங்களிலுள்ள கேள்விகளுக்கு பதிலளித்த பின்னர் கடைசியாக அனைத்து விடைகளுக்குமான புள்ளிகளை மொத்தமாக சொல்லி விடுகிறது அந்த இணைய தளம். இது எவ்வாறு சாத்தியம்? மேற் சொன்ன செயற்பாட்டின் போது வெப் சேர்வருக்கு உதவுகிறது நமது கணினியில் சேமிக்கப்பட்டிருக்கும் ஒரு சின்னஞ் சிறிய டெக்ஸ்ட் பைல். இதனையே குக்கீ எனப்படுகிறது.

26 August 2012

நிலவில் முதன் முதலாக கால் பதித்த நீல் ஆம்ஸ்ட்ராங் மரணம்


நிலவில் முதன் முதலில்
காலடி எடுத்து வைத்தவர் என்ற
பெருமை கொண்டிருந்த அமெரிக்க விஞ்ஞானி நீல்
ஆம்ஸ்ட்ராங் தனது 82-வது வயதில் காலமானார். அமெரிக்காவின் ஒகியோ மாகாணத்தில் உள்ள
வாபா கோனெட்டா என்ற சிறிய நகரில் பிறந்த
ஆம்ஸ்ட்ராங் புருடியூ பல்கலைகழகத்தில்
இன்ஜினியரிங் படிப்பை முடித்த பின்னர்
தன்னுடைய 30-ம் வயதில்
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி விமானியாக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் படிப்படியாக
முன்னேறி தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இந்நிலையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்
நிலவு குறித்த
பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக அப்பல்லோ விண்கலம் தயார்
செய்யப்பட்டது. அப்பல்லோ ஒன்று மற்றும்
இரண்டு என தயாரிக்கப்பட்டு இறுதியில்
அப்பல்லோ 11 என்ற விண்கலம் மூலம் விண்ணில்
பறந்தார். அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகையில்
ஆறில் ஒரு பங்கு மட்டுமே கொண்டிருந்த
காலகட்டத்தில் 1969 ஆம் ஆண்டு ஜுலை 20
ஆம் திகதி முதன்முதலாக சந்திரனில்
காலடி எடுத்து வைத்தார்.நிலவில் இறங்கி நடக்க
தொடங்கியதை அடுத்து 20
நிமிடங்களுக்கு பின்னர் தன்னுடைய சக
விஞ்ஞானியான புஷ் ஆல்ட்ரின் உடன் சென்றுஇணைந்து கொண்டு நடந்து ‌ நிலவின் ஈர்ப்பு சக்தி மற்றும் பாறை மாதிரிகள்
மற்றும் புகைப்படங்களை எடுத்து கொண்டார். பின்னர் பூமிக்கு திரும்பி ஆம்ஸ்ட்ராங்
நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில்
ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பபிரிவில்
ஆலோசகராக பணிபுரிந்தார். அதன்பின்
சின்சினாட்டி பல்கலைகழகத்தில்
இன்ஜினியரிங் பாட பிரிவில் பேராசிரியராக பணியாற்றினார். கடந்த சில மாதங்களாக இதய நோயால்
அவதிப்பட்டு வந்த அவருக்கு இந்த மாத
தொடக்கத்தில் தான் இதய அறுவைச்
சிகிச்சை நடந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி
manithan.com