தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

15 May 2011

நாட்காட்டியில் முன் செல்ல விளையும் சமோவா

சமோவா என்ற குட்டித் தீவு சர்வதேச தேதி எல்லைக்கோட்டின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு பகுதிக்கு மாறிவிடுவது என்று முடிவு செய்திருக்கிறது.

இதன் மூலம் அது கால அளவில் ஒரு நாள் முன்னுக்கு செல்கிறது. இந்த நடவடிக்கை அதன் வர்த்தகத்துக்கு சாதகமாக இருக்கும் என்று அது கூறுகிறது.

ஒரு நாள் என்பது முடிவதைப் பார்க்கும் கடைசி நாடுகள் சிலவற்றுள் ஒன்றாக பசிபிக் பெருங்கடலின் மத்தியில் இருக்கும் சமோவா தீவுகள் நாடு அமைந்திருக்கிறது. அதாவது, அங்குதான் ஒரு நாள் என்பது கடைசியாக உதயமாகி, கடைசியாக முடிவடைகிறது.

ஆனால், அடுத்த ஆண்டிலிருந்து இந்த நாடு புதிய ஒரு நாள் உதயமாவதைப் பார்க்கும் முதல் நாடுகளில் ஒன்றாக இருக்கும்.

சர்வதேச தேதிக் கோட்டில் தற்போது அது பின்பற்றும் கிழக்கு பகுதி தேதியிலிருந்து மேற்குப் பகுதி தேதிக்கு மாறுவது என்பது வணிக ரீதியில் நல்ல முடிவு என்று அரசு கூறுகிறது.

தற்போது சமோவா தீவுகள், அதன் முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளில் ஒன்றான நியூசிலாந்து நாட்டைவிட 23 மணி நேரங்கள் பின்னதாக இருக்கிறது.

இந்த மாற்றம் அமலுக்கு வரும்போது, நியூசிலாந்துடன் ஒரே நாளில் சமோவா இருக்கும், ஒரு மணிநேரம் நியூசிலாந்தைவிட முன்னதாக இருக்கும்.

தற்போது ஆஸ்திரேலியாவும், நியுசிலாந்தும் ஒரு புதிய வேலை வாரத்தைத் தொடங்கும் போது, சமோவா நாடு இன்னும் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத் தொழுகைகளில் ஆழ்ந்திருக்கிறது என்று சமோவா நாட்டுப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மாற்றத்தின் விளைவாக சமோவா நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அண்டை நாடான, அமெரிக்க சமோவா தீவுகள், சர்வதேச தேதிக்கோட்டுக்கு கிழக்கேயே இருக்கும். எனவே அங்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் அங்கு தங்களது பிறந்த நாளைக் கொண்டாடிவிட்டு அடுத்த நாள் ஒரு விமானத்தில் சிறிது நேரம் பயணித்து அடுத்த தீவுக்கு சென்று மீண்டும் ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடலாம்.

நன்றி BBC தமிழோசை

No comments:

Post a Comment