தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

15 February 2021

Marhoom Moulavi Nizam – Scholar with many talents



This message is published, In view of the 
2nd death anniversary of Marhoom Moulavi 
Nizam (Bahji), which falls on February 2. 
Moulavi Nizam was a Alim with a spe-
cialty, a scholar in Sharia, that our society 
has witnessed. He lived as an exemplary 
personality. His professional career extend-
ed as an Alim, scholar, journalist and a 
broadcasting resource person. While 
describing further about Marhoom Nizam, 
the vice President of All Ceylon Jamiathul 
Ulama and Deputy Director of Jamiya Nal-
eemiya Institute A.C.Agar Mohamed (Nal-
eemi) has said that Marhoom Nizam as an 
Alim lad a life with highly respected quali-
ties such as calmness and impartiality. One 
had not seen extremism in his speech, writ-
ings or actions. He had never blamed or 
used inappropriate words on anyone or any 
party. There was courtesy in his words and 
he always adopted a civilized form of 
expressing ideas. 
He abstained from raising controversial 
matters. He did not write speak or behave in 
ways that caused disturbances in society. He 
stressed that where ever Moulavi goes, his 
intention was on Muslim Umma. from this 
we could understand about his good quali-
ties. 
Nizam was born in Maggona on May 21. 
1946 as the second son to Marhooms 
A.L.M.Rasheedh Marrikar and Marhoom A 
Nurul Alavia, both belonged to the genera-
tions of Ayurvedic doctors. He started his 
early education at the Tamil mixed school in 
1952. 

27 November 2020

*ஜும்ஆ நாளின் மகிமைகளை பேணுவோம்


 *ஜும்ஆ நாளின் மகிமைகளை பேணுவோம்*

_________________________________


அல்லாஹ் இந்த உலகத்துக்கு அனுப்பியுள்ள Covid19 என்ற வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அனைத்து விதமான ஒன்றுகூடல்களையும் தடை செய்துள்ளது அந்த அடிப்படையில் தற்காலிகமாக முஸ்லிம் சமூகம் விட்டுக்கொடுக்க முடியாத ஜமாஅத் தொழுகையையும் ஜும்ஆ தொழுகையையும் நிர்பந்த அடிப்படையில்  நிறுத்த வேண்டி ஏற்பட்டுள்ளமை வார்த்தைகளால் சொல்ல முடியாத துயரமாகும். 


இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் அதிகம் அல்லாஹ்வை நெருங்க முயற்றிசிக்க வேண்டுமே ஒழிய மறுமையை மறந்து செயல்படக்கூடாது 


அன்பார்ந்த ஈமானிய உறவுகளே..!

 நிர்பந்த அடிப்படையில் தடைபட்டது ஜும்ஆவுடைய ஒன்றுகூடலும் தெழுகையும் மட்டும் தானே ஒழிய அத்தினத்தின் சிறப்புக்கள் அல்ல என்பதை தெளிவாக நாம் புரிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.


ஜும்ஆவுடைய தினத்தின் சிறப்புக்களும் அதில் நாம் செய்ய வேண்டியவைகளும்


*1) ஜும்ஆ தினத்தின் சிறப்புக்கள்*


 ¶நபி (ஸல்) அவர்களின் உம்மத்துக்கு கிடைத்த தனிச்சிறப்பு,


عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ، قَالَا: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَضَلَّ اللهُ عَنِ الْجُمُعَةِ مَنْ كَانَ قَبْلَنَا، فَكَانَ لِلْيَهُودِ يَوْمُ السَّبْتِ، وَكَانَ لِلنَّصَارَى يَوْمُ الْأَحَدِ، فَجَاءَ اللهُ بِنَا فَهَدَانَا اللهُ لِيَوْمِ الْجُمُعَةِ، فَجَعَلَ الْجُمُعَةَ، وَالسَّبْتَ، وَالْأَحَدَ، وَكَذَلِكَ هُمْ تَبَعٌ لَنَا يَوْمَ الْقِيَامَةِ، نَحْنُ الْآخِرُونَ مِنْ أَهْلِ الدُّنْيَا، وَالْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، الْمَقْضِيُّ لَهُمْ قَبْلَ الْخَلَائِقِ» صحيح مسلم  


நபி (ஸல்) கூறினார்கள்: “அல்லாஹ் எங்களுக்கு முன்னிருந்தவர்களை ஜும்ஆ தினத்தை விட்டும் பாக்கியமிழக்கச் செய்துவிட்டான், யூதர்களுக்கு சனிக்கிழமையும், நஸாராக்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் இருந்தன. அல்லாஹ் எங்களை அனுப்பி வெள்ளிக்கிழமையைத் தந்தான்.எனவே வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிவிட்டது. இதுபோன்றே மறுமையிலும் அவர்கள் எங்களைத் துயர்பவர்களே, உலகில் நாம் கடைசியில் வந்தவர்கள், மறுமையில் முதன்மையானவர்கள், ஏனைய படைப்புகளுக்கு முன்னால் அவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். (முஸ்லிம்)


 

¶ நாட்களில் சிறந்த நாள்


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.- இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


ஸஹீஹ் முஸ்லிம் : 1548. 

அத்தியாயம் : 7. ஜும்ஆ


*2)ஜும்ஆத் தினத்தில் நபிகளார் சுபஹுத் தொழுகையில் ஓதியவை*


  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் ஸஜ்தா'வையும் 'ஹல்அதா அலல் இன்ஸான்' என்ற அத்தியாயத்தையும் ஓதக் கூடியவர்களாக இருந்தனர். 

ஸஹீஹ் புகாரி : 891. 

அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை


¶ பள்ளியில் இமாமுக்கு பின்னால் தொழுது பலகிய பலருக்கும் இந்த அத்தியாயங்கள் மனனமில்லாதிருக்கும் இப்போது கிடைத்துள்ள ஓய்வுகாலத்தை பயன்படுத்தி அவற்றை மனனமிட்டுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 


*3) நபிகளாரின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுதல்*


عَنْ أَوْسِ بْنِ أَوْسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ مِنْ أَفْضَلِ أَيَّامِكُمْ يَوْمَ الْجُمُعَةِ، …… فَأَكْثِرُوا عَلَيَّ مِنَ الصَّلَاةِ فِيهِ، فَإِنَّ صَلَاتَكُمْ مَعْرُوضَةٌ عَلَيَّ…….» سنن أبي داود

 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நாட்களில் சிறந்தது வெள்ளிக் கிழமையாகும், எனவே அதில் என் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள், உங்களது ஸலாத் எனக்கு எடுத்துக்காட்டப்படும்.”   

(அபூ தாவுத்:1047,  நசாஇ…)


அன்றைய தினத்துக்காக குளித்தல். இது மிகவு வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும், இதில் பொடுபோக்கு செய்யக்கூடாது.


¶ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


என்மீது ஒரு தடவை ஸலவாத் சொல்கின்றவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகின்றான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


ஸஹீஹ் முஸ்லிம் : 687. 

அத்தியாயம் : 4. தொழுகை


¶ ஸலவாத் சொல்ல வேண்டிய முறை


*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*


புஹாரி 3370


*4) ஜும்ஆ நாளில் குளித்தல்*


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஏழு நாற்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


ஸஹீஹ் புகாரி : 897. 

அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை


¶ ஜும்ஆவுடைய தொழுகை தொழுகை எம்மீது கடமையில்லை என்ற போலும் சுத்தத்தை பேணிக்கொள்ள நாம் குளிக்க வேண்டும். 


*5) துஆக்கள் அங்கிகரிக்கப்படும் நேரம்*


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும்போது 'ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு' என்று கூறிவிட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். 'அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுது அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமலிருப்பதில்லை' என்றும் குறிப்பிட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 935. 

அத்தியாயம் : 11. ஜும்ஆத் தொழுகை


¶ அது எந்த நேரம் என்பது தொடர்பில் பல கருத்துக்கள் கூறப்படுகின்றது அவை அனைத்தும் ஆதாரமற்றவை எனவே அந்நாள் முழுவதிலும் அதிகமாக பிரார்த்தனைகளில் நாம் ஈடுபட வேண்டும்.


¶ இப்போது எங்களுக்கு ஏற்படுள்ள மிகப்பெறும் சோதனையால்  இன்று வரை நோய்வாய் பட்டுள்ளவர்களின் ஆரோக்கியத்துக்கும் இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து எம்மையும் முஸ்லிம் சமூகத்தையும் பாதுகாக்குமாறும் அதிகமாக வெள்ளிக்கிழமை தினத்தில் ரஹ்மானிடம்  நாம் பிரார்திப்போம் துஆக்கள் அங்கிகரிக்கப்படும் அந்த நேரத்தில் எமது பிரார்த்தனை நேற்பட்டு விட்டால் நிச்சியமாக நாம் எதிர்பார்க்கும் ஆரோக்கியமான நிம்மதியான வாழ்கை எமக்கு மீண்டும் கிடைத்து விடும். 


*6) வெள்ளிக் கிழமை  செய்யக் கூடாதவை* 


¶ஜும்ஆவுடைய இரவையில் விசேட வணக்கங்களில் ஈடுபட தடை 


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي، وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ، إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ» صحيح مسلم 


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:


 “ஜும்ஆவுடைய இரவை ஏனைய இரவுகளிலிருந்து வித்தியாசமான வணக்கத்தின் மூலம் குறிப்பாக்க வேண்டாம், மேலும் ஏனைய தினங்களிலிருந்து ஜும்ஆ தினத்தில் மாத்திரம் நோன்பையும் குறிப்பாக்க வேண்டாம், உங்களில் ஒருவர் தொடர்ந்து பிடிக்கும் நோன்பாக இருந்தாலே தவிர.” (தொடர்ந்து பிடித்தால் பிடிக்க முடியும்) 


(முஸ்லிம்)


¶ வெள்ளி நோன்பு பிடிப்பதாக இருந்தால் அதற்கு முந்திய நளுடனோ பிந்திய நளுடனோ சேர்த்து பிடிக்க வேண்டும்


عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «لاَ يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الجُمُعَةِ، إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ»  صحيح البخاري


நபி (ஸல்) கூறினார்கள்: “ஜும்ஆ தினத்தில் உங்களில் எவறும் நோன்பு பிடிக்க வேண்டாம், அதற்கு முந்திய நாளில் அல்லது பிந்திய நாளில் பிடித்தாலே தவிர.”

 

 (புஹாரி:1985, )


¶ ஜும்ஆவுக்காக அதான் சொல்லப்பட்டால் கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடாது


{يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ } [الجمعة: 9]

ஜும்ஆ  தினத்தில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த விறைந்து வாருங்கள், மேலும் வியாபாரத்தை விட்டுவிடுங்கள் 

(அல் ஜும்ஆ:  9)


¶ ஜும்ஆவுடைய அதான் கூறப்பட்ட பின்னர் உள்ளூரில் இருப்போர்  வியாபாரத்தில் ஈடுபடுவதை அல்லாஹ் தடை செய்துள்ளான் ஜும்ஆ கடமையில்லாத பிரயாணிகள் மீதும் நோயாளிகள் மீதும் நிர்பந்த சூழலில் உள்ளோர் மீதும் அது  குற்றமில்லை அவர்களின் தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்துகொள்ளலாம். 


¶ உள்ளூரில் இருக்கும் நாம் பரவக்கூடிய Covid19 என்ற வைரஸின் அச்சத்தால் நாட்டு மக்களின் பாதுகாப்புக் கருதி அரசு எடுத்திருக்கும் முடிவகளுக்கு அமைய நிர்பந்த சூழ்நிலை  காரணமாகவே ஜும்ஆ தொழுகையை கைவிட்டுள்ளோம் இந்த காலகட்டத்தில் ஜும்ஆவை விட நாம் சலுகையளிக்கப்பட்டுள்ளோம்.  எனவே எமது தேவைகளுக்கு ஏற்ப்ப வியாபார நடவடிக்கை களை  மேற்கொள்வதில் தடையில்லை.


¶ சோதனை நிறைந்த இந்தக்காலத்தில் குடும்பம் சகிதம்  லுஹருடைய நேரத்தை தொழுவதிலும்,  குர்ஆன் ஓதுவதிலும்,  ஸலவாத்து சொல்வதிலும்,  துஆ கேட்பதிலும் களிப்பது  விரும்பத்தக்க காரியமாகும்.


அல்லாஹ் மிக அறிந்தவன்


*📌குறிப்பு:*

ஜும்ஆ உரை மற்றும் ஜும்ஆ தொழுகையுடன் தொடர்புபட்ட சட்டதிட்டங்கள் எதையும் இங்கே நான் பதிவு செய்ய வில்லை இன்றைய காலத்துக்கு தேவையான சட்டங்களுன் இவ்வாக்கம் சுருக்கப்பட்டுள்ளது.


*✍நட்புடன்:*

இன்திகாப் உமரீ

2020/03/27

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


16 November 2020

புலமைப்பரிசில் பரீட்சை ,அல் ஹஸனியாவின் 7 மாணவர்கள் விஷேட சித்தி



2020 ஆம் ஒக்டோபர் 11ஆம் திகதி  இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் தற்போது    இணையத்தளத்தில்வெளியிடப்பட்டுள்ளது. இம்முறை மக்கொன அல்  ஹஸனியாவின் 7 மாணவர்கள் மிகச் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். அவர்கள்

Zainab safwan     176

Sahna saheel       176

Rahma safeer        176

A.shaheem hilmy    171

Zikra ramsan          171

Ihlas faizer              170

Minshad mueez     165

இவர்களையும் மற்றும் சித்தியைதிய எல்லா மாணவர்களையும் நாம் பாராட்டுவதோடு எதிர்காலத்தில் கல்வியில் மேலும் சிறந்து விளங்க எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கின்றோம்.

மேலும் இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.