தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

25 November 2016

“குழந்தைகளை கொஞ்சுங்கள்; அவர்கள் மூளை நன்கு வளரும்”




குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு பெற்றோர் எப்படி உதவ முடியும்? குழந்தைகளிடம் அழகாக சிரித்து, செல்லமாக பேசுவது அவர்களது மூளை வளர்ச்சிக்கு உதவுவதாக தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
குழந்தைகளின் ஆரம்பகால மூளை வளர்ச்சியில் நாம் அவர்களுடன் பேசும் விதம் முக்கிய பங்காற்றுவதாக பிரிட்டனைச் சேர்ந்த மூத்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த ஆய்வின் முடிவுகள் குறித்த செய்தித்தொகுப்பு.


இதையும் பார்க்கவும்

24 November 2016

அல் ஹஸனியாவின் 2016 ல் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்தியவர்கள்

2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்
மக்கொன அல் ஹஸனியா ம.வி.  மாணவர்கள் மூவர் சித்தியெய்தினர்.
அவர்களினதும் 100 க்கு மேல் புள்ளிகளைப்
பெற்ற மாணவர்களினதும் புகைபடங்கள் கீழே,
அம் மாணவர்கள் அனைவருக்கும் எமது நல்வாழ்த்துக்கள்

28 October 2016

மக்கா மீது ஏவுகனை தாக்குதல்: அதிரடியாக தடுத்து நிறுத்தியது சவுதி!


இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் மக்கா மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதனை சவுதி அரேபிய அரசு தடுத்து நிறுத்தியதாகவும் அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
ஹவுத்தி இனப்போராளிகள் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹவுத்தி போராளிகள் இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதியில் உள்ள மக்காவை குறிவைத்து இன்று ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஏவுகனை தாக்குதலை சவுதி விமானப்படைகள் தடுத்தி நிறுத்தியுள்ளன என அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மெக்காவில் இருந்து 65 கி.மீ தொலைவில் நடந்த இந்த ஏவுகனை தாக்குதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

15 October 2016

மதீனா அருகில் நிலத்திலிருந்து புகை(வீடியோ)

மதீனா முனவ்வராவின் விமான நிலையத்துக்கு அருகில்
நிலத்திலிருந்து புகை வெளியேரும் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
 இதுபற்றி இருதினங்களுக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீடியோ கீழே

தகவல் உதவி புனித மதீனாவிலிருந்து ரிஸ்லான்.

13 October 2016

உலக கண்பார்வை தினம் (World Sight Day )


உலக கண்ணொளி தினம் (World Sight Day ) 2000 -ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் இரண்டாவது
வியாழக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது.
நோக்கம்
பார்வை இழப்பை தடுப்பது, கண் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை முதலியன குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நாளின் நோக்கமாகும். பிறக்கும் போதே சிலர் கண் பார்வை இல்லாமல் பிறக்கின்றனர். பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் பார்வை குறைபாடு ஏற்படுவதும் உண்டு. பார்வையற்ற மக்கள் சமூகத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பிறரைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருக்கிறது.
பின்புலம்
உலக சுகாதார அமைப்பின் 2002 அறிக்கையின் படி, உலகில் உள்ள 45 மில்லியன் கண்பார்வையற்றோரில் 80 விழுக்காட்டினர் 50 வயதிற்கும் அதிகமானோர் ஆவர். கண்பார்வையற்றோரில் 90 வீதமானோர் வறிய நாடுகளில் வாழ்கின்றனர் [1] . மேலும், கண்பார்வையின்மைக்கு முக்கியமான காரணிகளான கண் புரை நோய் , கண் அழுத்த நோய் போன்றவற்றுக்கு இலகுவாகவும், மலிவாகவும் சிகிச்சை அளிக்க முடியும். பன்னாட்டு அரிமா சங்கங்கள் கண்பார்வையின்மையைத் தவிர்க்க உதவும் சில பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து முதன் முதலாக 1998, அக்டோபர் 8 ஆம் நாள் உலக கண்ணொளி நாளைக் கடைப்பிடித்தது. இந்த நிகழ்வு பின்னர் உலக சுகாதார அமைப்பின் விசன் 2020 என்ற பன்னாட்டுத் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதங்களில் இரண்டாவது வியாழக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது [2] .
பார்வை தொடர்பான விழிப்புணர்வுகள்
விசன் 2020 திட்டத்தில் 2020 ஆம் ஆண்டளவில் கீழ்க்கண்ட ஏழு நோய்களால் எவரும் பார்வை இழக்ககூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அரசுகள் செயல்பட உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.
கண்புரை
கண்ணிமை உட்புற டிராகோமா
கண்ணில் நீர் வழிதல்
குழந்தைகளில் பார்வைக் குறைபாடு
மங்கலான பார்வை
சர்க்கரை நோயால் விழித்திரைப் பாதிப்பு
கண் நீர் அழுத்த நோய்
ஏனெனில் இவை அனைத்திற்கும் முறையான சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.
source:விக்கிப்பீடியா