இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதி அரேபியாவின் மக்கா மீது ஹவுத்தி போராளிகள் ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் அதனை சவுதி அரேபிய அரசு தடுத்து நிறுத்தியதாகவும் அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
ஹவுத்தி இனப்போராளிகள் ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹவுத்தி போராளிகள் இஸ்லாமியர்களின் புனித நகரமான சவுதியில் உள்ள மக்காவை குறிவைத்து இன்று ஏவுகனைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த ஏவுகனை தாக்குதலை சவுதி விமானப்படைகள் தடுத்தி நிறுத்தியுள்ளன என அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மெக்காவில் இருந்து 65 கி.மீ தொலைவில் நடந்த இந்த ஏவுகனை தாக்குதலால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
No comments:
Post a Comment