தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 June 2015

SAMSUNG BATTERY பற்றி வதந்தி பொய்யானது, உண்மை இதுதான்!


சமூக வலைதளங்களில் அண்மைய சில
நாட்களாக ஒரு புரழி பரவி வருகிறது
சம்சாங் (samsung) தொலைபேசிகளின்
பேட்டரியின்(battery) மேல் ஒட்டி
இருக்கும் ஸ்டிகர்(sticker) யை
கழட்டினால் உள்ளே ஒரு சிப்(chip)
இருப்பதாகவும் அந்த சிப் மூலமாக
நமது மொபைலில் இருக்கும்
படங்கள்,வீடியோக்கள், தரவுகள்
இரகசியாமாக சம்சுங் காம்பனி திருடி
எடுப்பதாகவும் போன்ற செய்திகள் பரவி
வருகிறது.
இதை பார்த்த பலர் தமது சம்சாங்
தொலைபேசியின் பேட்டரியின்
ஸ்டிக்கரை கழட்டி அந்த சிப்பை
அகற்றியும் உல்லார்கள் சிலர் அதை
பேஸ்புக்கில்வீடியோவாகவும்
போட்டு மற்றவர்களுக்கும் இவ்வாறு
செய்யும் படி சொல்லி உள்ளார்கள் ..
ஆம் அப்படி ஒரு சிப் போன்ற ஒன்று
சம்சாங் பேட்டரிகளில் இருப்பது
உண்மை தான் ஆனால் அதன் மூலமாக
நமது தொலைபேசியில் இருக்கும்
தரவுகள் திருடப்படுவதாக சொல்லும்
செய்தியில் எந்த உண்மையும் இல்லை.
உண்மையில் அது சிப் இல்லை அது
நமது தொலைபேசியில் இருக்கும் NFC
Function யை இயக்குவதற்கு பயன்படும்
வெரும் அணடனா(antenna) மட்டும் தான் ,
இந்த அண்டனா லேட்டஸ்ட் சம்சாங்
தொலைபேசிகளின் பேட்டரியில்
அதிமாக இருக்கும் உதாரணமாக
S2,S3,S4,Note 4…. மற்றும் இது சம்சாங்
தொலைபேசிகளில் மட்டும் இல்லை
ஏனைய ப்ரேண்ட் தொலைபேசிகளின்
பேட்டரியில் உண்டு..
இந்த சிப்பை நாம் பேட்டரியில் இருந்து
அகற்றி தொலைபேசியில் பேட்டரியை
போட்டு On பன்னினால் நமது
தொலைபேசி பழையபடி வேலை
செய்யும் ஆனால் NFC Function மட்டும்
வேலை செய்யாது இதைத்தவிர
தொலைபேசிக்கு எந்த பாதிப்பும்
இல்லை.
இவ்வாறு அகற்றியவர்களுக்கு மீண்டும்
NFC வேலை செய்ய வேண்டும் என்றால்
தொலைபேசியின் பேட்டரியை
மாற்றுவதை தவிர வேரு எந்த வழியும்
இல்லை….
இதை அதிகம் பகிர்ந்து உமது
நண்பர்களையும் அறியச்செய்வோம்.
தகவல்:இனையம்.

30 May 2015

மாகி நூடுல்ஸ் ரசாயன கலப்பு விவகாரம்: நெஸ்லே இந்தியா மீது உ.பி. வழக்கு

கோப்புப் படம்: ஏ.பி.

உத்தரப் பிரதேச அரசின் வழிகாட்டுதலின்படி, மாகி நூடுல்ஸின் தயாரிப்பு நிறுவனமான நெஸ்லே இந்தியா மீது அம்மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் வழக்கு தொடர்கிறது.

வழக்கு தொடர்வதற்கான உத்தரவை அரசிடமிருந்து பெற்றுள்ளதாகவும் இன்று அல்லது வரும் வாரத்துக்குள் தொடர்புடைய நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்படும் என்று மாநில உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி வி.கே. பாண்டே தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக அவர் கூறும்போது, "உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் பி.பி.சிங் நெஸ்டில் இந்தியா நிறுவனத்தின் மீது உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளார்.

அதன்படி, ஹரோலியில் உள்ள நெஸ்லே நகல் கலன் தொழிற்சாலை, நெஸ்டில் இந்தியா லிமிட்டட், ஈஸி டே அங்காடி உள்ளிட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட உள்ளது" என்றார்.

பிரபல நூடுல்ஸ் தயாரிப்பு நிறுவனமான மாகி நூடுல்ஸ் பாக்கெட்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட எம்.எஸ்.ஜி., எனப்படும் மோனோசோடியம் குளூடாமேட் என்ற வேதிப் பொருள் அதிகம் கலக்கப்பட்டுள்ளது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆய்வை அடுத்து மாகியை தடைச் செய்ய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிம் ஆகிய மாநிலங்கள் ஆலோசித்து வருகிறது.

இதனிடையே நூடுல்ஸ் ரசாயன கலப்பு குற்றச்சாட்டு தொடர்பாக நிறுவனம் அந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.

மத்திய அரசு ஆலோசனை

இந்த விவகாரத்தை கூர்ந்து கவனிக்கும்படி மத்திய நுகர்வோர் விவகார அமைச்சுர் ராம் விலாஸ் பஸ்வான் உத்தரவிட்டுள்ளார். தேவைப்பட்டால் தேசிய நுகர்வோர் ஆணையம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
source :
http://m.tamil.thehindu.com/india/மாகி-நூடுல்ஸ்-ரசாயன-கலப்பு-விவகாரம்-நெஸ்லே-இந்தியா-மீது-உபி-வழக்கு/article7264325.ece

29 May 2015

தொழுகையில் மறதியின் காரணமாக ரக்அத்கள் விடுபட்டால்.. ..


மனிதன் மறதியாளனாக படைக்கப்பட்டுள்ளான். மார்க்க விடயமாக இருக்கலாம். அல்லது உலக விவகாரங்களாக இருக்கலாம். தன்னை அறியாமல் மறந்து விட்டு, பிறகு அதை நினைத்து வருத்தமடைவான். இந்த வரிசையில் அல்லாஹ்வுடைய கடமையான தொழுகையின் போதும் மறதி என்ற அடிப்படையில் தொழுகைக்குள் உள்ள ரக்அத்களோ, அல்லது தஷஹ்ஹதில் உட்காராமல் எழுவது போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். இப்படி ஏற்பட்டால் என்ன செய்வது என்பதை நாம் தெளிவு பெற வேண்டும்.

தொழகையைப் பொறுத்தவரை அதற்கு முன்னோடியாக நபி (ஸல்) அவர்கள் இருக்கிறார்கள். ‘என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்| என்று கூறக்கூடிய ஹதீஸின் மூலம் தொழுகைக்கு வழிகாட்டி நபி (ஸல்) அவர்கள்தான் என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

இன்று பள்ளிகளில் இமாம்கள் தொழுவிக்கும்போது சில நேரங்களில் இரண்டாவது ரக்அத்திற்கு உட்காராமல் மறந்து மூன்றாவது ரக்அத்திற்கு எழுந்து விடலாம். அல்லது நான்காவது ரக்அத் என்று நினைத்து மறதியால் மூன்றாவது ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுத்து விடலாம். அல்லது நான்காவது ரக்அத்தில் உட்காருவதற்குப் பகரமாக ஐந்தாவது ரக்அத்திற்கு எழுந்து, பிறகு உட்கார்ந்து ஸலாம் கொடுப்பார்.

இப்போது அவருக்கும், பின்னால் தொழுத மக்களுக்கும் பிரச்சினை என்ன செய்வது? இப்போது ஆளுக்கு ஆள் ஒவ்வொரு பத்வாக்களை கொடுக்க ஆரம்பிப்பார்கள். சில பள்ளிகளில் ஒரு ரக்அத் குறைத்தோ அல்லது ஒரு ரக்அத் அதிகமாகவோ தொழுவித்து விட்டால், ஸலாம் கொடுத்த பிறகு மீண்டும் ஆரம்பத்திலிருந்து அந்த நான்கு ரக்அத்களையும் தொழுவிக்கக்கூடிய நிலையை நாம் காண்கிறோம்.

சிலர் பிழை இப்படித்தான் தொழுவிக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டும்போது இமாமுக்கு தெரியாத சட்டமா, உங்களுக்குத் தெரியும்? என்று கூறக்கூடிய நிலை? சிலர் பரவாயில்லை மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழுதால் நன்மைதானே என்று பேசக்கூடிய நிலையையும் காணலாம்.

இங்கு ஹதீஸின் அடிப்படையில் பள்ளி இமாமுக்கும் சட்டம் தெரியவில்லை. பின்னால் தொழக்கூடிய மக்களுக்கும் சட்டம் தெரியவில்லை என்பதை இப்படியான நிகழ்வுகள் மூலம் அறியலாம். குறிப்பாக தொழுவிக்கக்கூடிய பள்ளி இமாம் தொழுகை பற்றிய செய்திகளை ஹதீஸ்களில் தேடிப்படித்துத் தெரிந்துகொள்வது கட்டாயக் கடமையாகும்.

அல்லாஹ் பின்வருமாறு மக்களைப் பார்த்து பேசுகிறான்: ”ஈமான் கொண்ட விசுவாசிகளே அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கும் வழிப்படுங்கள். உங்களில் அதிகாரமிக்க அறிவுடையோருக்கும் வழிப்படுங்கள். ஏதாவது ஒரு விடயத்தில் கருத்து முரண்பாடு ஏற்பட்டால், அதை அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் திருப்புங்கள் என்று கூறுகிறான். (4:59)

இந்த அடிப்படையில் விடுபட்ட ரக்அத்தை மட்டும் தொழுவதா? அல்லது மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழுவதா? என்பதை ஹதீஸின் வழியில் விடை காண்போம்.

”ளுஹர் தொழுகையை தொழுவித்த நபி (ஸல்) அவர்கள், இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்து விட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தா செய்தார்கள். அதன் பின் ஸலாம் கொடுத்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரழி), ஆதாரம்: புகாரி-1225-1230)

மற்றொரு ஹதீஸை அவதானியுங்கள்:

”மாலை தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி (ஸல்) அவர்கள், இரண்டு ரக்அத்திலே ஸலாம் கொடுத்து விட்டார்கள். பின்பு எழுத்து பள்ளிவாசலின் முற்பகுதியில் இருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று தன் கையை அதன் மேல் ஊன்றிக் கொண்டிருந்தார்கள். அங்கே இருந்தவர்களில் அபூபக்ர் (ரழி), உமர் (ரழி) இருவரும் நபி (ஸல்) அவர்களிடத்தில் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வெளியேறிய மக்கள் தொழுகை சுருக்கப்பட்டு விட்டதோ எனப் பேசிக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் நீங்கள் மறந்து விட்டீர்களா? அல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் மறக்கவும் இல்லை (தொழுகை) சுருக்கப்படவுமில்லை என்றவுடன், இல்லை நிச்சயமாக நீங்கள் மறந்து விட்டீர்கள் என அவர் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுவித்து பின் ஸலாம் கொடுத்தார்கள்.

பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதை விட நீண்டதாகவோ ஸஜ்தா செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்து தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்ட ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதை விட நீண்டதாகவோ ஸஜ்தா செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரழி), ஆதாரம் புகாரி-1229)

அப்துல்லாஹ் இப்னு புஹைனா (ரழி) அவர்கள் அறிவிக்கும் அந்த ஹதீஸில் ளுஹர் தொழுகையில் இரண்டாவது ரக்அத்தில் உட்காராததினால் இறுதியான ரக்அத்தில் உட்கார்ந்து ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள் என்பதைக் காணலாம்.

எனவே தொழுகைக்குள் ஸலாம் கொடுப்பதற்கு முன் மறதியின் காரணமாக இப்படி நடந்தால் ஸலாம் கொடுப்பதற்கு முன் இரண்டு ஸஜ்தா செய்துகொண்டால் அது அந்த மறதிக்கு பரிகரமாகவும் மற்றும் தொழுகை பூரணமாக்கப்படுகிறது என்பதை நாம் தெளிவடைந்து கொள்ள வேண்டும். இரண்டாவது அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் நான்கு ரக்அத்களை கொண்ட தொழுகையை மறதியின் காரணமாக இரண்டு ரக்அத்துடன் ஸலாம் கொடுத்தபின் பிறகு நினைவுபடுத்தியபோது விடுபட்ட இரண்டு ரக்அத்களை மட்டும் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்தபின் இரண்டு ஸஜ்தாக்கள் மட்டும் செய்தார்கள் என்பதை கண்டு கொண்டோம். இங்கு மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழவில்லை என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து வரும் ஹதீஸை கவனியுங்கள்.

”ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் ளுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தார்கள். உடனே தொழுகை அதிகமாக்கப்பட்டு விட்டதோ என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு என்ன விஷயம் என்று கேட்டார்கள். நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுவித்தீர்கள் என ஒருவர் கூறினார். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்கு பிறகு இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரழி), ஆதாரம்: புகாரி-1226)

இந்த ஹதீஸில் ஒரு ரக்அத் அதிகமாக தொழுது ஸலாம் கொடுத்தபின் நினைவூட்டப்பட்டவுடன், மீண்டும் ஆரம்பத்திலிருந்து தொழவில்லை. இரண்டு ஸஜ்தாக்கள் மட்டும் செய்தார்கள் என்பதை நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

மேலும் ‘உங்களில் ஒருவர் தொழத் தயாரானால், அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை அறியாத அளவிற்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே ஸஜ்தா செய்யட்டும். (புகாரி-1232)

எனவே தொழுகையின் போது மறதியால் ஏற்படும் இப்படியான விடயங்களுக்கு உடனுக்குடன் அழகான பரிகாரத்தை இஸ்லாம் நமக்கு வழிகாட்டியுள்ளது. ஒவ்வொரு ஆணும். ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சட்டங்களாகும். ஜமாஅத்துடன் தொழும்போது இமாம் பிழை விடும்போது பின்னால் தொழும் ஆண்கள் தஸ்பீஹ் மூலம் (சுப்ஹானல்லாஹ்) என்று கூறுவதன் மூலமும், பெண்கள் (இலேசாக) கையில் தட்டுவதன் மூலமும் இமாமிற்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவுபடுத்துகிறது.

”ஆண்களுக்கு தஸ்பீஹும் பெண்களுக்கு தட்டுவதுமாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ-337)

அதேபோல் இந்த ஸஜ்தா ஸஹ்வின் போது விசேடமான துஆக்கள் கிடையாது. வழமையாக ஸஜ்தாவில் ஓதக்கூடிய துஆக்களை ஓதிக்கொள்ள வேண்டும்.
– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் (இலங்கை – சத்தியக்குரல் ஆசிரியர்)
நன்றி:இஸ்லாம் கல்வி

நடுக்கடலில் தத்தளிக்கும் சமூகம்...

இரு­பத்­தி­யோராம் நூற்­றாண்டில் இப்­ப­டியும் ஒரு அவ­லமா என்று கேட்கத் தோன்­று­கி­றது மியன்மார் ரோஹிங்யா முஸ்­லிம்­களின் நிலையை எண்ணி!

உணவு,உடை, உறையுள் எனும் அடிப்­படைத் தேவை­க­ளுக்கு முதல், இருப்­ப­தற்கு இந்த உலகில் ஒரு துண்டு நிலம் கூட இல்­லாது நடுக்­க­டலில் தத்­த­ளித்து மீன்­க­ளுக்கு இரை­யாகிப் போகின்ற சமூ­க­மாக இன்று ரோஹிங்யா முஸ்­லிம்கள் மாறி­யி­ருக்­கி­றார்கள்.

பௌத்த கடும்­போக்கு கோட்­பா­டு­களைக் கொண்ட மியன்மார் அரசு தமது நாட்டில் 15 ஆம் நூற்­றாண்­டு­க­ளி­லி­ருந்தே வாழ்ந்து வரும் ரோஹிங்யா இன முஸ்­லிம்­களின் குடி­யு­ரி­மையை 1980 களில் பறித்­த­தி­லி­ருந்து இன்று வரை அந்த மக்கள் சொல்­லொணாத் துய­ரங்­களை அனு­ப­வித்து வரு­கி­றார்கள்.

குடி­யி­ருக்க நில­மில்லை...உண்ண உண­வில்லை... இருக்க இருப்­பி­ட­மில்லை... என தினமும் அந்த மக்கள் அனு­ப­விக்கும் கொடு­மைகள் சொல்லில் வடிக்க இய­லா­தவை.

இவை எல்­லா­வற்­றுக்கும் அப்பால் பௌத்த கடும்­போக்­கா­ளர்கள் அவ்­வப்­போது கல­வ­ரங்­களை உண்­டு­பண்ணி ரோஹிங்யா முஸ்­லிம்­களை உயி­ரோடே கொளுத்­தி­விடும் நிலை இருக்­கி­றதே அது அதை­வி­டவும் கொடுமை. 


ஏன் இந்த மக்கள் கடலில் தத்­த­ளிக்­கி­றார்கள்? 

மேற்­சொன்ன கொடு­மை­களை தினம் தினம் அனு­ப­விப்­பதை விட வேறு ஏதா­வ­தொரு தொலை­தூர நாட்டில் போய் அக­தி­க­ளாக வாழ்ந்­தா­லா­வது நிம்­ம­தி­யாக இருக்க ஓர் இடமும் மூன்று வேளை சாப்­பாடும் கிடைக்­குமே என்ற நப்­பா­சைதான் இன்று ரோஹிங்யா முஸ்­லிம்கள் நடுக்­க­டலில் தத்­த­ளிக்கக் காரணம்.

இந்த மக்­களின் அவல நிலையைப் பயன்­ப­டுத்தி இரக்­க­மற்ற கொடூ­ரர்கள் சிலர் பணம் சம்­பா­திக்­கி­றார்கள். உங்­களை வேறு நாட்டில் நிம்­ம­தி­யாக வாழ அழைத்துச் செல்­கிறோம் என ஆசை வார்த்தை காட்டி சுமார் 100 டொலர் பணத்­தையும் பெற்றுக் கொண்டு பட­கு­களில் அழைத்து வந்து நடுக்­க­டலில் விட்­டு­விட்டு தலை­ம­றை­வாகி விடு­கி­றார்கள்

இப்­படிப் பட­கு­களில் அழைத்­து­வ­ரப்­பட்ட சுமார் 8000 பேர் தற்­ச­மயம் கடலில் பய­ணித்துக் கொண்­டி­ருப்­ப­தாக சர்­வ­தேச தொண்டு நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுள் தமது நாட்டில் வறுமை காரணமாக வாழ முடியாது ரோஹிங்யா மக்களுடன் இணைந்து கொண்ட பங்களாதேஷ் நாட்டவர்களும் அடங்குகிறார்கள்.



ஏலவே இவ்­வாறு மியன்­மாரை விட்டு வெளி­யே­றிய பலர் தாய்­லாந்தின் காட்டுப் பகுதி ஒன்றில் தஞ்­ச­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள். சுமார் 700 பேர் வரை இந்­தோ­னே­ஷி­யாவைச் சென்­ற­டைந்­தி­ருக்­கி­றார்கள். மலே­சி­யாவில் 300 பேருக்கு இடம் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக இறு­தி­யாகக் கிடைத்த தக­வல்கள் கூறு­கின்­றன. மீதிப் பேர் நடுக்­க­டலில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

30 வய­தான சாலிம் ஒரு மீன்­ வி­யா­பாரி. 2014 சனத்­தொகைக் கணக்­கெ­டுப்பில் அவர் ரோஹிங்யா இனத்­தவர் என முத்­திரை குத்­தப்­பட்­டதால் அவ­ருக்கு மியன்மார் குடி­யு­ரிமை மறுக்­கப்­பட்­டது. இதனால் அவர் அங்கு தொடர்ந்து வாழ முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்டார்.  அவர் ஒரு­வாறு படகில் ஏறி இப்­போது தாய்­லாந்தை வந்­த­டைந்­தி­ருக்­கிறார்.

கதீஜா பீபிக்கு 20 வய­துதான் ஆகி­றது. தனது கணவன் மற்றும் பிள்­ளை­க­ளோடு அவளும் படகில் பய­ணித்து தாய்­லாந்தை வந்­த­டைந்­தி­ருக்­கிறாள். மியன்­மாரில் உணவு, கல்வி, மருந்து வச­திகள் இல்­லாத கார­ணத்­தி­னா­லேயே தாம் இப்­ப­டி­யான உயி­ரா­பத்­து­மிக்க பய­ணத்தை தேர்ந்­தெ­டுத்­த­தாக கதீஜா பீபி கூறு­கிறாள்.

இப்­படி உயிர்­தப்பி கரை தட்­டி­ய­வர்கள் ஏரா­ள­மான கதை­களைச் சொல்­கி­றார்கள்.

ஆனால் கரைக்கு வராமல் நடுக்­க­ட­லி­லேயே மாண்டு மீன்­க­ளுக்கு இரை­யா­ன­வர்­களின் கதையைக் கேட்டால் உங்கள் கண்­க­ளி­லி­ருந்து கண்ணீர் அல்ல இரத்­தம்தான் வரும்.

இந்த படகுப் பயணம் மிகவும் ஆபத்­தா­னது. 100 பேர் பய­ணிக்கும் படகில் 300 பேரை ஏற்­று­வார்கள். உடுத்­தி­ருக்கும் உடையைத் தவிர வேறு எந்த உடை­மை­க­ளையும் படகில் ஏற்ற முடி­யாது.

ஏன் மேல­திக உணவைக் கூட எவரும் கொண்டு வர முடி­யாது. சுமார் 30 நாட்கள் தொட­ராக கடலில் பய­ணிக்க வேண்டும். இந்த நிபந்­த­னை­க­ளுக்கு தலை­ய­சைத்தால் மாத்­தி­ரமே இந்தப் பட­கு­களில் இடம் கிடைக்கும். இன்றேல் மியன்­மா­ரி­லேயே காலத்தைக் கழிக்க வேண்­டி­ய­துதான்.



இப்­படி படகு பய­ணித்துக் கொண்­டி­ருக்­கையில் உண­வுக்குப் பற்­றாக்­குறை ஏற்­படும். அடுத்­த­வர்­க­ளி­ட­மி­ருக்கும் உணவைப் பறித்துச் சாப்­பிட பலரும் முண்­டி­ய­டிப்­பார்கள். இது பட­குக்குள் பெரும் கல­வ­ரத்­தையே உண்­டு­பண்ணும். ஈற்றில் பல­சா­லிக்­குத்தான் வெற்றி. இப்­படி நடுக்­க­டலில் உண­வுக்­காக நடந்த சண்­டையில் சுமார் 100 பேர் வரை கொல்­லப்­பட்­ட­தாக உயிர்­தப்பி வந்­த­வர்கள் சொல்­கி­றார்கள்.

சில சம­யங்­களில் அவ்­வ­ழியால் வரும் இந்­தோ­னே­சிய, தாய்­லாந்து மீனவர் பட­குகள் இவர்­க­ளது பரி­தா­பத்தைக் கண்டு உண­வு­களைக் கொடுத்­தாலும் அவற்றைப் பெற்றுக் கொள்­வதில் நடக்கும் சண்­டை­யிலும் பல­சா­லி­கள்தான் வெற்றி பெறு­கி­றார்கள்.

இவ்­வாறு ஆயிரக் கணக்­கான ரோஹிங்யா மக்கள் கடலில் தத்­த­ளிக்கும் செய்­தியை பி.பிசி. மற்றும் அல் ஜஸீரா ஆகிய பிர­பல ஊடகங்கள் வீடியோ மற்றும் புகைப்­ப­டங்­க­ளுடன் வெளி­யிட்ட போதுதான் அவர்­க­ளது அவலம் முழு உல­குக்­குமே தெரி­ய­வந்­தது. 
உடனே சில நாடுகள் மனி­தா­பி­மான நோக்கில் அவர்­க­ளுக்கு உணவுப் பொருட்­களை வான் வழி­யாக விநி­யோ­கித்­தன. 

ஹெலி­கொப்­ட­ரி­லி­ருந்து வீசப்­படும் உணவுப் பொருட்கள் கடலில் வீழ்ந்தால் கூட உயிரைக் கூட துச்சமென மதித்து கடலில் பாய்ந்து அவற்றைப் பொறுக்கிச் சாப்பிடுகின்ற நிலையை கண்டபோது என் கண்கள் பனித்தன. அவ்வாறான காட்சிகள் சிலவற்றை இங்கு பிரசுரிக்கப்பட்ட படங்களில் நீங்கள் காணலாம்.


இப்­போது  தமது கடற்­ப­கு­தியில் தவித்­துக்­கொண்­டி­ருக்கும் ஆயி­ரக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு  தற்­கா­லிக புக­லிடம் தர மலே­சியா மற்றும் இந்­தோ­னே­சிய அர­சாங்­கங்கள் ஒப்­புக்­கொண்­டி­ருக்­கின்­றன.

அக­தி­களை திருப்பி அனுப்­ப­மாட்டோம் என்று தாய்­லாந்தும் கூறி­யுள்­ளது.  அக­தி­க­ளுக்கு உத­வு­மாறு இந்த நாடு­கள்­மீது சர்­வ­தேச அழுத்தம் அதி­க­ரித்து வரு­கின்­றது.  ஆனாலும் அதில் நிபந்­த­னை­களும் இருக்­கின்­றன.

தாம் குடி­யே­றி­களை தேட மாட்டோம் என்றும், அவர்கள் கரைக்கு வந்தால், அவர்­க­ளுக்கு ஒரு­வ­ரு­டத்­துக்குள் வேறு இடங்­களில் மீளக்­கு­டி­யேற்ற, சர்­வ­தேச சமூகம் உதவ வேண்டும் என்ற நிபந்­த­னையில், அவர்­களை அனு­ம­திப்போம் என்றும் மலே­சிய வெளி­யு­றவு அமைச்சர் ஹனிபா அமான் கூறு­கிறார்.

இதே­வேளை கடலில் நிர்க்­க­தி­யா­கி­யுள்ள ஆயி­ரக்­க­ணக்­கான குடி­யே­றி­களைத் தேடிக் கண்­டு­பி­டித்து மீட்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­விட்­டுள்­ள­தாக மலே­ஷியப் பிர­தமர் நஜீப் ரஸாக் கூறி­யுள்ளார்.

கடலில் பட­கு­களில் நிர்க்­க­தி­யா­கி­யி­ருக்கும் குடி­யே­றி­களில் பெரும்­பா­லா­ன­வர்கள் மியன்­மா­ரையும் வங்­க­தே­சத்­தையும் சேர்ந்­த­வர்கள்.  பட­கு­களில் உள்ள குடி­யே­றி­களை தங்­களின் நாடு­க­ளுக்குள் அனு­ம­திக்கப் போவ­தில்லை என்று மலே­ஷி­யாவும் அதன் அண்டை நாடு­களும் முன்னர் மறுத்­து­வந்­தி­ருந்­தன.  

ஆனால் குடி­யே­றி­களின் நிலைமை மோச­ம­டைந்­து­வ­ரு­கின்ற சூழ்­நி­லையில், அந்த நாடுகள் தங்­களின் நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்­டன.

குடி­யே­றிகள் தற்­கா­லி­க­மாக தங்கள் நாடு­களில் தங்­கு­வ­தற்கு அனு­மதி வழங்­கு­வ­தாக மலே­ஷி­யாவும் இந்­தோ­னே­ஷி­யாவும் இணங்­கி­யுள்­ளன.

 மியன்மார் அதி­கா­ரி­க­ளு­டனும் மலே­ஷிய மற்றும் இந்­தோ­னே­ஷிய வெளி­யு­றவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகிவருகின்றனர்.

ஆனாலும் இதனிடையே படகுகளில் வரும் ரோஹிஞ்சா குடியேறிகளை தங்கள் நாட்டுக்குள் குடியேற அனுமதிக்கப் போவதில்லை என்று ஆஸ்திரேலியா கூறியுள்ளது.

இப்படி இந்த மக்கள் விடயத்தில் கடைசி நேரத்திலாவது சில நாடுகள் இரக்கம் காட்ட முன்வந்திருப்பது ஆறுதல் தருகிறது.
ஆனாலும் இவர்களது பிரச்சினைக்கு நிரந்ரத் தீர்வு காணப்படாத வரை இவ்வாறான

 அவலங்கள் தொடரவே செய்யும். இந்த மக்களுக்காக பிரார்த்திப்போம்.!

நன்றி:விடிவெள்ளி