தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

13 December 2014

இலங்கை வீதிகளைப் படம்பிடிக்கும் கூகிள்

இலங்கையின் வீதி தோற்ற விபரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை கூகிள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கமெராக்கள் பொருத்தப்பட்ட கார்கள் மூலம் இலங்கையின் வீதிகள் படம் பிடிக்கப்படும்.
இதன்மூலம், இலங்கையிலுள்ள எந்தவொரு இடத்தையும் கூகிள் இணையத்தளத்தில் தத்ரூபமாக பார்வையிடக்கூடிய வசதி கிடைக்கிறது. இது கூகிள் ஸ்ட்ரீட் வியூ என்றழைக்கப்படுகிறது.
குறிப்பிட்ட இடத்திலிருந்து 360 பாகை கோணத்தில் என்னவெல்லாம் தெரிகிறதோ, அதனை கூகிள் ஸ்ட்ரீட் வியூ வசதியின் மூலம் பார்வையிடக்கூடியதாக இருக்கும். ஒருவர் பயணிக்கக்கூடிய பாதைகள் செல்ல வேண்டிய இடங்கள் போன்றவற்றை மனித கண்ணுக்கு தென்படும் விதத்தில் பார்கக்கூடியதாக இருப்பது இந்த தொழில்நுட்பத்தின் சிறப்பம்சமாகும்.
கூகிள் ஸ்ட்ரீட் வியூ வசதியில் 63 நாடுகள் உள்ளடக்கப்படுகின்றன. இலங்கையில் யாழ்ப்பாணம், மாத்தறை, அருகம்பை முதலான பிரதேசங்களில் ஆரம்பிக்கப்படும் தரவு சேகரிப்பு திட்டம் விரைவில் ஒட்டுமொத்த இலங்கையையும் உள்ளடக்கும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ளதென கூகிள் நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான ஆன் லின் தெரிவித்தார். அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிட்டார்.
இந்த வசதி மூலம் இலங்கையின் இயற்கை அழகை முழு உலகமும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் டீ.எஸ்.ஜயவீர தெரிவித்தார். உள்ளுர் சுற்றுலா பயணிகளும் இணையத்தின் ஊடாக பல இடங்களை பார்க்கக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார்.

04 December 2014

'அல்பகரா’அத்தியாயத்தின் இறுதி இரண்டுவசனங்களின் சிறப்புகள்


ஷைத்தானைவிரட்டும்சூரா.



நபி(ஸல்)அவர்கள்சொன்னார்கள் அல்லாஹ்வானம்பூமியைபடைப்பதற்கு ஆயிரம்வருடத்திற்குமுன்புஒருகிதாபைஎழுதினான்அந்தகிதாபி­ருந்துஇரண்டு ஆயத்தைஇறக்கிசூரத்துல்பகராவைமுடித்திருக்கிறான் எந்தவீட்டில்மூன்று இரவுகள்ஓதப்படுகிறதோஅந்த வீட்டில்ஷைத்தான்நெருங்கமாட்டான்.


திர்மிதி2882தாரமி3253



இரவுவணக்கத்திற்குநிகரானது.

அல்பகரா’அத்தியாயத்தின்இறுதிஇரண்டு(02:286 – 287)வசனங்களைஇரவுநேரத்தில்ஓதுகிறவருக்கு(மனிதன்மற்றும்ஜின்இனத்தாரின்தீங்குகளிலிருந்துபாதுகாக்கப்)போதுமானதாகஅவைஆகிவிடும்எனநபி(ஸல்)அவர்கள்கூறினார்கள்.

அபூமஸ்ஊத்(ரலி)

புஹாரி: 4008


பகரா அத்தியாயத்தின் கடைசி இரு வசனங்களையும் ஓத வேண்டும்.''எவர் அல்பகரா எனும் (2வது) அத்தியாயத்தின் இறுதி இரு (286, 287) வசனங்களை இரவில் ஓதுகின்றாரோ அவருக்கு இந்த இரண்டுமே போதும்''என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 5009.

02 December 2014

'முஹம்மத்' என்ற பெயரே பிரிட்டனில் பிரபலம்

பிரிட்டனில் குழந்தைகளின் பெயர் தொடர்பில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில், இந்த
ஆண்டில் 'முஹம்மத்' என்ற பெயரே ஆண் பிள்ளைகளுக்கான பெயர்களில் மிகவும்
பிரசித்தம் பெற்றுள்ளது.
'மர்யம்' என்ற பெயர் முதல் 100 பெண் குழந்தைகளின் பெயர்களில் இடம்பிடித்துள்ளது
'ஆலிவர்' என்ற பெயர் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக, அராபிய பெயர்களில் பெரும் அதிகரிப்பு காணப்படுகின்றது.
முதல் 100 பெண் பிள்ளைகளின் பெயர்களில் குறிப்பாக, 'மர்யம்' என்ற பெயர்
வேகமாக அதிகரித்துவருகின்றது. புதுவருகையான 'நுர்'என்ற பெயரும்
பிரபலமடைந்துவருகின்றது.
ஒமார், அலி, இப்ராஹிம் ஆகிய பெயர்களும் முதற்தடவையாக முதல் 100 ஆண்
குழந்தைகளின் பெயர்களில் இடம்பிடித்துள்ளன.
ஜார்ஜ், வில்லியம், ஹாரி உள்ளிட்ட அரச குடும்ப பெயர்களும் பிரபலம் குன்றியுள்ளன.

30 November 2014

DXO Optics Pro 8 இலவசம் - 31 ஜனவரி 2015 வரையிலும்..

DXO Optics Pro 8….ம்ம்ம்இரண்டுவருடங்களுக்குமுன்னர்சுமார்150லிருந்து200 அமெரிக்கடாலர்களுக்குவிற்பனைசெய்யப்பட்ட ஒருஇமேஜ் எடிட்டிங்டூலாகும்.
DXO Optics Proன் பதிப்பு10ஐ சமீபத்தில்அறிமுகம்செய்துள்ளது.எனவேஅந்நிறுவனம் தனதுபழையபதிப்பான8.5ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனஅறிவித்துள்ளது.
நீங்கள்செய்யவேண்டியதெல்லாம் 31-1-2015க்குள்ளாககீழேயிருக்கும்சுட்டியைகிளிக்செய்து உங்களதுமின்னஞ்சல் முகவரியைதெரிவித்தாலேபோதும்.
ஆக்டிவேஷன் எண்ணை இலவசமாகவே தருகிறார்கள்.
Download Link:
http://www.dxo.com/intl/dphotographer


DXO Optics Pro 8 கிட்டத்தட்ட அடோபியின்லைட்ரூமுக்கு இணையாகபணிபுரியும்.
பொதுவாக‌ விண்டோஸ் xpபயன்படுத்துபவர்கள் லைட்ரூமின் புதியபதிப்புகளை (since
version 4)பயன்படுத்தமுடியாது.
ஆனால் DXO Optics Pro 8,Windows XPயிலும் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
Raw கோப்புகளையும்,jpg கோப்புகளையும்கையாள்கிறது.
பொதுவாக இமேஜ் எடிட்டிங்கில்போதிய அனுபவமில்லாதவர்களுக்கு பயனளிக்கும்விதமாக ஆட்டோமோட்இருப்பது இதன்சிறப்பாகும்.

ஒரு புகைப்படக்கலைஞருக்குதேவையான
அம்சங்களும்இதிலிருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
உதாரணமாக‌ :
White Balance Correction,
Exposure compensation(Auto mode available)
DXO Smart Lighting(Auto mode available)
Color Rendering(Auto mode available)
Noise Reduction(Auto mode available)
Sharpening using Unsharp mask
Lens corrections
DXO Optics pro பொதுவாக3 tabகளைகொண்டுள்ளது.

1.Organize :இதில்
நீங்கள்எடிட்செய்யவிரும்பும்உங்களதுபடங்களைதேர்வுசெய்துகொள்ளலாம்.
2.Customize : இதில் உங்களதுபடங்களைஎடிட்செய்துகொள்ளலாம்.
3.Process :எடிட்டிங்முடித்தபின்னர்Processஎன்பதனைகிளிக்செய்து Start
Processing என்பதனை கிளிக்செய்யபடமானது process செய்யப்படும்.Output
செய்யப்படும் படங்களை நீங்கள்விரும்பும் இடத்தில் சேமித்துக்கொள்ளவும் வழி இருக்கிறது.

பயன்படுத்திப்பாருங்கள் பயனடையுங்கள்.
நன்றி:
நித்திஆனந்த்
photography-in-tamil

ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!

இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்.
விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக்
காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில்
பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர,
வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும்
செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார்
தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
ஸ்கிரீன் லாக்!
எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி.
இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா
ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில்,
இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.
இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர்
கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும்
ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த
வழி.
என்க்ரிப்ட் வசதி!
மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக்
கீழ் 'என்க்ரிப்ட்' என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன்
மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் 'என்கிரிப்ட்'
செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம்
'டிகிரிப்ட்' செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன்
தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!
செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது.
இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற
முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங்
ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும்
அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு
இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது.
இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!
பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில்
வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால்
பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை
பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை
நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது
பாதுகாப்பானது.
இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும்
கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய
அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான்
பாதுகாப்பானது.
முக்கியமான தகவல்கள் பத்திரம்!
உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில்
பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி
அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!
குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை,
பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.
குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால்
செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.
அப்ளிகேஷன் லாக்!
முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை
எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.
இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது,
ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு
பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
ரூட் (Root) செய்ய வேண்டாம்!
போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை
பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங்
சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள்
கிடைக்கும்.
ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும்
அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன்
மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
பிரவுஸர்கள் எச்சரிக்கை!
போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர
தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை
அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.
அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை
டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
அப்டேட் அவசியம்!
போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது
அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி
வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.
ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள்
நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி
வழங்க வேண்டும்.
போன் தொலைந்துவிட்டால்..?
இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன்
தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில்,
ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.
அடுத்தபடியாக, 'ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்' மூலம் போனில் இருக்கும்
தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.
ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த
வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

நன்றி – பிரபு கிருஷ்ணா