இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்திற்கு மிடையில் யுத்த நிறுத்தம்
மேற்கொள்ளப்பட்ட ிருப்பதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ்
அறிவித்துள்ளார் . எகிப்தின் கண்காணிப்பில் இடம்பெற்ற இந்த
யுத்தநிறுத்தத்த
ினை ஏற்படுத்த பங்களித்த கட்டார் மற்றும் அமெரிக்க வெளிவிவகார
அமைச்சர் ஜோன் கெரி ஆகியோருக்கு மஹ்மூத் அப்பாஸ்
நன்றி தெரிவித்துள்ளார ். யுத்த நிறுத்தம் குறித்த தகவல் வெளியிட்டுள்ள
இஸ்ரேலிய சென்னல் 2
தொலைக்காட்சி சேவை, யுத்த நிறுத்தத்திற்கு இஸ்ரேல் உடன்பட்டிருப்பத
ாகவும் அதனை இஸ்ரேலிய பிரதமர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் இயக்கத்தின் பேச்சாளர் ஸாமி அபூ ஸஹ்ரி தெரிவிக்கையில்,
இஸ்ரேலிய இராணுவத்தை போராளிகள் வென்றுள்ளனர். யுத்தநிறுத்தம்
அறிவிக்கப்பட சற்று முன்பதாக இரு இஸ்ரேலிய
இராணுவத்தினரை போராளிகள் கொன்றுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார ்.
பத்திரிகையாளர்க ளுக்கு கருத்து தெரிவித்த அபூ ஸஹ்ரி, காஸா
சுற்றுப்புறத்தி லிருந்து வெளியேறிச் சென்ற இஸ்ரேலியர்கள் மீண்டும் தமது
வீடுகளுக்குத் திரும்ப ஹமாஸ்
அனுமதியளிப்பதாகதெரிவித்துள்ளார ். இஸ்ரேல் மீது போராளிகள் வான்
முற்றுகையொன்றை மேற்கொண்டு ஒட்டு மொத்த அறபுப் படைகளால் இயலாமல்
போனதை பலஸ்தீனப் போராளிகள் சாதித்துக் காட்டியுள்ளனர்.
மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடிச் செல்ல
நிர்ப்பந்திக்கப ்பட்டனர். அடக்கமுடியாத இராணுவம் என்று தம்மட்டமடித்துக
் கொண்டிருந்தவர்க ளின் மரியாதையை போராளிகள் காற்றில் பறக்க விட்டுள்ளனர்
எனவும் அவர்
மேலும் தெரிவித்துள்ளார ். இந்த யுத்த உடன்படிக்கை குறிப்பிட்ட கடவைகளை திறப்பதல்ல.
குத்ஸை விடுவித்து முழு பலஸ்தீன வரலாற்றுப் பூமியையும் மீட்கும்
வரை தொடரும் எனவும் ஹமாஸின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார
். இஸ்ரேலிய இராணுவத்தை படுதோல்வியடைச் செய்த
நிகழ்வையிட்டு ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தெருவோரங்களில்
இறங்கி மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர்.
Thanks:Meelparvai Media Centre
ஊர் செய்திகள்
date
27 August 2014
24 August 2014
sltj blood donation-maggona
SLTJ மக்கொன மற்றும் பேருவலைக் கிளைகள் இணைந்து நடாத்திய இரத்ததான முகாம் நேற்று (23/08/2014) மக்கொன அல் ஹஸனியா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் 103 பேர் இரத்ததானம் செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
இந் நிகழ்வில் 103 பேர் இரத்ததானம் செய்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.
23 August 2014
உலகெங்கிலும் சூடுபிடிக்கும் 'ஐஸ் பக்கெட்' சவால் (video)
ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட்
சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம்
பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற
செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும்.
இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.
விதிகள்
முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில்
இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ்
அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய
முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும். ஏற்றுக்
கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த
சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ்
கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட்
நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து,
தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும்.
அவ்வளவே.
ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல்
பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள்
சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர்
ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.
எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன. மார்க்
ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ்,
'ராக்' டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல்
மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள்
யூடியூபில் காணக் கிடக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால்
விட்டிருந்தனர்.
ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக
உறுதியளித்துள்ளார்.
இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில்
மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும்
ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில்
இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன்
ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு
புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன்
முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால்
குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.
விமர்சனங்கள்
வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல
பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல
மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர்
இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை
திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட்
சாலஞ்ச் நிரூபித்துள்ளது.
Thanks
BBC
தி இந்து

21 August 2014
தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்
புதுடெல்லி, ஆக. 21-
இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான
கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக
உள்ளது வருத்தத்தை தருகிறது.
மருத்துவத்துறையோ அவனது கைகளின்
வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான
குழந்தைகளின் விரல்களை விட
இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது.
தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும்
பெரிதானது. அவனது உள்ளங்கையிலிருந்து நடுவிரலின்
முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள்
வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது. மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால்
இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவதற்கும்,
உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும்
சிரமப்படவேண்டியுள்ளது.
தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால்
தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன்
கூறியுள்ளான். மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும்
கலீமின் பெற்றோர் தங்கள் சக்திக்கு ஏற்ற
வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர்.
ஆனால் அவனை பரிசோதிக்கும்
மருத்துவர்களோ குழம்பிப்போய்விடுவதாக அவனது பெற்றோர்கள்
கூறுகின்றனர். கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன்
இருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஒருவர், அவன்
லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா நோயால்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இரண்டுமே உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான
வளர்ச்சியை தரும் நோய் ஆகும். தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும்
என்று நம்பிக்கையுடன் கூறிய அவனது பெற்றோர்களான ஷமிம்-
ஹலீமா தம்பதியர் அதுவரை தாங்கள் காத்திருப்பதை தவிர
வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
நன்றி:மாலைமலர்
19 August 2014
சுத்தமாகும் லண்டன் 'பிக் பென்' கடிகாரம் video
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ( நாடாளுமன்றம் இருக்கும்
இடம்) இருக்கும் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரம் 2010ம்
ஆண்டிலிருந்து முதன் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது. எலிசபத்
கோபுரத்தின் மீது ஊழியர்கள், இந்த சுத்தம் செய்யும்
வேலையைச் செய்ய அங்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேலை நடக்கும்
போது, இந்த கடிகாரம் மணியடிக்கும், நேரம்
காட்டும். ஆனால் அதன் நேரங்காட்டும் முட்கள் தற்காலிமாக
வேலை நடக்கும்போது நிறுத்திவைக்கப்படும். இந்தக் கடிகாரத்தின் நான்கு
முகங்கள் ஒவ்வொன்றும், 312 கண்ணாடித்
துண்டுகளால் ஆனவை. இந்த வேலையைச் செய்ய ஐந்து நாட்கள்
வரை பிடிக்கும்.
Source:bbc
இதையும் பார்க்கவும்
Big Ben - behind the scenes

Subscribe to:
Posts (Atom)