ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப்
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட்
சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம்
பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற
செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும்.
இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.
விதிகள்
முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில்
இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ்
அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய
முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும். ஏற்றுக்
கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த
சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ்
கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட்
நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து,
தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும்.
அவ்வளவே.
ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல்
பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள்
சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன.
பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர்
ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர்.
எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன. மார்க்
ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ்,
'ராக்' டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல்
மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள்
யூடியூபில் காணக் கிடக்கின்றன. அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால்
விட்டிருந்தனர்.
ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக
உறுதியளித்துள்ளார்.
இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய
விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில்
மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும்
ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில்
இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன்
ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு
புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன்
முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால்
குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.
விமர்சனங்கள்
வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும்
வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல
பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல
மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர்
இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக
எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை
திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட்
சாலஞ்ச் நிரூபித்துள்ளது.
Thanks
BBC
தி இந்து
ஊர் செய்திகள்
date
23 August 2014
21 August 2014
தலையை விட பெரிதாக உள்ள கைகளால் அவதிப்படும் சிறுவன்
புதுடெல்லி, ஆக. 21-
இந்தியாவை சேர்ந்த சிறுவனான எட்டு வயது சிறுவனான
கலீமுக்கு அவனது தலையை விட கைகள் பெரிதாக
உள்ளது வருத்தத்தை தருகிறது.
மருத்துவத்துறையோ அவனது கைகளின்
வளர்ச்சியை பார்த்து குழம்பிப்போய் கிடக்கிறது. பிறக்கும்போதே இயல்பான
குழந்தைகளின் விரல்களை விட
இரு மடங்கு பெரிதாக கலீமின் விரல்கள் இருந்துள்ளது.
தொடர்ந்து நாளுக்கு நாள் விரல்களின் வளர்ச்சி மேலும் மேலும்
பெரிதானது. அவனது உள்ளங்கையிலிருந்து நடுவிரலின்
முடிவு வரை கணக்கிட்டால் 13 இஞ்ச் அளவுக்கு அவனது கைகள்
வளர்ச்சியடைந்துள்ளது தெரிகிறது. மிகவும் அபரிதமான கைகளின் வளர்ச்சியால்
இச்சிறுவன் ஷு லேஸ் கட்டுவதற்கும்,
உடைகளை அணிந்து கொள்வதற்கும் மற்ற செயல்களை செய்வதற்கும்
சிரமப்படவேண்டியுள்ளது.
தன்னை பார்த்து மற்றவர்கள் பயப்படுவதால்
தனது வாழ்க்கையே தனிமையில் கழிவதாக சிறுவன் கலீம் சோகத்துடன்
கூறியுள்ளான். மாதம் ஒன்றிற்கு 1500 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும்
கலீமின் பெற்றோர் தங்கள் சக்திக்கு ஏற்ற
வகையில் அவனது சிகிச்சைக்கு செலவு செய்துவருகின்றனர்.
ஆனால் அவனை பரிசோதிக்கும்
மருத்துவர்களோ குழம்பிப்போய்விடுவதாக அவனது பெற்றோர்கள்
கூறுகின்றனர். கைகளின் வளர்ச்சியை தவிர்த்து பார்த்தால் கலீம் நல்ல நலத்துடன்
இருப்பதாக கூறியுள்ள மருத்துவர் ஒருவர், அவன்
லிம்பாஞ்சியோமா அல்லது ஹமார்டோமா நோயால்
பாதிக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இரண்டுமே உடலின் குறிப்பிட்ட பாகத்தில் அதிகப்படியான
வளர்ச்சியை தரும் நோய் ஆகும். தங்கள் மகனுக்கு என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும்
என்று நம்பிக்கையுடன் கூறிய அவனது பெற்றோர்களான ஷமிம்-
ஹலீமா தம்பதியர் அதுவரை தாங்கள் காத்திருப்பதை தவிர
வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
நன்றி:மாலைமலர்
19 August 2014
சுத்தமாகும் லண்டன் 'பிக் பென்' கடிகாரம் video
லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் ( நாடாளுமன்றம் இருக்கும்
இடம்) இருக்கும் பிரசித்தி பெற்ற பிக் பென் கடிகாரம் 2010ம்
ஆண்டிலிருந்து முதன் முறையாக சுத்தம் செய்யப்படுகிறது. எலிசபத்
கோபுரத்தின் மீது ஊழியர்கள், இந்த சுத்தம் செய்யும்
வேலையைச் செய்ய அங்கு இறங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வேலை நடக்கும்
போது, இந்த கடிகாரம் மணியடிக்கும், நேரம்
காட்டும். ஆனால் அதன் நேரங்காட்டும் முட்கள் தற்காலிமாக
வேலை நடக்கும்போது நிறுத்திவைக்கப்படும். இந்தக் கடிகாரத்தின் நான்கு
முகங்கள் ஒவ்வொன்றும், 312 கண்ணாடித்
துண்டுகளால் ஆனவை. இந்த வேலையைச் செய்ய ஐந்து நாட்கள்
வரை பிடிக்கும்.
Source:bbc
இதையும் பார்க்கவும்
Big Ben - behind the scenes

14 August 2014
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் இஸ்ரேல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம
காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களைக்
கண்டித்து நேற்று கொழும்பு,
மாளிகாவத்தை பிரதேசத்திலிருந்து பஞ்சிகாவத்தை பகுதி
வரையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பால் ஆர்ப்பாட்டம்
ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த
இடத்துக்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர்
கலகொடஅத்தே ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர் சென்றதாகவும்
அதன் போது பொலிஸார் இரு தரப்பினரிடமும் சுமுகமாகப்
பேசி அமைதியான முறையில்
அவ்விடத்திலிருந்து அனுப்பி வைத்தாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு
தெரிவித்தது. பொதுபலசேன, சிஹலராவய, தெவ்ஹீத் ஜமாத் அமைப்புகளால் கோட்டை,
புறக்கோட்டை பிரதேசங்களில் நேற்று நடாத்த
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டங்கள் மற்றும்
கூட்டங்களுக்கு பொலிஸார் கொழும்பு கோட்டை நீதவான்
நீதிமன்றத்தில் நேற்று முன்தினம்
தடை உத்தரவு ஒன்றினை பெற்றிருந்தனர். இந்த நிலையில் ஸ்ரீலங்கா தவ்ஹீத்
ஜமாத், குறித்த ஆர்ப்பாட்டத்தை மாளிகாவத்தையில்
நேற்று நடத்தியது. பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மிலேச்சத்தனமான
தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால்
ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க ஏற்பாடு செய்திருந்த
போது பொதுபலசேன அமைப்பினர் உலகில் எங்குமே இடம் பெறாத
வகையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஓர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க
முயற்சித்ததனையடுத்து பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப்
பெற்று கொழும்பு கோட்டை, புறகோட்டை பிரதேசங்களில்
ஆர்ப்பாட்டம் செய்வதனைத் தடுத்தாகவும்
அதனை அடுத்தே இப்பிரதேசத்தில் தாங்கள்
நேற்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தாகவும் இதில் சுமார் 10,000
பேர் கலந்து கொண்டதகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் துணைச்
செயலாளர் ரஸ்மின் தெரிவித்தார்.
ஐ. நா ஈரான், ஈராக் யுத்தங்களின்
போது தமது படைகளை அனுப்பியது போல் இஸ்ரேலுக்கும்
படைகளை அனுப்பி இந்த யுத்ததை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்,
நவனீதன் பிள்ளை இலங்கை தொடர்பில் மேற்கொள்ளும்
விசாரணை போன்றே இஸ்ரோலில் இடம் பெறும்
செயற்பாடுகளுக்கு எதிராகவும் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும், இலங்கை
அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும்
துண்டிக்கவேண்டும் எனவும் இலங்கையில் உள்ள இஸ்ரேல்
நலன்புரி நிலையத்தை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும்
தமது கோரிக்கைகளை இவ்வார்பாட்டதில் முன்வைத்தாகவும்
தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஞானசார தேரர் உட்பட ஒரு குழுவினர்
இரு ஜீப்வண்டிகளில்
வந்து ஆர்ப்பாட்டத்தை நிறுத்துமாறு கூறியதாகவும் அதன்
போது பொலிஸார்
தலையிட்டு அவர்களை திருப்பி அனுப்பியதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார். சட்ட ஆட்சி அமுலில் உள்ள ஒரு நாட்டில் சாதாரணமான இவ்வாறான
அமைப்புகள்
வந்து இவ்வாறு தமது அழுத்தங்களை பிரயோகிப்பது கவலைக்குரிய
விடயம் என அவர் மேலும் தெரிவித்தார்.
video-
http://tinyurl.com/kuljy96
Thanks:metro news

13 August 2014
இஸ்லாத்தை தழுவியது ஏன்? - யுவன் விளக்கம்
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா
நான் இஸ்லாம் மதத்தை தழுவியதற்கு என் அம்மாவே காரணம் என்று இசையமைப்பாளர்
யுவன் சங்கர் ராஜா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இஸ்லாம் மதத்தை தழுவினார் என்பது தமிழ்
திரையுலகினர் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. ஆனால், அது தொடர்பாக
யுவன் விளக்கம் எதுவுமே கொடுக்கவில்லை.
யுவன், ஜெய் இருவருமே இஸ்லாம் மதத்தை தழுவி, ரம்ஜான் அன்று மசூதிக்கு
சென்று தொழுகை நடத்திய படங்கள் இணையத்தில் வெளியானது.
இந்நிலையில் ஏன் இஸ்லாம் மதத்தை தழுவினார் என்ற கேள்விக்கு முதன் முறையாக
பதிலளித்திருக்கிறார் யுவன். இது குறித்து யுவன் கூறியிருப்பது:
"எனது தந்தை தீவிரமான இந்து. ஒரு கண்ணாடி உடைந்தாலும் ஜோசியரைக்
கூப்பிடும் அளவுக்கு மூட நம்பிக்கை உடையவர். எனது பெற்றோர் பல
சம்பிரதாயங்களை பின்பற்றி வந்தனர். ஆனால் எனது சிறுவயது முதலே
இவற்றையேலாம் தாண்டி ஒரு அமானுஷ்யமான சக்தி உலகை கட்டுப்படுத்துகிறது
என்ற எண்ணம் எனக்குள் இருந்தது.
எனது மதமாற்றத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது எனது அம்மாவின் மறைவு
தான். வேலையின் காரணமாக மும்பைக்கு சென்றிருந்தேன். சென்னைக்கு வந்தபோது,
அம்மா கடுமையாக இரும்பிக் கொண்டிருந்தைக் கண்டேன். நானும் எனது
சகோதரியும் அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றோம். நான் கார்
ஓட்டிச் சென்றேன். நாங்கள் மருத்துவமனையை அடைந்தோம். அம்மாவின் கையைப்
பிடித்துக் கொண்டு, அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். ஆனால்,
அடுத்த நொடி அவரது கை விழுந்தது, அவர் காலமானார். நான் அழுது கொண்டிருந்த
அதே நேரத்தில், அந்த சில நொடிகளில் அம்மாவின் ஆன்மா என்னவாகியிருக்கும்
என்று யோசிக்க ஆரம்பித்தேன், ஏனென்றால் அவர் சில விநாடிகளுக்கு முன் தான்
உயிரோடு இருந்தார்.
எனக்கான விடையைத் தேடிக் கொண்டிருக்கும்போது அல்லாவிடமிருந்து நேரடியாக
அழைப்பு வந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அது ஒரு ஆன்மிக அனுபவம். எனது
நண்பர் ஒருவர் அப்போது தான் மெக்காவிலிருந்து வந்திருந்தார். "நீ தற்போது
மிகவுள் தளர்ந்துள்ளாய். இதிலிருந்து நீ மீண்டு வரவேண்டும்" எனக் கூறி
ஒரு முசல்லாவை (பிரார்த்தனை செய்யும்போது பயன்படுத்தப்படும் பாய்)
எனக்குத் தந்தார். "இந்தப் பாய் மெக்காவில் நான் அமர்ந்து பிரார்த்தனை
செய்தது. இது மெக்காவை தொட்டு வந்த பாய். உன் மனது பாரமாக இருக்கும்போது
இதில் உட்கார்ந்து பார்" என்றார். நான் அந்த பாயை எனது அறையின் ஒரு
மூலையில் வைத்துவிட்டு மறந்துவிட்டேன்.
சில மாதங்கள் கழித்து எனது உறவினர் ஒருவருடன் அம்மாவைப் பற்றிப் பேசிக்
கொண்டிருந்த்போது மிகவும் பாரமாக உணர ஆரம்பித்தேன். எனது அறையில்
நுழைந்தேன், எதேச்சையாக அப்போது அந்தப் பாயைப் பார்த்தேன். எப்படி
இவ்வளவு நாள் இதை மறந்துபோனோம் என நினைத்தேன்.
முதல் முறையாக அதில் அமர்ந்தவுடனேயே நான் அழ ஆரம்பித்தேன். 'எனது
பாவங்களை மன்னியுங்கள் அல்லா' என்று வேண்டினேன். இது 2012-ஆம் ஆண்டு
நடந்தது. குரானை படிக்க ஆரம்பித்தேன். அது என்னை சீக்கிரத்தில்
ஆட்கொண்டது. இஸ்லாமை பின்பற்றி, தொழுகை செய்வதைக் கற்றுக் கொண்டேன்.
ஜனவரி 2014-ல் மதமாறுவதைப் பற்றி உறுதியாக முடிவு செய்தேன்.
படங்களில் யுவன் ஷங்கர் ராஜா என்ற பெயரையே பயன்படுத்துவதால் இதுவரை
அதிகாரப்பூர்வமாக எனது பாஸ்போர்ட் மற்றும் இதர கோப்புகளில் நான் எனது
பெயரை மாற்றவில்லை. ஆனால் சில காலம் கழித்து அதைச் செய்வேன். இதைப் பற்றி
எனது அப்பாவிற்குதான் நான் கடைசியாக தெரிவித்தேன். "நான் குரானை படிக்க
ஆரம்பித்துள்ளேன். அது எனக்கு மன அமைதியைத் தருகிறது" என்றேன். அவர்,
"யுவன், நீ இஸ்லாமியனாக மாறுவதில் எனக்கு உடன்பாடில்லை" என்றார். ஆனால்
எனது சகோதரரும் அவர் மனைவியும் எனக்கு ஆதரவளித்துள்ளனர்.
இது விசித்திரமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவே என் கையைப் பிடித்துக்
கொண்டு, "யுவன், நீ தனியாக இருக்கிறாய்.. இஸ்லாம் என்ற மரத்தின் கீழ் நீ
நிற்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என அவர் சொல்வதாக எனக்குப் பல
முறை தோன்றியுள்ளது." என்று கூறியுள்ளார்.
Thanks:தி இந்து

Subscribe to:
Posts (Atom)