தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 October 2013

குளிர்காலத்தில் கண்ணாடிகள் மூலம் முதல் தடவையாக ஒளிபெறும் நகரம்

வழமையாக குளிர் காலத்தில் சூரிய
ஒளி இன்றி இருண்டு கிடக்கும் நோர்வேயின் ஒரு நகரான
யூகானுக்கு (Rjukan மக்கள் தொகை 3,400)மூன்று இராட்சத
கண்ணாடிகள்(heliostats) மூலம் முதற்தடவையாக
இந்த ஆண்டு ஒளி கிடைத்துள்ளது.
ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இந்த நகருக்கு,
அதனைச் சூழ்ந்துள்ள மூன்று
மலைகளால் குளிர் காலத்தில்
6 மாதங்களுக்கு சூரிய ஒளி கிடைக்காது. அந்த மலைகள் சூரிய
ஒளியை அந்த நகருக்கு கிடைக்காமல் மறைத்துவிடும். ஆகவே இந்த நகருக்கு
இராட்சத கண்ணாடிகளை பயன்படுத்தி இந்தக்
காலகட்டத்தில் ஒளி வழங்க வேண்டும் என்ற யோசனை 100
ஆண்டுகளுக்கு முன்னதாக முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கான தொழில்நுட்பம்
2003 இல்தான்
கண்டுபிடிக்கப்பட்டது. குளிர்காலத்தில் முதல் தடவையாக சூரியனை வரவேற்க இந்த நகரம்
தற்போது பெரும் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. எதிர்பாராத ஒளி
கண்பார்வையை கெடுத்துவிடலாம் என்பதற்காக
அந்த நகர பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு எல்லாம் கூளிங்கிளாஸ்
வழங்கப்பட்டுள்ளது.
இது $ 847,000 டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.



Source:http://adf.ly/Ya8MG

28 October 2013

அவதானம்! P67799159 என்ற தொடர் இலக்கத்தை கொண்ட போலி 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள்

சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான போலி நாணயத்தாள்கள்
மாலபே பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதோடு பணம் அச்சிட்ட
அச்சகமும் இன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட
அனைத்தும் போலி நாணயத் தாள்களும் இரண்டாயிரம் ரூபா நாணய
தாள்கள் என பொலிஸ் குற்ற புலனாய்வு திணைக்களம்
தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட அனைத்து போலி நாணயத்தாள்களிலும் P67799159
என்ற தொடர் இலக்கம் காணப்படுவதாகவும் இவ்வாறான
போலி நாணயத்தாள்கள் பல புழக்கத்தில் இருப்பதாகவும் அத்
திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
எனவே P67799159 என்ற தொடரிலக்கத்தையுடைய 2000
ரூபா நாணயத் தாள்கள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ்
நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம்
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.





Source:http://adf.ly/YNRFL

27 October 2013

கொழும்பு -கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலையான கொழும்பு-
கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை
9.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
இன்று காலை 9.30 மணிக்கு பேலியகொட களனி பாலத்திற்கு அருகில் இந்த அதிவேக
நெடுஞ்சாலையினை ஜனாதிபதி திறந்து வைத்தார்.
4500 கோடி ாய் சீன நிதி உதவியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிவேக
நெடுஞ்சாலையானது சுமார் 26 கிலோமீற்றர் நீளமுடையது.
இதன் மூலம் கொழும்பிலிருந்து 20 நிமிடத்தில் கட்டுநாயக்கவுக்கு செல்ல
முடியும் என நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையானது திறந்து வைக்கப்பட்டதால் நீர்கொழும்பு மற்றும்
கண்டி வீதிகளின் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இதே வேளை இந்த நெடுஞ்சாலையினூடாக நாளொன்றிற்கு
சுமார் 15,000 இற்கும் அதிகமான வாகனங்கள் பயணிக்கும் எனவும்
எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை ஜனாதிபதியினால் இந்த அதிவேக நெடுஞ்சாலை
திறந்துவைக்கப்பட்டுள்ள அதேவேளை இன்று மாலை முதல் வாகன போக்குவரத்து
இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் இலகு ரக வாகனங்களுக்கு
பேலியகொடையிலிருந்து கட்டுநாயக்கவுக்கு செல்ல 300 ரூபாவும் ஜ-எல வரை
செல்ல 200 ரூபாவும் அறவிடப்படும்.
இதேவேளை 9 ஆசனங்களையுடைய வேன் மற்றும் 33 ஆசனங்களையுடைய பஸ்
வண்டிகளுக்கும் பேலியாகொடையிலிருந்து ஜா-எல வரை 350 ரூபாவும்
கட்டுநாயக்கவுக்கு 450 ரூபாவும் ஜா-எலயிலிருந்து கட்டுநாயக்கவுக்கு 300
ரூபாவும் அறவிடப்படும்.
லொறி மற்றும் 33 க்கும் அதிகமான ஆசனங்களை கொண்ட பஸ்களுக்கும்
பேலியகொடையிலிருந்து ஜ-எல வரை 400 ரூபாவும் கட்டுநாயக்க வரை 600 ரூபாவும்
கட்டணமாக அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source:http://adf.ly/YIEw0

23 October 2013

மெல்ல கொல்லும் குடிநீர் ''பாட்டில்கள்''

ிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள்,
பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை
கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும்.
இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த
பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள்
எண் ''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்)
வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்)
வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும். எண்
''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால்
தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும். எண் ''4''
எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால்
உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற
உணவு பாத்திர பயன்பாட்டிலும், எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்)
வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக்
பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர எண் ''7''
இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட
பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.
இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள்
தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம்
செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர்
நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர்
பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில்
வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது,
ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென
மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ
வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது
அவசியம்.
தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு
சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு
அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. உணவுத் தரம் மிக்க
பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர்
வைத்து குடிப்பதே உகந்தது. ''ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை
பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும். இதில் அந்த பாட்டிலின்
வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி''
நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''
என்றார்.

Source:http://adf.ly/Y2DTc

22 October 2013

வழுக்கைக்கு வந்துவிட்டது தீர்வு?

உலக அளவில் ஆண்களின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று வழுக்கைத்தலை.
ஆண்களின் அழகுக்கு மிகப்பெரிய எதிரியாக வழுக்கைத் தலை பார்க்கப்படுகிறது.
இதை தடுக்க விரும்பாத ஆண்களே இல்லை எனலாம்.
தலைப்பாகை துவங்கி, தொப்பியாக வளர்ந்து இன்றைய விக் வரை வழுக்கையை மறைக்க
ஆண்கள் பலவகையான தந்திரங்களை கையாண்டு வந்திருக்கிறார்கள். வழுக்கையை
தடுக்கும் மருந்துகள், முடி உதிராமல் தடுக்கும் மருந்துகள், உதிர்ந்த
முடி வளர்க்கும் மருந்துகள், கடைசியாக முடிமாற்று அறுவை சிகிச்சை முறை
என்று பலவகையான மருத்துவ தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் இவை
எதுவுமே வழுக்கை பிரச்சனைக்கான நீடிக்கத்தக்க நிரந்தர தீர்வை தரவில்லை
என்றே பார்க்கப்படுகிறது.
ஆனால் வழுக்கைக்கான நிரந்தர தீர்வை தாங்கள் நெருங்கிவிட்டதாக
கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். ஐக்கிய ராஜ்ஜியத்தில் இருக்கும் டர்ரம்
பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவ மையமும்
இணைந்து செய்த ஆய்வின் முடிவில், மனிதர்களின் முடியை செயற்கையாக
வளர்ப்பதற்கான புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது மனிதர்களின் முடியின் அடிப்பகுதியில் இருக்கும் நுண்ணிய திசுக்களை
எடுத்து, அவற்றை பரிசோதனைக்கூடத்தில் ஊட்டச்சத்து மிக்க சூழலில்
வளர்த்து, அப்படி வளர்க்கப்பட்ட அந்த திசுக்களை வழுக்கையான பகுதியில்
இருக்கும் தோலுக்கு அடியில் வைத்தால், அந்த பகுதியில் இருந்து புதிதாக
முடிவளர்க்க முடியும் என்று இந்த விஞ்ஞானிகள் செய்து
காட்டியிருக்கிறார்கள்.
மொத்தம் ஏழுபேரிடம் செய்த பரிசோதனைகளில், ஐந்துபேருக்கு ஆறுவாரங்களில்
புதிய முடி வளர்வதை இவர்கள் கண்டிருக்கிறார்கள். அதே சமயம், இந்த
பரிசோதனைகள் ஆரம்பகட்டத்தில் இருப்பதாக தெரிவித்திருக்கும், டர்ரம்
பல்கலைக்கழக பேராசிரியர் கோலின் ஜஹோடா, தமது இந்த ஆய்வின் முடிவுகள்
வழுக்கைத் தலையர்களுக்கு பயன்படுவதற்கு கடக்கவேண்டிய தடைகள் இன்னும் சில
இருக்கின்றன என்கிறார்.
ஆனாலும் இந்த ஆய்வின் முடிவு, வழுக்கையை முழுமையாக நிரந்தரமாக
குணப்படுத்த முடியும் என்பதற்கான சாத்தியப்பாட்டை
நிகழ்த்திக்காட்டியிருப்பதாக கூறுகிறார் அவர்.



Source:BBC