ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையின்
பெறுபேறுகள் நாளை வெளியிடவுள்ளதாக
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன
தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் சர்வதேச சிறுவர்
தினமான ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியே பரீட்சையின்
பெறுபேறுகளை வெளியிட
நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும்
தெரிவித்தார்.
இதன்படி, சகல மாணவர்களும்
தமது பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற
இணையத்தளத்தினூடாக நாளை பிற்பகல் தெரிந்து கொள்ளலாம்.
இதேவேளை, இம்முறை ஐந்தாம் தர
புலமைபரிசில்
பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 22ஆயிரத்து 455
மாணவர்கள்
தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி :வீரகேசரி
ஊர் செய்திகள்
date
30 September 2013
'டைட்டானிக்' கப்பலின் பிணக் குவியல்:ஒரிஜினல் புகைப்படம் ஏலம்
லண்டன், செப்.30-
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த சொகுசு கப்பலான
'டைட்டானிக்' தனது முதல் பயணத்தின்
போதே நியூயார்க் நகருக்கு செல்லும் வழியில்
15-4-1912 அன்று கடலில்
மூழ்கி ஜலசமாதியானது. வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த
போது டைட்டானிக் கப்பலில் 2 ஆயிரத்து 224
பயணிகள் இருந்தனர்.
கப்பல் இரண்டாக பிளந்ததால் ஆயிரக்
கணக்கானவர்கள் கடல் நீரில் மூழ்கி உடல்
உறைந்து பரிதாபமாக பலியாகினர். 710 பேர் மட்டுமே மீட்பு படகுகளின் மூலம் உயிர்
தப்பி நியூயார்க் நகருக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த விபத்தில் பலியானவர்களின் பிரேதங்கள்
உரிய மரியாதையுடன் சிறப்பான முறையில்
அடக்கம் செய்யப்பட்டதாக
நேற்று வரை கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த கூற்றை பொய்ப்பிக்கும்
வரலாற்று சிறப்புமிக்க அரிய புகைப்படம்
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நீரில் மூழ்கி இறந்த பயணிகளின்
பிணத்தை சாக்கு மூட்டைகளில்
கட்டி குவித்து வைத்திருக்கும் காட்சியும், இரண்டு கடற்படை சிப்பாய்கள்
சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட
ஒரு பிரேதத்தை அனாயசமாக
கொண்டு வந்து கீழே போடும் காட்சியும் இந்த
அரிய புகைப்படத்தில்
பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 100 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின்
பார்வைக்கு வந்துள்ள இந்த
வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் அடுத்த
(அக்டோபர்) மாதம் 19ம்
தேதி ஏலத்திற்கு வருகிறது.
இந்த புகைப்படம் ஒரு மிகப்பெரிய சோக வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் சுமார்
5 ஆயிரம் பவுண்டுகள்
வரை விலை போகலாம் என
எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி:மாலைமலர்

29 September 2013
இன்று உலக இருதய தினம்-
இன்றைய சூழலில் இருதய நோயால்
பாதிக்கப்படுவோரின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலகில் இருதய
நோய்களால் தான் அதிக உயிரிழப்புகள்
ஏற்படுகின்றன. ஆண்டுதோறும் 1 கோடியே 73
லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இது 2030ல் 2 கோடியே 30 லட்சமாக உயரும்
எனவும் உலக சுகாதார நிறுவன
ஆய்வு தெரிவிக்கிறது. இதில் 80 சதவீத
மாரடைப்புகள், தடுக்கக் கூடியவை.
இருதயத்தை பாதுகாப்பது பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப்டெம்பர் கடைசி ஞாயிறு (செப்டெம்பர் 29)
உலக இருதய தினமாக
கடைப்பிடிக்கப்படுகிறது.
இரவுப் பணி, முறையற்ற உணவு பழக்கம், அதிக
நேர பணி, குடும்பத்தில்
நிம்மதியின்மை போன்றவை இருதய நோய் சாத்தியக் கூறுகளை அதிகரிக்கின்றன. உலகில்
மாரடைப்பால் இறப்பவர்களில், 20 சதவீதம் பேர்
புகை பிடிப்பவர்கள். மற்றவர்களை விட,
புகை பிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும்
வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.
புகை பிடிப்பதால் இருதயத்துக்கு செல்லும் ஒட்சிஜன் அளவு குறைகிறது.
புகை பிடிப்பவர்கள், வெளியிடும்
புகையினால் அருகில் உள்ளவர்களும்
பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமன்
ஆதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும்
இருதய நோய் ஏற்படலாம். சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள்
சேதமடைவதால் மாரடைப்பு ஏற்படலாம்.
சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம்
பேருக்கு இக்குறைபாடு இருக்கிறது.
* புகை பிடிப்பதற்கு நோ சொல்லுங்கள்.
* உப்பு அதிகம் பயன்படுத்துவதால் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம்
இதய நோய் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட்ரால், சர்க்கரை, ரத்த
அழுத்தம் போன்றவற்றை சீராக வைத்திருக்க
வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள
வேண்டும், தினமும் குறைந்தது 30
நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
முறையான உடற்பயிற்சி, சரியான
உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம்
எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
* முடிந்தளவு எஸ்கலேட்டர், லிப்ட்
ஆகியவற்றை பயன்படுத்தாமல்,
மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும்.
ஒரு நாளுக்கு சராசரியாக, 10 ஆயிரம் அடிகள்
நடக்க வேண்டும். * காய்கறிகள், அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
கொழுப்பு இல்லாத இறைச்சி, மீன்,
பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய், மக்காச்சோளம்,
சூரிய காந்தி எண்ணெய் ஆகியன,
ஓய்வின்றி உழைக்கும் இருதயத்துக்கு பாதுகாப்பளிக்கின்றன.
* சிரிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது,
இதய நோயிலிருந்து விடுபடுவதற்கு சிறந்த
மருந்து.
இதயத்தை பாதுகாப்பது எப்படி? இதயத்திற்கு இதம் தரும் உணவுகள்,
மலர்களை பார்க்கும் போதும், மழலைகளைப்
பார்க்கும் போதும், மனதும், முகமும்
சிரிக்கும். ஓயாது துடிக்கும் நம் இதயமும்,
சிரிக்க வேண்டாமா? இன்று உலக இதய தினம்.
இதயம் இளமையாக சிரிக்க வேண்டுமா? இதயத்திற்கு இதம் தரும்
உணவுகளை சொல்கிறார்; மதுரை சித்தா டாக்டர்
ஜெ.ஜெய வெங்கடேஷ்.காதலையும், கோபத்தையும்
சமாளித்து துடிக்கும் இதயம், புகையாலும்,
மதுவாலும், எண்ணெய் உணவாலும் வலியால்
துடிக்கிறது. "அட்ரினலின், தைராக்ஸின்' ஹார்மோன்களால், கெட்ட கொழுப்பு, அதிக ரத்த
அழுத்தம், ரத்தக் குழாய் சுருக்கம்
போன்றவற்றால், இதயம்
சற்று பாதிக்கப்படுகிறது. தினம் ஒருவேளை,
30 கிராம் தயிர் சாப்பிடுவது நல்லது. பாலில்
உள்ள சத்துக்களை விட, தயிரில் அதிக சத்துக்கள் உள்ளன. சிவப்பு நிற பசலை,
பொன்னாங்கன்னி, கரிசாலை,
தண்டுக்கீரை, பீட்ரூட், கேரட் ஆகியவற்றில்,
இதயத்தை பாதுகாக்கும், "ஆன்தோசயனின்கள்'
உள்ளன. இவை, இதயத்திற்கும், ரத்தக்
குழாய்களுக்கும் இடையே உராய்வு அழுத்தத்தை,
குறைத்து மென்மைப்படுத்துகின்றன. குறைந்த தண்ணீரில் அவித்த சோளம், கொள்ளு இரண்டும்,
ரத்தக் குழாய்களில் கெட்ட
கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன.
சிவப்பு சோயா, பாதாம், பிஸ்தா,
சாரைப்பருப்பு, வெந்தயம், பட்டாணி, மீன்களில்
உள்ள, "ஒமேகா 3 அமிலம்', கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல
கொழுப்பை அதிகப்படுத்துகிறது. தக்காளி,
வெண்டைக்காயை அதிகம் வேக வைக்கக் கூடாது.
பச்சையாக சாப்பிடுவது இன்னும் நல்லது.
இவற்றிலுள்ள, "லைக்கோபின்கள்' பித்தநீருடன்
வினைபுரிந்து, கெட்ட கொழுப்பு உருவாவதை தடுக்கின்றன. ஆப்பிள்,
ஸ்ட்ரா பெர்ரி, ஆப்ரிகாட், முலாம்பழம், கிவி,
மாதுளை, எலுமிச்சை, ஆரஞ்சு,
புளு பெர்ரி சாப்பிட்டால், நுண்ணிய ரத்தக்
குழாய்களில் நைட்ரஜன் ஆக்ஸைடு அதிகரித்து,
ரத்தக் குழாய் விரிவடைகிறது. இதனால் அடைப்பு மற்றும் சுருக்கம்
தவிர்க்கப்படுகிறது. இதிலுள்ள
"பீட்டா கரோட்டின், விட்டமின் இ' இரண்டும்,
இதயத்தை பாதுகாக்கின்றன.பப்பாளி, பிளம்சில்
உள்ள, மெக்னீசியம், பொட்டாசியம் இரண்டும்,
ரத்தத்தில் சோடியம் அதிகரிக்காமல் தடுத்து, இயல்பான நிலைக்கு கொண்டு வருகின்றன.
இதிலுள்ள, "விட்டமின் ஏ' செல்,
அழிவை தடுக்கிறது. நல்ல
கொழுப்பை அதிகரித்து வயிறு, இடுப்பு,
தொடைப்பகுதியில் உள்ள கெட்ட
கொழுப்பை கரைத்து, இருதயத்திற்கு தேவையற்ற சுமையை தவிர்க்கின்றன. சிறுமலை வாழை,
ரஸ்தாளியும் இருதய தசைக்கு ஏற்றது.
முளைவிட்ட தானியங்கள், பார்லி, ஓட்ஸ்,
மட்டை அவல், சிவப்பு அரிசி, கோதுமை, ஆலிவ்
எண்ணெய், கொழுப்பு நீக்கப்பட்ட பால்,
முட்டை வெள்ளைக்கரு, அதிக எடையுள்ள மீன்கள், தோலுரித்து, கொழுப்பு
நீக்கப்பட்ட கோழி,
சோயா சார்ந்த உணவுகள், குடலில்
கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.வெள்ளைநிற
அரிசி, ரவை, மைதா, சீனி, உப்பை குறைத்துக்
கொள்வது நல்லது. ஒவ்வொரு மாதமும், சமையல்
எண்ணெய் மாற்றி பயன்படுத்த வேண்டும்.கோபம், கவலை, மனஅழுத்தம், பயத்தாலும் இருதயம்
பாதிக்கப்படும். தியானம், மூச்சுப்பயிற்சி,
யோகா, எளிய உடற்பயிற்சிகளால்
இருதயத்தை பாதுகாப்போம். இவ்வாறு அவர்
தெரிவித்துள்ளார்.
Thanks:dinamalar ,
world-heart-federation.org

25 September 2013
அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி [AL-HAQQAH]
அத்தியாயம் : 69
அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி
மொத்த வசனங்கள் : 52
இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில்
உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம்
பெற்றிருப்பதால் அதுவே இதன் பெயராக ஆனது.
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...
69:1
அந்த உண்மை நிகழ்ச்சி
69:2
உண்மை நிகழ்ச்சி என்றால் என்ன?
69:3
(முஹம்மதே!) உண்மை நிகழ்ச்சி எதுவென உமக்கு எப்படித் தெரியும்?
69:4
ஸமூது மற்றும் ஆது சமுதாயத்தினர் திடுக்கத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சியைப் பொய்யெனக் கருதினர்.
69:5
ஸமூது சமுதாயத்தினரோ பெரும் சப்தத்தால் அழிக்கப்பட்டனர்.
69:6
ஆது சமுதாயத்தினரோ மிகக் கடுமை யான கொடிய காற்றால் அழிக்கப்பட்டனர்.
69:7
அதை ஏழு இரவுகளும், எட்டு பகல் களும் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக இயக்கினான். அக்கூட்டத்தார் வேருடன் வீழ்ந்து கிடக்கும் பேரீச்சை மரங்களைப் போல் வீழ்ந்து கிடப்பதைக் காண்கிறீர்.
69:8
அவர்களில் எஞ்சியோரை நீர் காண்கிறீரா?
69:9
ஃபிர்அவ்னும், அவனுக்கு முன் சென்றோரும் தலை கீழாகப் புரட்டப்பட்ட (லூத் நபியுடைய சமுதாயமான) ஊராரும் தீமைகளைச் செய்தனர்.
69:10
தமது இறைவனின் தூதருக்கு மாறு செய்தனர். எனவே அவர்களை அவன் கடுமையாகத் தண்டித்தான்.
69:11
(நூஹ் நபியின் காலத்தில்) தண்ணீர் எல்லை மீறிய போது உங்களை நாம் கப்பலில் சுமத்தினோம்.
69:12
அதை உங்களுக்கு ஒரு படிப்பினை யாக நாம் ஆக்குவதற்கும், கேட்கும் காதுகள் கேட்டு பேணிடவும் (இவ்வாறு செய்தோம்)
69:13,14,15
ஒரே ஒரு தடவை ஸூர் ஊதப்பட்டு, பூமியும், மலைகளும் தூக்கப் பட்டு தூள் தூளாக்கப்படும் போது, அந் நாளில் தான் அந்த நிகழ்ச்சி நடந்தேறும்.
69:16
வானம் பிளந்து விடும். அன்று அது உறுதியற்றதாக இருக்கும்.
69:17
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.
69:18
அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள்.
உங்களிடமிலிருந்து எதுவும் மறையாது.
69:19,20
எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் ''வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசார ணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார்.
69:21,22
அவர் திருப்தியான வாழ்க்கை யிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார்.
69:23
அதன் கனிகள் தாழ்ந்திருக்கும்.
69:24
சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தி யவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண் ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்)
69:25,26,27,28,29
புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ''எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே''எனக் கூறுவான்.
69:30
அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்!
69:31
பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்!
69:32
பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.)
69:33
அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான்.
69:34
ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை.
69:35
இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை.
69:36
சீழைத் தவிர வேறு உணவும் இல்லை.
69:37
குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள்.
69:38,39
நீங்கள் பார்ப்பதன் மீதும், நீங்கள் பார்க்காததன் மீதும் சத்தியம் செய்கிறேன்.
69:40
இது மரியாதைக்குரிய தூதரின் கூற்றாகும்.
69:41
இது கவிஞனின் கூற்று அல்ல. குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்.
69:42
இது சோதிடனின் கூற்றும் அல்ல. குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்.
69:43
இது அகிலத்தாரின் இறைவனிடமிலிருந்து அருளப்பட்டது.
69:44,45
சில சொற்களை இவர் (முஹம்மது) நம்மீது இட்டுக் கட்டியிருந்தால் வலது கையால் இவரைத் தண்டித்திருப்போம்.
69:46
பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்.
69:47
உங்களில் எவரும் அவனைத் தடுப்பவர் அல்லர்.
69:48
இது (இறைவனை) அஞ்சியோருக்கு அறிவுரை.
69:49
உங்களில் பொய்யெனக் கருது வோர் உள்ளனர் என்பதை நாம் அறிவோம்.
69:50
இது (ஏக இறைவனை) மறுப்போருக்கு இழப்பாகும்.
69:51
இது உறுதியான உண்மை.
69:52
எனவே மகத்தான உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
source:www.tamilquran.in/69.php

24 September 2013
மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்தும்
மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான
மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம்
ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால்
அது அவர்களின் கற்றல்
திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க
ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான
தூக்கம் குழந்தைகளின்
மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த
ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று வயது முதல் ஐந்துவயது வரையிலான
குழந்தைகள் மதியம் ஒருமணிநேரம்
தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின்
மழலைப்பருவ பாடங்களை நன்றாக நினைவில்
வைத்திருப்பதாக இந்த ஆய்வில்
தெரியவந்திருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்துக்கான தேசியக் கழகத்தின்
விஞ்ஞான சஞ்சிகையில்
வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஆய்வின்
முடிவுகள் 40 சிறார்களிடம் மேச்சசூசெட்ஸ்
ஹம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களால்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் எட்டப்பட்டிருக்கிறது. இப்படி மதியம் தூங்கி எழுந்த குழந்தைகளின்
மூளைத்திறன் மேம்பாடு மதியம்
தூங்கி எழுந்தபின்னர் அதிகரிப்பதுடன்,
மறுநாளும் இது நீடிப்பதாகவும் இவர்கள்
கண்டறிந்துள்ளனர். குழந்தைகளின் நினைவாற்றலை ஸ்திரப்படுத்தி
ஒழுங்குபடுத்துவதற்கும், ஆரம்பகால
கற்றலுக்கும் இந்த மதிய தூக்கம்
அவசியமாகிறது என்று இந்த ஆய்வாளர்கள்
கருத்து தெரிவித்திருக்கிறார்கள். மதிய உணவுக்குப் பிறகு தூங்க
அனுமதிக்கப்பட்ட குழந்தைகள்
தூங்கி எழுந்ததும் காலையில் கண்களால்
பார்த்து அதன்மூலம்
கற்றவற்றை நினைவுகூர்வதில் சிறப்பாக
செயற்பட்டதாகவும், மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத குழந்தைகளை விட
இவர்களின் நினைவாற்றல்
மேம்பட்டு இருந்ததாகவும் இந்த ஆய்வாளர்கள்
கூறியுள்ளனர். மேலும் இதே குழந்தைகளை மதிய நேரம்
தூங்கவிடாதபோது அவர்களின் கற்றல் திறன்
குறைவதையும் தாங்கள் கண்டறிந்ததாக
ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பரிசோதனையில் பங்கேற்ற 14 குழந்தைகள்
தூங்கும்போது அவர்களின் மூளையின்
கற்றலுக்கு பொறுப்பான பகுதிகள் வேகமாக
செயற்படுவதையும் இந்த ஆய்வாளர்கள்
பரிசோதனைகள் மூலம் கண்டறிந்தனர். தங்களின் இந்த ஆய்வின் மூலம் மழலையர்
பள்ளிக்குழந்தைகளுக்கு மதிய நேர தூக்கம்
அவசியம் என்பதை தாங்கள் மருத்துவரீதியில்
உறுதி செய்திருப்பதாக தெரிவித்தார் இந்த
ஆய்வுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய
ஆய்வாளர் ரிபெக்கா ஸ்பென்ஸர். குழந்தைகளுக்கு வயதாக ஆக, இந்த மதியநேர
தூக்கம் என்பது இயற்கையிலேயே இல்லாமல்
போகும் என்று கூறும் அவர், மழலையர்
பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரத்தில்
தூங்க அனுமதிக்க வேண்டும்
என்று வலியுறுத்துகிறார். குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு மதியநேர
குட்டித்தூக்கம் மனிதர்களின் மூளைத்திறனை,
விழிப்புணர்ச்சியை அதிகப்படுத்தும்
என்பது ஏற்கெனவே ஆய்வுகள் மூலம்
நிரூபிக்கப்பட்ட செய்தி என்றாலும், மழலையர்
பள்ளி மாணாக்கர்களிடமும் இது நல்லபலனைத்தரும் என்பதை இந்த
ஆய்வு உறுதி செய்திருப்பதாக கூறுகிறார்,
ராயல் கல்லூரியின் சிறார் ஆரோக்கியம்
குறித்த சிறப்பு மருத்துவர் ராபர்ட் ஸ்காட்
ஜுப். மழலை வயதில் குழந்தைகள்,
இயற்கையாகவே தம்மைச்சுற்றி நடக்கும்
நிகழ்வுகளில் இருந்து ஏராளமான
தகவல்களை உள்வாங்கிக்கொள்ளும்
தன்மை கொண்டவர்கள். இந்த தகவல்களையெல்லாம்
அவர்களின் மூளை உள்வாங்கி பகுத்துப்பார்த்து சேமித்து
வைத்துக்கொள்வதற்கு சராசரியாக
ஒருநாளைக்கு 11 முதல் 13 மணிநேரம் அவர்கள்
தூங்குவது அவசியம். எனவே இரவு நேரத்
தூக்கத்தைப் போலவே, மதிய நேர தூக்கமும் இந்த
மழலையர்களுக்கு மிகவும் அவசியம் என்பதை இந்த ஆய்வுகள்
உறுதி செய்திருப்பதாக கருதுகிறார்
மருத்துவர் ராபர்ட். மதியநேரம் தூங்க அனுமதிக்கப்படாத
குழந்தைகள், களைப்படைந்தும், எரிச்சலுடனும்,
கவனம் செலுத்தி கற்க முடியாமலும்
திணறுவார்கள் என்றும் அவர் கூறுகிறார். தங்களின் குழந்தையின்
மழலைக்கற்றலை ஊக்குவிக்க நினைக்கும்
பெற்றோர்கள், அவர்களை மதியநேரம்
குறைந்தது ஒருமணிநேரமாவது தூங்கவிடுங்கள்
என்பதே இந்த மருத்துவர்கள் செய்யும்
பரிந்துரை.
Source:BBC TAMIL
Subscribe to:
Posts (Atom)