கொழும்பில் இன மதவாதத்திற்கு எதிராக
ஜனநாயக மக்கள் முன்னணி, நவ சமசமாஜ கட்சி,
தேசிய ஐக்கிய முன்னணி ஆகிய கட்சிகள்,
அரசு-தனியார்துறை தொழிற்சங்கள், வெகுஜன
அமைப்புகள், பெண்கள் அமைப்புகளுடன்
இணைந்து தலைநகரில் மேதின ஊர்வலத்தையும், கூட்டத்தையும் நடத்த உள்ளன. இந்த
ஊர்வலத்திலும், கூட்டத்திலும் கொழும்பில்
வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள்
அணிதிரண்டு கலந்துகொள்ள வேண்டும் என
ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
அழைப்பு விடுத்துள்ளார். மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரத்ன,
அசாத் சாலி ஆகிய கட்சி தலைவர்களும், தமிழ்
தேசிய கூட்டமைப்பின்
பிரதிநிதித்துவப்படுத்தும் முகமாக எம். ஏ.
சுமந்திரன் எம்பியும், ஜனநாயக மக்கள்
முன்னணியின் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை மக்கள் பிரதிநிதிகளும்,
மூன்று கட்சிகளினதும் அங்கத்தவர்களும்,
ஆதரவாளர்களும் கலந்து கொள்ளும் இந்த மேதின
நிகழ்வு தொடர்பில் மனோ கணேசன் மேலும்
கூறியதாவது,
இனவாதத்தையும், மதவாதத்தையும் எதிர்க்க இன்று தமிழ், முஸ்லிம் மக்களுடன்
பெருந்தொகையான சிங்கள
மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
தொழிற்சங்கங்களும் எம்முடன்
கரங்கோர்த்துள்ளார்கள்.
கொழும்பில் சிங்கள சகோதர மக்களுடன் சமத்துவமாக ஒற்றுமையுடன் வாழ தமிழ்,
முஸ்லிம் மக்கள் தயார் என்ற
செய்தியை நமது கூட்டு மேதினம் மூலம் நாம்
அறிவிப்போம். ஆகவே இந்த மேதின நிகழ்வில்
கொழும்பில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்கள்
அணிதிரண்டு கலந்துகொண்டு எங்கள் கரங்களை பலப்படுத்த வேண்டும் என
அழைப்பு விடுக்கின்றேன்.
மே முதலாம் திகதி நண்பகல் 1
மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர
பிரைஸ் பார்க் பூங்கா மைதானத்தில்
இருந்து ஊர்வலம் ஆரம்பித்து மத்திய கொழும்பு நகர வீதிகள் வழியாக
சென்று மீண்டும் பிரைஸ் பார்க்
பூங்கா மைதானத்துக்கு திரும்பி அங்கு மேதின
பொதுக்கூட்டம் நடைபெறும்.
எனவே மே முதலாம் திகதி நண்பகல் 12
மணிக்கு கொழும்பு புறக்கோட்டை குணசிங்கபுர பிரைஸ் பார்க்
பூங்கா மைதானத்திற்கு வரும்படி தமிழ்,
முஸ்லிம் மக்களை அன்புடன் அழைக்கின்றேன்.
Thanks:virakesari
ஊர் செய்திகள்
date
30 April 2013
ஸஜ்தா சஹ்வு எப்படி செய்வது?
மறதியினால் ஒருவர் தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை மறந்தாலோ,
அல்லது குறைத்தாலோ, அல்லது கூடுதலாகச் செய்தாலோ அவர் அதற்குப் பகரமாக
இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். இதற்கு ஸஜ்தா ஸஹ்வு (மறதிக்குரிய
ஸஜ்தா) என்று சொல்லப்படும். தொழுகையில் செய்ய வேண்டியவைகளில் சிலதை
விட்டது தொழுகையின் போது உறுதியாகத் தெரிந்தால் ஸலாம் கொடுப்பதற்கு
முன்னர் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து ஸலாம் கொடுக்க வேண்டும். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் ஒரு முறை லுஹர் தொழுவித்தனர். அப்போது இரண்டாம் ரக்அத்தில்
உட்காராமல் எழுந்து விட்டார்கள். மக்களும் அவர்களுடன் எழுந்து
விட்டார்கள். தொழுகை முடிக்கும் தருணத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
ஸலாம் கொடுக்கப் போகிறார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த
போது உட்கார்ந்த நிலையிலேயே தக்பீர் கூறினார்கள். ஸலாம் கொடுப்பதற்கு
முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து விட்டுப் பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் புஹைனா (ரலி), நூல் : புகாரீ (829)
ரக்அத்களைக் குறைத்து தொழுதால் விடுபட்டதைப் பூர்த்தி செய்து ஸலாமுக்குப்
பின்னர் மறதிக்கான ஸஜ்தா செய்து. பிறகு ஸலாம் கொடுக்க வேண்டும். நபிகள்
நாயகம் (ஸல்) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக
எங்களுக்குத் தொழுவித்து விட்டு ஸலாம் கொடுத்து விட்டார்கள். பள்ளியில்
நாட்டப்பட்டுள்ள
மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்து கொண்டார்கள்.
தமது வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்துக்
கொண்டார்கள்.
தமது வலது கன்னத்தை இடது கை மீது வைத்துக் கொண்டார்கள். அவசரக்காரர்கள்
பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டு தொழுகை குறைக்கப்பட்டு
விட்டது
என்று பேசிக் கொண்டார்கள். அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர்
அக்கூட்டத்தில் இருந்தனர். (இது பற்றி) நபி (ஸல்) அவர்களிடம் கேட்க
அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் இரு கைகளும் நீளமான ஒரு மனிதர்
இருந்தார். துல்யதைன் (இரு கைகள் நீளமானவர்) என்று அவர்
குறிப்பிடப்படுவார். அவர் அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டு
விட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா? என்று கேட்டார்.
குறைக்கப்படவும் இல்லை. நான் மறக்கவும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறிவிட்டு (மக்களை நோக்கி) துல்யதைன் கூறுவது சரி தானா? என்று
கேட்க ஆம் என்றனர் மக்கள். தொழுமிடத்திற்குச் சென்று விடுபட்டதைத் தொழுது
ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்)
ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்ட ஸஜ்தாவைச் செய்து பின் தலையை
உயர்த்தி தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்)
ஸஜ்தாவைப் போல் அல்லது அதைவிட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம்
கொடுத்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (482)
தொழுகையில் மூன்று ரக்அத் தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத் தொழுதோமா என்ற
சந்தேகம் ஏற்பட்டால் குறைந்ததை, அதாவது மூன்று தான் தொழுதுள்ளோம் என்று
கணக்கிட்டு மேலும் ஒரு ரக்அத் தொழ வேண்டும். மேலும் இதற்காக ஸலாமுக்கு
முன் இரண்டு ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அல்லது ஸலாம் கொடுத்த பின்னர்
இரண்டு சஜ்தாக்கள் செய்யலாம். உங்களில் ஒருவருக்கு தாம் மூன்று ரக்அத்கள்
தொழுதோமா? அல்லது நான்கு ரக்அத்கள் தொழுதோமா? என்று சந்தேகம் ஏற்பட்டால்
சந்தேகத்தைக் கைவிட்டு உறுதியான (மூன்று ரக்அத்கள் என்ப)தன் அடிப்படையில்
(மீதி உள்ள ஒரு ரக்அத்தைத்) தொழுது விட்டு ஸலாம் கொடுப்பதற்கு முன் இரு
ஸஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும்! அவர் (உண்மையில்) ஐந்து ரக்அத்கள்
தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்கள் அத்தொழுகையை இரட்டைப்படை ஆக்கி
விடும். அவர் நான்கு ரக்அத்கள் தொழுதிருந்தால் அவ்விரு ஸஜ்தாக்களும்
(தொழுகைகளில் குழப்பம் ஏற்படுத்திய) ஷைத்தானை முறியடித்ததாக ஆகும்.
அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி), நூல் : முஸ்லிம் (990) மறதிக்காக செய்யும்
ஸஜ்தாவில் ஓதுவதற்கென குறிப்பிட்ட துஆ எதையும் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்
தரவில்லை. ஸஜ்தாக்களில் எப்போதும் ஓதும் துஆக்களை ஓத வேண்டும்.
source:http://www.onlinepj.com/kelvi_pathil/thozukai_kelvi/sajda_sahvu_eppadi/

27 April 2013
ரியாளுஸ்ஸாலிஹீன் MP3 ;நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில் கேட்பதற்க்கு
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்கா
த்துஹு. நபிகளாரின் பொன்மொழிகளை ஒலி வடிவில்
கேட்பதற்க்கு முனையும்
தங்களுக்கு இதனை முழுவதுமாக கேட்டு,
நினைவில் நிறுத்தி வாழ்வில்
கடைபிடிக்கவும், தம்மோடு மட்டும்
நிறுத்திக்கொள்ளாமல், தம் குடும்பத்தினருக்கும்,
நண்பர்களுக்கும்,ஊரிலுள்ளவர்களுக்கும்,
இன்னும் உலகெங்கும் வாழும் தமிழ்
கூறும்மக்களுக்கும் இதனை CD க்கள்
மூலமாகவும், இணையதளம் மூலமாகவும், இன்னும்
பல வழிகளிலும் இதனை கிடைக்கச் செய்து சதக்கதுல் ஜாரி
ய்யாவை பெற்றுக்கொள்ளவும், இறுதியில்,
மறுமை வாழ்க்கையில் வெற்றி பெறவும், எல்லாம்
வல்ல ரப்புல் ஆலமீன் உதவட்டுமாக. புத்தகங்களை படிக்க, நேரமின்மையையும்,
சலிப்பையும் காரணம் காட்டி நபிகளாரின் பொ
ன்னான மொழிகள் நம் உள்ளத்தை அடையாமல் இரு
ப்பதை தவிர்க்க இவ்வகை ஒலி வடிவங்கள்
உதவக்கூடும். இதனை வாகனங்களில் பயணி
க்கும்போதும், கடைகளில் வேலைப்பார்க்கும்போதும், பெண்கள்
வீட்டுவேலைகளைப்பார்க்கும்போதும், சமையலறை
யில் இருக்கும்போதுமாக, இப்படி பல
நேரங்களிலும், வகைகளிகும் கேட்கலாம்.
மேலும் தங்கள் அலைபேசியில்
சேமித்து வைத்து நண்பர்களுக்கு ப்ளூடூத் (Bluetooth) மூலமும் அனுப்பலாம். "ரியாளுஸ்ஸாலிஹீன்" என்ற இந்த புத்தகம்,
அபூ ஸக்கரியா யஹ்யா பின் ஷரஃப் அன் நவவி
(ரஹ்) அவர்களின் உருவாக்கம். மிக பிரபலமான-
அதாரப்பூர்வமான ஹதீஸ் புத்தகங்களாகக் கரு
தப்படும்,புஹாரி, முஸ்லிம், திர்மிதி…என்பன
போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட ஹதீஸ்களில் தொகுப்புகளே இந்த புத்தகம். இதனை இங்கிருந்து பதிவிறக்கம் (Download)
செய்து கொள்ளலாம். https://dl.dropbox.com/s/hkkecwca6qrbm1f/0_0%
20TamilAudioIslam_Introduction.zip https://dl.dropbox.com/s/m4xce78u07rbfc0/
Riyalussaliheen%201%20to%2050.zip https://dl.dropbox.com/s/j1unrmqujaq139w/
Riyalussaliheen%2051%20to%20100.zip https://dl.dropbox.com/s/wjk8aj628qqwxyv/
Riyalussaliheen%20101%20to%20150.zip https://dl.dropbox.com/s/6gu3zm3btbm0fd8/
Riyalussaliheen%20151%20to%20200.zip https://dl.dropbox.com/s/e7jf2kumt7wuyv4/
Riyalussaliheen%20201%20to%20250.zip https://dl.dropbox.com/s/yc07lzj387z6ryx/
Riyalussaliheen%20251%20to%20300.zip https://dl.dropbox.com/s/c6jhbzhb1dx75br/
Riyalussaliheen%20301%20to%20350.zip https://dl.dropbox.com/s/04g6dw2tclmkzej/
Riyalussaliheen%20351%20to%20400.zip https://dl.dropbox.com/s/m7l0u5nicrt94ip/
Riyalussaliheen%20401%20to%20450.zip https://dl.dropbox.com/s/8v20ps8xvwsmb9s/
Riyalussaliheen%20451%20to%20500.zipi
Source:http://www.tamilaudioislam.com/home/

24 April 2013
இந்த வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் நாளை
இந்த வருடத்தின்
முதலாவது பகுதியளவு சந்திர கிரகணம்
நாளை (25) தென்படும் என வளிமண்டலவியல்
திணைக்களம் தெரிவித்துள்ளது.
சூரியன், பூமி மற்றும் சந்திரன் என்பன மிகத்
துல்லியமாகவோ அல்லது ஏறத்தாளவோ ஒரே வரிசையில் வரும் போது சந்திர கிரகணம்
ஏற்படுகிறது.
நாளை சந்திர கிரகண குறை நிழல் தெரிய
உள்ளதோடு நாளை மறுதினம் கரு நிழல்
தோன்றும் என வளிமண்டலவியல் திணைக்களம்
குறிப்பிட்டுள்ளது. அதிகமான ஆசிய நாடுகள், ஆபிரிக்கா,
ஐரோப்பா நாடுகளிலும்
பகுதியளவு சந்திரகிரகணம் தென்படும் என
அறிவிக்கப்படுகிறது.

பீட்ரூட் சாறு உயர் ரத்தஅழுத்தத்தை தணிக்கிறது
பீட்ரூட் சாறு மனிதர்களின் உயர் ரத்த
அழுத்தத்தை தணிக்கவல்லது என்று
மருத்துவ ஆய்வாளர்கள்
தெரிவித்திருக்கிறார்கள். ஒரு தேநீர் கோப்பை அளவு, அதாவது சுமார்
250 மிலி லிட்டர் பீட்ரூட்
சாறு குடித்தால் ஒருவரின் உயர் ரத்த
அழுத்தம் சுமார் 10 எம் எம் அளவால்
குறைவதாக லண்டன் மருத்துவக்
கல்லூரியும் பார்ட்ஸ் சுகாதார மையமும் இணைந்து நடத்திய ஆய்வில்
தெரிய வந்திருக்கிறது. பதினைந்து பேரிடம் நடத்திய ஆய்வின்
முடிவில் ஒரு சிலருக்கு அவர்களின்
உயர் ரத்தஅழுத்தம் சாதாரண
அளவுக்கு குறைந்ததாகவும் இந்த
ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதாக,
மருத்துவ சஞ்சிகையான ஹைபர்டென்ஷன் தெரிவிக்கிறது. இவர்கள் பீட்ரூட்
சாற்றை குடித்து மூன்று முதல்
ஆறுமணி நேரம் கழித்து இவர்களின் உயர்
ரத்த அழுத்தம் கணிசமாக குறைந்ததாக
இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்
கணக்கிட்டிருக்கிறார்கள். மேலும் மறுநாளும் கூட இவர்களின் உயர்
ரத்தஅழுத்தம்
குறைந்தே காணப்பட்டதாகவும் இவர்கள்
தெரிவிக்கிறார்கள். பீட்ரூட்டில் இருக்கும் நைட்ரேட்
சத்து மனிதர்களின்
ரத்தநாளங்களை விரிவடையச் செய்வதனால்
இரத்த ஓட்டம் சீராக செல்வதால்,
மனிதர்களின் உயர் ரத்தஅழுத்தம்
குறைவதாக மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஏற்கெனவே அஞ்ஞைனா என்கிற இரத்தநாள
வலிநோயால்
அவதிப்படுபவர்களுக்கு நைட்ரேட்
மருந்து அளிப்பதன் மூலம் அவர்களின்
வலியை குறைக்க
முடிவதை சுட்டிக்காட்டும் மருத்துவர்கள், இங்கே நைட்ரேட்
சத்து அதிகம் கொண்டிருக்கும்
பீட்ரூட் சாறு அதே வேலையை செய்வதாக
கருதுகிறார்கள். நைட்ரேட் சத்து ரத்த நாளத்தை விரிவடையச்செய்யும் மண்ணில் இயற்கையிலேயே இருக்கும்
நைட்ரேட் சத்து, தாவரங்களின் வேர்கள்
மூலம் உறிஞ்சப்பட்டு அவற்றின் இலை,
தண்டு மற்றும் கிழங்குகளில்
சேமிக்கப்படுகிறது.
ஒவ்வொரு தாவரமும் இந்த நைட்ரேட் சத்தை ஒவ்வொருவிதமாக உறிஞ்சும்
தன்மையையும், சேமிக்கும் தன்மையையும்
கொண்டிருக்கின்றன. இதில் பீட்ரூட்
தாவரம் நிலத்தில் இருந்து உறிஞ்சும்
நைட்ரேட் சத்தை தனது கிழங்கில்
அடர்த்தியாக சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே இந்த பீட்ரூட் கிழங்கின்
சாற்றை குடிக்கும் போது, அதில்
இருக்கும் நைட்ரேட் மனிதர்களின் ரத்த
நாளங்களை விரிவடையச் செய்யும்
வேலையை செய்கிறது. இவ்வளவு குறைவான நைட்ரேட், உயர் இரத்த
அழுத்தத்தில் இவ்வளவு பெரிய நல்ல
பலனை அளிக்கும் என்பது தாங்கள்
எதிர்பார்க்கவில்லை என்கிறார் இந்த
ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர்
அம்ரிதா அலுவாலியா. எனவே நைட்ரேட் சத்து அதிகம்
இருக்கும் பீட்ரூட் போன்ற
காய்கறிகளை உணவில்
சேர்த்துக்கொள்வதன் மூலம், ஒருவரின்
உயர் ரத்தஅழுத்தத்தை கணிசமாக
குறைக்க முடியும் என்பது நோயாளிகளுக்கும் எளிதில்
கடைபிடிக்கக்கூடிய, பக்கவிளைவுகளற்ற
சிகிச்சைமுறையாக மாறும்
வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார் அவர். அதேசமயம், நைட்ரேட் அதிகம் உள்ள
காய்கறிகளை அதிகம் சாப்பிடுவதன்
மூலம் நாள்பட்ட உயர் ரத்த
அழுத்தத்தை தொடர்ந்து
கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க
முடியுமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு மேலதிக ஆய்வுகள்
செய்யவேண்டியது அவசியம் என்றும்
அம்ரிதா அலுவாலியா தெரிவித்தார். அந்த ஆய்வின் முடிவுகளுக்காக
காத்திருக்காமல், பச்சைக்
காய்கறிகளை அதிகம் உண்பது உயர் ரத்த
அழுத்தம் உள்ளவர்களுக்கு நன்மைதான்
என்கிறார் அவர். அதேசமயம், பீட்ரூட்
சாற்றை குடிப்பவர்களின் சிறுநீர்
இளஞ்சிகப்பு நிறமாக மாறும் என்றும்
அவர் எச்சரிக்கிறார். எனவே சிறுநீரின்
நிறத்தை பற்றி கவலைப்படாதவர்கள்,
பீட்ரூட் சாற்றை குடித்து தங்களின்
உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க
முயலலாம் என்பது இந்த ஆய்வாளர்களின்
யோசனை.
source:http://www.bbc co.uk/tamil/science/2013/04/130416_sciencebeetroot.shtml

Subscribe to:
Posts (Atom)