தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 November 2012

டிசம்பர் 1ம் 2ம் திகதிகளில் களுத்துறை -அளுத்கமவிற்கு ரயில் கிடையாது

இந்திரிலிகொடயில் பாலம்
திருத்த வேலைகள் காரணமாக
தெற்கு கரையோர ரயில் வீதியில்
களுத்துறை மற்றும் அளுத்கம ஆகிய
பகுதிகளுக்கு இடையில் டிசம்பர் 1ம்
திகதி காலை 9 மணி தொடக்கம் 2ம்
திகதி நண்பகல் 12 மணிவரை ரயில்
சேவை இடம்பெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

27 November 2012

விண்ணுக்கு ஏவப்பட்டது இலங்கையின்முதலாவது செயற்கைக்கோள்

இலங்கையின்
முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோளான
(செற்றலைட்) 'சுப்றீம்செற்',
இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.43
மணிக்கு விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்படது.
சீனாவின் சீசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்தே இந்த செயற்கைக்கோள்
ஏவப்பட்டதாக சுப்றீம்செட் நிறுவனம்
அறிவித்தது.
சுமார் 360 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவில் உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கைக்கோள், எதிர்வரும் 2013ஆம் ஆண்டு ஜுன்
மாதத்திற்குப் பின்னர் வர்த்தக
நடவடிக்கைகளுக்காகப்
பயன்படுத்தப்படவுள்ளது.
மேற்படி இச் செயற்கைக்கோள் கடந்த 22ஆம்
திகதி விண்ணுக்கு ஏவப்படவிருந்த நிலையில் சீரற்ற காலநிலையால் 5 நாட்கள்
தாமதமாகி இன்று விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த
செயற்கைக்கோளை கட்டுப்படுத்துவதற்கான
நிலையம் கண்டியில் அமைக்கப்படவுள்ளது.
வரலாற்றில் உலகில் சொந்தமாக தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்திருக்கு
ம் 45ஆவது நாடாக
இலங்கை இடம்பிடித்துள்ளதுடன்
தெற்காசியாவிலேயே இந்தியா,
பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக சொந்தமாக
தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை வைத்துள்ள மூன்றாவது நாடு என்ற பெருமையையும்
இலங்கை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 November 2012

அரபாத்தின் உடல் 27-ம் திகதி தோண்டி எடுக்கப்படவுள்ளது

பாலஸ்தீனத்தின் மறைந்த தலைவர் யாசீர்
அரபாத்தின் உடல் எதிர்வரும்
செவ்வாய்க்கிழமை தோண்டியெடுக்கப்படவுள்ளதாக
பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நஞ்சூட்டப்பட்ட நிலையிலா அவர் 2004-ம் ஆண்டில்
பிரான்ஸில் உயிரிழந்தார்
என்பதை ஆராய்வதற்காக அவரது உடலில்
பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இரத்தத்தில் காணப்பட்ட கோளாறு காரணமாக
அரபாத்துக்கு ஏற்பட்ட
பக்கவாதத்தினாலேயே அவர் உயிரிழந்ததாக
முன்னர் வெளியாகியிருந்த மருத்துவ
அறிக்கைகள் கூறின. ஆனால், ஆவணக்காட்சிப் படம் தயாரிக்கும்
நிறுவனமொன்றின் கீழ் பணியாற்றிய
சுவிட்ஸலாந்தைச் சேர்ந்த நிபுணர்கள்,
அரபாத்தின் உடலில் பொலோனியம்-210 என்ற
இரசாயனம் காணப்பட்டதாக தகவல்
வெளியிட்டதையடுத்து கடந்த ஆகஸ்டில் பிரான்ஸ் அதுபற்றிய
விசாரணைகளை ஆரம்பித்தது. மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவில்
அமைந்துள்ள அரபாத்தின் கல்லறைப் பகுதி இந்த
மாதம் தொடக்கத்திலிருந்து பொதுமக்கள்
சென்றுபார்க்க முடியாதபடி சீல்
வைக்கப்பட்டுள்ளன. கல்லறையிலிருந்து தோண்டியெடுக்கப்படும்
உடலில் இருந்து டிஎன்ஏ சாம்பிள்
மாதிரிகளை பிரான்ஸ், சுவிட்சர்லாந்து,
ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள்
தனித்தனியாக
எடுத்துச்சென்று ஆய்வுக்குட்படுத்துவார்கள் என்று பாலஸ்தீனத்தின் முன்னாள்
உளவுத்துறை தலைவர் தவ்பீக்
திராவி கூறினார். பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை 35 ஆண்டுகள்
வழிநடத்திய யாசீர் அரபாத் 1996-ம் ஆண்டில்
பாலஸ்தீன அதிகாரசபையின்
முதலாவது அதிபரானார். 2004-ம் ஆண்டில் அரபாத் மோசமாக
கவீனமுற்றிருந்தார். இரண்டு வாரங்களின்
பின்னர் பிரான்ஸின் இராணுவ
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர்
சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக
அறிவிக்கப்பட்டது. 2004-ம் ஆண்டில் நவம்பர் 11-ம்
திகதி உயிரிழக்கும்
போது அவருக்கு வயது 75.

நன்றி:BBC tamil

23 November 2012

காத்தான்குடியில் இஸ்ரேலுக்கு எதிராகஆர்ப்பாட்டம்

இஸ்ரேலுக்கு எதிராக காத்தான்குடியில்
ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை ஜும்
ஆ தொழுகையின் பினனர்; காத்தான்குடி நகர
சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரின்
ஏற்பாட்டில் இடம்பெற்றது. பலஸ்தீன - இஸ்ரேலுக்கு இடையில் இடம்;பெற்ற
போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள்
செறிந்து வாழும் பிரதேசமான
காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.

thanks:virakesari

21 November 2012

இஸ்ரேல் உளவாளிகள் காஸாவில் படுகொலை!

இஸ்ரேலுக்கு உளவாளிகளாகச் செயற்பட்ட 6 பேர்
காஸாவில் சுட்டுப்
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
காஸாவின் வடபகுதியிலுள்ள இடமொன்றில்
வைத்தே இவர்கள் சுடப்பட்டுள்ளனர். இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததுடன் ஹமாஸின்
முக்கிய உறுப்பினர்களின் இருப்பிடங்கள்
தொடர்பாகவும்
அறியத்தந்தமை தொடர்பிலேயே இவர்கள்
கொலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த 6 பேரும் அதி நவீன
சாதனங்களை உபயோகித்திருந்தமை கண்டு பிடிக்
கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் ஹமாஸ்
இலக்குகளை படமும் பிடித்துள்ளனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட 6 பேரில்
ஒருவரின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச் செல்லும்
புகைப்படமும் இணையத்தில்
வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Thanks;virakesri