தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

11 September 2014

பாகிஸ்தானில் வெள்ள நிலைமை மேலும் மோசமடைகிறது - video

Sep.10
பாகிஸ்தானில் வெள்ளப்பகுதியில் நீரில் அழுத்ததை குறைக்கவும்,
நகரப் பகுதிகளைக் காக்கவுமாக அங்குள்ள ஒரு கேந்திர
முக்கியத்துவம் மிக்க அணையை அதிகாரிகள்
உடைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்
தமது வீடுகளை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான வெள்ள நீர் இந்திய காஷ்மீர் பகுதியில் இருந்துதான்
பாகிஸ்தானுக்குள் புகுந்துள்ளது. இந்தியப் பகுதிகளில் தற்போது வெள்ளம் வடிந்து வருகின்றது. குடிபெயர்ந்து வேலை செய்யும் தொழிலாளர்களும், சுற்றுலாப்
பயணிகளும் வெளியேற முற்பட்டதால், ஸ்ரீநகர் விமான நிலையத்தில்
ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.



Source:-BBC

08 September 2014

சிறுவர்களின் கண் பார்வையை மங்க வைக்கும் கெரட்ரோகோனஸ் நோய்

புலனுறுப்புகளில் கண் மிகவும் பிரதான உறுப்பாக இருக்கின்ற­
மைக்கு காரணம் இந்த உலகை எமக்கு காட்சிப்படுத்துவது கண் என்­
பதால் தான். கண் இல்லாது விட்டால் வாழ்க்கையே இருண்டு போய்
விடும். அதிலும் ஏற்கனவே பார்வை இருந்த ஒருவர் பார்­
வையை இழந்து விட்டால் சொல்லவும் வேண்டுமா சிறுவர்களின்
பார்வையை மெல்ல பாதித்து குருடாக்கி விடக்கூடிய ஆபத்தான ஒரு நோய் தான்
கெரட்ரோகோனஸ் (keratoconus)நோயாகும். பெரிதாக வளரும் பிள்ளைகளில்
ஏற்படும் இந்த நோய் கண்ணின் மணி­
யாக கருவிழி மென்மையடைவதால் ஏற்படுகிறது. இதற்கான சரி­
யான காரணம் இனங்காணப்படாவிட்டாலும் இந்நோயை ஆரம்ப நிலையில்
இனங்கண்டால் குணப்படுத்த முடியும்.
நன்றாக படித்து கொண்டிருந்த சிறு பிள்ளைகள் படிப்பில் பின்­
தங்கி விடுவதற்கு இந்நோயினால் ஏற்படுகின்ற பார்வை குறை­ பாடு ஒரு
காரணமாகும். பார்வை குறைபாட்டிற்கு பல்வேறு கார­
ணங்கள் இருக்கின்றன.
கண் வில்லை(lens) இயல்புக்கு மாறான அளவில் இருக்கும்
போது அதன் குறைப்பாட்டை பரிசோதித்து அறிந்து அதற்கான தீர்வாக
பொருத்தமான மூக்கு கண்ணாடியை அணிவதை அறிவீர்கள்.
விம்பம் விழித்திரையில் சரியாக விழாத பட்சத்தில் பார்வை வில்­ லைகள்
மூலம் அதை விழித்திரையில் சரியாக வடிவமைத்து சீர் செய்­
யப்படுகின்றது. எனினும் இவ்வாறான குறைபாடு பெரும்பாலும்
40 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே ஏற்படுகிறது. சில வேளை­
களில் சிறுவர்களுக்கும் ஏற்படலாம். சிறுவர்களை பொறுத்த­
வரை விட்டமின் A குறைபாட்டினால் ஏற்படும் கெரரோ மலே­
சியா (Kerato malesia) பார்வையை பாதிக்கக்கூடியது என்பதை அறிந்திருப்பீர்கள். ஒருவ­
ரது உணவில் போதியளவு விட்டமின் A கிடைக்காத பட்சத்தில்
கண்ணின் முன்புறமாக உள்ள வெண்விழி (Conjuntiva) கரு­
விழி (Cornia) என்பன பாதிப்புக்குள்ளாகி பார்வை குறை­
பாடு ஏற்படுகின்றது. விட்டமின் A நிறைந்த மீணெண்னை, கரட், மீன்
முதலான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இக்குறைபாடு ஏற்படு­ வதை தவிர்க்க முடியும்.
ஏற்கனவே குறைபாடு இனங்காணப்பட்டுள்ளவர்களில் விட்டமின் A
மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளில்
இக்குறைபாடு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு சிறுவர் கிளினிக்கில்
செறிவான விட்டமின் A மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.
கண்களில் ஏற்படும் காயங்கள், தொற்றுக்கள் என்பவற்றாலும் கண் பார்வை
பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உண்டு. கண்களில் நோய் ஏற்­
படும்போது கட்டாயம் உங்கள் வைத்தியரிடம் ஆலோசனை பெறுங்கள்.
ஆரம்பத்தில் குறிப்பிட்ட கெரட்ரோகோனஸ் நோய் பற்றி பார்ப்போம்.
படிக்கும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும்
திடீரென்று ஏதோ பார்வைக் கோளாறு என்று வைத்தியரிடம் கூட்டிக்­
கொண்டு வருவார்கள். இவ்வாறான சிறுவர்களை கண் வைத்திய நிபுணர்
பரிசோதிக்கும் போது சிலருக்கு இந்நோய் இருப்பது கண்டு பிடிக்­
கப்படுகின்றது. இவர்களின் கருவிழிகளின் வடிவம் அசாதாரணமாக
இருப்பதன் மூலம் தான் இந்நோய் கண்டுபிடிக்கப்படுகின்றது. பிறப்­
பிலேயே பலமில்லாத கருவிழிகள் உள்ள குழந்தைக்கே இந்நிலை ஏற்ப­
டுகிறது.
இவ்வாறான குழந்தைகள் வளரும் போது கருவிழிகளின் வடிவ­ மைப்பு
மாறுபடுகிறது. இதனால் பார்க்கும் பொருள் கடும் வெளிச்­
சமாகவும் சரியான விம்பத்தை பெறமுடியாமலும் இருக்கும்.
இது மெதுமெதுவாக ஏற்படுவதால் ஆரம்பத்தில் இதை அலட்சியப்ப­
டுத்தி விடுவார்கள்.
கண்களில் அரிப்பாகவும் சிவப்பு நிறமாகவும் இருக்கும். இவ்வா­
றான நிலை ஏற்பட்டவர்கள் கண்களைப் போட்டு கசக்கக் கூடாது. கண்ணில் வேறெந்த
நோய்தொற்று, அலர்ஜி என்பன ஏற்படும்போது கூட கசக்கக்
கூடாது. சுத்தமான தண்ணீர் கொண்டு கழுவலாம்.
கண் வைத்தியர் ரோபோ கிறாபி (tobo graphy) பரிசோதனை மூலம்
உங்கள் கண்களில் கெரட்ரோகோனஸ் இருப்பதை உறுதிசெய்வார்.
இந்நோயினால் கருவிழிகளின் வடிவம் மாறியிருப்பதை துல்லிய­
மாக கண்டறிய முடியும். இன்னும் சில பரிசோதனைகள் மூலம் நோயின் பாதிப்பின்
அளவை சரியாகக் கண்டறிந்து இதற்கு ஏற்ற­
வாறு சிகிச்சை அளித்திட முடியும்.
நவீன கருவிகள் மூலமும் உபகரணங்கள் மூலமும் நனோ தொழில்நுட்­
பத்தை பயன்படுத்தியும் கருவிழியை முப்பரிமாணத்தில் (Three
diamension) பார்த்து பாதிப்பின் அளவை துல்லியமாக
கணிக்கும் வழி முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனால் மிக ஆரம்ப
நிலையிலேயே நோயை இனங்காண முடியும்.
நோய் தீவிரமடையும் முன்னர் ஆரம்ப காலத்தில் கண்டுபி­
டித்து விட்டால் சிகிச்சையளிப்பது சுலபம். கண் வைத்தியரின்
தொடர் கண்காணிப்பில் (கிளினிக்) இடையிடையே கண்ணாடியை மாற்ற
வேண்டியிருக்கும். பாதிப்பு சற்று அதிகமாக இருப்பின்
contect lens பாவிக்கப்படுகிறது. பிரத்தியேக ஒளியைச் செலுத்தியும்
சீர்செய்யும் முறையுண்டு. ஆனால் கோணியா மிக மோச­
மாக பாதிப்படைந்திருப்பின் பார்வை மிக மோசமடைவதுடன் முன்கு­
றிப்பிட்ட சிகிச்சைகள் பலனளிக்காது.
இவர்களில் விழித்திரை மாற்று (Corneal Tranplantasion)
சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும். இதற்கு தானமாக
கண்களைப் பெற்றே சிகிச்சையளிக்க முடியும். உயிருடன் இருக்கும் ஒருவர்
தனது கண்களை தானமாக, தான் இறந்ததும் வழங்க
ஏற்பாடு செய்ய முடியும்.குறிப்பிட்ட சில மணிகளுக்குள்
இறந்தவரின் கண்களைப் பெற்று பாதுகாத்து இன்னொருவரின்
கண்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியும்.
டாக்டர் ச.முருகானந்தன்


Source:-virakesari

நிகாராகுவா தலைநகரை தாக்கிய விண்கல்: 39 அடி பள்ளத்தை ஏற்படுத்தியது

லத்தீன் அமெரிக்காவில் உள்ள நிகராகுவா நாட்டின்,மனாகுவா என்ற தலைநகரில்.
விண்கல்ஒன்று 2014 செப்டம்பர் 7 ஞாயிறு அன்று தாக்கியது. இதனால்
39 அடிப் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
விண்கல் விழுந்த இடம் வனப் பகுதி என்பதால் யாருக்கும் எந்தக்
காயமும் ஏற்படவில்லை.விண்கல்விழுந்த அதிர்வு, மனாகுவா முழுவதும்
உணரப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் நிலநடுக்கத்தை அளவிடும் கருவிகளிலும்
இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விண்கல் விழுந்த போது ஏற்பட்ட அதிர்வால், அருகில் இருந்த விமான
நிலையத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

07 September 2014

அநீதியை விட்டும் விலகிக்கொள்ளுங்கள்! புகாரி நபிமொழித் தொகுப்பிலிருந்து சில..

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான்.
அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரின் அநீதிக்கு
ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு
செய்வதில் ஈடுபட்டிருக்கிறவரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும்
ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றவரைவிட்டு
அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒன்றை நீக்குகிறான். ஒரு
முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும்
மறைக்கிறான். (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக
இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும்
அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள். மக்கள், "இறைத்தூதர் அவர்களே!
அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு
நாங்கள் எப்படி உதவுவோம்?" என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், "அவனுடைய
கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே,
நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள் என்பதாக அனஸ்(ரலி)
அவர்கள் அறிவிக்கிறார்கள். அநீதி, மறுமை நாளில் பல இருள்களாகக் காட்சி
தரும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி)
அறிவிக்கிறார்கள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால்
அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு
உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள்.
ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" என்று
நபி(ஸல்) அவர்கள் முஆத்(ரலி) யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி
வைத்தபோது கூறினார்கள் என்பதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள், ஒருவர், தன் சகோதரனுக்கு அவனுடைய மானத்திலோ, வேறு
(பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ, இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம்
காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே
மன்னிப்புப் பெறட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ)
பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால்
(மன்னிப்புப் பெறட்டும்). (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல்
ஏதும் இருக்குமாயின் அவனுடைய அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக்
கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும்.
அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரின் தோழரின்
(அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு
அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள்
கூறியதாக, ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், பிறரின்
நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில்
மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக
அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், அல்லாஹ்விடம் மிகவும்
வெறுப்புக்குரியவன் யாரென்றால், மனிதர்களிலேயே கடுமையாக (எப்போது
பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான். உம்மு ஸலமா(ரலி)
அறிவிக்கிறார்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்கள், தம் அறையின் வாசலுக்கருகே
(சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம்
சென்று, "நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகிறார்கள்.
உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம்.
அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத்
தீர்ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக்
கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பளிக்கிறேனோ (அவருக்கு)
அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக்
கொள்ளட்டும் அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்)விட்டு விடட்டும்" என்று
கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக, அப்துல்லாஹ் இப்னு
அம்ர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நான்கு குணங்கள் எவனிடத்தில்
உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம்
அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதை விட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின்
ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்)
அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம்
செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான்.

Thanks:islamkalvi

05 September 2014

காட்டு ராஜாக்களை ஓட வைத்த கீரி (video)

சிங்கங்களுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற கீரியின் அதிசய காணொளியொன்று வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் கென்னியாவின் மாஸாய் மாரா சரணாலயத்தில் இடம் பெற்றுள்ளது.
இரண்டு அடி உயரமான கீரி காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களுடன் சண்டையிட்டு பின்னர் அந்த சிங்களை விரட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த காணொளி 2011 ஆம் ஆண்டு ஜெரோம் எனும் புகைப்படபிடிப்பாளரால் படம்பிடிக்கப்பட்ட போதும் தற்போதுதான் வெளியிட்டுள்ளார்.

Thanks:newsfirst