தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

05 October 2013

களுத்துறை முஸ்லிம் பாலிக்கா வித்தியாலயம்,மாவட்டத்தில் சாதனை படைத்தது

வெளியாகியுள்ள 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின்
அடிப்படையில் களுத்துறை முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயத்தில் 7
மாணவிகள் சித்தியடைந்துள்ளனர்

1. Aiman Fais 187 (District wise 1st)

2. Hafsa Fousul Careem 185 (District wise 2nd)

3. Rasla Rasool 170

4. Zainab Fayas 167

5. Ashfa Ali 161

6. Fathima Nifal 160

7. Nafra Niswan 157

Thanks:jaffna muslim

03 October 2013

பன்றி இறைச்சி இல்லாத பேக்கன், மது இல்லாத ஷாம்பெய்ன்: லண்டன் ஹலால் உணவுத் திருவிழா

இலங்கையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும்
ஹலால் உணவுக்கு அண்மையில்
எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால் ஐக்கிய
ராஜ்ஜியத்திலோ முதல்முறையாக ஹலால் உணவுத்
திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில்
அரங்கேறியது. "ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில்
நடக்கும் உணவுத் திருவிழாவின்
இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த
திருவிழாவின் நோக்கம்
பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார். "நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால்
உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும்
உரிமை இல்லை என்று சொன்னால்
எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள்
ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின்
நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட
முடியாது என்று சொல்வதும் இருக்கிறது.
முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான
இடங்களில் சென்று சாப்பிட
உரிமை இருக்கிறது. அவர்களுக்கென சில
ஹலால் உணவுகளையும் அவ்விடுதிகள் பரிமாறுவது அவசியம்," என அவர்
வாதிட்டார். ஐக்கிய ராஜ்ஜியத்தில் மொத்தம் கிட்டத்தட்ட
முப்பது லட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றனர். நல்ல வேலையில் உள்ளவர்களாகவும், நல்ல
வருவாய் ஈட்டுபவர்களாகவும் பிரிட்டனின்
இரண்டாம் தலைமுறை முஸ்லிம்கள் குடியேறிகள்
பலர் உருவாகியிருக்கின்றனர். பிரிட்டனின் முஸ்லிம் மக்களுடைய வாழ்க்கைத்
தரம் உயர்ந்துவருகின்ற சூழலில்
அவர்களுக்குரிய
உணவுகளை தயாரித்து வழங்குவதில் வியாபார
நலன் இருப்பதை பிரிட்டிஷ்
உணவு நிறுவனங்களும், மேட்டுக்குடி மக்களுக்கான
உணவு விடுதிகளும் உணர்ந்துள்ளன
என்பதை பறைசாற்றுவதாக இந்த
நிகழ்வு அமைந்திருந்தது. ஹலால் என்றால் என்ன? ஹலால் என்பது
முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தினால்
அனுமதிக்கப்பட்ட விஷயங்களைக் குறிக்கிறது. உணவு என்று வரும்போது, ஆரோக்கியமாகவும்
உயிரோடு இருக்கும்
விலங்குகளை மட்டுமே அறுக்க வேண்டும்,
விலங்கின் குரல்வளையை ஒரே வெட்டில் வேகமாக
அறுத்து, அதனுடைய எல்லா ரத்தத்தையும்
முழுமையாக வடியவிட வேண்டும் என்றுள்ளது. பன்றி இறைச்சியை சாப்பிடக்கூடாது,
மது கலந்திருக்கக்கூடாது போன்ற
நிபந்தனைகளும் உண்டு. ஐரோப்பா, அமெரிக்கா போன்ற இடங்களில்,
உணவுக்காக விலங்குகளைக் கொல்லும்போது,
அது அறவே வலியை உணராமல் இருக்கவேண்டும்
என்பதற்காக
அதனை உணர்விழக்கச்செய்து பின்னர் கொல்ல
வேண்டும் என்ற விதி உள்ளது. தலையில் இரும்பு குட்டி ஒன்றை சட்டென
அடித்தோ, மின்சாரத்தை பாய்ச்சியோ,
சுயநினைவு இழக்கச்செய்கிற
மருந்து கொடுத்தோ விலங்கை உணர்விழக்கச்
செய்யும் வழிமுறைகள் கையாளப்படுகின்றன. ஆனால் முஸ்லிம் சமூகத்தாருக்கும், யூத
சமூகத்தாருக்கும் மதக்
காரணங்களை முன்னிட்டு இந்த விதியில்
இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஹலால் முறையில் சுயநினைவோடு இருக்கும்
விலங்கைக் கொல்வதில் மிருகச்
சித்ரவதை அடங்கியிருக்கிறது என
மேற்குலகில் பலர் கருதுகின்றனர். ஆனால் ஹலால் முறையில் விலங்குகளைக்
கொல்வதில் சித்ரவதை இல்லை என உணவுத்
திருவிழாவின் தோற்றுநர் இம்ரான் கவுசர்
வாதிடுகிறார். "கூரான கத்தியால் கழுத்தை ஒரே வெட்டில்
அறுக்க வேண்டும் என்பதேகூட
விலங்குக்கு வலியைக் குறைக்க வேண்டும் என்ற
நோக்கில்தான்," என்கிறார் அவர். உணர்விழக்கச் செய்து அறுத்தால் ஹலாலா?
இன்று ஐக்கிய ராஜ்ஜியத்தில் சந்தையில்
கிடைக்கும் ஹலால் இறைச்சியில் 80
சதவீதத்துக்கும்
அதிகமானவை முன்கூட்டியே உணர்விழக்கச்
செய்து பின்னர் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட
விலங்குகள்தான். விலங்கை உணர்விழக்கச் செய்து பின்னர் ஹலால்
முறையில் அறுத்தாலும் அது ஹலால்
ஆகுமா என்ற
வேறு ஒரு கருத்தொற்றுமை இல்லாத
விவகாரமும் இதில் உள்ளது. இந்த ஹலால் உணவுத் திருவிழாவுக்கு சில
எதிர்ப்புகளும் எழாமல் இல்லை. ஆனால்
தற்போது லண்டன் வாழ் மக்களில் பத்தில் ஒருவர்
முஸ்லிம் என்பதை சுட்டிக்காட்டி மாநகரின்
மேயர் போரிஸ் ஜான்சன் இந்த
நிகழ்ச்சிக்கு ஆதரவு நல்கியிருந்தார்.


source:bbctamil

02 October 2013

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க

நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள
RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற
முடியாது. RAM இன் விலை காரணமாக
அதை சிலர் வாங்காமல் இருப்போம்.
மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக
பயன்படுத்தலாம்வாங்க. பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும். My Computer
மீது Right Click செய்யவும். இப்போது Properties என்பதை செலக்ட்
செய்யவும். இப்போது அதில் Advanced Option/ Advanced
settings செல்லவும். இப்போது வரும் Pop- up விண்டோவில்
Performance என்பதில் Settings ஐ கிளிக்
செய்யவும். இப்போது வரும் புதிய pop-up விண்டோவில்
Advanced என்பதை செலக்ட் செய்யவும். இப்போது Change என்பதை தெரிவு
செய்யவும். இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள
பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு,
கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென்
ட்ரைவை தெரிவு செய்யவும். இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப
அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும். இப்போது இதனை save செய்யவும்.
கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

Source:karpom .com/2011/04/ram.html

01 October 2013

துருக்கியில் ஹிஜாப் தடை நீக்கம்

துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்டொகனின் புதிய அரசியல் சீர்திருத்த
திட்டத்தின் கீழ் அந்நாட்டு அரச நிறுவனங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய
விதிக்கப்பட்டிருக்கும் தடை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது. "பொது
நிறுவனங்களில் ஹிஜாப் தடையை அகற்றுகிறோம்" என்று பிரதமர் அறிவித்தார்.
அதேபோன்று புதிய சீர்திருத்த திட்டத்தில் நாட்டின் குர்த்கள் மற்றும்
ஏனைய சிறுபான்மையினருக்கு மேலும் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில்
குர்திஷ் ஆதரவு மற்றும் சிறு கட்சிகளுக்கு பாராளுமன்றத்திற்கு நுழைய
இருந்த தடை விலக்கிக் கொள்ளப்படவுள்ளதோடு தனியார் பாடசாலைகளில் குர்திஷ்
மொழி கல்விக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த தருணம் என்று நேற்று புதிய அரசியல் சீர்திருத்தத்தை அறிவித்த
எர்டொகன் கூறினார். "துருக்கி நகரங்களுக்கு மீண்டும் குர்திஷ் பெயர்
வைக்கப்படும். குர்திஷ் எழுத்துக்கான தடை விலக்கிக் கொள்ளப்படும்" என்று
எர்டொகன் குறிப்பிட்டார். துருக்கியில் தடை செய்யப்பட்ட குர்திஷ்
தொழிலாளர் கட்சியுடனான அரசின் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாகவே
இந்த சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் அரச சேவையில்
இருக்கும் பெண்களுக்கு நடைமுறையில் இருந்த உடை கட்டுப்பாடு
விலக்கிக்கொள்ள எர்டொகனின் அரசியல் சீர்திருத்தத் திட்டத்தில் அறிவிக்கப்
பட்டுள்ளது. இதன்மூலம் பெண்களுக்கு ஹிஜாப் அணிய அனுமதியளிக்கப்படுகிறது.
அதேபோன்று ஆண்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம்
அரச சேவையில் இருக்கும் ஆண்களுக்கு தாடி வைக்க அனுமதி வழங்கப்படுகிறது.
மதச்சார்பற்ற துருக்கியில் இஸ்லாமிய பின்னணியுடன் ஆட்சிக்கு வந்த பிரதமர்
எர்டொகன் அரசு, நாட்டின் ஹிஜாப் தடையை விலக்க நீண்ட காலமாக போராடி வந்தமை
குறிப்பிடத்தக்கது.

நன்றி:தினகரன்

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது;198 புள்ளிகளைப் பெற்று காலி மஹிந்த கல்லூரி மாணவன் முன்னிலை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
தற்போது வெளியாகியுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள் www.doenets.lk என்ற
இணையதளத்திற்கூடாக பார்வையிட முடியும்.
வெளிவந்துள்ள 5ம் தர புலமைப் பரிசில்
பரீட்சை பெறுபேறுகளின் படி 198 புள்ளிகளைப்
பெற்று காலி மஹிந்த கல்லூரியின் மாணவன்
சந்தரு தத்சரா பலஹேவா அகில
இலங்கை ரீதியில் அதிக புள்ளிகள் பெற்ற
மாணவராக முன்னிலையில் இருப்பதாக இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.


Source:adaderana