தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

11 October 2012

ஐந்தில் திருந்து: இல்லையேல் ஐம்பதில் வருந்து

'ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது' என்பார்கள். 'ஐந்தில் திருந்து இல்லையேல் ஐப்பதில் வருந்து என்கிறது புதிய ஆ ¡ய்ச்சி ஒன்று. குழந்தையாக இருக்கும் போது ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஏற்படாவிட்டால் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் பல்வேறு விதமான புற்று நோய் வரும் வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது என்கிறது அந்த ஆராய்ச்சி. குழந்தை ஆசையாகக் கேட்கிறதே.
அடம்பிடிக்கிறதே என்பதற்காகத் தேவையற்ற நொறுக்குத் தீனிகளையும் 'ஸ்பாஸ்ற் பூட்' வகைகளையும் வாங்கித் தரும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்குள் புற்றுநோய் நுழைவதற்கான கதவையும் கூடவே திறக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இங்கிலாந்தில் மட்டும் சுமார் 17 வீதம் குழந்தைகள் மித மிஞ்சிய எடையுடன் இருப்பதாக சமீபத்திய புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. இப்படி அதிக
எடையுடன் இருப்பது பிற்காலத்தில் சிறு நீரகம், கல்லீரல், மார்பு, புரோஸ்டேட், உணவுக்குழாய் என பல்வேறு இடங்களில் புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. இதைத் தவிர நீரிழிவு இதய நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்பும் வெகுவாக அதிகரித்து விடுகிறது. குழந்தைகளாய் இருக்கும் போது சரியான உணவுப் பழக்கத்துக்குள் வராவிடில் இளைஞர்களானபின் அவர்களால் ஆரோக்கிய
நிலைக்கு வர முடியாமல் போய்விடும் என எச்சரிக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் பிரிட்சார்ட் ஜோன்ஸ். உடல் எடை அதிகரிப்பதால் வரும் புற்றுநோய் வருடம் தோறும் தனது வீதத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது என்பது கவலைக்குரிய ஒன்றாகும். வியிற்றுப் பகுதிகளில் அதிகமாய் சேரும் கொழும்பு மார்பகப் புற்று நோய், புரோஸ்டேட் புற்று நோய் போன்றவற்றுக்குக் காரணமாகி
விடுகிறது. சைட்டோகினஸ் எனும் நமது உடலிலுள்ள பொருள் புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. அதன் அளவை அதிகப்படியான கொழும்பு குறைத்துவிடுகிறது. எனவே புற்றுநோய்க்கு எதிரான போராட்டம் வலுவிழந்து உடல் நோயில் விழுகிறது.
Thanks:thinakaran

02 October 2012

அல் - ஹஸனியா சிறுவர்தின கொண்டாட்டம்



 அல் - ஹஸனியா மகாவித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற
(01.10.2012)சிறுவர்தின கொண்டாட்டத்தில் ஒரு நிகழ்வு food fiesta

ஹஜ்ஜின் சிறப்புகள்

எம். ஷம்சுல்லுஹா

அமல்களில் சிறந்தது

"செயல்களில் சிறந்தது எது?" என நபி (ஸல்)
அவர்களிடம் கேட்கப்பட்டது. "அல்லாஹ்வையும்
அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது"
என்றார்கள். "பின்னர் எது?"
என்று கேட்கப்பட்டது. "அல்லாஹ்வின் பாதையில்
போர் புரிவது" என்றார்கள். "பின்னர் எது?" என்று கேட்கப்பட்டது. "ஏற்றுக் கொள்ளப்படும்
ஹஜ்" என்றார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 26