اَفَحَسِبْتُمْ اَنَّمَا خَلَقْنٰكُمْ عَبَثًا وَّاَنَّكُمْ اِلَيْنَا لَا تُرْجَعُوْنَ
நாம் உங்களை படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடம் கொண்டு வரப்படமாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தீர்களா?" (என்று கேட்பான்.)
(அல்குர்ஆன் : 23:115)
1) அல்லாஹ் எங்களைப்படைத்த நோக்கம்.
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ
ஜின்களையும், மனிதர்களையும் (எனக்கு வழிப்பட்டு) என்னை வணங்குவதற்கன்றி (வேறெதற்காகவும்) நான் படைக்க வில்லை.
(அல்குர்ஆன் : 51:56)
2) வாழ்கை மற்றும் மரணம்
தரப்பட்டுள்ள நோக்கம்.
اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيْزُ الْغَفُوْرُۙ
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கை யையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன்.
(அல்குர்ஆன் : 67:2)
¶ காலத்துக்குக் காலம் அமல்களால் நாம் சிறந்தவர்களாக மாற ரஹ்மான் பல சந்தர்ப்பங்களை எமக்குத் தருகின்றான்.
(இரவு நேரங்கள், ஜும்ஆ நாட்கள் , துல் ஹஜ் முதல் பத்து, அரபா தினம் , ரமழான் லைலதுல் கத்ர் இரவு.)
3) அல்லாஹ் சொல்கிறான்.
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةِ الْقَدْرِ
நிச்சயமாக நாம் இந்தக் குர்ஆனை (மிக்க கண்ணியமுள்ள) லைலத்துல் கத்ர் என்னும் ஓர் இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.
(அல்குர்ஆன் : 97:1)
وَمَاۤ اَدْرٰٮكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
(நபியே!) அந்தக் கண்ணியமுள்ள இரவின் மகிமையை நீங்கள் அறிவீர்களா?
(அல்குர்ஆன் : 97:2)
لَيْلَةُ الْقَدْرِ ۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍ
கண்ணியமுள்ள அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிட மிக்க மேலானதாகும்.
(அல்குர்ஆன் : 97:3)
تَنَزَّلُ الْمَلٰٓٮِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْ مِّنْ كُلِّ اَمْرٍ ۛۙ
அதில் மலக்குகளும், ஜிப்ரயீலும், தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) எல்லா காரியங்களுடன் இறங்குகின்றனர்.
(அல்குர்ஆன் : 97:4)
سَلٰمٌ ۛهِىَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ
ஈடேற்றம் உண்டாகுக! (அவ்விரவின் இச்சிறப்பு) விடியற்காலை உதயமாகும் வரை (நீடிக்கிறது).
¶சூரதுத் துஹானின் ஆரம்ப வசனங்களில் அல்லாஹ் சொல்கிறான்.
حٰمٓ ۛ
ஹா மீம்.
(அல்குர்ஆன் : 44:1)
وَالْكِتٰبِ الْمُبِيْنِ ۛۙ
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக!
(அல்குர்ஆன் : 44:2)
اِنَّاۤ اَنْزَلْنٰهُ فِىْ لَيْلَةٍ مُّبٰـرَكَةٍ اِنَّا كُنَّا مُنْذِرِيْنَ
நிச்சயமாக இதை மிக்க பாக்கியமுள்ள (‘லைலத்துல் கத்ரு' என்ற) ஓர் இரவில் (முதல் முறையாக) இறக்கிவைத்தோம். நிச்சயமாக நாம் (இதன் மூலம்) அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறோம்.
(அல்குர்ஆன் : 44:3)
فِيْهَا يُفْرَقُ كُلُّ اَمْرٍ حَكِيْمٍۙ
உறுதியான எல்லா காரியங்களும் அதில்தான் நம் கட்டளையின்படி (தீர்மானிக்கப்பட்டு) பிரித்துக் கொடுக்கப்படுகின்றன.
(அல்குர்ஆன் : 44:4)
4) லைலதுல் கத்ரைப் பற்றி நபிகளார் சொன்ன செய்தி
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ :
أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ،
பறக்கத் பொறுந்திய ரமழான் மாதம் உங்களிடம் வந்து விட்டது.
فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ،
அதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கியுள்ளான்.
تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ،
அதிலே வானத்தில் வாயல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாயல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விளங்கிடப்படுகின்றனர்.
لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ
அல்லாஹ்விடம் இந்த மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவாகும்
مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
யார் அந்த இரவின் பாக்கியத்தைப் பெறவில்லையோ அவன் ஒட்டு மொத்த பாக்கியத்தையும் இழந்தவனாவான்.
رواه أحمد (9213)، والنسائي (2106) وصححه الألباني في "صحيح النسائي" (1992)
¶இந்த இரவை அடைந்து கொள்வது ஒவ்வொருவரினதும் இலக்காக இருக்க வேண்டும்.
¶ ஏன் தெரியுமா இந்த உலகில் நாம் வாழப்போகும் காலம் 60 - 70 - மிஞ்சிப்போனால் 100 வருடம்.
¶ எமக்கு முன் வாழ்ந்த சமூகத்தார்கள் பல நூரு வருடங்கள் வாழ்ந்தவர்கள்.
¶ எமக்கு ஆயுள் குறைக்கப்பட்டு நன்மைகளில் அவர்களை முந்திச் செல்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது இதை நாம் தவற விட்டுவிடக்கூடாது. ஒரு லைலதுல் கத்ர் எமக்கு கிடைத்தால் 83 வருடங்களுக்கு மேல் நாம் நன்மை செய்த பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
¶உதாரணமாக லைலதுல் கத்ர் இரவில் ஒரு சுப்ஹானல்லாஹ் சொல்லப் பாக்கியம் கிடைப்பதென்பது 1000 மாதங்களுக்கு மேலாக சுப்ஹானல்லாஹ் சொன்ன நன்மையைப் பெற்றுத்தரும். முழு இரவையும் பயன்படுத்தினால் எத்துணை சிறப்புக்களை நாம் பெறலாம்.?
5) லைலதுல் கத்ரை அடைந்து கொள்ள நபிகளார் செய்த முயற்சி
அப்போத அபூ ஸயீத்(ரலி)
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து 'நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலை) வந்து, 'நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)' என்றார்கள்.
ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள்.
'யார் நபியுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது.
நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்) வர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது' என்று குறிப்பிட்டார்கள்.
ஸஹீஹ் புகாரி : 813.
அத்தியாயம் : 10. பாங்கு
¶ முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபிகளார் லைலதுல் கத்ரை அடைந்து கொள்ள ஒரு மாதகாலம் முயற்சி செய்துள்ளார்கள். நபித்தோழர்களும் சலிப்படையாது முயற்சி செய்தார்கள்.
*6) லைலதுல் கத்ர் எந்த இரவில் வரும்.?*
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!’
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புஹாரீ2017
¶ லைலதுல் கத்ர் ரமழானின் 27 ல் தான் என்ற நம்பிக்கை தவறாகும். லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.
*7) இறுதிப்பத்தில் நபி ஸல் அவர்கள்.*
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ وَجَدَّ وَشَدَّ الْمِئْزَر رواه البخاري (2024)، ومسلم (1174)
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!'
ஸஹீஹ் புகாரி : 2024.
ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!'
ஸஹீஹ் புகாரி : 2026
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வணக்க வழிபாடுகளில்) மற்ற நாட்களில் காட்டாத (அதிக) ஈடுபாட்டை, (ரமளானின்) இறுதிப்பத்து நாட்களில் காட்டுவார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
ஸஹீஹ் முஸ்லிம் : 2185.
அத்தியாயம் : 14. இஃதிகாஃப்
¶ எங்களுடைய கடைசிப்பத்து எப்படி கழிகின்றது.
8) நபிகளாரின் வாழ்கையில் இரவு நேரம்.
¶ரமழானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது.?” என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமழானிலும் ரமழான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
“அல்லாஹ்வின் தூதரே! வித்ருத் தொழுவதற்கு முன் நீங்கள் உறங்குவீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஆயிஷா! என் கண்கள் தாம் உறங்குகின்றன.; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)
நூல்கள்: புகாரீ 1147
சுவனமே கூலி
“ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்ஸலாம் (ரலி)
நூல் : திர்மிதீ 2409
9 ) ரமழானில் இரவுத் தொழுகை
“யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமழான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 37
9) லைலதுல் கத்ரில் இரவுத்தொழுகை.
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ رواه البخاري (1901)، ومسلم (759)
யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும்.” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி
10) கடைசிப்பத்து நாட்களில் இரவுத் தொழுகை.
ரமழானில் இறுதிப்பத்து இரவுகளில் ஒற்றைப்படையிரவில் சில நாட்கள் நபி ஸல் அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடாத்தியுள்ளார்கள்.
سنن النسائي
1606 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ، قَالَ: أَخْبَرَنِي مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي نُعَيْمُ بْنُ زِيَادٍ أَبُو طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، عَلَى مِنْبَرِ حِمْصَ يَقُولُ: «قُمْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَهْرِ رَمَضَانَ لَيْلَةَ ثَلَاثٍ وَعِشْرِينَ إِلَى ثُلُثِ اللَّيْلِ الْأَوَّلِ، ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ خَمْسٍ وَعِشْرِينَ إِلَى نِصْفِ اللَّيْلِ، ثُمَّ قُمْنَا مَعَهُ لَيْلَةَ سَبْعٍ وَعِشْرِينَ حَتَّى ظَنَنَّا أَنْ لَا نُدْرِكَ الْفَلَاحَ»، وَكَانُوا يُسَمُّونَهُ السُّحُورَ
நாங்கள் ரமளான் மாதத்தின் இருபத்தி மூன்றாம் இரவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஐந்தாம் இரவில் இரவில் பாதி வரை தொழுதோம். பின்னர் இருபத்தி ஏழாம் இரவில் சஹர் உணவு தவறிவிடும் என்று நினைக்கும் அளவுக்குத் தொழுதோம்.
அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)
நூல்: நஸாயீ
அபீ தர் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நாங்கள் ரமளானில் நபிகளார் (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றிருந்தோம். ரமழானின் ஏழு நாள்கள் மீதமிருக்கும் வரை அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடாத்த வில்லை. ரமழானின் 23 நபி ஸல் அவர்கள் இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை எங்களுக்குத் தொழுகை நடாத்தினார்கள். பின்பு இருபத்தி நான்கு மக்கள் நபிகளாரை எதிர்பார்த்தார்கள் அவர்கள் தொழுகை நடாத்த வர வில்லை. பின்பு இருபத்தி ஐந்தாம் இரவில் மீண்டும் நபி (ஸல்) அவர்கள் இரவின் பாதி நேரம் வரை எங்களுக்குத் தொழுகை நடாத்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே எஞ்சியிருக்கக்கூடிய பகுதியிலும் நாங்கள் இத்தொழுகையை தொழுதிருக்கலாமே என கேட்க்கப்பட்ட போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள் " நிச்சியமாக ஒரு மனிதர் இரவுத் தொழுகையை இமாமுடன் இறுதிவரை தொழுதால் இரவு முழுவதும் நின்று வணங்கிய கூலி அவருக்குக் கிடைக்கும்" என்று கூறினார்கள். பின்பு இருபத்தி ஆறு நபி ஸல் அவர்களை மக்கள் எதிர்பார்த்தார்கள் அவர்கள் தொழுகை நடாத்த வர வில்லை, பின்பு இருபத்தி ஏழு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் தொழுகைக்காக ஒன்று கூடினார்கள் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு ஸஹர் உணவு தப்பி விடுமோ என நாம் அஞ்சுகின்ற அளவு நீளமாக தொழுகை நடாத்தினார்கள். பின்பு இருபத்தி எட்டு, இருபத்தி ஒன்பது நபிகளாரை மக்கள் தொழுகைக்காக எதிர்பார்த்தார்கள் நபி ஸல் அவர்கள் தொழுகை நடாத்த வர வில்லை
(سنن النسائي1364)
صحيح البخاري
2012 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، أَخْبَرَتْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ لَيْلَةً مِنْ جَوْفِ اللَّيْلِ، فَصَلَّى فِي المَسْجِدِ، وَصَلَّى رِجَالٌ بِصَلاَتِهِ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَاجْتَمَعَ أَكْثَرُ مِنْهُمْ فَصَلَّى فَصَلَّوْا مَعَهُ، فَأَصْبَحَ النَّاسُ فَتَحَدَّثُوا، فَكَثُرَ أَهْلُ المَسْجِدِ مِنَ اللَّيْلَةِ الثَّالِثَةِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَصَلَّى فَصَلَّوْا بِصَلاَتِهِ، فَلَمَّا كَانَتِ اللَّيْلَةُ الرَّابِعَةُ عَجَزَ المَسْجِدُ عَنْ أَهْلِهِ، حَتَّى خَرَجَ لِصَلاَةِ الصُّبْحِ، فَلَمَّا قَضَى الفَجْرَ أَقْبَلَ عَلَى النَّاسِ، فَتَشَهَّدَ، ثُمَّ قَالَ: «أَمَّا بَعْدُ، فَإِنَّهُ لَمْ يَخْفَ عَلَيَّ مَكَانُكُمْ، وَلَكِنِّي خَشِيتُ أَنْ تُفْتَرَضَ عَلَيْكُمْ، فَتَعْجِزُوا عَنْهَا»، فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالأَمْرُ عَلَى ذَلِكَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் இரவின் நடுப் பகுதியில் (வீட்டை விட்டு) வெளியேறி பள்ளிவாசலில் தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி சிலர் தொழுதனர். விடிந்ததும் மக்கள் இது பற்றி பேசிக் கொண்டனர். (இதன் காரணமாக மறு நாள்) மக்கள் மேலும் அதிகரித்து நபிகள் நாயகத்தைப் பின்பற்றித் தொழுதனர். விடிந்ததும் மக்கள் (இது பற்றி) பேசிக் கொண்டனர். மூன்றாம் இரவில் இன்னும் அதிகமாக மக்கள் திரண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து தொழுதார்கள். அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள். நான்காம் இரவு ஆன போது பள்ளிவாசல் கொள்ள முடியாத அளவுக்கு மக்கள் திரண்டனர். (இரவுத் தொழுகைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வராமல்) பஜ்ருத் தொழுகைக்குத் தான் வந்தனர். பஜ்ரு தொழுததும் மக்களை நோக்கித் திரும்பி அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து விட்டு, 'நீங்கள் இருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை. இத்தொழுகை உங்கள் மேல் கடமையாக்கப்பட்டு அதை நிறைவேற்ற இயலாதவர்களாகி விடுவீர்களோ என்று அஞ்சினேன்' என்று கூறினார்கள். இந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 2012
¶ நபி ஸல் அவர்கள் வீட்டிலும், மஸ்ஜிதிலும் இரவுத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுதுள்ளார்கள். எனவே நாமும் ஜமாஅத்தாக தொழமுடியும். நபி ஸல் தொடராக ஜமாஅத்தாக தொழுவிக்காதமைக்குக் காரணம் மேலே ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக ரமழானின் இறுதிப்பத்தில் இரவுத்வொழுகையில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
11) இரவு நேரப் பிரார்த்தனையைப் பற்றி
நபி (ஸல்) அவர்கள் பொதுவாக சொன்ன செய்தி:
¶ நபிகளாரின் இரவு நேர வணக்கங்களில் பிரார்த்தனை மிக முக்கியமானது எனவே இந்த இரவுகளில் அதிகம் பிரார்த்தனைகளில் நாம் ஈடுபடலாம்.
إنَّ في اللَّيْلِ لَسَاعَةً لا يُوَافِقُهَا رَجُلٌ مُسْلِمٌ، يَسْأَلُ اللَّهَ خَيْرًا مِن أَمْرِ الدُّنْيَا وَالآخِرَةِ، إلَّا أَعْطَاهُ إيَّاهُ، وَذلكَ كُلَّ لَيْلَةٍ.
صحيح مسلم
الصفحة أو الرقم: 757 | خلاصة حكم المحدث : [صحيح]
நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக அந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம்
¶ அல்லாஹ்கீழ்வானுக்கு வரும் நேரம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவின் பாதி நேரம் அல்லது மூன்றில் இரு பகுதி நேரம் கழியும்போது உயர்வும் வளமும் மிக்க இறைவன் கீழ் வானிற்கு இறங்கிவந்து, "கேட்பவர் எவரும் உண்டா? அவருக்குக் கொடுக்கப்படும். பிரார்த்திப்பவர் எவரும் உண்டா? அவரது பிரார்த்தனை ஏற்கப்படும். பாவமன்னிப்புக் கோருபவர் எவரும் உண்டா? அவருக்கு மன்னிப்பு அளிக்கப்படும்" என்று அதிகாலை புலரும்வரை கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 1388.
¶ இரவில் தூக்கத்திலிருந்நு விழிப்பு வருகின்றவருக்கு கிடைக்கும் வாய்ப்பு:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
'யார் கண்இரவில் விழித்து
لاَ إِلهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ
الْحَمْدُ لِلَّه
وَسُبْحَانَ اللهِ
وَلاَ إِلهَ إِلاَّ اللهُ وَاللهُ أَكْبَرُ
وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله اَللّهُمَّ اغْفِرْ لِيْ
பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு நிகரானவர் இல்லை; ஆட்சியும் அவனுக்குரியது; புகழும் அவனுக்குரியது; அவன் அனைத்தப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தூயவன்; அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் மிகப்பெரியவன் நன்மை செய்யும் ஆற்றலும் தீமையில் இருந்து விடுபடுவதும் அவனைக் கொண்டே இருக்கிறது.
என்று கூறிவிட்டு இறைவா! என்னை மன்னித்துவிடு என்றோ, வேறு பிரார்த்தனைகளையோ செய்தால் அவை அங்கீகரிக்கப்படும். உளூச் செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக் கொள்ளப்படும்.
என உபதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 1154.
அத்தியாயம் : 19. தஹஜ்ஜத்
¶ நபி ஸல் அவர்கள் இரவு நேரத்தில் தூங்கும் போது ஓதும் பிரார்த்தனைகள் , மாத்திரமின்றி பல்வேறு பிரார்த்தனைகளை ஓதியுள்ளார்கள்.
¶ குர்ஆன் ஓதுதல் இஸ்திஃபார், தவ்பா செய்தல் , தனிமையில் அல்லாஹ்வை நினைத்தல் போன்ற பல்வேறு அமல்களைக் கொண்டு இரவை நாங்கள் ஹயாத்தாக்கலாம்.
12) இரவில் கண்விழித்து இராவணக்கதுக்காக குடும்பத்தை எழுப்புதல்.
¶ அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்
ஒருவர் இரவில் எழுந்து தானும் தொழுது தன் மனைவியையும் தொழுவதற்காக விழிக்கச் செய்கின்றார் .அவள் மறுத்தால். அவளின் முகத்தில் தண்ணீரைத் தெளிக்கிறார். இவருக்கு அல்லாஹ் அருள் புரிவானாக.!
மேலும் ஒரு பெண் இரவில் எழுந்து, தானும் தொழுது தனது கணவனையும் தொழுவதற்காக எழுப்புகிறாள். அவன் மறுத்தால் அவனின் முகத்தில் தண்ணீரைத் தெளிப்பாள் . இவளுக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக.
(அபூதாவூத்: 1308)
¶ஒருவர் தன் மனைவியையும் இரவில் எழுப்பி அவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டு ரக்அத்கள் தொழுதால் அவ்விருவரும் அல்லாஹ்வை நினைவுகூறும் ஆண்கள் பெண்கள் கூட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள்.
ரமழானின் இறுதி ஏழு நாட்களில்
முயற்சியை கைவிட்டு விட வேண்டாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அந்த (லைலத்துல் கத்ர்) இரவை (ரமளானின்) இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்றில்) தேடிக்கொள்ளுங்கள். உங்களில் ஒருவருக்குப் பலவீனம், அல்லது இயலாமை ஏற்பட்டால், எஞ்சிய (இறுதி) ஏழு இரவுகளில் (ஒன்றிலாவது அதைத் தேடும் முயற்சியில்) தளர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுவிட வேண்டாம்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் : 2164.
அத்தியாயம் : 13. நோன்பு
أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَىٰ نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ
. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு அவர்கள் (நன்மை) செய்து கொண்டிருந்ததால் தங்குமிடமாக சொர்க்கச் சோலைகள் பரிசாகவுள்ளன.
திருக்குர்ஆன் 32:19
நட்புடன்:
இன்திகாப் உமரீ
அட்டுலுகம
01/04/2024
No comments:
Post a Comment