தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 December 2019

உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?




நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும்.
உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்.

''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்''
தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது.
ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள் வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியாமல் இருக்கும்.
எளிமையான வழிமுறைகளில் எப்படி இதைச் செய்வது என்பதை விளக்குகிறோம்.

15 December 2019

காய்ச்சலுக்கு அன்டிபயாடிக் ஒரு மருந்தாகுமா?


J





“டாக்டர் எனது மகனுக்கு இரண்டு நாட்களாக சரியான காய்ச்சல். பனடோல் கொடுத்தும் குறையவில்லை. என்ன அன்டிபயாட்டிக் கொடுக்கலாம்?” இது பொதுவாக பெற்றோர்களினால் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி.
இன்று அபரிமிதமான அன்டிபயாடிக் பாவனையால் எமது எதிர்காலம் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்ற
து. எனவே அதைப் பற்றி சிறிது விளக்கமாக பார்ப்போம்.
காய்ச்சல் என்பது பொதுவாக குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். அதிலும் தற்போதைய காலத்தில் காய்ச்சல் ஏற்படாத குழந்தையே வீட்டில் இல்லை என்ற அளவுக்கு காய்ச்சல் ஏற்படுகின்றது. காய்ச்சல் ஒரு நோயின் அறிகுறியே தவிர காய்ச்சல் என்பது மட்டும் ஒரு நோய் அல்ல.
ஒருவரின் உடல் வெப்பநிலை 38°C க்கு மேலும் அதிகரிக்கும் பொழுது அதை நாம் காய்ச்சல் என்று குறிப்பிடுகின்றோம் .

02 December 2019

புதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும்


குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் சுமார் ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் என்று கூறப்படும் ஒரு புதிய வகை ஆப்பிள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த வகை ஆப்பிளை கண்டறிவதற்கு ஆராய்ச்சியாளர்களுக்கு இரு தசாப்தங்கள் ஆனதாக கூறப்படுகிறது.
'காஸ்மிக் கிரிஸ்ப்' என்று அழைக்கப்படும் இந்த புதிய வகை ஆப்பிளானது 'ஹனிகிரிஸ்ப்', 'எண்டர்ப்ரைஸ்' ஆகியவற்றின் கலப்பினமாகும். இது முதன் முதலில், 1997ஆம் ஆண்டு வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பயிரிடப்பட்டது.
'திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை' கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இருக்கும் விவசாயிகள் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்த ஆப்பிளை விளைவிப்பதற்கு பிரத்யேக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

26 November 2019

மனச்சோர்வு நோய் Depression

மனச்சோhttps://www.rcpsych.ac.uk/mental-health/translations/tamil/depression நோய் பற்றிய விளக்கம்
மனச்சோர்வு நோயுள்ளவர்கள் , அவர் சார்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக இந்த தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது.

இதை படித்தவுடன் மனச்சோர்வு நோய் பற்றி தெளிவு பெற்று அதுவும் ஒரு வகையான நோய் என்று நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறோம்.

நம்மில் பலருக்கும் அவ்வப்பொழுது மனச்சோர்வு ஏற்படுவது இயற்கையே. இது சில மணி நேரமோ அல்லது சில தினங்களோ இருந்து விட்டு நம்மை அறியாமலே நீங்கி விடும்.
ஆனால் மனச்சோர்வு நோய் உள்ளவர்களுக்கு இத்தகைய உணர்வு பல வாரங்கள் மற்றும் மாதங்கள் நீடிக்கும்.
இதனால் அவர்களின் தினசரி வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை மற்றும் அலுவலக வேலை எல்லாமே பாதிப்படையும்.

03 August 2019

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவுறுத்தல்

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை (04) இடம்பெறவுள்ள நிலையில் பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் அறிவுறுத்தல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜிதவினால் குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பரீட்சை நிலையங்களுக்குள் நுழைய தடை
நாளை (04) முற்பகல் 9.30 முதல் நண்பகல் 12.00 மணி வரையான பரீட்சை இடம்பெறவுள்ள காலப் பகுதியில், பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படும் பாடசாலை வளாகத்தினுள் ஆசிரியர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அனுமதி வழங்கப்படாத எவரும் பரீட்சை மத்திய நிலையங்களுக்குள் நுழையக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இக்காலப்பகுதியில் அதிபர் காரியாலயமும் மூடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கையடக்க தொலைபேசி தடை
பரீட்சை இடம்பெறும் காலப் பகுதியில், பரீட்சை மத்திய நிலையங்களில் கடமையில் ஈடுபட்டுள்ள, கண்காணிப்பாளர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிந்த பின்னரும் வினாத்தாள் இரகசிய ஆவணம்
அத்துடன், பரீட்சைகள் நிறைவடைந்ததன் பின்னரும், புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் இரகசிய ஆவணமாகவே கருதப்படும் எனவும், வினாத்தாள்களை வைத்திருத்தல், பிரதி செய்தல், பிரதியை பெற்றுக் கொள்ளல், விற்பனை செய்தல், அச்சிடல், பத்திரிகைகளில் அல்லது சஞ்சிகைகளில் அல்லது வேறேதேனும் அச்சு ஊடகங்களில் அச்சிட்டு வெளியிடுதல், இணையத்தில் அல்லது சமூக வலைத்தளங்களில் அல்லது வேறேதேனும் வகையில் வெளியிடுதல் ஆகியன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
முறைப்பாடு செய்யலாம்
மேற்கூறப்பட்ட விடயங்களில் எவரேனும் ஒருவர் அல்லது நிறுவனம் இதனை மீறும் நிலையில், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் தலைமையகத்தில் அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கு தொலைபேசி மூலம் முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்கள உடனடி அழைப்பு இலக்கம் : 1911
பாடசாலை பரீட்சைகள் ஒழுங்குசெய்யும் பிரிவு : 011-278 4208, 011-2784537, 011-3188350, 011-3140314
பொலிஸ் தலைமையகம் : 011-2421111/119
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மாணவர், பெற்றோருக்கு அறிவுறுத்தல்
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எழுதும்
மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பரீட்சைகள் திணைக்களம் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய பரீட்சைக்குரிய சுட்டிலக்கம், மாணவர்களின் வெள்ளை சீருடையின் வலது பக்கத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரீட்சை எழுதும் மாணவர்கள், காலை 9.00 மணிக்கு பரீட்சை மண்டபத்தில் அமர வேண்டும்.
வினாக்களுக்கு விடையளிக்க பென்சில், கறுப்பு அல்லது நீல நிற பேனைகளை பயன்படுத்த முடியும்.
பரீட்சை நிலையத்தில் பெற்றோர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நாளை (04) இடம்பெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2,995 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 3 இலட்சத்து 39 ஆயிரத்து 360 மாணவர்கள் ( 339,360) பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

Source:Thinakaran

21 July 2019

100 வயதான மலேசிய யாத்ரீகர் ஒருவர் இந்த ஆண்டு ஹஜ் செய்ய வந்துள்ளார்

100 வயதான மலேசிய யாத்ரீகர் ஒருவர் இந்த ஆண்டு ஹஜ் செய்ய மக்கா வந்துள்ளார் . அவர் மக்கா முகராமாவுக்கு வந்தபோது அவரது கண்கள் கண்ணீருடன் நிரம்பின. அல்லாஹ் (மிக்க கருணையாளன்) தான் விரும்பியவர்களை தன் மாளிகைக்கு அழைக்கிறான்.

14 April 2019

உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்

இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை தொடங்கியது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த விமானத்தை சுமார் 10 கிலோ மீட்டர் உயரத்திற்கு பறக்க செய்து, அதன் பிறகு இதிலிருந்து விண்கலத்தை ஏவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்திலுள்ள இரண்டு இறக்கைகளுக்கு இடையேயான தொலைவு மட்டும் 385 அடிகளாகும். இது ஒரு கால்பந்து மைதானத்தின் நீளத்தை விட சற்றே அதிகமாகும்.
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், விண்கலங்களை பூமியின் நிலப்பரப்பிலிருந்து ஏவுவதைவிட, விண்ணிலிருந்து ஏவுவது குறைந்த செலவுடையாக இருக்கும்.
இருவேறு விமானங்களை ஒருங்கே கொண்டது போன்று ஆறு இன்ஜின்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் தனது முதல் பயணத்தின்போது சுமார் 15,000 அடிவரை, அதிகபட்சமாக மணிக்கு 274 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்தது.
Source:BBC TAMIL

30 March 2019

மக்கொன FLOWER BEES முன்பள்ளி சிறுவர் சந்தை

இன்று(30/03/2019)இடம்பெற்ற மக்கொன FLOWER BEES முன்பள்ளி சிறுவர்களின் சிறுவர் சந்தை

22 March 2019

விட்டமின்  பி 12 குறைபாடு;அறிகுறி தெரியாத ஆபத்து


விட்டமின் பி 12, கோபலாமின் (Cobalamin) என்றும் குறிப்பிடுவார்கள். இது நீரில் கரையக் கூடிய ஊட்டச்சத்து. தினமும் சராசரியாக பெரியவர்களுக்கு (2.4 ug)அளவு தேவைப்படும். நம் உடலுக்கு மிகச்சிறிய அளவே தேவைப்படுகின்ற ஊட்டசத்தாக இருந்தாலும் பல வேலைகளை செய்யத் தேவைப்படுகின்ற மிக முக்கியமான விட்டமின் பி 12. இதன் குறைபாடு மெதுவாகாத்தான் பாதிப்பை வெளிப்படுத்தும். பாதிப்பு அதிகரிக்கும் போதுதான் இப்படி ஒரு பிரச்சினை இருப்பது நமக்குத் தெரியவரும் என்கிறார் உணவு ஆலோசகர் ஷீலா ஸ்வர்ணகுமாரி.
விட்டமின்  பி 12 குறைபாடு  ஏற்படக்காரணங்கள்
விட்டமின் பி 12 உள்ள உணவுகளை போதியளவு எடுத்துக் கொள்ளத் தவறுவது எடை குறைப்பு சர்ஜரி, அன்டிபயோட்டிக் மாத்திரைகள்,எய்ட்ஸ்,குடற்புழு தொற்று, குரோன்ஸ் நோய் (Crohn's Disease),வலிப்புக் கான மருந்துகள்,ஓட்டோ இம்யூன் நோய் போன்றவற்றின் காரணமாக விட்டமின் பி 12 குறைபாடுஏற்படலாம்.
அறிகுறிகள்
•கை, கால்கள் மற்றும் பாதங்கள் மரத்துப் போதல்.
•மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம்.
•ஞாபக சக்தி குறைபாடு.
•சிந்திப்பதில்,பகுத்தறிதலில் சிரமம்.
•ஓட்டோ இம்யூன் நோய்.
எடை குறைப்பு சிகிச்சையினால் புரத குறைபாடு ஏற்பட்டு, விட்டமின் பி 12 பாதிப்பால் இரத்த சோகை ஏற்படும்.
•நடப்பதில் சிரமம்
•சமநிலை தவறுதல் (பேலன்ஸ் இழத்தல் )
•உடல் பலவீனம், சோர்வு
•வாய்ப்புண்,நாக்கு அழற்சி
•பார்வை நரம்பு பாதிபினால் பார்வை குறைபாடு.
இதனை ஆரம்ப கட்டத்தில் சரி செய்யத்தவரினால், இதயம், மூளை, நரம்பு, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.
விட்டமின் பி 12 குறைபாட்டினை மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இரத்த அணுக்களின் சோதனை (CBC Count) மூலமும் விட்டமின் பி 12 அளவு ஆகியவற்றினை தெரிந்து கொள்ளலாம் விட்டமின் பி 12 குறைபாடு பொதுவாக காணப்படுவது. சைவ உணவு சாப்பிடுகிறவர்கள், முதியவர்களிடையே இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆரம்பகட்ட குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதனை உணவுப் பொருட்களால் சரி செய்ய முடியும்.
விட்டமின் பி 12 இருக்கும் உணவுப் பொருட்கள்
•பால் மற்றும் பால் பொருட்கள்
•மீன் (குறிப்பாக மத்தி மற்றும் சூரை மீன் )
•கோழிக்கறி,முட்டை
       சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் தான்னியம்  மற்றும் பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த குறைபாடு அதிகமாக இருக்கும் போது உணவுடன் டாக்டரின் ஆலோசனைப் படி
விட்டமின் பி 12 மாத்திரைகள் அல்லது ஊசி போட்டுக்கொள்ளலாம்.
நன்றி :தினக்குரல்

17 March 2019

Christchurch Terror: Comprehensive coverage



Christchurch Terror: Comprehensive coverage from the Nine newsroom | Nine News Australia

13 March 2019

"பாரம்பரியம்"-moulavi M. R. M. NIZAM



இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ரமழான் மாதத்தையொட்டி செவ்வாய்க்கிழமை 22/05/2018 இரவு 7.15 க்கு ஒலிபரப்பான "பாரம்பரியம்" பேட்டி நிகழ்ச்சி. 

மக்கொன மஹல்லம் கதீப் மௌலவி எம். ஆர். எம். நிஸாம் (பஹ்ஜி) அவர்களை கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னா பேட்டி காண்கிறார். தயாரிப்பு - முஸ்லிம் சேவை பொறுப்பாளர் பாத்திமா ரினோஸியா. ஒலிப்பதிவு உதவி "பாத்திமா மைந்தன்" அன்சார்.

அண்மையில் மௌலவி எம். ஆர் எம். நிஸாம் (பஹ்ஜி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். அன்னாருக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க பிரார்த்திக்கிறோம்.


Thanks:Najmul Hussain

06 March 2019

மெட்போமின் (Metformin) போலி வதந்தி

Dr. Anfas Farook
மெட்போமின் (Metformin) போலி வதந்தி
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
ஒரு நாள் அவசர சிகிச்சை பிரிவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு குழந்தைக்கு சிகிச்சையளித்து
க்கொண்டிருந்த வேளை, சுய நினைவிழந்த நிலையில் இன்னுமொரு அவசர நோயாளி உள்ளழைத்து வரப்பட்டார். சுமார் 45 வயதுடைய நபர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் வெளியே அழுத வண்ணம் வீற்றிருந்தனர்.
சிகிச்சையின் முதல் படி, அவருடைய குருதி சீனி மட்டம் பரிசோதிக்கப்பட அது "HI" என காட்டப்பட்டது, அதாவது கருவியால் பெறுமானத்தை குறிப்பிட முடியாத அளவில் மிக அதிகமாக காணப்பட்டது. மேலதிக தகவல்கள் மனைவி அழைக்கப்பட்டு பெறப்பட்டு உடனடியாக சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
"அவர் அண்மையில் தான் நீரிழிவு (சீனி வியாதி) ஆல் பாதிக்கப்பட்டார், வைத்தியர் அவருக்கு மெட்போமின் (metformin) மாத்திரை வழங்கினார். ஓரிரண்டு தினங்கள் தான் அதைப் பாவித்தார், எங்கட பக்கத்து வீட்டு தாத்தா இன்னும் நிறைய பேர் சொன்னாங்க, வட்சப்ல(whatsapp) கூட மெசேஜ் எல்லாம் வந்திச்சி... metformin அ மட்டும் கொடுத்திட வேணாம், அது kidney அ பாதிக்குமாம்......, வேர கைமருந்து இருக்கு அத கொடுங்க, சும்மா இருக்கிற மனுசன்ட kidney ய பழுதாக்க ஏலுமா?? நிறைய பேர்ட கிட்னி(kidney) பழுதாகி போய்ட்டாம்..... "
இதுதான் அந்த பெண் கூறிய கதையின் சாராம்சம். இன்று நிறைய பேர் இந்த மனநிலையில் தான் இருக்கிறார்கள். 5ம் ஆண்டு வரை படித்த பக்கத்து வீட்டு தாத்தாவின் கதை இன்னும் தெருவோர கதைகளையும் மனதார ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வைத்திய பரிந்துரையை உதரித்தள்ளி நடக்கின்றனர். மருந்துகள் பருகும் போது மாத்திரம் side effects , பாதிப்புகள் பற்றி அக்கறையாக கேட்பவர்கள், வெகு சாதாரணமாக சிகரட் புகைக்கின்றனர், உண்ணும் உணவுகள் கூட உடம்புக்கு பெரிதும் தீங்கு விளைவிப்பவையையே எடுக்கின்றனர். இந்த மருந்து பருகும் போதான தெளிவு உணவு மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இருந்தால் மருந்து பருகுவதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது என்பது கசப்பான உண்மை.
மெட்போமின் (Metformin) என்பது பல தசாப்தங்களாக சர்க்கரை வியாதிக்கு பயன்படுத்துகின்ற மிகவும் பாதுகாப்பான ஒரு மருந்து வகையாகும். எனினும் சில அரைகுறைகளின் kidney பாதிப்பு போலிப்பிரச்சாரம் காரணமாக இதனை பாவிக்க தயக்கம் காட்டுகின்றனர். மருந்து பாவிக்காததன் காரணமாக குருதியில் உள்ள குளுக்கோசு அளவு அதிகமாக மாறுபடுவதன் காரணமாகவே kidney பாதிப்பு ஏற்படுகிறதே தவிர metformin காரணமாக அல்ல என்பதுவே உண்மை. எனினும் இவ்வாறு kidney பழுதடைந்த நிலையில் metformin மாத்திரை தவிர்க்கப்படுகின்ற காரணத்தைக்காட்டியே இந்த போலி பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்ட
ிருக்கிறது. இந்நிலை மெட்போமினுக்கு மாத்திரமன்றி ஏனைய பல மாத்திரைகள் மற்றும் உணவுகளுக்கும் பொதுவான விடயமென்றாலும் போலிப்பிரச்சாரம் metformin மேல் திணிக்கப்பட்டு அதன் பாவனை தவிர்க்கப்பட்டு சர்க்கரை நோயாளியின் நோயின் வீரியம் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது.
மெட்போமின் (Metformin) என்பது நீரிழிவு நோயின் போது பயன்படுத்தப்படுகின்ற பிரதான ஆரம்ப கட்ட மாத்திரையாகும். இது குருதியிலுள்ள குளுக்கோசு(சீனி) அகத்துறிஞ்சப்படும் வேகத்தை கூட்டி குருதியிலுள்ள குளுக்கோசு மட்டத்தை குறைத்து நோயை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
மெட்போமின் என்பது சர்க்கரை வியாதிக்கு மாத்திரமன்றி இன்னும் பல நோய் நிலமைகளில் பயன்படுத்தப்படுகின்ற பாதுகாப்பானதொரு மருந்து வகையாகும்.
உதாரணமாக பெண்களில் ஏற்படுகின்ற policystic ovarian syndrome (PCOS) என்று சொல்லப்படுகின்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சினையின் போதும், obesity என்று சொல்லப்படுகின்ற அதிகரித்த உடல் நிறை காணப்படுகின்ற போதும் மெட்போமின் வழங்கப்படுகிறது. மெட்போமின் (metformin) என்பது சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகளின் kidney களை மாத்திரமன்றி மற்றைய சாதாரண மனிதர்களுடைய kidney களையும் பாதுகாக்கிறது என்பதே உண்மையாகும்.
Metformin ஒரு பாதுகாப்பான மாத்திரைதான் என்பதற்கு பல காரணங்களை கூறிக்கொண்டு செல்லலாம்.
சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மற்றைய மாத்திரைகள் மிகவும் அளவுக்கு அதிகமாகவே குருதி குளுக்கோசு அளவைக் குறைத்து சில வேளைகளில் ஆபத்தை ஏற்படுத்தினாலும் இந்த metformin ஆனது ஒருபோதும் அவ்வாரான ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தாது, உடலுக்கு பாதுகாப்பான சாதாரண பெறுமானத்துக்கே குறைக்கவல்லது.
மெட்போமின் ஆனது குருதி சீனி மட்டத்தை மாத்திரமல்லாது கொலஸ்திரோல் மட்டத்தையும் குறைப்பதோடு ஒருவருக்கு மாரடைப்பு போன்ற இதய நோயிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. அதுமாத்திரமன்றி இவ்வாறான நோயுள்ளவர்களின் kidney களையும் பாதுகாக்கிறது.
மெட்போமின் பருகுவதால் வாந்தி, வயிற்றோட்டம் போன்ற சிறு பக்க விளைவுகளே ஏற்படுகிறது. சிலருக்கு தசை வலிகள் போன்றனவும் ஏற்படலாம். இந்த மாத்திரை பல்வேறுபட்ட வியாபார நாமங்களில் தற்போது சந்தையில் கிடைக்கிறது.
எனவே இவ்வாறான போலி வதந்திகளை நம்பி ஏமாறுவதனால் உங்கள் அன்புக்குறியவர்கள் உங்களை ஏமாற்றி இந்த உலகையே விட்டுச்செல்லும் நிலமை ஏற்பட்டு விடலாம். அரைகுறைகளினதும் தெருவோர வைத்தியர்களினதும் கைகளில் உங்கள் சுகாதாரத்தையும் உயிரையும் கையளித்து விடாமல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த வைத்தியரிடமே அறிவுறை பெற்று சந்தோசமாக வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.
Dr. Anfas farook

          

விட்டமின் பி 12 குறைபாடு

11 February 2019

பேஸ்புக்கில் அனுப்பிய செய்தியை நீக்குவது எப்படி?


பேஸ்புக் மெசஞ்சரில் நாம் அனுப்பிய செய்திகளை நீக்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக நாம் பல இடங்களில் தவறுகள் செய்வோம். ஒருவருக்கு அனுப்ப வேண்டிய செய்தியை தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிடுவோம். அல்லது ஒருவருக்கு செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொன்றை தட்டச்சு செய்தோ, அல்லது ஏதாவது ஒன்றை Paste செய்யும்போது அதற்கு பதிலாக முந்தைய காபி செய்யப்பட்ட செய்தியை Paste செய்து அனுப்பிவிடுவோம். இந்த தவறை நான் அதிகமுறை செய்துள்ளேன்.
தற்போது நாம் தனி நபருக்கோ அல்லது குழுவிற்கோ அனுப்பிய செய்தியை, அனுப்பிய பத்து நிமிடத்திற்குள் நீக்கும் வசதியை பேஸ்புக் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
1. முதலில் Facebook Messenger அப்ளிகேஷனை Update செய்துக்கொள்ளுங்கள்.


2. பிறகு நீங்கள் அனுப்பிய செய்தியை Long Press செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.
3. அதில் Remove என்பதை தேர்வு செய்யுங்கள்
4. பிறகு " Remove For Everyone " என்பதை தேர்வு செய்யுங்கள்.
செய்தியை நீக்க வேண்டுமா? என கேட்கும். " Remove" என்பதை தேர்வு செய்யுங்கள்.
நீங்கள் அனுப்பிய செய்தி உங்கள் மொபைலிலும், அவரது மொபைலிலும் நீக்கப்பட்டிருக்கும்.
செய்தியை பெறப்பட்டவருக்கு " [பெயர்] Removed a message " என்று காட்டும்.
இந்த வசதியை ஏற்கனவே வாட்சப் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நன்றி : பிளாக்கர் நண்பன்

31 January 2019

ATHLETIC MEET 2019-AL HASSANIYA M.V

அல்ஹஸனியா  இல்ல விளையாட்டுப் போட்டிகள் 2019 இறுதி நிகழ்ச்சிகள்  இன்று வெகு விமர்சையாக   நடைப்பெற்றது.
மக்கொனை அல்-ஹஸனியா முஸ்லிம் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. ரூபி, டயமண்ட், சபயர் ஆகிய மூன்று இல்லங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் சபயர்  இல்லம் முதலாம் இடத்தைப் பெற்றது. டயமண்ட் இல்லம்  இரண்டாம் இடத்தையும், ரூபி  இல்லம்  மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

நிகழ்வுகளில்   சில