சிவப்பு எச்சரிக்கை -
வானிலை ஆய்வு மையம் பிறப்பிக்கும் மிகவும் அதிகபட்ச எச்சரிக்கையே சிவப்பு எச்சரிக்கை எனப்படும்.
அதாவது, மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கும், சாலைகள், கட்டடங்கள், போக்குவரத்து போன்றவற்றிற்கு சேதத்தையும் விளைவிக்கும் வகையிலான மோசமான வானிலையை முன்கூட்டியே தெரிவிப்பதற்காகவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.
இச்சூழ்நிலையின்போது, மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்படுவதற்கான சூழ்நிலை உள்ளதால் மக்கள் தங்களது உயிரையும், உடைமைகளையும் பாதுகாப்பாக வைத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
ஆம்பர் எச்சரிக்கை -
சிவப்பு எச்சரிக்கையை விட சற்றே குறைந்த வீரியமுடைய எச்சரிக்கை ஆம்பர் எச்சரிக்கை என்றழைக்கப்படுகிறது.
இந்த நிலையிலும் உயிர்சேதம், பொருட்சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்பிருந்தாலும், போக்குவரத்து மற்றும் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகும். மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.
மஞ்சள் எச்சரிக்கை -
மோசமான வானிலையை குறிப்பதற்கே மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படும் நாளிலிருந்து அடுத்த 2-3 தினங்களுக்கு நிலவும் வானிலையை மக்கள் கூர்ந்து கவனித்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகிறது.
பச்சை எச்சரிக்கை -
சாதாரண மழைப்பொழிவை தெரிவிப்பதற்காகவே பச்சை எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் அச்சமடைய வேண்டிய அவசியம் இல்லை.