தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 08 Apr 2025

17 August 2017

104 வயதான மூதாட்டி புனித ஹஜ் யாத்திரைக்கு வந்துள்ளார்


Riyadh: இந்தோனேசியாவில் இருந்து 104 வயதான  மாரியா மர்கானி என்ற மூதாட்டி புனித ஹஜ் யாத்திரைக்கு வந்துள்ளார். இந்த ஆண்டு இந்தோனேசியாவில் இருந்து சுமார் 221,000 ஹஜ்ஜாஜிகள் மத்தியில் மிகவும் வயதானவர் இவர்ராகும்.
ஜித்தாவின் இந்தோனேசிய துணை தூதரகத்தின் துணைத் தூதரான முகம்மது  ஷரீபுத்தீன் மரியா நல்ல ஆரோக்கியத்தில் இருப்பதாகவும், ஹஜ் கிரியைகளை எந்தவித பிரச்சனையும் இன்றி செய்ய முடியும் என்றும் கூறினார்.

அவர் சனிக்கிழமை புறப்பட்ட போது இந்தோனேசியா மத விவகார அமைச்சகத்தின் அதிகாரிகளால் சிறப்பு உதவி வழங்கப்பட்டது என ஷரீபுத்தீன் கூறினார்.
அவர் சிறப்பாக ஹஜ் கடமைகளை செய்து,அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக அமைய அல்லாஹ்வைப் பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment