புகலிடம் கோரி இலங்கை கடற்பரப்பில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 30 மியன்மார் நாட்டை
சேர்ந்த அகதிகள் அனைவரையும் யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர் உடனடியாக அவர்களது உணவு காலாச்சாரமானது வேறுபட்டதாக உள்ளமையால் அவர்களுக்கு தரமான உலர் உணவுகளை வழங்க மல்லாகம் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை காங்கேசன்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த மியன்மார் நாட்டை சேர்ந்த 30பேரை இந்திய மீனவர்கள் இருவர் காப்பாற்ற முயன்றிருந்தனர். இதன்போது அங்கு சென்ற காங்கேசன்துறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படையினர் அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். இதில் 6 குடும்பங்களை சேர்ந்த 16 சிறுவர்களும் 7ஆண்களும் 7பெண்களும் காணப்பட்டதுடன் இவர்களில் ஒருவர் திருமணமாகாத பெண்ணாகவும் மற்றுமொருவர் கர்ப்பிணி பெண்ணாகவும் காணப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (2-5-2017) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை மீண்டும் நேற்று(2-5-2017) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் சிறைச்சாலை அதிகாரிகள் முற்படுத்தியிருந்தனர். இதன்போது காங்கேசன்துறை பொலிஸார் இவர்கள் மீது குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 சி பிரிவின் கீழ் பி அறிக்கையொன்றையும் மன்றில் சமர்பித்திருந்தனர்.
இந்நிலையில் மியன்மார் அகதிகள் அனைவரையும் நுகேகொட மிரிஹானை தடுப்பு முகாமில் வைக்குமாறும் அத்துடன் எனைய இரு இந்தியர்களையும் சட்டமா அதிபரின் உத்தரவு கிடைக்கும் வரை தடுத்து வைக்கவும் மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதிவான் கருணாகரன் உத்தரவிட்டிருந்தார்.
இதேவேளை ஆசிய பசுப்பிக் பிராந்திய அகதிகள் குழுமத்தினர் சிவில் அமைப்புக்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சட்டப்பிரிவு ஆகியோர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய இவ் மியன்மார் முஸ்லீம் அகதிகள் சார்பில் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் மன்றில் முன்னிலையாகியிருந்தார்.
மன்றில் முன்னிலையான சட்டத்தரணி இலங்கையானது அகதிகள் அந்தஸ்த்து உடன்படிக்கையில் கைச்சாத்திடாத போதும் 2005ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஜக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பு உடன்படிக்கையின் பிரகாரம் புகலிடம் வழங்க கூடிய நாட்டுக்கு அனுப்பி வைக்கும் வரை இவர்களை மிரிஹானை தடுப்பு முகாமிற்கு அனுப்ப வேண்டும் என கோரியிருந்தார். அத்துடன் இவ் வழக்கு நடவடிக்கையும் மிரிஹானை பகுதிக்கு அண்மையான நீதிமன்றுக்கு மாற்ற வேண்டும் எனவும் அவர் மன்றை கோரியிருந்தார்.
இவ்வாறு செய்வதனூடாக இவர்களுக்கு சர்வதேச ரீதியான அகதிகள் அந்தஸ்த்தும்இ பாதுகாப்பும் கிடைக்கும் எனவும்இ ஜக்கிய நாடுகள் அகதிகள் அமைப்பினூடாக அகதி அந்தஸ்த்து வழங்க கூடிய வேறொரு நாட்டிற்கு அனுப்ப முடியும் எனவும் அவர் மன்றில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த மியன்மார் தேசத்தவர்களை மனிதாபிமானத்துடன் பார்த்த நீதிவான் அவர்கள் அனைவரையும் யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் முற்படுத்தி பரிசோதனைகளை மெற்கொண்ட பின்னர் உடனடியாக மிரிஹானை தடுப்பு முகாமிற்கு மாற்றுமாறு உத்தரவிட்டார். அத்துடன் அவர்களது உணவு காலாச்சாரமானது எம்மில் இருந்து வேறுபட்டதாக உள்ளமையால் அவர்களுக்கு தரமான உலர் உணவுகளை வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். அத்துடன் அவர்களை காப்பாற்றிய இரண்டு இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதற்கான சட்டமா அதிபர் திணைக்கள உத்தரவு கிடைக்கப்படும் வரை தடுத்து வைக்கவும் நீதிவான் கருணாகரன் உத்தரவிட்டிருந்தார்.
மேலும் வழக்கு நடவடிக்கையானது மிரிஹானை பகுதிக்கு அண்மையான நீதிமன்றுக்கு மாற்றுவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களமே முடிவெடுக்க வேண்டும் எனவும் நீதிவான் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை குறித்த 30 மியன்மார் நாட்டை சேர்ந்த முஸ்லிம் மக்களும் கடந்த 2012ஆம் ஆண்டு அங்கு காணப்பட்ட இன ஒடுக்கு முறை காரணமாக புகலிடம் கோரி இந்தியாவிற்கு சென்றிருந்தனர். இதன்போது இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் அங்கு வழக்கு இடம்பெற்று அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் புகலிடம் கோரிரே இலங்கை கடல் எல்லைக்குள் நூழைந்தே விபத்தில் சிக்கிய நிலையில் கடற்படையினரால் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்க்கதாகும்.
Source:madawala news
No comments:
Post a Comment