தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

31 July 2016

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கற்பூரவல்லி


அழகுக்காக வளர்க்கப்படும் செடி கற்பூரவல்லி. நறுமணத்தை தரக்கூடிய இதற்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. தொட்டால் மணம் தரக்கூடியது. சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மை கொண்டது. சளியை கரைத்து வெளிதள்ள கூடியது. உள் உறுப்புகளை தூண்ட கூடியது. காக்கா வலிப்புக்கு மருந்தாகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. ஒரு கிளையை மட்டும் எடுத்து தொட்டியில் நட்டு வைத்தால் அது நன்றாக வளரும்.
கற்பூரவல்லியை பயன்படுத்தி சைனஸ், நெஞ்சக சளியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு எடுத்துக்கொள்ளவும். பெரியவர்கள் என்றால் 2 ஸ்பூன், குழந்தைகளுக்கு ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து குடித்துவர சளி குணமாகும். குழந்தைகளுக்கு மாந்தத்தை போக்கும். இருமல் இல்லாமல் போகும். பசியை தூண்ட கூடியது. மூக்கடைப்பு, தலைவலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய், அரை ஸ்பூன் கற்பூரவல்லி இலை பசை, சிறிது சர்க்கரை சேர்த்து லேசாக சூடு செய்தபின் மூக்கு, நெற்றியில் பத்தாக போடும் போது மூக்கடைப்பு, தலைவலி சரியாகும். தலைபாரம், சைனஸ் குணமாகும். இதயம், உணவுப்பாதை, சிறுநீரக பாதைக்கு பலம் கொடுக்கும். அக்கி, அம்மை கொப்புளங்களுக்கான மருந்து தயாரிக்கலாம். கற்பூரவல்லி இலை சாறு அல்லது பசையை கொப்புளங்களுக்கு மேல் பூசினால் அவைகள் சரியாகும்.
கற்பூரவல்லி இலையை பயன்படுத்தி வெள்ளைபோக்கு, சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து தயாரிக்கலாம். ஒருவேளைக்கான தேனீர் தயாரிக்க 3 இலைகளை எடுத்து துண்டுகளாக்கி போடவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தனியா, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிக்கட்டி எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சிறுநீர் பையில் தங்கியிருக்கும் கற்களை கரைத்து வெளித்தள்ளும்.
வெள்ளைப்படுதல் சரியாகும். கற்பூரவல்லியை பயன்படுத்தி குளிர் காய்ச்சலை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 3 கற்பூரவல்லி இலைகள், அரை ஸ்பூன் சீரகத்துடன் சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி காலை, மாலை குடித்துவர குளிர் காய்ச்சல், மலேரியா காய்ச்சல் குணமாகும். கல்லீரல், மண்ணீரல் பலப்படுவதுடன் அவைகளின் செயல்பாடுகள் சீராகும். கற்பூரவல்லி வீட்டில் இருக்க வேண்டிய உன்னதமான மூலிகை.
இதன் மணம் கொசுக்கள், பூச்சிகளை விரட்ட கூடியது. கடலை மாவுடன் கற்பூரவல்லியை பஜ்ஜியாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கும்போது இருமல், சளி, காய்ச்சல் குணமாகும்.கற்பூரவல்லி செரிமானத்தை தூண்டக் கூடியது. வலியை குறைக்கும். புண்களை ஆற்றும். மருக்களை கரைக்கும் தன்மை கொண்டது. ஆண்கள் ஓரிரு இலைகளை சாப்பிடுவதால் கற்கள் கரைந்து போகும். கற்பூரவல்லி சாற்றை மேலே பூசுவதால் அக்கி கொப்புளங்கள் வற்றும்.
நன்றி:தினகரன்

22 July 2016

மது குடிப்பதால் உண்டாகும் 7 வகை புற்றுநோய்: ஆராய்ச்சியில் தகவல்


மது குடிப்பதற்கும் ஏழு வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
உடல்கூறியல் ரீதியான காரணங்கள் தெளிவாக இல்லாவிட்டாலும், `அடிக்ஷன்' என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சி முடிவுகளின்படி, மதுகுடிப்பதற்கும் புற்றநோய் ஏற்படுவதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
மது குடிப்பதால், வாய், தொண்டை, குரல்வளை, உணவுக்குழாய், கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் மற்றும் மார்பகம் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து கூறுகையில், எந்த அளவு மது குடித்தாலும், அது தொடர் பழக்கமாக இருக்கும் நிலையில், ஆபத்தில்லாத குடிப்பழக்கம் என எதுவும் இல்லை என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2012-ம் ஆண்டில் மட்டும், மதுப்பழக்கத்தால் ஐந்து லட்சம் பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி:BBC

19 July 2016

துருக்கி சொல்லித் தரும் சேதி!


அந்த ஒரு இரவுக்குள் எல்லாம் முடிந்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்!!! மக்கள் சக்தியோடு விளையாட முடியாது!
பிந்திய இரவுப் பிராத்தனைகள் மனம் குளிர வைத்து விட்டன. மக்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட தலைவர் அர்துகானின் அழைப்புக்கு துருக்கி உடனடியாக பதில் கொடுத்து அர்த் சாமத்தில் சதிக்கு எதிராக வீதிக்கு வந்தனர். இஸ்தான்பூல் விமானநிலையத்தை விட்டு சதியில் ஈடுபட்ட ராணுவம் பின்வாங்கியது. பொலிஸ் படையும் அர்துகானுக்கு பக்கபலமாக இருந்தது.
சதிப் புரட்சிக்கு முன்னால் அமரிக்கா, இஸ்ரேல், எமிரேட்ஸ் இருப்பதாக துருக்கி பிரதமர் அறிவித்திருந்தார். குறிப்பாக துருக்கியை சீரழப்பதற்கு பல தடவை முயற்சி செய்த நயவஞ்சன் பத்ஹுல்லா கோலான் பின்ணணியில் நேராடியாக செயற்படுவதாக துருக்கி நீதி அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
“அனைத்து சக்திகளையும் மிகைக்கக் கூடிய அதிகாரம் வல்ல அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை” ஈமான் ததும்பும் மக்கள் தலைவன் அர்துகானின் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் இவை.
மேற்கும், சியோசின சக்திகளும், அரபு சியோனிஸ்ட்களும்

02 July 2016

மக்கா ஜொலிக்கிறது.

ஹிஜ்ரி 1437 ரமழான் 27 ம் (01-07-2016) இரவாகிய நேற்றய தினம் புனித மக்கா
முகர்ரமாவின் அழகிய தோற்றம். ரமழான் இறுதி பத்தில் இறைவிசுவாசிகளால் நிரம்பி
இருக்கும் கண்கொள்ளாகாட்சியும் இரவில் மக்கா மிளிர்வதையும் காணலாம். ரமழான் 27ம்
இரவு சுமார் 2 மில்லியன் முஸ்லிம்கள் கூடியிருந்தனர்.யா அல்லாஹ்
எம்மனைவருக்கும் இப்புனித பூமிக்கு சென்று புனித கஃபதுல்லாஹ்வை தவாப் செய்யும்
பாக்கியத்தை தறுவாயாக! ஆமீன்.
வித்ர் தொழுகை வீடியோ இணைப்பு கீழே


                           







27th Ramadan 1437 Makkah Witr Sheikh Sudais