தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

06 January 2016

உலகின் மிகப் பெரிய நட்சத்திர நீலக்கல் இலங்கையில் அகழ்வு


உலகிலேயே மிகப் பெரிய புளு ஸ்டார் சஃபையர் எனக் கருதப்படும் நட்சத்திர நீலக்கல் ஒன்று இலங்கையில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நட்சத்திர நீலக் கற்களில் இதுவே மிகப் பெரியது எனத் தாங்கள் கருதுவதாக இலங்கையில் உள்ள இரத்தினயியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
அதியுயர் தரத்திலான அந்த நட்சத்திர நீலக்கல் 1404.49 காரட்டுகள் எடை கொண்டது என கொழும்பிலுள்ள இரத்தினக்கற்கள் பற்றி ஆய்வு மற்றும் தரநிர்ணயம் செய்யும் மையம் ஒன்று உறுதிப்படுத்தியுள்ளது.
இதை விட பெரிய நீலக்கல் ஒன்றிற்கு இதுவரை தாங்கள் தரநிர்ணய சான்று வழங்கவில்லை என அவர்கள் கூறுகிறார்கள்.
இந்தக் கல்லை அதன் மதிப்பு குறித்த கேள்விகள் இருந்த நிலையிலும், அதை வாங்கியதாக , அந்த நட்சத்திர நீலக்கல்லின் தற்போதைய உரிமையாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
இது ஒரு கண்காட்சிப் பொக்கிஷமே தவிர ஆபரணமாக பயன்படுத்தக் கூடிய கல் அல்ல என அவர் கூறுகிறார்.
இலங்கையில் இரத்தினக் கல் அகழ்விற்கு பெயர் போன இரத்தினபுரியில் அகழ்வு தொழிலாளர் ஒருவரினால் இந்தக் கல் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கல்லிற்கு ஸ்டார் ஆஃப் அடாம் என தான் பெயரிட்டுள்ளதாக தனது பெயர் விபரங்களை வெளியிட விரும்பாத அதன் உரிமையாளர் தெரிவித்தார்.
இந்தக் கல் இரகசிய வைப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள தெரிவிக்கும் அதன் உரிமையாளர் இந்தக் கல்லை தான் வைத்திருக்கவே விரும்புவதாக தெரிவித்தார்.
ஓளியின் கீழே வைத்துப் பார்ககும் போது அந்த நீலக் கல்லின் மத்தியில் ஆறு பக்கங்களுடனான நட்சத்திர வடிவம் ஒன்று தென்படுவது இதன் தனித்தன்மை ஆகும்.
இப்போதைக்கு இதை தான் பாதுகாக்க விரும்பினாலும், தனது பன்னாட்டு ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு சர்வதேச சந்தையில் இதை தான் விற்பனைக்கு கொண்டுவரக் கூடும் என அதன் உரிமையாளர் கூறுகிறார்.
இந்த நட்சத்திர நீலக் கல்லின் எடை குறித்து கொழும்பிலுள்ள ஆய்வு மையம் ஒன்று அளித்துள்ள அத்தாட்சி பத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்றாலும், அந்தக் கல்லின் சந்தை மதிப்பு பற்றி மாற்றுக் கருத்துக்கள் இருக்கின்றன. கொழும்பிலுள்ள முன்னணி மாணிக்க கற்கள் விற்பனையாளர்களில் ஒருவரான எம் எஸ் ஷாஜகான் கூறுகிறார்.
source:bbc

No comments:

Post a Comment