ஊர் செய்திகள்
date
15 April 2015
ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்க எச்சரிக்கை: புதிய அப் உருவாக்க திவிர முயற்சி
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி, நிலநடுக்கம் ஏற்பட போவதை பற்றி முன்பே எச்சரிக்கை செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலநடுக்க எச்சரிக்கை கருவிகளை கட்டமைத்து பராமரிக்க ஏகப்பட்ட செலவாவதால், அனைவருக்கும் உரிய நேரத்தில் நிலநடுக்க எச்சரிக்கையை கொடுக்க முடிவது இல்லை. ஜி.பி.எஸ். உள்ள ஸ்மார்ட்போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணரும் தன்மையை பெற்றியிருப்பதாக அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் அறிவியல் இதழில் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.ஆனால் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட்போன்களால் உணரமுடியாது. அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான நிலநடுக்கத்தை அவற்றால் முன்னதாகவே உணர்ந்து எச்சரிக்கை செய்யமுடியும்.இதற்கான புதிய அப் உருவாக்கி, அது வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகமாக பாதிக்கப்படும் பல நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.நன்றி:மாலைமலர்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment