ஊர் செய்திகள்
date
26 April 2015
நேபாள நில நடுக்கத்தில் பலியானோர்எண்ணிக்கை 2400 ஆக அதிகரிப்பு (CC TV வீ டியோ இணைப்பு )
நேபாளத்தில் கடந்த 80 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள
மிகப்பெரும் நிலநடுக்கத்தில் கொல்லப்பட்டவர்களின்
எண்ணிக்கை 2,400 ஐத் தாண்டிவிட்டது.
நிலநடுக்கம் எவரெஸ்ட் மலையில் ஏற்படுத்திய
பனிச்சரிவுகளில் சிக்கி 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஓராண்டுக்கு முன்னர் இங்கு ஏற்பட்ட
பனிச்சரிவுகளில் 16 மலையேறி வழிகாட்டிகள்
பலியானமை இங்கு நினைவுகூரத்தக்கது.
இதனிடையே, நேற்றைய பூகம்பத்தைத் தொடர்ந்து
நேபாளம், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய
நாடுகளில் இன்று மீண்டும் மிகவும் சக்திவாய்ந்த
நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
நேபாளத் தலைநகர் காத்மண்டுவிலிருந்து 60
கிலோமீட்டர் தொலைவாக 6.7 அளவில் பதிவான இந்த
நிலநடுக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை
விட்டு திறந்தவெளிகளை நோக்கி ஓடினர்.
இராணுவ உதவி ஹெலிகாப்டர்கள் பறந்து
திரிகின்றன. பாதிக்கப்பட்டவர்களை நோக்கி, மேற்கு
நேபாளத்திற்கு நிவாரணப் பொருட்கள்
விரைந்துள்ளன.
காத்மண்டுவில் குறைந்தது ஐந்து இடங்களில்
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வீடுகளுக்கு செல்ல மக்கள் அச்சம்
பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்துக்கு அருகே,
தரைமட்டமாகிக் கிடக்கின்ற உள்ளூர் வரி
அலுவலகத்துக்குள் இருந்து 4 சடலங்கள்
மீட்கப்பட்டுள்ளன.
இலகுவில் சென்றடையமுடியாத பல
பிரதேசங்களுடனான தொடர்புகள்
துண்டிக்கப்பட்டுள்ளதால் நேற்றைய நிலநடுக்கத்தின்
உயிரிழப்புகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்
என்று ஊகிக்கப்படுகின்றது.
மலைப்பகுதிகளுக்கான பாதைகள் மண்சரிவுகளால்
மூடப்பட்டுள்ளன.
சடலங்கள் காத்மண்டுவில் இருக்கின்ற
மருத்துவமனைகளுக்கு கொண்டுவரப்படுகின்றன.
காயமடைந்தவர்கள் நிரம்பிவழிவதால்
மருத்துவமனைகள் சமாளிக்கமுடியாமல்
திணறுகின்றன. தலைநகரில் மட்டும் 700க்கும்
மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
நகரமத்தியில் உள்ள திறந்தவெளி மைதானம் ஒன்றில்
ஆயிரக்கணக்கான மக்கள் கூடாரங்களுக்குள் தஞ்சம்
புகுந்துள்ளனர்.
குடியிருப்புகளை இழந்தவர்களும் மீண்டும்
நிலநடுக்கம் ஏற்படலாம் என்ற அஞ்சியவர்களுமாக
பெருமளவிலானவர்கள், குளிரையும் ஈரத்தையும்
தாங்கிக்கொண்டு நேற்றைய இரவுப்பொழுதை
வெளியிலேயே கழித்துள்ளனர்.
வெளிநாடுகள் உதவி
இயற்கைப் பேரழிவால் திணறுகின்ற நேபாள
அரசுக்கு உதவுவதற்கு வெளிநாட்டுத்
தலைவர்களுடன் தொண்டுநிறுவனங்களும்
முன்வந்துள்ளன.
இலகுவில் செல்லமுடியாத பகுதிகளில் மீட்புப்
பணிகளுக்காக இந்தியா ஹெலிகொப்டர்களை வழங்கி
உதவியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், சீனா, பாகிஸ்தான் மற்றும்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் உதவி அணியில்
இணைந்துள்ளன.
செஞ்சிலுவை சங்கம், ஒக்ஸ்பாம், எல்லைகளற்ற
மருத்துவர்கள் அமைப்பு கிறிஸ்டியன் எய்ட் ஆகிய
நிறுவனங்களும் அங்கு களத்தில் உள்ளன.
அவசர நிலைமைகள் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில்
நேபாளத்தில் ஏற்கனவே தயார்படுத்தல்களை
மேற்கொண்டிருந்ததாக ஒக்ஸ்போம்
தொண்டுநிறுவனத்தின் மனிதநேயப் பணிகளுக்கான
இயக்குநர் ஜேன் கொக்கிங் தெரிவித்தார்.
பனிச்சரிவு அச்சம்
எவரெஸ்ட் பகுதியில் பனிச்சரிவு அபாயம் உள்ளது
எவரெஸ்ட் மலைப்பகுதியில் இன்னும் பனிச்சரிவுகள்
ஏற்படலாம் என்று அஞ்சப்படுகின்றது.
அங்கு அடிவார முகாமின் ஒருபகுதி
பனிச்சரிவினால் மூடப்பட்டதில் கொல்லப்பட்ட 17
பேரில் கூகுள் நிறுவனத்தின் பணியாளரான டான்
ஃப்ரெடின்பர்க் பலியானவர்களில் ஒருவர் என்று அந்த
நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அங்கு 61 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை
காத்மண்டுவுக்கு ஏற்றிவர முயற்சிக்கும்
ஹெலிகாப்டர்கள் கடுமையான மேகமூட்டத்துக்கு
மத்தியிலும் பலரை மீட்டுவந்துள்ளன.
காத்மண்டுவுக்கும் பொக்காரா நகருக்கும்
இடைப்பட்ட மத்திய நேபாளத்தில் சனிக்கிழமை
காலை 7.8 அளவில் பதிவான சக்திவாய்ந்த
நிலநடுக்கத்தில் நேபாளத்தை தாண்டி
இந்தியாவிலும் வங்கதேசத்திலும் திபத் சீனப்
பிராந்தியத்திலும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
23 April 2015
22.1 மிலியன் டாலருக்கு ஏலம் போன வைரக்கல்
நியுயார்க்கில் நடந்த ஏலத்தில் ஒரு வைரக்கல் 22.1
மிலியன் டாலருக்கு ஏலம் போனது.
100 காரட் எடையுள்ள இந்தக் கல் அப்பழுக்கில்லாதது
என்று கூறப்படுகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் உலகில் இப்படி அதிக
விலைக்கு ஏலம் போன வைரக்கற்கள் மொத்தம் 6தான்.
அவற்றில் பிங்க் ஸ்டார் என்ற வைரக் கல் ஒன்று 83
மிலியன் டாலருக்கு ஏலம் போனது. ஆனால்
ஏலத்தைக் கேட்டவரிடம் அதைச் செலுத்தத்
தேவையான பணம் இல்லை என்பது வேறு விஷயம் !
Thanks:bbc

15 April 2015
ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்க எச்சரிக்கை: புதிய அப் உருவாக்க திவிர முயற்சி
ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி, நிலநடுக்கம் ஏற்பட போவதை பற்றி முன்பே எச்சரிக்கை செய்ய முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளார்கள்.தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் நிலநடுக்க எச்சரிக்கை கருவிகளை கட்டமைத்து பராமரிக்க ஏகப்பட்ட செலவாவதால், அனைவருக்கும் உரிய நேரத்தில் நிலநடுக்க எச்சரிக்கையை கொடுக்க முடிவது இல்லை. ஜி.பி.எஸ். உள்ள ஸ்மார்ட்போன்கள் நிலநடுக்கம் ஏற்படுவதை சிறிது நேரத்திற்கு முன்பாகவே உணரும் தன்மையை பெற்றியிருப்பதாக அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் அறிவியல் இதழில் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.ஆனால் சிறிய அளவிலான நிலநடுக்கத்தை ஜி.பி.எஸ். ஸ்மார்ட்போன்களால் உணரமுடியாது. அதேசமயம் மிதமான மற்றும் தீவிரமான நிலநடுக்கத்தை அவற்றால் முன்னதாகவே உணர்ந்து எச்சரிக்கை செய்யமுடியும்.இதற்கான புதிய அப் உருவாக்கி, அது வெற்றிகரமாக செயல்பாட்டுக்கு வந்தால் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் அதிகமாக பாதிக்கப்படும் பல நாடுகளுக்கு பெரிய உதவியாக இருக்கும். மேலும் நிலநடுக்கத்தால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள்.நன்றி:மாலைமலர்
01 April 2015
உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாத சில வசதிகள்!
இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு
இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை
நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல்
போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி
முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற
கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள்
கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப்
பயன்படுத்தி வருகிறோம். சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத
நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால்,
தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை
எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள்
மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய
மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே
தருகின்றன. இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என
அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத்
தேவைப்படாதவையே. கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம்.
மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால்,
இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும். இதற்கு முதலில் போனில்
settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து
செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில்
"All" என்பதனைக் காணவும். இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத்
தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை
அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான
அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென
கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட்
செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி,
திரையின் வலது மேலாகச் செல்லவும். சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால்,
போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை
அழுத்தி இதனைப் பெறவும். இங்கு "Bandwidth management" என்ற ஆப்ஷன்
கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு "Reduce data usage"
என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத்
தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும்.
இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக்
கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன்.
இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம்
கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதற்கென சரியான முறையில்
அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android
launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில்,
முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க
சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும். இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள்
இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற
ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற
அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன. இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத்
தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை
அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது
எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு
முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து
இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும். ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps
என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி
டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும்.
Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப்
பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப்
செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட
அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம். மேலும், டிஸ்பிளேயின்
எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை
செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி
அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில்,
டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி
அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன்
பெயர் Screebl. இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள
அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி
பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை,
நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை
ஒளியுடன் காட்டும். இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது
என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில்,
நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை
இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன்
ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள
வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux
என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது. திரையின் ஒளி விடும்
தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது.
இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின்
சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி
வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த
கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட்
தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி
இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். இதற்கெனவே,
பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல்,
மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள்
நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான
இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் முன் கூட்டியே முழுச்
சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும்
வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக்
குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக்
குறிப்பிடலாம்.
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில்
மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக்
ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில்
நமக்குக் காட்டப்படுவதாகும். லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த
தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த
நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு,
அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும். இவற்றுடன் மேலும் சில
லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே
கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை
அமைக்கலாம். போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக்
ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும்.
அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத்
தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த: ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில்,
நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும்
தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது,
தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும்.
இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில
கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும்
அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால்,
சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும்.
குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் "Show notifications"
என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி,
அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு
செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு "Manage
labels" என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள்
மீது டேப் செய்திடவும். தொடர்ந்து "Sync messages" என்பதனைத்
தேர்ந்தெடுத்து, "Sync: Last 30 days" என்பதற்கு மாற்றவும். இறுதியாக,
"Label notifications" என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத்
தேர்ந்தெடுக்கவும். முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட
வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள்
அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட: பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில்
சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே,
அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம்.
பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில்
காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில்
காட்டப்படும். ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு
உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க
நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று
உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில்
Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும். அங்கு "Force enable zoom"
என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு
தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு
விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி
அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி
தேவை இருக்காது.
மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும்
என்பது அவசியமில்லை. ஆனால், இவை அனைத்துமே, உங்களுக்கு எப்போதாவது
தேவையாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

Subscribe to:
Posts (Atom)