தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

27 February 2015

நெஞ்சுறுதி கொண்ட பெண் (video)



பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற
விபத்தொன்றில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மருத்துவரான சமிதா
சமன்மலிக்கு 180 மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு கொழும்பு மாவட்ட
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு , அவர் மருத்துவ கல்லூரி மாணவியாக இருந்தபோது
இவ்விபத்து இடம்பெற்றது. மண்டபத்தில் இருந்த கூடாரம் ஒன்று உடைந்து
விழுந்தமையால் அவரது உடலின் ஒரு பகுதி செயலிழந்து போனது.
எனினும் மனம் தளராத அவர் ஓரளவு குணமடைந்ததுடன் தனது கல்வியை பூர்த்தி
செய்த துடன் தற்போது மருத்துவராகவும் சேவையாற்றி வருகிறார்.
எனினும் அவரால் எழுந்து நடக்கமுடியாமல் போனது.
இவ்விபத்து கவனயீனத்தால் ஏற்பட்டதொன்றென கூறிய நீதிபதி இத்தொகையை
வழங்குமாறுபண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின்
முகாமைத்துவதற்கு உத்தவிட்டது.

உலகக் கோப்பை: தென் ஆப்பிரிக்கா இமாலய ரன் குவிப்பு : டிவிலியர்ஸ் அசத்தல் சதம்



கிரிக்கெட் உலகில் சாதனை வீரர் என்ற பெருமையை தொடர்ந்து ஏ.பி. டி
வில்லியர்ஸ் பெற்று வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த ஜனவரி 18
ஆம் தேதி நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 16 பந்துகளில் 50 ரன்களை குவித்து
சாதனை படைத்தார். அதே மேட்ச்சில் 31 பந்தில் சதமடித்து, அதிவேக
சதமடித்தவர் என்ற சாதனையும் படைத்தார்.
இன்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக 64 பந்துகளில் 150 ரன்களை குவித்து
அதிவேகமாக 150 ரன்களை குவித்தவர் என்ற சாதனையையும் படைத்தார். இதில்
கவனிக்கத்தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் இந்த அனைத்து
சாதனைகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகவே நிகழ்த்தியுள்ளார்.
அவருக்கு வெஸ்ட் அணி என்றாலே சர்க்கரை பொங்கல் போலிருக்கிறது...

15 February 2015

எனது தந்தையின் கதை:-பிரபலமாகும் வணிக விளம்பரம்

ஹொங்கொங்கின் மிகப்பெரிய காப்புறுதி நிறுவனமான Metlife உருவாக்கிய வணிக
விளம்பரம் இது. விளம்பரம் வடிவமைக்கப்பட்ட விதமும், கதை சொல்லும் விதமும்
மனதை உருகவைக்கிறது. நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒரு வீடியோ இது.



Thanks:COLOMBO MAIL TODAY

12 February 2015

அல்-ஹஸனியா -இல்ல விளையாட்டுப் போட்டி 2015

எமது பாடசாலை அல்-ஹஸனியாவின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இம்முறையும் மிகச்சிறப்பாக இடம் பெற்றன,இறுதிக்கட்ட நிகழ்வுகள் இன்று (12-02-2015)அதிபர் ஹுஸைன் தலைமையில் இடம் பெற்றது,முறையே,ரூபி, டயமன்ட்,ஸபயர் இல்லங்கள் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன. சில போட்டி நிகழ்வுகள் இதோ,




VIDEO