தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

27 February 2014

WhatsApp to Introduce Voice Calling

Jan Koum, cofounder and CEO of WhatsApp, speaks at Mobile World
Congress in Barcelona, Spain on Feb. 24, 2014.


வட்ஸ்அப்பில் பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம்
செய்யப்படவுள்ளது.
பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான வட்ஸ்அப்பிற்கு 450
மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
கடந்த வாரம் இந்த சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியது. அதைத்
தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தவுள்ளனர்.
அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வட்ஸ் அப் மூலம்
பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதல் கட்டமாக அண்ட்ரோய்ட், அப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம்
செய்யப்பட்டு படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா,
மைக்ரோசொப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும். தற்போது வட்ஸ்அப்பில்
வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த
வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல்
அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது. வைபர் போன்ற
தொழில்நுட்ப சேவைகள் மூலமாக பேசவும், தகவல்களை அனுப்பவும்
முடியும் என்றாலும் வட்ஸ் அப் சேவையே பெரும்பாலான
வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





Thanks:

http://adf.ly/e8MDa


http://adf.ly/e8Mn0

26 February 2014

சர்க்கரை தடவிய இறைச்சி வறுவல்டிமென்ஷியா நோயை தோற்றுவிக்கும்

இறைச்சியை ஒரு குறிப்பிட்ட முறையில் சமைக்கும் விதம்
காரணமாக, அந்த
இறைச்சியை சாப்பிடுபவர்களுக்கு டிமென்சியா என்கிற
நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என்று அமெரிக்க
மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள். பிரவுனிங் என்று
ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சமையல் முறையில்
இறைச்சியில் பல்வேறு மசாலாக்கள் தடவி அதில் கொஞ்சம்
சர்க்கரையையும் தடவி, வாணலியில் எண்ணெய் ஊற்றி சமைப்பது,
அல்லது ஓவனில் வைத்து சமைப்பது அல்லது கிரில்லில்
வைத்து வறுப்பது என்பது பரவலாக கடைபிடிக்கப்படும்
நடைமுறை. இப்படி செய்யும்போது, இதில் தடவப்பட்ட சர்க்கரையும், அந்த
இறைச்சியில் இருக்கும் கொழுப்பும் சேரும்
போது ஒருவிதமான பழுப்பு நிறமாக அந்த இறைச்சி மாறும். அந்த
நிறமாற்றமும் அது தரும் சுவையும் தனித்துவமாக இருக்கும்.
பலருக்கு இந்த தனித்த ருசி மிகவும் பிடிக்கும். இந்த பிரவுனிங் முறையில்
இறைச்சியை சமைக்கும் உணவு உடல்
ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்று நியூ யார்க்கில் இருக்கும்
மவுண்ட் சினாய் மருத்துவ கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள்
கண்டறிந்து எச்சரித்திருக்கிறார்கள். அதாவது இந்த பிரவுனிங்
முறையில் இறைச்சியை சமைக்கும்போது இறைச்சியில் இருக்கும்
புரதச்சத்து அல்லது கொழுப்பு சர்க்கரையுடன் சேர்ந்து
எதிர்வினையாற்றும்போது அட்வான்ஸ்ட் கிளைகேஷன் எண்ட்
என்கிற வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஏஜிஇ
என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக அழைக்கிறார்கள். இப்படியான ஏஜியி
வேதியியல் மாற்றம் ஏற்பட்ட
உணவுகளை சாப்பிட்டால் இதனால் பலவகையான நோய்கள் உருவாகின்றன
என்று ஏற்கெனவே மருத்துவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
குறிப்பாக சர்க்கரை நோய்
உருவாவதற்கு இந்தமாதிரி ஏஜியி வேதியியல் மாற்றம் ஏற்பட்ட
உணவுகளும் முக்கிய காரணி என்று ஏற்கெனவே மருத்துவ விஞ்ஞானிகள்
எச்சரித்திருக்கிறார்கள். தற்போது இத்தகைய
உணவுகள், குறிப்பாக ஏஜிஇ வேதியியல் மாற்றம் ஏற்பட்டிருக்கும்
இறைச்சியை அதிகம்
சாப்பிடுபவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல்
குறைப்பு நோய் அதிகரிப்பதாக நியூயார்க் மருத்துவ
விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். எனவே இந்தமாதிரியான ஏஜிஇ வேதியியல்
மாற்றத்துக்குள்ளான
உணவுவகைகளை சாப்பிடாதீர்கள் என்று அவர்கள்
எச்சரித்திருக்கிறார்கள்.

Source:http://adf.ly/e4vHF

14 February 2014

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முஸ்லிம் வணக்கஸ்தலத்தை மூடுமாறு கோரிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் புதிதாக மீள்
புனர்நிர்மாணம் செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கான வணக்க
ஸ்தலகூடத்தை மூடுமாறு குறித்த வைத்தியசாலையில் உள்ள பெளத்த பிக்குகள்
சுகாதார பணிப்பாளர் சுனில் ஜயசிங்கவிடம்
கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என
இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ்
சாலியவிற்கு முறைப்பாடொன்றை கையளித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பின் அஷ்ரப் ஹூசைன்
கேசரிக்கு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
1994ஆம் ஆண்டு முதல்
வைத்தியசாலையில் சேவை புரியும் முஸ்லிம் ஊழியர்கள்,
வைத்தியர்கள் மற்றும் நோயாளிகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட
முஸ்லிம்களின் தொழுகைக்கான வணக்கஸ்தலம் இடைக்காலங்களில்
உடைக்கப்பட்டு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த வைத்தியசாலையில் முஸ்லிம்களுக்கான வணக்கஸ்தல கூடத்தை
மீள் நிர்மாணிப்பதற்கு வை.எம்.எம்.ஏ.
அமைப்பினருடன் இணைந்து தாங்கள் மீளவும் அதற்கான
அனுமதியினை சுகாதார அமைச்சிடம் பெற்றுக்கொண்டோம். கடந்த
மாதமளவில் குறித்த மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட குறித்த
கட்டிடத்தை சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி திறந்து வைத்தார்.
இருப்பினும் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பெளத்த
விகாரையிலுள்ள சில பிக்குகள் சுகாதாரப் பணிப்பாளர்
சுனில் ஜயசிங்கவிடம் முஸ்லிம்களுக்கான நிர்மாணிக்கப்பட்ட
வணக்கஸ்தலத்தை உடனடியாக அகற்ற வேண்டும். இது பெளத்த நாடு.
இங்கே முஸ்லிம்களுக்கு நினைத்தவாறு வாழ முடியாது என
கோஷமிட்டுள்ளனர்.
முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பிக்குகள் மேற்கொண்டு வரும்
அசம்பாவிதங்களில் இது முதற்தடவையல்ல. இதுவரை நாட்டில் 30
இற்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை முஸ்லிம்களுக்கெதிராக பல்வேறு அசம்பாவித
சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனை இவ்வரசாங்கமோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்
ஷவோ கண்டுகொள்வதில்லை. இலங்கையின் பெளத்த இனவாதிகளால் இந்நாடு
எதிர்காலத்தில் இனக்கலவரங்களுக்கு உள்ளாகும் என்பதில்
எவ்வித சந்தேகமுமில்லை. எனவே, இவ்வாறான
அசம்பாவிதங்களுக்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும்.
எனவே, இதனடிப்படையிலேயே வை.எம்.எம்.ஏ. அமைப்பினரான நாங்கள்
ஒன்றிணைந்து நீதி அமைச்சின் செயலாளர் சுரேஷ் சாலியவிடம்
முறைப்பாடொன்றை கையளித்தோம். இந்நிலையில் குறித்த அமைச்சிற்கு பொறுப்புடையவராக
கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்
நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீமிற்கு இவ்விடயத்தில் பாரிய
பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இதற்கான உரிய
தீர்வு கிடைக்கப்பெறுமென அவர் நம்பிக்கை வெளியிட்டார்.





Source:http://www.virakesari.lk/?q=node/361440

09 February 2014

இஸ்லாத்தை தழுவியது உண்மை, மூன்றாவது திருமணம் பொய் – யுவன் ஷங்கர் ராஜா

பல மாதங்கள் தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவத்தால்
துக்க நிலைக்கு தள்ள பட்ட யுவன், ஒரு நண்பரின் அறிமுகத்தால்
இஸ்லாமிய மதத்தை பற்றி அறிய நேர்ந்தது.
தனக்கு எதோ ஒரு விதத்தில் ஒரு ஆத்மா திருப்தி கொடுத்த
இஸ்லாமிய மதத்திற்கு தன்னை அர்பணிக்க முடிவு செய்தார். இது நடந்து
கிட்டத்தட்ட ஒன்றறை மாதம் ஆகிவிட்டது ஆனால்
சமீபத்தில் நடைபெற்ற விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணாவின்
திருமணத்தில் தான் வெளி உலகக்கு தெரிய வந்தது. இந்த திருமணத்தில்
இஸ்லாமிய மத சார்ந்த பெண் ஒருவருடன் வந்த
யுவன் அது அவரது மனைவி என்றும் மூன்றாவது கல்யாணம்
செய்து விட்டார் எனவும் பரவலாக பேசப்பட்டது. இதை அறிந்த யுவன் தனது
ட்விட்டேர் தளத்தில் இன்று எல்லாரோடைய
வினாவுக்கும் விடை அளித்து உள்ளார். Yuvanshankar Raja @Raja_Yuvan I'm
not married for the third time. That news is
fake and yes I follow Islam and I'm proud about
it. Alhamdhulillah. My family supports my
decision and there is no misunderstanding
between me and my dad. ஆம் நான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியுள்ளேன்
மூன்றாவது திருமணம் பற்றிய செய்தியில் துளியும்
உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். கண்டிப்பாக என்னுடைய மாற்றத்துக்கு
எந்த வித எதிர்ப்பும் என்
அப்பா தெரிவிக்க வில்லை என்று தெரிவித்துள்ளார்.
Thanks:
newsfirst.lk/tamil/2014/02/இஸ்லாத்தை-தழுவியது-உண்மை/

01 February 2014

சில சுவாரஸ்யமான காணொளிகள்














சில   சுவாரஸ்யமான காணொளிகள்

முதலாவது பெண் நடுவர்

கிரிக்கெட் உலகில் முதல் பெண் நடுவராக நியூசிலாந்தை சேர்ந்த
கேத்தி கிராஸ் ஐ.சி.சி. யினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். டுபாயில்
இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்
கூட்டத்தின் போதே கேத்தி கிராஸை பெண் நடுவராக
அறிவித்துள்ளது.
நடப்பாண்டிற்கான நடுவர்கள் பட்டியல் ஐ.சி.சி. யினால்
வெளியிடப்பட்டது. குறித்த பட்டியலில் கேத்தி கிராஸின் பெயர்
இடம்பெற்றுள்ளது. இவர் ஐ.சி.சி. கிரிக்கெட் லீக் போட்டிகளில் நடுவராக
பணியாற்றுவார்.
இதேவேளை, ஐ.சி.சி. தன்னை நடுவராக
அங்கீகரித்திருப்பது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
என்று கேத்தி கிராஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Source:http://adf.ly/cujIJ