தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

12 February 2013

இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டது சவூதி - தூதரை திருப்பியழைத்து இலங்கைக்குப் பதிலடி

உலக நாடுகள் மத்தியில் காலங்காலமாகப் பேணி­
வந்த தனது நற்பெயருக்கு இலங்கை களங்கத்தை ஏற்படுத்திவிட்டதாகக் குற்றஞ்சாட்டியுள்ள சவூதி அரேபியா, இலங்கையுடன் அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முழுமையாகத் துண்டித்துக்கொள்ளத் தீர்மானித்­ துள்ளது. இதையடுத்து, சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூது­ வரை அந்நாடு திருப்பி அழைத்துள்ளது. இதன்மூலம் இலங்கை - சவூதி ஆகிய இரு நாடுகளுக்கிடையில் பாரிய விரிசல் ஏற்­
பட்டுள்ளதாக இராஜதந்திர வட்­ டாரங்களிலிருந்து தெரியவருகிறது.
சவூதியின் இலங்கைக்கான தூதுவர் இன்று இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்­ கின்றார்.
மூதூரைச் சேர்ந்த ரிஸானா நபீக்கிற்கு சவூதி மரணதண்­ டனை நிறைவேற்றியதன் மூலம் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்திய இலங்கை அரசு, சவூதிக்கான இலங்கைத் தூதரையும் திருப்பி அழைத்துக்கொண்டது.
அத்துடன், இலங்கையிலிருந்து சவூதிக்குப் பணிப்பெண் களை அனுப்புவதில்லையென்றும், இலங்கை கடும்போக்கைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்துள்ளது.
இதையடுத்தே சவூதி - இலங்கை இராஜதந்திர உற­ வில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூதூர் ரிஸானா நபீக் விவகாரத்தை மையப்படுத்தி, இலங்கை அரசு நடந்துகொண்ட முறையானது தாம் காலம்காலமாக உலக நாடுகள் மத்தியில் பேணிக்காத்துவந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள சவூதி அரசு, சகல வளங்களிலும் வல்லமை படைத்த எம்மை சிறிய நாடொன்று துவம்சம் செய்ய முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.
இதனால் இலங்கைக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் உடன் நிறுத்திக்கொள்ளப்போவதாகவும்,
இனி எந்தவொரு பணியாளர்களும் இலங்கையிலிருந்து பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், சவூதியில் தற்போது கடமையாற்றும் இலங்கைப் பணியாளர்களைக் கூடுமானவரையில் திருப்பி அனுப்ப முயற்சிசெய்வதாகவும் சவூதியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இன்று சவூதி புறப்பட்டுச் செல்லும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர், கடந்த வியாழக்கிழமை பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேராவைச் சந்தித்து சவூதி அரசின் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் நம்பகரமாகத் தெரியவருகிறது.
இதேவேளை, கடந்த ஜெனிவாக்கூட்டத் தொடரில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்ட தாம், இம்முறை கூட்டத் தொடரில் பங்குகொள்ளாவிட்டாலும், இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமாறு கோரி தமது நட்பு நாடுகளுடன் பேச்சு நடத்தவுள்ளதாகவும் சவூதி அரேபியத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
source:www.sudaroli.com/index.php?view=details_news&newsid=eNortjKxUjI0MDBRsgZcMA_DAmA|

No comments:

Post a Comment