தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 June 2012

தண்ணீர்... தண்ணீர்!

உ யிர்களின் ஆதாரமே தண்ணீர். மரமோ மனிதனோ... எதுவாக இருந்தாலும் இயக்கத்தின் உயிர்நாடி காற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது தண்ணீர்தான்.
மனித உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கிறது. சராசரி மனித எடையில் (70 கிலோ) தோராயமாக 42 லிட்டர் தண்ணீர் உள்ளதாக உடலியல் உலகம் சொல்கிறது. அதாவது மொத்த உடல் எடையில் தண்ணீரின் அளவானது 60 சதவிகிதம். ஆனாலும், திசுக்களுக்குத் திசு தண்ணீரின் அளவு மாறுபடும்.

28 June 2012

அன்டிபையோடிக்- தொடர்பான வயிற்றோட்டம்Antibiotic-Associated Diarrhea (Tamil)

அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் என்பது என்ன?
அன்டிபையோடிக் உட்கொள்ளும் சுமார் 18% (ஏறக்குறைய 5 இல் 1) கைக்குழந்தைகளுக்கும் நடை குழந்தைகளுக்கும் வயிற்றோட்டம் உண்டாவது சகஜமானதே. எந்த வகையான அன்டிபையோடிக்னாலும் இது ஏற்படலாம். 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளில் அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் ஏற்படுவது குறைவானதாகவே இருக்கின்றது.
அதிகமான பிள்ளைகளில் இந்த வயிற்றோட்டம் கடுமையற்றதாகும். உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை (திரவங்கள்) உட்கொள்ளாவிட்டால் அல்லது மலம் கழிக்கும்போது ஏராளமான நீர்மத்தை இழந்தாலேயன்றி இந்த வயிற்றோட்டம் பொதுவாக ஆபத்தானதல்ல. உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை குடிப்பதை உறுதிசெய்யவும். சிறுநீரின் அளவு குறைதல், சினம் கொள்ளுதல், களைப்பு, வாய் உலர்தல் என்பன உடலில் நீர்வறட்சி ஏற்பட்டதற்கான அடையாளங்களாகும். ஒரு பிள்ளை சந்தோஷமாகவும் விளையாடிய வண்ணமும் இருப்பது உடலில் நல்ல நீர்த்தன்மை இருப்பதை குறிக்கின்றது.

அமொக்ஸிஸிலின் (Amoxicillin) tamil

உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். அமொக்ஸிஸிலின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?
அமொக்ஸிஸிலின் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியாவால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
அமொக்ஸிஸிலின் மருந்து, அமொக்ஸில்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அமொக்ஸிஸிலின் மருந்து கப்சியூல், மெல்லும் வில்லை, மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கும்.

குடல்வால் அழற்சி Appendicitis (Tamil)

குடல்வால் அழற்சி என்றால் என்ன?
குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை.

குடல்வால் அழற்சிக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

குடல்வால் அடைக்கப்பட்டு வீங்கும்போது குடல்வால் அழற்சி உண்டாகிறது.

குடல்வால் அழற்சி பின்வரும் அறிகுறிகளால் காண்பிக்கப்படும்:
தொப்புழைச் சுற்றி அல்லது வயிற்றின் வலதுகைப்பக்க அடிப்பாகத்தில், வலி; அந்தப் பகுதியை இலேசாக அழுத்தும்போது, ஆழமாக சுவாசிக்கும்போது, மற்றும் அசையும்போது வலி அதிகரிக்கும்
பசியின்மை
குமட்டுதல்
வாந்தி
காய்ச்சல்

27 June 2012

Smoking Haram-Why?



The declaration that "There is no God Worthy of being worshipped except Allah & that Muhammad is the Messenger of Allah", demands that the Muslim accepts the Decrees set by Allah and by His Messenger-Muhammad (p.b.u.h.)
Islam is a Revelation from Allah with a complete code of life. It tells what is good and what is evil: Allah says in the Holy Quran: And We have shown him (man) the two ways (goodand evil). ( Quran 90/10 )
He allows them all that is good and lawful, and prohibits them as unlawful all that is evil (things, deeds, beliefs, persons, foods, drinks, etc.). ( Quran 7/157 )

04 June 2012

நம் வாழ்நாளில் காண முடியாத அறிய நிகழ்வைக் காண













சூரிய கிரகணம் நமக்குத் தெரியும். நிலா பூமிக்கும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வந்து சூரியனை மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம். இந்நிகழ்ச்சிஅடிக்கடி நடைபெறுவதை நாம் பார்த்திருக்கிறோம். சந்திர கிரகணமும் நாம் அறிந்ததே. ஆனால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் இன்னொரு கோளான வெள்ளி சூரியனின் பரப்பை மறைக்கும் நிகழ்வு ஒன்று உண்டு. அதற்கு வெள்ளிக் கடவு.(Venus Transit) என்று பெயர்.இது மிகவும் அறிய நிகழ்வாகும். இந்நிகழ்வை ஜூன்6, 2012 அன்று காலையில் சூரியன் உதித்ததில் இருந்தே இதனைக் காணலாம்.
இதுபோல் அடுத்த நிகழ்வு 125 ஆண்டுகளுக்குப் பிறகு 2117 டிசம்பரில்தான் நடக்கும். ஒரு நூற்றாண்டில் இரண்டு முறை மட்டுமே வெள்ளிக் கடவு நடக்கும்.
சூரிய கிரகணம் போல் இது சூரியனை முழுவதுமாக மறைக்காது. சூரியனின் பரப்பை சிறு கருப்புப் பந்து கடப்பது போல் சூரியனை இடமிருந்து வலமாகக் கடக்கும் இதனை வெறும் கண்களால் காண இயலாது. இந்த நிகழ்வின்போது சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. அதற்கென்று வடிகட்டி(filter) பொருத்தப்பட்ட கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும்.புகை படியவைக்கப்பட்ட கண்ணாடிகள் வழியாகவோ கூலிங் க்ளாஸ் வழியாகவோ பார்க்கக் கூடாது.
இதைப் பார்க்க எளிய வழி சிறிய முகம்பார்க்கும் கண்ணாடி சூரிய ஒளியை அறைக்குள் ஊசி முனை ஒரு அட்டையில் அளவுள்ள துளையின் வழியே செலுத்தி பிரதிபலித்து அந்த பிம்பம் சுவற்றில் விழும்படி செய்ய வேண்டும். அந்த பிம்பம் வட்ட வடிவமாக இருக்கும். அதில் வெள்ளி கோள் சிறு புள்ளியாக கடந்து செல்வதை பார்க்கமுடியும்.
சுவற்றில் விழும் பிம்பத்தைத்தான் பார்க்க வேண்டுமே தவிர கண்ணாடியிலும் சூரியனைப் பார்க்கக் கூடாது.

படத்தில் உள்ளதுபோல் ஒரு பந்தில் சிறுமுகம் பார்க்கும் கண்ணாடித் துண்டை ஒட்டி சூரிய ஒளியை பிரதிபலிக்கச் செய்யலாம். சூரிய ஒளியின் திசையை எளிதில் மாற்றி அமைத்து சுவற்றில் பிம்பம் விழச் செய்யவே பந்தின்மீது கண்ணாடி ஒட்டப்பட்டு ஒரு டம்பளர் மேல் வைக்கப்பட்டுள்ளது.

 மேற்கண்ட படத்தில்உள்ளதுபோலவும்  பார்க்கலாம்.

(தினந்தோறும் கிழக்கு வானில் நட்சத்திரம் ஒன்று  ஜொலிப்பது தெரியும்.உண்மையில்  அது நட்சத்திரம் அல்ல. வெள்ளிக் கோளாகும். மாலையில் இதனை மேற்கிலும் காணலாம்.)

   இந்த  நிகழ்ச்சியை June 6ஆம்தேதி காலை 5.50 முதல் 10.30 வரை காணலாம்.
   உங்கள் பிள்ளைகள் ,தம்பி தங்கைகளுக்கு பாதுகாப்புடன் இந்நிகழ்வை காட்டி மகிழுங்கள். 




Thanks tnmurali.blogspot.com



03 June 2012

உலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக் காண உதவும் கூகிளின் Art Project

உலகத்தில் இருக்கும் முக்கியமான மியூசிங்களில் இருக்கும் அரிய புகைப்படங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கவில்லை என ஏங்குபவரா நீங்கள்? கூகிளின் Art Project சேவை மூலம் வான்காப் போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களை தத்ரூபமாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. உலகின் முக்கியமான 17 மியூசியங்களுடன் கூகிள் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள இந்த சேவை கலை ரசிகர்களுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும். இந்த சேவையில் உயர்தர அளவில் (High Resolution) உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்களை அப்படியே அந்த மியூசியத்தில் நின்று பக்கத்திலிருந்து பார்ப்பது போன்ற உணர்வினை அறியமுடியும். 

இதனை விர்ச்சுவல் சுற்றுலா எனச் சொல்லலாம்.(Virtual Tour). ஒவ்வொரு புகைப்படமும் 14000 மில்லியன் பிக்சல்கள் மற்றும் அதற்கு மேலுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதால் அந்த இடத்திற்குச் செல்லாமலே உண்மையிலேயே பார்ப்பது போன்று இருக்கும். இந்த சேவை கூகிளின் Streetview தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. இதைத் தான் கூகிளின் Earth மற்றும் Maps சேவையில் பயன்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 360 டிகிரி கோணத்தில் பனோரமா வகையில் சுற்றிச்சுற்றி எல்லாத் திசையிலும் நகர்த்திப் பார்க்க முடியும் என்பதே இதன் சிறப்பாகும்.
Explore world Museums with Google Art Projectஇதன் மூலம் 486 கலைஞர்களால் உருவாக்கப்பட்ட 1061 புகைப்படங்களை, 385 விர்ச்சுவல் அறைகளில், 6000 Streetview வகையிலான புகைப்படங்களாக காணமுடியும். இந்த இணையதளத்தில் சென்று ஒவ்வொரு மியூசியமாகத் தேர்வு செய்து சுற்றிப்பார்க்கலாம். ஒவ்வொரு அறையிலும் உள்ள புகைப்படங்களைப் பொறுமையாக காணலாம். எவரும் விரட்டப் போவதில்லை. வேண்டுமெனில் குறிப்பிட்ட புகைப்படங்களை மட்டும் பார்க்கும் வசதியும் இருக்கிறது. சில புகைப்படங்கள் மட்டும் தெளிவாகக் காட்டப்படவில்லை. இதற்கு கூகிள் காப்பிரைட் காரணமாக சில புகைப்படங்களை காட்ட உரிமையில்லை எனத்தெரிவித்துள்ளது.


இணையதளத்தின் இடப்புறத்தில் நகர்த்திப் பார்க்க நான்கு திசைகளுக்கான அம்புக்குறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. வலதுபுறத்தில் உள்ள Navigate Floor Plan என்பதைக் கிளிக் செய்தால் மியூசியத்தின் மேப் காட்டப்படும். அதில் குறிப்பிட்ட அறையைக் கிளிக் செய்தால் அந்த அறைக்குள் நீங்கள் இருப்பீர்கள். அழகான நேவிகேசன் பார்த்தீர்களா?

இதில் தற்போது 17 மியூசியங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் மேலும் இணைக்க இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட சில முக்கிய கலைஞர்களின் படைப்புகளையும் காணமுடியும். கண்டிப்பாக போய் வாருங்கள்.

"Starry Night" - Vincent Van Gogh
"Return of Prodigal Son" - Rembrandt
"No Woman, No Cry" - Chris Ofili

இணையதள முகவரி : http://www.googleartproject.com/

02 June 2012

Wi-fi போகின்றது...Li-fi வருகின்றது...

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு (உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக)
.
இன்டர்நெட் தொழிநுட்பத்தில் மறக்க முடியா பெயர் Wi-fi. வயர் இல்லாமல் இன்டர்நெட் உபயோகிக்க பயன்படுத்தும் இந்த தொழில்நுட்பத்திற்கு விடை கொடுக்கும் நேரம் நெருங்கிக்கொண்டிருக்கின்றது.
டாக்டர்கள் முஸ்தபா அப்கனி, கார்டன் போவே மற்றும் பேராசிரியர் ஹெரால்ட் ஹாஸ் ஆகியோரின் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புரட்சிகர Li-fi தொழில்நுட்பம் எதிர்க்கால இன்டர்நெட் உலகை மாற்றியமைக்க போவதாக அறிவியல் உலகம் கருதுகின்றது.
wifi தொழில்நுட்பத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் அது ரேடியோ அலைவரிசை சிக்னல்களை உபயோகிப்பது தான். இந்த சிக்னல்கள் மற்ற அலைவரிசையுடன் குறுக்கிட்டு குழப்பம் ஏற்படுத்த கூடாது என்பதற்காக தான் விமானம், மருத்துவமனை போன்றவற்றில் wifi-யை தடை செய்கின்றனர்.
Visible light communication (VLC) என்று அழைக்கப்படும் Lifi தொழில்நுட்பத்தில், ஒளியை கொண்டு தகவல்கள் அனுப்படுவதால் மேலேகூறிய பிரச்சனைகள் வர வாய்ப்பில்லை. மேலும் தண்ணீருக்கு அடியிலும் இன்டர்நெட் பயன்படுத்தலாம்.



இன்னும் ஆச்சர்யம் என்னவென்றால், இந்த தொழில்நுட்பம் wifi-யை விட ரொம்ப விலை மலிவானது. மேலும் மிக வேகமானதும் கூட. 10 Gbps வரை இதன் வேகம் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது 1.5 hrs ஓடக்கூடிய ஒரு High Definition வீடியோவை 30 நொடிகளில் டவுன்லோட் செய்திடலாம்.
இன்னும் ஐந்து வருடங்களில் இந்த தொழில்நுட்பம் நம் கணிப்பொறிகள் மற்றும் மொபைல் போன்களை ஆட்கொள்ள ஆரம்பித்துவிடும் என்று சமீபத்திய EFY (Electronics for You) இதழ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இருப்பது போல இதிலும் குறைகள் உண்டு. இருப்பினும் பாதுகாப்பு மற்றும் வேகத்தில் தலைச்சிறந்து இருப்பதால் அந்த குறைகளை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஆய்வாளர்கள் இறங்கியிருக்கின்றனர்.
நன்றி: ஆஷிக் அஹமத் , EFY , New Scientist