தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web 08 Apr 2025

16 January 2012

4000 பேருடன் தாண்ட உல்லாசக் கப்பல்

4000 இற்கும் அதிகமானோருடன் பயணம் செய்த பாரிய உல்லாச கப்பலொன்று இத்தாலிய கரையோரத்தில் கவிழ்ந்தால் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலரை காணவில்லை என அறிவிக்கப்பபட்டுள்ளது.
கொஸ்டா கொன்கோர்டினா எனும் இக்கப்பலில் சுமார் 3200 பயணிகள் உட்பட 4000 இற்கும் அதிகமானோர் பயணம் செய்தனர். 290 மீற்றர் நீளமான இக்கப்பல் கிக்லியோ தீவுக்கருகிலுள்ள பவளப்பாறையில் நேற்றிரவு மோதியதையடுத்து கப்பல் ஒருபுறமாக சரிந்தது. கப்பல் மோதிய சத்தம் அவ்வூரை கிலிகொள்ளச் செய்துள்ளது.
இத்தாலி, ஜேர்மன், பிரான்;ஸ், பிரிட்டன் உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இக்கப்பல் பயணிகளில் அடங்குவர். கப்பலிலிருந்த பயணிகளும் 1000 ஊழியர்களும் கப்பலிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். எனினும் சுமார் 200 பேர் இன்னும் கப்பலில் இருப்பதாக இன்று காலை அதிகாரியொருவர் தெரிவித்தார். மீட்புப் பணிகளில் ஹெலிகொப்டர்களும் ஈடுபட்டுள்ளன.
பயணிகள் இரவு உணவு உட்கொள்ள அமர்ந்திருந்தபோது கப்பல் விபத்துக்குள்ளாகியதாக பயணியொருவர் தெரிவித்துள்ளார். கப்பல் சரியத் தொடங்கியதையடுத்து உயிர்தப்புவதற்காக கடலில் குதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இக்கப்பல் 5 உணவு விடுதிகள், 13 மதுபான நிலையங்கள், 4 நீச்சல் தடாகங்கள், என்பனவற்றையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஹலிவுட் நடிகைகள் நடிகர்கள் என இக் கப்பலில் பலர் இருந்ததாவும் மேலும் அறியப்படுகிறது.
நன்றி :மனிதன்.கொம்

No comments:

Post a Comment