தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

20 March 2011

பம்பலபிடி கடலில் இளைஞன் கொலை ,நேரடி வீடியோ

பம்பலபிடி கடலில் இளைஞன் கொலை

கிளி வடிவத்தில் இருக்கும் அதிசய பூ

இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயம். அதிசயங்களுக்குப் பஞ்சமே வராது. அது போன்ற அதிசயங்களில் ஒன்றுதான் பறக்கும் கிளி வடிவத்திலான அதிசயப் பூ. இந்த பூ. வடிவத்தில் மட்டும் கிளிபோல் அல்லாமல் சிறகு, அலகு, உடல் என ஒவ்வொரு பாகமும் வெவ்வேறு வர்ணங்களில் இருப்பது பஞ்சவர்ணக் கிளியை நினைவுபடுத்துகிறது. தாய்லாந்தில் காணப்படும் `பேரட் பிளவர்’ என்னும் இந்த அதிசயப் பூச்செடி அழியும் நிலையில் பாதுகாக்கப்படும் ஒரு செடியாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தச் செடி பூத்துக் குலுங்கியது. இறைவன் திருமறையில்.. நீங்கள் கேட்ட ஒவ்வொன்றையும் அவன் உங்களுக்கு வழங்கினான். அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் அதை உங்களால் எண்ணி முடியாது. மனிதன் அநீதி இழைப்பவன்; நன்றி கெட்டவன். (அல்குர்ஆன் 14:34) தேடித்தந்தவர்: அபு அஹ்சன். நன்றி tntj.net

17 March 2011

ஜப்பானில் பூகம்பம் - சுனாமி

ஜப்பானில் பதிவுகள் ஆரம்பித்த காலத்திலிருந்து இதுவரை இல்லாத மிகக் கடுமையான பூகம்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அந்நாட்டின் வட கிழக்கு கரையோரப் பகுதியை பல மீட்டர்கள் உயரமுடைய சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. கரையோர நகரான செண்டாயில் முந்நூறு வரையிலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலரைக் காணவில்லை என்றும் பொலிசார் கூறுகின்றனர். கரிய நிறத்தில் கடலில் பெருந்திரளாக புகுந்து கார்கள், வீடுகள் படகுகள் போன்றவற்றை நிலத்துக்குள் நெடுந்தூரம் இழுத்து வந்து, பின்னர் அலை பின்வாங்கிபோது எல்லாமும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன. ரிக்டர் அளவையில் எட்டு புள்ளி ஒன்பது புள்ளிகளை இந்த நிலநடுக்கம் கொண்டிருந்ததாக அமெரிக்க நிலவியல் ஆய்வுக் கழகம் கூறுகிறது. ஜப்பானில் சுனாமியின் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பின் அளவானது அங்கு ஒட்டு மொத்த அழிவவு குறித்த மதிப்பீட்டைச் செய்வதை சிரமாக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுமார் 100 பேரை ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. அதற்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. பெரிய கடற்கரை நகரான செண்டாயும், அதனைச் சுற்றவரவுள்ள பண்ணை நிலங்களும், சுனாமி அலைகளால் அடித்துச் செல்லப்பட்டன. அதேவேளை, அருகில் உள்ள பகுதிகளில் தீ பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பகுஷிமா டேய்சி அணு உலையில் குளிரூட்டும் முறைமை பழுதடைந்ததை அடுத்து அது மூடப்பட்டது. அந்தப்பகுதியில் இருந்த 2000 பேர் வரையிலான மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு கேட்க்கப்பட்டனர். மியாகி மாவட்டத்தில் உள்ள மற்றுமொரு அணு உலையில் ஒரு தீச் சுவாலையும் ஏற்பட்டது. தமது நாட்டில் நிலைகொண்டிருக்கும் அமெரிக்க படையினர் நிவாரண நடவடிக்கையில் உதவ வேண்டும் என்று ஜப்பான் கோரியுள்ளது. ஜப்பான் அருகே கடலில் நடந்த நிலநடுக்கம் பசிபிக் வட்டகை நாடுகளில் சுனாமி அபாயம் எழுந்துள்ளது. ஆனாலும் ஹவாயி தீவுகளைச் சென்றடைந்த முதல் சுனாமி அலை ஒரு மீட்டருக்கும் குறைவான உயரமே இருந்ததாகவும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. லத்தீன அமெரிக்க நாடுகளான மெக்ஸிகோ, சிலி ஆகியவற்றிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உருவாகின்ற சில சுனாமி அலைகள் பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளின் மொத்த தரை மட்டத்தை விட உயரமாக இருக்கக்கூடும் என்று செஞ்சிலுவைச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இதனிடையே, பிலிப்பைன்ஸ், குரில் தீவுகள், தாய்வான் போன்ற நாடுகளை ஒப்பீட்டளவில் உயரமும் சக்தியும் குறைவான சுனாமி அலைகள் சென்றடைந்துள்ளன. நன்றி BBC தமிழோசை

"سبحان الله وبحمده سبحان الله العظيم" إنا نحن نزلنا الذكر وانا له لحافظون HOLY QUR'AN PRINTING COMPLEX , MADINA MUNAWARA

ஆனைமுடியில் அரிய ஆரஞ்சு தவளை

தென்னிந்தியாவின் ஆனைமுடி மலை முகட்டில் அரிய வகை புதிய தவளை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பளிச்சென்று தெரியும் சிவப்பு ஆரஞ்சு வண்ணத்தில் இந்தத் தவளை இருக்கிறது. ஆனைமுடி மலையுச்சியில் மூன்று சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கும் குறைவான பகுதியிலேயே இந்தத் தவளை இனம் வாழ்கிறது. ஆயிரத்துத்துக்கும் குறைவான எண்ணிக்கையிலேயே இந்த தவளைகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தத் தவளைக்கு ராவ்செஸ்டர்ஸ் ரெஸ்பிளெண்டென்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. புதுடில்லி பல்கலைகழகத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ்.டி.பிஜு தலைமையில் நான்கு பேர் கொண்ட அறிவியலாளர் குழு இந்தத் தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தவளைகளின் உடலின் மேற்பகுதியில் இருந்த சில சுரப்பிகளும் வீக்கங்களும் அவற்றை தேரையைப் போலக் காட்டியதாக அவர் கூறுகிறார். மரத்தில் வாழக்கூடிய தவளைகளில் இந்த இனத்துக்கு மட்டுமே இப்படியான சுரப்பிகள் இருக்கின்றன. பெரிது பெரிதாக இருக்கும் சுரப்பிகளின் பயன் புரியாத புதிராகவே உள்ளது. அது குறித்த ஆய்வில் நாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றோம். டாக்டர் எஸ்.டி.பிஜு 2001 ஆம் ஆண்டு இந்த இனத்தை முதலில் தான் கண்டதாகவும், இது புதிய இனம்தான் என்பதை பல கோணங்களிலும் உறுதிப்படுத்த தனக்கு 7 ஆண்டுகள் ஆகியது என்றும் அவர் கூறுகிறார். "சீனா, லாவோஸ், கம்போடியா வியட்நாம், இந்திய துணைக்கண்டத்தில் இருக்கும் நாடுகளில் வாழும் தவளை இனங்களுடன் இந்தத் தவளையை ஒப்பிட்டு பார்த்து, பலவிதமாக ஆராய்ந்து, இறுதியில் கரண்ட் சயின்ஸ் எனப்படும் அறிவியல் சஞ்சிகையில் இந்தக் கண்டுபிடிப்பினை வெளியிட்டோம்." என்கிறார் பேராசிரியர் பிஜு. இந்தியாவில் தவளையின ஆய்வுகளில் முன்னோடியாக இருந்த டாக்டர் சி ஆர் நாராயண் ராவ் அவர்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இந்தத் தவளையின் பெயரில் ராவ் சேர்க்கப்பட்டுள்ளது என்று டாக்டர் பிஜு சுட்டிக்காட்டுகிறார். மிகச்சிறிய ஒரு பகுதியில், மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழலில் இப்படியான ஒரு இனம் அழிவின் விளிம்பில் வாழ்ந்துவருவது அறிவியலாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. உலகில் மொத்தத்தில் ஆறாயிரத்துக்கும் கூடுதலான தவளை இனங்கள் இருப்பதாக கண்டுதுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் பாதியளவு ஏதோ ஒரு வகையில் அச்சுறுதல்லுக்கு உள்ளாகியுள்ளன. நன்றி BBC தமிழோசை

அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது

அடிக்கடி டீ காஃபி குடிப்பவர்களுக்கு இருதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது என்று குறிப்புணர்த்தும் புதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிட்டத்தட்ட நாற்பதாயிரம் பேரை பதிமூன்று ஆண்டுகளாக கண்காணித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்கன் ஹார்ட் அஸ்ஸொஸியேஷன் என்ற அமைப்பின் சஞ்சிகையில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. டீ குடிக்கும் பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு நாளில் ஆறு தடவை டீ அருந்துபவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவதற்கான ஆபத்து மூன்றில் ஒரு பங்கு குறைவு என்று இந்த ஆராய்ச்சி கூறுகிறது. காஃபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் நன்மை ஓரளவுக்கு இருக்கிறது. ஆனால் டீ குடிப்பவர்களுக்கு கிடைக்கும் அளவுக்கு நன்மை காஃபியில் இல்லை. ஒரு நாளில் இரண்டு முதல் நான்கு கோப்பைகள் டீ அருந்துபவர்களுக்கு அதனை விட குறைவாக டீ அருந்துபவர்களைக் காட்டிலும் இருதய நோய் வருவதற்கான ஆபத்து இருபது சதவீதம் குறைவாக உள்ளது என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. ஆனால் குடிக்கும் டீயின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால், ஆபத்தின் அளவு மென்மேலும் குறைகிறது என்றில்லை. ஒரு கட்டத்தில் இந்தப் பலன் நின்று போய்விடுகிறது. நெதர்லாந்தில் மக்கள் டீ குடிக்கும்போது அதில் சில துளிகள்தான் பால் விடுவார்கள், ஆனால் இந்தியர்கள் இலங்கையர்கள் எல்லாம் மொத்தமாக பாலிலோ அல்லது தண்ணீருக்கு சமமான பாலிலோ டீ அருந்துபவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்த அளவுக்கு பால் விட்டு டீ குடிக்கும்போது இப்படியான மருத்துவ பலன் கிடைக்குமா என்பது தெரியவில்லை. டீயில் இருக்கும் ப்லவனாய்ட்ஸ் என்ற வஸ்துதான் இருதயக் கோளாறு ஏற்படுவதிலிருந்து பாதுகாப்பு தருகிறது என்று சொல்லப்படுகிறது. டீயில் பால் சேர்க்கும்போது பலன் கிடைக்காமல் போய்விடுகிறதா என்பதை இனிமேல்தான் ஆராய்ச்சிகள் உறுதிசெய்ய வேண்டும். நன்றி BBC தமிழோசை

01 March 2011

கிபீர் விமானங்கள் இரண்டு நேருக்குநேர் மோதி விபத்து:

கம்பஹா மாவட்டத்தில் இரண்டு கிபீர் விமானங்கள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக விமானப்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். விமானப்படையின் அறுபதாவது நிறைவையொட்டி ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்டிருந்த விமானப் படைக்கு சொந்தமான கிபீர் ஜெட் விமானங்கள் இரண்டே நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மேலும் விபத்தில் சிக்கிய விமானிகள் இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகுறது. இதேவேளை சம்பவ இடத்திற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சற்றுமுன் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பில் உருவானவை கிபீர் விமானங்கள். ஆரம்பகாலங்களில் இஸ்ரேலிய தொழில்நுட்பவியலாளர்கள் தயாரிப்புகளுக்கு அதிகமான பங்களிப்பு செய்திருந்த போதிலும் பின்னர் அதில் அமெரிக்காவின் ஊடுருவலும் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. கிபீர் போர் விமானங்களை இலங்கை 1995,96 ஆம் ஆண்டுகளில் முதலில் கொள்வனவு செய்தது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் உக்கிரகட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் கிபீர் விமானங்கள் படையினரால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டன. விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துவதற்கு இந்த கிபீர் விமானங்களே உதவின. இலங்கை விமானப் படையினரிடம் கிபீர் சி2 மற்றும் சி7 ரக விமானங்கள் ஐந்திற்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளதுடன் மேலதிக இரண்டு விமானங்கள் பயிற்சிக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு விமானத்தின் பெறுமதி சுமார் 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். நன்றி வீரகேசரி இணையம்

ஒரு நோயாளிக்கு இரு இதயங்கள்! : மருத்துவ உலகின் புதிய சாதனை! (காணொளி இணைப்பு) _

மருத்துவ வரலாற்றில் மிக அரிதான சத்திரசிகிச்சை ஒன்றை அமெரிக்க வைத்தியர்கள் அண்மையில் வெற்றிகரமாக முடித்தனர். நோயாளி ஒருவருக்கு மேலதிகமாக இன்னொரு இதயத்தினைப் பொருத்தியே அவர்கள் இச்சாதனையைப் புரிந்தனர். சென் டியாகோ தோர்டன் வைத்தியசாலையிலேயே இச்சத்திரசிகிச்சை இடம்பெற்றது. டைசன் ஸ்மித் என்ற 36 வயதான நபருக்குச் சாதாரண இதயத்தின் அருகில் வலது பக்கத்தில் இன்னொரு இதயம் இவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது. இதயத்தின் இடது இதயவறை, புது இதயத்துடன் சத்திரசிகிச்சையின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒக்சிஜன் ஏற்றம் பெற்ற குருதி, பழைய இதயத்திலிருந்து புதிய இதயத்திற்குப் பாய்ச்சப்படும். இதன்பிறகு புதிய இடது இதயக்கீழறையிலிருந்து குருதியானது பெருநாடியின் மூலம் உடலின் பாகங்களுக்கும் பாய்ச்சப்படும். ஓர் இதயம் செய்யும் வேலையை இரு இதயங்களும் பகிர்ந்துகொள்ளும். குறித்த நபரின் இதயம் பலவீனமடைந்திருந்தமையினாலேயே அவருக்கு இன்னுமொரு இதயம் பொருந்தப்பட்டது. இச்சத்திர சிகிச்சையானது 'ஹெடரோடொபிக் ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேசன்' என அழைக்கப்படுகின்றது. மிகவும் அரியதொரு சத்திரசிகிச்சையாக இது கருதப்படுகின்றது. இது நோயாளின் வாழ்நாளை 10 வருடங்களால் அதிகரிக்கும் என சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இரு இதயங்களும் ஒரே நேரத்தில் துடிக்கும் காட்சியையே இங்கு காண்கிறீர்கள். நன்றி வீரகேசரி இணையம்

ஆபத்தை முன்கூட்டியே கண்டறியும் உபகரணம் அறிமுகம்

பாதசாரிகள் மற்றும் முன்னால் வரும் வாகனங்களை இணங்கண்டு கொள்வதுடன் அவை மோதலாம் என்ற நிலையில் அது தொடர்பில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்புவது மட்டுமல்லாமல், உடனடியாக தானியங்கி முறையில் நிறுத்திக் கொள்ளவும் கூடிய உபகரணமொன்றினை கார் தயாரிப்பு நிறுவனமான வொல்வோ உருவாக்கியுள்ளது. இதனை தனது கார்களில் அந்நிறுவனம் பொருத்தியுள்ளது. இதன்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளும் வெற்றியடைந்துள்ளன. ராடார் மற்றும் கமரா தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இக்காரானது முன்னால் வரும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகளை இணங்கண்டு கொள்கின்றது. அவற்றின் மீது கார் மோதலாம் என்ற நிலையில் எச்சரிக்கை சமிக்ஞை எழுப்படும். அதை சாரதி பொருட்படுத்தாத நிலையில் கார் தானாக நிறுத்தப்படும். எனினும் இவ்வுபகரணமானது இரவிலும் மோசமான காலநிலையின் போதும் இயங்காது என வொல்வோ தெரிவிக்கின்றது. நன்றி வீரகேசரி இணையம்