தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

27 April 2018

ஷஃபான் மாதத்தின் சிறப்பு

*ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள்*
_____________________________

இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு நபி ஸல் அவர்கள் கூறிய சிறப்புக்கள் என்ன..? இன்று சமூகத்தில் நடந்தேரும் வணக்கங்களின் நிலை என்ன ..? என்ற தகவல்களை ஆதார பூர்வமாண ஹதீஸ்களில் இருந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

07 April 2018

புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது?

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

*புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
*மது அருந்தும் பழக்கம்
*அதிக உடல் எடையுடன் இருப்பது
குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
உடல் உழைப்பு இல்லாமை
மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

'உயரமானவர்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்'- ஆய்வாளர்கள்
உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?
மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாகும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Source BBC

01 March 2018

The Patience of Ayyub




Every person is faced with trials and tribulations at one point or another in their lives. It is patience that helps the believer cope. When calamity befalls a patient believer, it does not crush him. Instead, the believer endures, persists, and has hope in the mercy of Allah and the rewards that are awaiting him on the Day of Judgment.
Patience is a virtue that you can work on to develop.
There is much to learn from the story of Prophet Ayyub, as he is the ideal example of the afflicted believer who remained patient and faithful to His Lord.

26 February 2018

சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அழுத்தம் கொடுக்கும் முறைப்பாடு.



சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தை உடன் நிறுத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர்
அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் முறைப்பாடு ஒன்றை தென்கிழக்குப் பல்கலைகழக விரிவுரையாளர் எப்.எச்.ஏ. ஷிப்லி தயாரித்துள்ளார்.
இதில் உங்கள் கையொப்பத்தை இட்டு சிரிய மக்களுக்கு உதவுங்கள். அதிக கையொப்பங்கள் பெறப்படின், உடனடியாக செயலாளருக்கு அறிவிக்கப்படும். அதிகம் பகிர்ந்துகொள்ளுங்கள்.


இணைப்பு

https://www.change.org/p/ant%C3%B3nio-guterres-secretary-general-of-the-united-nations-stop-syria-civil-war?recruiter=859667166&utm_source=share_petition&utm_medium=copylink&utm_campaign=share_petition&utm_term=share_petition


நண்பர்களுடன் பகிரவும்:


Source:madawala news