தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

29 July 2013

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக
நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். லைலத்துல் கத்ர் தொடர்புடைய குர்ஆன் மற்றும் ஹதீஸ் தொகுப்பு பின்வருமாறு: நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது?
கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு
நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும்
நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி). ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை
அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்றுகூறி,
அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். ْﻲِّﻨَﻋ ُﻒْﻋﺎَﻓ َﻮْﻔَﻌْﻟﺍ ُّﺐِﺤُﺗ ٌﻮْﻔَﻋ َﻚَّﻧِﺇ َّﻢُﻬَّﻠﻟَﺍ தமிழில்: அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ. பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன்.
மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி) ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். '83 வருடம் நாம் வாழ்வோமா?' என்பதே
கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப்
போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும் . அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!
நன்றி:சுவனப்பாதை

27 July 2013

எகிப்தில் 100க்கும் மேற்பட்டமோர்ஸி ஆதரவாளர்கள் பலி

எகிப்தில் பதவி கவிழ்க்கப்பட்ட அதிபர்
மொஹமட் மோர்ஸியின் ஆதரவாளர்கள் தலைநகர்
கெய்ரோவில் நடத்திய
எதிர்ப்பு போராட்டத்தின்போது இராணுவத்தினர்
நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 100க்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள்
காயமடைந்துள்ளதாக போராட்டம் நடந்துவரும்
ரபா அல்
அதாவியா பள்ளிவாசலுக்கு அருகே உள்ள
தற்காலிக
மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் 20 பேர்
வரையிலேயே கொல்லப்பட்டுள்ளதாகவும் 177 பேர்
காயமடைந்துள்ளதாகவும் சுகாதார
அமைச்சு கூறியுள்ளது. தலைநகரின் வீதிகளில் மோர்ஸின்
ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும்
நேற்றிரவு முழுவதும்
ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருந்தனர். இந்த மாதத்தின் முற்பகுதியில் அதிபர்
மோர்ஸியை பதவி கவிழ்த்த
இராணுவத்துக்கு ஆதரவானவர்கள் தாஹ்ரிர்
சதுக்கத்தில் கூடியுள்ளனர். இந்த விவகாரத்தில்
தலையிடுவதற்கு இராணுவத்துக்கு ஆணை
வழங்குவதற்காக மக்களை வீதிகளில்
இறங்கி போராடுமாறு இராணுவத்
தளபதி ஜெனலர் அப்தல் ஃபாட்டா அல்
சிஸி கோரியிருந்தார். இதேவேளை, பல்லாயிரக்கணக்கான
மோர்ஸி ஆதரவாளர்கள் ரபா அல்
அதாவியா பள்ளிவாசலை அண்டிய பகுதிகளில்
போராட்டம் நடத்திவருகின்றனர். இவர்கள் பள்ளிவாசல்
வளாகத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள்
என்று உள்துறை அமைச்சர் சூளுரைத்திருந்தார். மக்கள் மீது வேண்டுமென்றே இராணுவத்தினர்
சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம்
மேற்கொண்டதாக முஸ்லிம் சகோதரத்துவக்
கட்சியினர் கூறுகின்றனர்.
[BBC]

25 July 2013

ஸ்பெயினில் ரயில் தடம் புரள 77 பேர்உயிரிழப்பு


மட்ரிட் நகரத்துக்கும் ஃபெர்ரோல்
நகரத்துக்கும் இடையே ஓடிய அந்த
ரயில்சந்தியானோ த
கொம்போஸ்தலா நகருக்கு அருகே
சென்றுகொண்டிருந்தபோது
தண்டவாளத்திலிருந்து வழுவியது. விபத்துக்குள்ளான நேரத்தில் அந்த ரயிலில்
220 பேர் இருந்தனர். ஸ்பெயினைப் பொறுத்தவரை பல தசாப்தங்களில்
இல்லாத மிகப் பெரிய ரயில் விபத்து இது. ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய் சம்பவ
இடத்தைச்
சென்று பார்வையிடவுள்ளார். அவர் சந்தியாகோ த கொம்போஸ்தலாவில்
பிறந்தவர். அந்த ஊரில் இன்று வியாழனன்று வருடாந்த
கிறிஸ்தவ
பண்டிகை ஒன்றை முன்னிட்டு கத்தோலிக்க
யாத்ரீகர்கள் கூடுவது வழக்கம். ஆனால் இந்த விபத்தினால் வைபவ நிகழ்வுகள்
ரத்து செய்யப்பட்டுள்ளன.

23 July 2013

கறுப்பு ஜூலை : ஆண்டுகள் போனாலும் ஆறாதவடுக்கள்

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983
ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன்
30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில்
கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள்
காயமடைந்தார்கள். தலைநகர் கொழும்பு மற்றும் நாட்டின்
தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக
நிலையங்கள் அடித்துநொறுக்கப்பட்டன.
தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான
வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
வீதிகளில் வாகனங்கள்
மறிக்கப்பட்டு தமிழர்கள்
இருக்கின்றார்களா என்று தேடித்
தேடி கலகக்கரார்கள் தமிழர்கள்
மீது தாக்குதல் நடத்தினார்கள். பழிக்கு பழி : பலர் பலியில் முடிந்தது யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச்
சந்தியில் 1983 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 23 ஆம்
திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக
இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின்
மீது விடுதலைப்புலிகள் நடத்திய
வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள். ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும்
இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த
அந்தக்காலப்பகுதியில் ஒரே தாக்குதல்
சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட
சம்பவம் பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த
மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர்
மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில்
இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக
உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில்
உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில்
உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. தூண்டப்பட்ட உணர்வுகள் இறந்த இராணுவத்தினருடைய
சடலங்களுக்கு கொழும்பு பொரல்லையில் உள்ள
கணத்தையில் இறுதிக்கிரியைகள்
செய்வதற்கு அரசாங்கம்
நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால்
அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர்
கலவரமாக வெடித்தது.
ஏரிகின்ற நெருப்பில் எண்ணெய்
ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த
பிக்கு ஒருவரை உயிரோடு எரித்துவிட்டர்கள்
என்றும், கொழும்பில் தாக்குதல்
நடத்துவதற்காக விடுதலைப்புலிகள்
வந்துவிட்டார்கள் என்றம் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து,
கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல
நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின. இந்தக் கலவரங்களில் பலர்
வெட்டிக்கொல்லப்பட்டார்கள். சில இடங்களில்
குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும்
செய்திகள் வெளியாயின. 400 தொடக்கம் 3000
ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம்
என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட
அதிகம் என்றே கூறப்படுகின்றது. சிறையிலும் தாக்குதல் நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல்
கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில்
நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்
அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை,
ஜெகன் உள்ளிட்ட 53 பேர்
படுகொலை செய்யப்பட்டார்கள். இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான
சிறைக்கலவரமாக சிறைச்சாலைப்
படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது. பின்னாளில் பல அரசியல்
திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த
வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும்
இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான
நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட
பலரும் கூறுகின்றார்கள். இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள்
மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக
ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய
ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர்
வந்த அரசாங்கங்களினால்
மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற
இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர்
இனத்திற்கு எதிரான
அழிப்பு நடவடிக்ககையாகவே இலங்கைத் தமிழ்
மக்களால் கருதப்படுகிறது.
நன்றி:BBC tamil