தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 May 2013

ஒருமுறை ஹஜ் யாத்திரை செய்தவருக்கு 10 வருடங்களின் பின்பே மீண்டும் அனுமதி

இலங்கையிலிருந்து ஏற்கனவே ஹஜ்ஜுக்கு சென்ற ஒருவர் பத்து வருடங்களுக்கு
பின்பே அவர் மீண்டும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியு மென முஸ்லிம் சமய பண்
பாட்டலுவல்கள் திணைக் களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நbமி
தெரிவித்தார். இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற செல்லவுள்ள
ஹஜ்ஜாஜிகளுக்கான கூட்டத்தில் உரை யாற்றும்போதே அவர் மேற் கண்டவாறு
குறிப்பிட்டார். காத்தான்குடியில் ஹிஸ்புல் லாஹ் மண்டபத்தில் சனிக் கிழமை
நடைபெற்ற இந்த கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எச்.எம். சமீல் நbமி ஹஜ்
கோட்டாவை கருத்திற்கொண்டு இலங்கையிலிருந்து பத்து வருடங்களுக்கு ஒரு முறை
மாத்திரமே ஒருவர் ஹஜ்ஜுக்கு செல்ல முடியும் என்பதை முஸ்லிம் சமய பண்பாட்ட
லுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதேபோன்று பதில் ஹஜ்ஜுக்காகவும்
செல்ல முடியாது. இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்வதற்காக 7800
பேர் விண்ணப்பித்துள்ளனர். அதில் எமது இலங்கைக்கு சவூதி அரேபியா
அரசாங்கம் 2800 பேருக்கு மாத்திரமே இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்வதற்கான
கோட்டா வழங்கப்பட்டுள்ளது. இதை மையப்படுத்தி சில நடைமுறைகளை முஸ்லிம் சமய
பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பின்பற்ற தீர்மானித்துள்ளது. அதில்
இவ்வாண்டு ஹஜ்ஜுக்கு செல்ல விண்ணப்பித்தவர்களில் புதிதாக செல்பவர்களுக்கு
சந்தர்ப்பம் வழங்குதல், அதேபோன்று முதியவர்களுக்கு முன்னுரிமையளித்தல்
போன்ற நடைமுறைகளையும் எமது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
நடைமுறைப்படுத்தவுள்ளது. கடந்த வருடம் ஹஜ்ஜுக்காக செல்வதற்கு
விண்ணப்பித்து வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கும் இம்முறை சந்தர்ப்பம்
வழங்கப்படல் வேண்டும். பெண் ஒருவருடன் மஹரமாக (திருணம் செய்ய
அனுமதிக்கப்படாதவர்) செல்லும் ஆண் ஏற்கெனவே சென்றிருந்தாலும் அவர்
குறித்து ஆராய்ந்து அனுமதி வழங்கப்படும். இம்முறை ஹஜ் பிரயாணம்
மேற்கொள்ளவுள்ளவர்களுக்கான கட்டணம் பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.
கடந்த வருடம் சில முகவர்கள் கூடிய பணங்களை பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் சகல முகவர்களையும் வைத்து கலந்துரையாடலை மேற்கொண்டு
இதற்கான கட்டணம் தீர்மானிக்கப்படும். சில முகவர்கள் அவர்கள் ஹாஜிகளுக்கு
வழங்கும் விசேட தேவைகளை கருத்திற்கொண்டும் கட்டணங்கள் அறவிடுவர். ஏதும்
பிரச்சினைகள் இருப்பின் அவைகள் தொடர்பில் எமக்கு அறிவித்தால் அவற்றை
நாங்கள் கவனத்தில் கொள்வோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இதில்
முஸ்லிம் சமய பண்பாட் டலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர்
அஷ்ஷெய்க் எம். ஜுனைத் நbமி உட்பட திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் ஹஜ்
முகவர்கள் கலந்து கொண்டனர்.




Thanks:thiinakaran

28 May 2013

ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழுவின் அறிவித்தல்

சூரியன் கஃபாவுக்கு நேராக இன்று (மே-28) உச்சம் கொடுக்கிறது - கிப்லாவை
சரிபார்த்துக்கொள்ள அரியவாய்ப்பு இன்று (மே) 28 ம் திகதி கொழும்பு
நேரப்படி பி.ப 2:48 மணிக்கு மக்காவுக்கு நேராக சூரியன் உச்சம்
கொடுக்கின்றது. குறித்த அந்நேரத்தில் செங்குத்தாக உள்ள ஒரு பொருளுக்கு
ஏற்படும் நிழலினூடாக
சூரியனை முன்னோக்குவது சரியாக கஃபாவையே முன்னோக்குவதாக அமையும். ஆகவே,
சரியான கிப்லாவை அறிந்து கொள்வதற்கு நேரகாலத்துடன்
நேர்த்தியான ஒரு தடியை 90 பாகையில் (அதாவது பூமிக்கும் அந்தத்
தடிக்குமிடையிலான கோணம் செங்கோணமாக இருக்கும் விதத்தில்) நாட்டுவதுடன்
பிரயோகிக்கும் கடிகாரத்தின் நேரத்தையும் சரி செய்து கொள்ளவேண்டும்.
பின்னர் குறித்த நேரத்தில் சூரியனின் மூலம் அந்தத் தடிக்கு ஏற்படும்
நிழலின் மீது கோடிட்டுக் கொள்ளவேண்டும். பிறகு அக்கோட்டினூடாக தடியை
நோக்கும் திசையையே கிப்லாவாக எடுத்துக் கொள்ளவேண்டும். சூரியன் மக்காவை
உச்சங்கொடுக்கும் இன்றைய தினத்தில் தங்களது மஸ்ஜிதுகள், வீடுகள் மற்றும்
தேவையான இடங்களுக்கான சரியான கிப்லாவுடைய திசையை அறிந்து கொள்ள மேல்
குறிப்பிட்டவாறு செய்துகொள்ளும்படி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின்
பிறைக்குழு கேட்டுக்கொள்கிறது.










மேலதிக தகவல்களுக்கு : 0115373148 - 0117458885
Thanks:Jaffna Muslim

26 May 2013

தனியாக இருக்கும் போது மாரடைப்பு! -வந்தால் என்ன செய்யலாம்..?

மாரடைப்பு என்றால் என்ன?
அது எவ்வாறு ஏற்படுகிறது?
அதன் அறிகுறிகள் என்ன?
அதை குணப்படுத்துவது எவ்வாறு?
கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) கொண்டு செல்லும் இரத்தத்தில் இருந்து இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இந்த இரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் இதயத் தசைகள் இரத்தம் கிடைக்கப்பெறாமல் இறக்கின்றன. இதுவே மாரடைப்பு என்றழைக்கப்படுகிறது. மாரடைப்பின் தீவிரத் தன்மை இதயத்தசைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பொறுத்து அமைகிறது. இறந்த தசைகள் இதயத்தின் இரத்தம்செலுத்தும் திறனைக் குறைத்து அதன் செயல்பாட்டினை வெகுவாக பாதிக்கலாம். பாதங்களில் வியர்த்தல் மற்றும் மூச்சுவிடமுடியாமை போன்ற நிலையை உருவாக்கி இதயத்தில் செயலற்ற நிலையை ஏற்படுத்தலாம். ஒரு நாளில் சராசரியாக ஒரு லட்சம் முறை துடிக்கும் இதயம்; ஒவ்வொரு துடிப்பின் போதும், உடலின் மற்ற பாகங்களுக்கு தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்து செல்லும் ரத்தத்தை, கரோனரி தமனிகள் (இரத்த நாடிகள்) வழியாக அனுப்புகிறது. இதற்காக கடினமாக உழைக்கும் இதய தசைகளுக்கும் தேவையான உணவையும், ஆக்சிஜனையும் எடுத்துச் செல்ல மூன்று முக்கிய ரத்தக்குழாய்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் இதயத்தின் வெவ்வேறு பாகங்களுக்கு ஆக்சிஜன் கலந்த ரத்தத்தை எடுத்து செல்கின்றன. இந்த ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்திற்கு தடையாக முதலில் சிறியதாக தடைக்கற்கள் போல அடைப்புகள் ஏற்படுகின்றன. சில காரணங்களால் இத்தடை கற்கள் பெரிதாகி உடைந்து, அதன்மேல் ரத்தம் உறைந்து ரத்தக்குழாயை முழுமையாக அடைத்து விடுகிறது. இதனால் இந்த இரத்தக் குளாய் மூலம் ரத்தத்தைப் பெறும் இதயத்தின் தசைப் பகுதி ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளும் கிடைக்கப் பெறாததால் செயலிழக்கிறது. இதுவே மாரடைப்பு. வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது....? வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக "வலி" ஏற்படுவதை உணர்கிறீர்கள், அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம, ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம்.? உங்கள் இதயம் தாறுமாறாக துடிக்கிறது.. நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது: "தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இருமுதல் வேண்டும்”, ஒவ்வொரு முறை இருமலுக்கும் முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும், இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில் அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இருமிக்கொண்டே இருக்க வேண்டும். மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது, இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்த ஓட்டம் சீரடையும். இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும்".. பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்

பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக மாற்ற

நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில் பயன்படுத்தினாலும் சில சந்தர்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும் நிலை ஏற்படுகின்றதல்லவா? அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய மறந்து விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும் அல்லவா.....? இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் ....... நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ------> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள். இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில் நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activity என்பதனை சுட்டுங்கள்.

நீண்ட நேரம் உட்காருவதால் உயிருக்கு ஆபத்து: ஆய்வில் தகவல

ஒரு நாளில் 11 மணி நேரம் வரை உட்கார்ந்து இருப்பவர்களில் 40 சதவீதத்தினர்
அடுத்த 3 ஆண்டுகளில் உயிரை விடும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு
மிரட்டுகிறது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக பொதுநல மருத்துவ பிரிவு
பேராசிரியர் ஹைட் வான் டெர் பிளாஜ் தலைமையில் ஒரு குழு நடத்திய ஆய்வில் 2
லட்சம் பேர் பங்கேற்றனர். அதன் அறிக்கை ஏஐஎம் என்ற மருத்துவ இதழில்
வெளியானது.
அதில் இடம்பெற்ற விபரங்கள்:
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதே பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தக்
கூடியது. பருமன், டயபடீஸ் ஆகியவை அவற்றில் முக்கியமானவை.
ஒரு நாளில் 4 மணி நேரத்துக்கு குறைவாக உட்கார்ந்தே இருப்பவர்களுடன்
ஒப்பிடுகையில், 11 மணி நேரத்திற்கு அதிகமான நேரம் உட்கார்ந்து
இருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களில் 40 சதவீதத்தினர்
அடுத்த 3 ஆண்டுகளில் உயிரிழக்கும் அபாயம் இருக்கிறது.
2 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட உடல் உழைப்பு, எடை, உடல் ஆரோக்கிய நிலை
ஆகியவற்றின் அடிப்படையில் துல்லியமாக நடத்திய ஆய்வில் இது தெரிய வந்தது.
ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செய்வது, நீண்ட நடைபயிற்சி ஆகியவையும்
அவசியம்தான்.