தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

30 June 2012

தண்ணீர்... தண்ணீர்!

உ யிர்களின் ஆதாரமே தண்ணீர். மரமோ மனிதனோ... எதுவாக இருந்தாலும் இயக்கத்தின் உயிர்நாடி காற்றுக்கு அடுத்தபடியாக இருப்பது தண்ணீர்தான்.
மனித உடல் எடையில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் இருக்கிறது. சராசரி மனித எடையில் (70 கிலோ) தோராயமாக 42 லிட்டர் தண்ணீர் உள்ளதாக உடலியல் உலகம் சொல்கிறது. அதாவது மொத்த உடல் எடையில் தண்ணீரின் அளவானது 60 சதவிகிதம். ஆனாலும், திசுக்களுக்குத் திசு தண்ணீரின் அளவு மாறுபடும்.

28 June 2012

அன்டிபையோடிக்- தொடர்பான வயிற்றோட்டம்Antibiotic-Associated Diarrhea (Tamil)

அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் என்பது என்ன?
அன்டிபையோடிக் உட்கொள்ளும் சுமார் 18% (ஏறக்குறைய 5 இல் 1) கைக்குழந்தைகளுக்கும் நடை குழந்தைகளுக்கும் வயிற்றோட்டம் உண்டாவது சகஜமானதே. எந்த வகையான அன்டிபையோடிக்னாலும் இது ஏற்படலாம். 2 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பிள்ளைகளில் அன்டிபையோடிக் தொடர்பான வயிற்றோட்டம் ஏற்படுவது குறைவானதாகவே இருக்கின்றது.
அதிகமான பிள்ளைகளில் இந்த வயிற்றோட்டம் கடுமையற்றதாகும். உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை (திரவங்கள்) உட்கொள்ளாவிட்டால் அல்லது மலம் கழிக்கும்போது ஏராளமான நீர்மத்தை இழந்தாலேயன்றி இந்த வயிற்றோட்டம் பொதுவாக ஆபத்தானதல்ல. உங்கள் பிள்ளை போதிய அளவு நீராகாரத்தை குடிப்பதை உறுதிசெய்யவும். சிறுநீரின் அளவு குறைதல், சினம் கொள்ளுதல், களைப்பு, வாய் உலர்தல் என்பன உடலில் நீர்வறட்சி ஏற்பட்டதற்கான அடையாளங்களாகும். ஒரு பிள்ளை சந்தோஷமாகவும் விளையாடிய வண்ணமும் இருப்பது உடலில் நல்ல நீர்த்தன்மை இருப்பதை குறிக்கின்றது.

அமொக்ஸிஸிலின் (Amoxicillin) tamil

உங்கள் பிள்ளை அமொக்ஸிஸிலின் என்றழைக்கப்படும் மருந்தை உட்கொள்ள வேண்டும். அமொக்ஸிஸிலின் மருந்து என்ன செய்கிறது, இதை எப்படிக் கொடுக்கவேண்டும், உங்கள் பிள்ளை இந்த மருந்தை உட்கொள்ளும்போது என்ன பக்கவிளைவுகள் அல்லது பிரச்சினைகள் ஏற்படும் என்பன பற்றி இந்தத் தகவல் தாள் விபரிக்கும்.

இந்த மருந்து எப்படிப்பட்டது?
அமொக்ஸிஸிலின் என்பது ஒரு அன்டிபையோடிக் என அழைக்கப்படும் ஒரு மருந்து. அன்டிபையோடிக் மருந்துகள் பக்டீரியாவால் ஏற்படும் சில குறிப்பிட்ட வகையான தொற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அல்லது அவற்றைத் தடுப்பதற்காக உபயோகிக்கப்படுகின்றன.
அமொக்ஸிஸிலின் மருந்து, அமொக்ஸில்® என்ற அதனது வர்த்தகச் சின்னப்பெயரால் அழைக்கப்படுவதை நீங்கள் கேட்டிருக்கலாம். அமொக்ஸிஸிலின் மருந்து கப்சியூல், மெல்லும் வில்லை, மற்றும் திரவ வடிவங்களில் கிடைக்கும்.

குடல்வால் அழற்சி Appendicitis (Tamil)

குடல்வால் அழற்சி என்றால் என்ன?
குடல்வால் அழற்சி நோய் என்பது குடல்வாலில் ஏற்படும் வீக்கம். குடல் வால் என்பது பெருங்குடலின் முற்பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய குழாய் போன்ற அமைப்பாகும். அது உங்கள் குழந்தையின் வயிற்றின் வலது அடிப்பாகத்தில் அமைந்திருக்கிறது. அதற்கு உடலில் அறியப்பட்ட செயற்பாடுகள் ஏதுமில்லை.

குடல்வால் அழற்சிக்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள்

குடல்வால் அடைக்கப்பட்டு வீங்கும்போது குடல்வால் அழற்சி உண்டாகிறது.

குடல்வால் அழற்சி பின்வரும் அறிகுறிகளால் காண்பிக்கப்படும்:
தொப்புழைச் சுற்றி அல்லது வயிற்றின் வலதுகைப்பக்க அடிப்பாகத்தில், வலி; அந்தப் பகுதியை இலேசாக அழுத்தும்போது, ஆழமாக சுவாசிக்கும்போது, மற்றும் அசையும்போது வலி அதிகரிக்கும்
பசியின்மை
குமட்டுதல்
வாந்தி
காய்ச்சல்

27 June 2012

Smoking Haram-Why?



The declaration that "There is no God Worthy of being worshipped except Allah & that Muhammad is the Messenger of Allah", demands that the Muslim accepts the Decrees set by Allah and by His Messenger-Muhammad (p.b.u.h.)
Islam is a Revelation from Allah with a complete code of life. It tells what is good and what is evil: Allah says in the Holy Quran: And We have shown him (man) the two ways (goodand evil). ( Quran 90/10 )
He allows them all that is good and lawful, and prohibits them as unlawful all that is evil (things, deeds, beliefs, persons, foods, drinks, etc.). ( Quran 7/157 )