தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

12 October 2015

"ஆஸ்த்மா மருந்து குழந்தைகளின் உயரத்தைக் குறைக்கும்"


ஆஸ்த்மாவால் பாதிக்கப்பட்ட குழந்கைளில் இரண்டு வயதிற்கும் குறைவான குழந்தைகளுக்கு ஆஸ்த்மா மருந்து கொடுக்கப்பட்டால், அந்த மருந்து அவர்கள் வளர்ந்து பெரியவராகும்போது அவர்களின் உடல் உயரத்தை குறைக்கிறது என பூர்வாங்க ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.
பின்லாந்தை சேர்ந்த 12000 குழந்தைகள் மத்தியில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஐசிஎஸ் என்று சுருக்கமாக அழைக்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் தொடந்து கொடுக்கப்பட்ட பிள்ளைகள், பிற்காலத்தில் உயரம் குன்றியிருந்தது கண்டறியப்பட்டது.
இது குறித்து முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் இந்த மருந்துகள் குழந்தைகளின் உயரத்தை ஒடுக்கும் என்று குறிப்புணர்த்தியிருந்தது.
பள்ளி செல்லும் வயதுக்கும் குறைவான சிறார்களுக்கு ஸ்டீரொய்ட்டு மருந்துகள் மிகுந்த எச்சரிக்கையுடனே வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த ஆய்வு வலியுறுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவதற்காக வழங்கப்படும் கார்டிகோ ஸ்டீராய்டு மருந்துகள் ஆஸ்த்மா நோயின் அறிகுறிகளையும் பாதிப்புகளையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும், சிறு குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் மட்டுப்படுத்துகிறது என்றும் ஆஸ்த்மா யு கே என்ற ஆஸ்த்மாவுக்கான அறக்கட்டளை நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள சிறுவர்களில் 11 பேரில் ஒருவர் ஆஸ்த்மாவால் அவதியுறுவதாகவும்; இதுவே சிறுவர்கள் மத்தியில் உள்ள பொதுவான நாள்பட்ட சுகயீனமாக உள்ளதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 October 2015

பாஸியத்துல் நஸ்ரியாவின் சித்தியெய்தியவர்கள் விபரம்




பேருவல மருதான அல் பாஸியத்துல் நஸ்ரியா பாடசாலையிலிருந்து
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் 6 மாணவியர் சித்தியெய்தினர்,
அவர்கள்,
1.நூர் ஸப்ரினா இசாக்-191  மேல் மாகாணம் தமில் மொழி மூலம் முதலிடம்
2.ஜாஹிதா ஸம்ஸுதீன் -159
3.ஹம்தா முஈஸ் -158
4.ஸைனப் பஸ்லூன் -157
5.ரஹ்னா ரிம்ஸான் -155
6.சம்லா பஹ்மி -154




08 October 2015

அல் பாஸியத்துல் நஸ்ரியா மாணவி நூர் ஸப்ரினா இசாக் மேல் மாகாணத்தில் சாதனை


தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின்படி தமிழ் மொழி மூலம் 191
புள்ளிகள் பெற்று களுத்துறை மாவட்டத்தில் மற்றுமன்றி மேல் மாகாணத்திலும் முதலிடத்தைப் பெற்று செல்வி நூர் ஸப்ரினா இசாக் சாதனை படைத்துள்ளார்.
அத்தோடு அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார்.
இவர் பேருவலை அல் பாஸியத்துல் நஸ்ரியா பாடசாலை மாணவியாவார்.
இன்னும் இவர் தரம் 1 முதல் 3 வரை மக்கொனை அல் ஹஸனியாவில்
கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது "ஊரும் உலகும்" வலைப்பூவுக்கு செல்வி நூர் ஸப்ரினா இசாக் விசேடமாக
வழங்கிய செவ்வியில் தனது பாடசாலையான பேருவலை மருதான அல்
பாஸியத்துல் நஸ்ரியா ஆசிரியர்களுக்கும் தான் முன்பு கல்வி கற்ற மக்கொன
அல் ஹஸனியா பாடசாலை ஆசிரியர்களுக்கும் தனது உள்ளம்மார்ந்த நன்றிகளைத்
தெரிவித்துக்கொண்டார்.நாமும்  அவர் எதிர்காலத்தில் மென்மேலும் பிரகாசிக்கவும்,
ஈருலகிலும் சகல நற்பாக்கியங்களுடன் வாழ அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம்.
அவரது விசேட செவ்வி வீடியோ கீழே

07 October 2015

2015 புலமைப்பரிசில் பரீட்சை:அல் ஹஸனியா பெறுபேறுகள்






2015 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகின,
இம்முறை மக்கொனை அல் ஹஸனியா மகா வித்தியாலய மாணவிகள்
 இருவர் சித்திபெற்றுள்ளனர்.அவர்கள்  இமாரா பிஸ்தாமி (160), அமானா இசாக் (158)ஆவர்.
அத்தோடு களுத்துறை மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில
இலங்கை ரீதியில் 6 ம் இடத்தையும் (தமிழ் மொழி மூலம் 3 ம் இடம்) பேருவள பாஸியத்துல் நஸ்ரியா
பாடசாலை மாணவி நூர் ஸப்ரினா இசாக் பெற்றுள்ளார்(191 புள்ளிகள்).
இன்னும் இவர் தரம் 1 முதல் 3 வரை மக்கொனை அல் ஹஸனியாவில்
கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.



06 October 2015

மக்கா-ஜித்தாவுக்கிடையில் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை  ரயில்சேவை



மக்கா மதீனா அதிவேக ரயில் சேவை நிர்மானப்பணிகள்
பூர்த்தியானதும் சுமார் 35 ரயில்கள் சேவையில் ஈடுபடும், 

     மக்காவுக்கும் ஜித்தாவுக்கும் பத்து நிமிடத்துக்கு ஒருமுறை
 ரயில்சேவை நடைபெறும் எனவும் மக்கா மதீனாவுக்கிடையில் 30 நிமிடத்துக்கு ஒருமுறை  ரயில்சேவை நடைபெறும் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும் மணிக்கு 300 KM வேகத்தில் ரயில்கள் பயணிக்கும் என அவர் தெரிவித்தார்.