தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

15 August 2013

கைத்தொலைபேசியைக் கொண்டே பார்வைத் திறன்பரிசோதனை

தற்போது எல்லோர் கைகளிலும்
காணக்கிடைக்கின்ற நவீன கைத்தொலைபேசிகளைக்
கொண்டே கண்களைப்
பரிசோதித்து பிரச்சினைகளை கண்டுபிடிக்க
முடிவது சாத்தியமானால் எவ்வளவு நன்றாக
இருக்கும்? அது விரைவில் சாத்தியமாகும் என்பது போன்ற
ஒரு கண்டுபிடிப்பை லண்டன் ஆராய்ச்சியாளர்கள்
செய்துள்ளனர். ஆமாம், பார்வைத்திறன்
பரிசோதனையை பலருக்கும் கொண்டுசேர்க்கும்
விதமான கைத்தொலைபேசி அப்ளிகேஷன்
ஒன்றை லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட்
டிராபிக்கல் மெடிசினைச் சேர்ந்த ஆய்வாளர்கள்
கண்டுபிடித்துள்ளனர். Portable Eye Examination Kit சுருக்கமாக PEEK
என்று சொலப்படுகின்ற அப்ளிகேஷன்
ஒன்றை இவர்கள் உருவாக்கியுள்ளனர். பார்வைத் திறன்
பரிசோதனை கைத்தொலைபேசியில் வருவதால்
ஏற்படக்கூடிய நன்மைகள் யாவை? புதுச்சேரி அர்விந்த் கண் மருத்துவமனையின்
தலைமை மருத்துவ அதிகாரியும், கண்
அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர்
ரெங்கராஜ் வெங்கடேஷ்
நவீன கைத்தொலைபேசிகளில் இருக்கும்
காமெராக்களையும் ஃபிளாஷ்ஷையும்
பயன்படுத்தி இந்த அப்ளிகேஷன் கண்ணின்
விழித்திரையை ஸ்கேன் செய்கிறது. தவிர ஒருவருடைய பார்வைத் திறனை அளக்க
உதவும் சின்னதாகிக்கொண்டே போகும்
எழுத்துக்களும் இந்த அப்ளிகேஷனில் உண்டு. இந்த அப்ளிகேஷனைப்
பயன்படுத்தி ஒருவரது விழித்திரையையும்
பார்வைத் திறனையும் சோதிக்கும்போது அந்த
விவரங்கள்
கைத்தொலைபேசியிலேயே பதியப்படுகின்றன. அந்த விவரங்களை ஒரு மருத்துவருக்கு மின்
அஞ்சல் செய்ய முடியும். பீக் அப்ளிகேஷனைக் கொண்டு கென்யாவில்
பலருடைய கண்களைப் படமெடுத்து, அந்தப்
படங்கள் லண்டனிலுள்ள மூர்ஃபீல்ட் கண்
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. மிக அதிக விலைகொண்ட கண் பரிசோதனைக்
கருவிகளின் படங்களையும் இந்தப்
படங்களையும் நிபுணர்கள்
ஒப்பிட்டபோது கைத்தொலைபேசி எடுத்த
படங்களைக் கொண்டும் கண்
கோளாறுகளை ஓரளவுக்கு கண்டுபிடிக்க முடிந்தது. இந்த ஆய்வு இன்னும்
முழுமை அடையவில்லை என்றாலும்,
கைத்தொலைபேசி எடுத்த
படங்களை வைத்து ஆயிரத்துக்கும்
அதிகமானோருக்கு ஏதோ ஒரு வகையில்
சிகிச்சை அளிக்கப்பட்டது. பார்வைத் திறன் பாதிப்பு - உலக நிலவரம் உலக அளவில் 28 கோடிப்பேருக்கும்
அதிகமானவர்கள்
கண்பார்வை பாதிக்கப்பட்டோ இழந்தோ
இருக்கிறார்கள் என உலக சுகாதார நிறுவனம்
கூறுகிறது. பெரும்பாலான கண் கோளாறுகள் எளிதில்
குணப்படுத்தக்கூடிய பிரச்சினைகள்தான்.
பொருத்தமான
கண்ணாடியை அணிவதாலோ புரை நீக்க
சிகிச்சை மூலமாகவோ அவற்றை
குணப்படுத்திவிட முடியும். ஏழை நாடுகளிலும்கூட பெருநகரங்களிலும்
ஊர்களிலும் கண் மருத்துவர்கள் இருக்கின்றனர்.
ஆனால் ஏழை மக்களும் கிராமவாசிகளும் கண்
மருத்துவர்களைச் சென்று பார்ப்பதில்லை. உலகில் கண்பார்வை பாதிப்புள்ளவர்களில் 90
சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இந்தியா ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் கண்
மருத்துவர்கள், கண் பார்வைத்திறன்
பரிசோதகர்கள் போன்றோவர்களால் கொஞ்சம்
பேருக்கேசேவை வழங்க முடிகிறது ஏனென்றால்
குறைவானவர்களே இவர்களிடம் வருகின்றனர். அந்த வகையில் இந்த புதிய தொழில்நுட்பம்
முன்னேற்றம் கண்டால் பெரிய பலன் இருக்கும் என
நிபுணர்கள் கூறுகின்றனர்.
Source:bbc

12 August 2013

எரிகல் பொழிவை வெறும் கண்களால் நீங்களும்பார்க்கலாம்!

வானில் ஆண்டுதோறும் நடக்கும் நிகழ்வுகளில்
ஒன்றான பூமி மீது எரிகல் விழும் எரிகல்
பொழிவு இடம்பெறுகிறது.
இன்னும் 2 நாட்களுக்கு தொடரும் இதனை மக்கள்
வெறும் கண்களால் பார்க்கலாம்
நள்ளிரவு நேரங்களிலும், நிலவின் வெளிச்சம் குறைவாக இருக்கும் போதும், தெளிவாக
தெரியும் என அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரபஞ்சமானது தொடர்ந்து விரிவடைந்து
கொண்டுதான் இருக்கிறது. இதில் சில
நேரங்களில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்
சிதைந்த வால் நட்சத்திரங்கள், வானில் விண் எரிகற்களாக உலா வருகின்றன.
இவ்வாறு சுற்றி வரும் போது, அதன் வால்
பகுதியில் உள்ள கற்கள் புவியின்
ஈர்ப்பு விசையின் காரணமாக
இழுக்கப்பட்டு பூமியில் விழுவது வழக்கம்.
அதேபோல், 130 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றுவரும்
"ஸ்விப்ட் டட்டில்´ என்ற வால் நட்சத்திரத்தின்
பாதைக்கு நெருக்கமாக,
நேற்று பூமி கடந்து சென்றது.
இதனால் அதன் துகள்கள் பூமியின்
மீது தொடர்ந்து விழுகிறது. அப்படி விழும் கற்கள், பூமியிலிருந்து சுமார் 80 கி.மீ.
உயரத்திலேயே எரிந்து விடுவதால்,
பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என
விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

11 August 2013

பள்ளிவாசலை அகற்ற கூடாது, சம்பிக்ககாட்டமானவார்த்தைகளை பிரயோகிப்பதை நிறுத்தவேண்டும்: தவ்ஹீத் ஜமாத்

கொழும்பு, கிராண்ட்பாஸ்
மோலவத்தை பள்ளிவாயலை அவ்விடத்திலிருந்து எ
க்காரணம் கொண்டும் அகற்ற கூடாது. மேலும் இந்த
பள்ளிவாயல் தாக்குதலுக்கு எதிராக முஸ்லிம்
அமைச்சர்களும் எம்.பி.க்களும்
தமது கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் முஸ்லிம் எம்.பி.
அமைசர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டிய
நிலை உருவாகும் என ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
எமது இணையத்தளத்திற்கு தெரிவித்ததாவது, நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக்
கொண்டிருந்த போது பெரும்பான்மை மக்களில்
ஒரு குழுவினர் காவியுடையணிந்த சிலரும்
இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக
திரண்டனர்.
மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள்
பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும்
அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.
பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக்
கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக
நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும்
வரை அவர்கள் எந்தவிதமான எதிர்
நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின்
கேட் அகற்ப்பட்டு அருகில்
இருந்து அழுக்கு ஓடைக்குள்
வீசியெறியப்பட்டுள்ளது.
பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும்
முயற்சியில் குறித்த குழுவினர் முகாமிட்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்த
அக்குழுவினரை பொலிசார் வெளியேற்றாமல்
அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக்
கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சென்ற தவ்ஹீத் ஜமாத்
நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின்
இடத்தை விட்டும்
அவர்களை அப்புரப்படுத்துமாறு பொலிசாரிடம்
வேண்டிக் கொண்டார்கள். இருப்பினும் போலிசார்
அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில்
இருந்து வெளியேற்றவோ முயலவில்லை. ஆனால் பள்ளியை உடைக்க வந்த
காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளிய
ை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய
முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட
வேண்டும் என்பதில் பொலிஸார் கருத்தாக
இருந்தார்கள். பல தடவை தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளுடன்
கலைந்து செல்லுமாறு பொலிசார்
பேச்சுவார்தை நடத்தினார்கள். இருப்பினும்
பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும்
வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள்
உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும்
ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று காலை சிஹல ராவய
இயக்கத்தினர் பாதிப்பை உண்டாக்க வந்தார்கள்.
பொலிசார் அவர்களை தடுத்து அனுப்பினார்கள்.
எனினும் இந்த தாக்குதல் பின்னணியில் சிங்கள ராவய இருக்கின்றதோ எனவும் எமது சந்தேகம்
ஏற்பட்டுள்ளது.
மேலும் அமைச்சர் சம்பிக்க
சம்பவத்தை பெரிதும் படுத்தும் வகையில்
காட்டமான வார்த்தைகளை பிரயோகித்துள்ளார்.
இன உறவை பாதிக்கும் வகையில் காட்டமான வார்த்தைகளை பிரயோகிப்பதை அமைச்சர்
சம்பிக்க உடனடியாக நிறுத்த வேண்டும்
எனவும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்
கோரிக்கை விடுத்துள்ளது.
source:virakesari

07 August 2013

ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாத தலைப்­பிறை பார்க்கும் மாநாடு

ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பி­
றையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று புதன்
மாலை மஃரிப் தொழுகையின் பின்னர்
கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள
ஹமீதிய்யா மத்ரஸா மண்டபத்தில் நடைபெறும்.
உலமாக்கள், கதீப்மார்கள், ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகிகள், அகில இலங்கை ஜம், - இய்யத்துல்
உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்களம்,
ஸாவியா தக்கியா மற்றும் மேமன் ஹனபிப்
பள்ளி வாசல் ஷரீஆ கவுன்சில் ஆகியவற்றின் பிர­
திநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்­
ளனர். இன்று புதன் மாலை மஃரிப் தொழுகை நேரமா­
கிய 6.29 மணி முதல் ஷவ்வால் மாதத்தின் தலைப்­
பிறையைப் பார்க்குமாறும் தலைப்பிறை கண்ட­
வர்கள் தகுந்த ஆதாரத்துடன் நேரிலோ அல்­
லது 011 5234044, 2432110, 0112 2390783, 0777
366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடா­ கவோ அறியத் தருமாறு சகல முஸ்லிம்களையும்
கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்
கொள்கின்றது.
Source:virakesari

03 August 2013

நியுஸிலாந்து பால்மாவில்பாக்டீரியா கலப்படம்:நுகர்வோர்க்கு எச்சரிக்கை

நியுஸிலாந்தின் முன்னணி பால் உற்பத்திப்
பொருட்கள் நிறுவனம் ஃபோன்டெர்ரா




நியுஸிலாந்தின் மிகப் பெரிய
பால்மா நிறுவனத்தின் குழந்தைப் பால்
மா உள்ளிட்ட பொருட்களில் பாட்டுலிஸம் என்ற
நோயைத் தரவல்ல
பாக்டீரியா கிருமி கலந்திருக்கலாம் என
அந்நாட்டின் அரசாங்கம் எச்சரித்துள்ளது. பாட்டுலிஸம் என்பது சில நேரம்
உயிரிழப்பையும் ஏற்படுத்தவல்ல ஒருவகை வாத
நோய். பாதிப்புள்ள பால்மா பொருட்களை கடைகளில்
இருந்து உடனடியாக திரும்பப் பெற
சீனா உத்தரவிட்டுள்ளது. நியூஸிலாந்திலிருந்து இறக்குமதியாகும்
பொருட்கள் மீது தீவிர
பரிசோதனைகளுக்கு அது உத்தரவிட்டுள்ளது. ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா,
வியட்நாம், சௌதி அரேபியா உட்பட பல
வெளிநாடுகளிலும்
தமது வாடிக்கையாளர்களுக்கு தகவல்
கொடுத்துள்ளதாக நியுஸிலாந்தின்
முன்னணி பால் உற்பத்திப் பொருட்கள் நிறுவனமான ஃபோன்டெர்ரா கூறுகிறது. சீனாவில் குழந்தைகள் பால்மா ஒன்றில் மெலமின்
கலப்படம் ஏற்பட்டு 2008ல் பிள்ளைகள் 6 பேர்
கொல்லப்பட்டதை அடுத்து இறக்குமதி
செய்யப்பட்ட பால்மாவுக்கு சீன நுகர்வோர்
மாறியிருந்தனர். நியுஸிலாந்திலிருந்து பால்மா இறக்குமதி
செய்யும் நாடுகளில் இலங்கையும் ஒன்று.
Thanks:BBC