ஊர் செய்திகள்
date
30 March 2019
22 March 2019
விட்டமின் பி 12 குறைபாடு;அறிகுறி தெரியாத ஆபத்து
•மனநிலை மாற்றங்கள் மற்றும் மன அழுத்தம்.
•ஞாபக சக்தி குறைபாடு.
•சிந்திப்பதில்,பகுத்தறிதலில் சிரமம்.
•ஓட்டோ இம்யூன் நோய்.
எடை குறைப்பு சிகிச்சையினால் புரத குறைபாடு ஏற்பட்டு, விட்டமின் பி 12 பாதிப்பால் இரத்த சோகை ஏற்படும்.
•நடப்பதில் சிரமம்
•சமநிலை தவறுதல் (பேலன்ஸ் இழத்தல் )
•உடல் பலவீனம், சோர்வு
•வாய்ப்புண்,நாக்கு அழற்சி
•பார்வை நரம்பு பாதிபினால் பார்வை குறைபாடு.
இதனை ஆரம்ப கட்டத்தில் சரி செய்யத்தவரினால், இதயம், மூளை, நரம்பு, மற்ற உறுப்புகளையும் பாதிக்கும்.
விட்டமின் பி 12 குறைபாட்டினை மருத்துவ பரிசோதனைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். இரத்த அணுக்களின் சோதனை (CBC Count) மூலமும் விட்டமின் பி 12 அளவு ஆகியவற்றினை தெரிந்து கொள்ளலாம் விட்டமின் பி 12 குறைபாடு பொதுவாக காணப்படுவது. சைவ உணவு சாப்பிடுகிறவர்கள், முதியவர்களிடையே இந்தப் பிரச்னை இருக்கிறது. ஆரம்பகட்ட குறைபாடு இருக்கும் பட்சத்தில் அதனை உணவுப் பொருட்களால் சரி செய்ய முடியும்.
•மீன் (குறிப்பாக மத்தி மற்றும் சூரை மீன் )
•கோழிக்கறி,முட்டை
சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் தான்னியம் மற்றும் பயறு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த குறைபாடு அதிகமாக இருக்கும் போது உணவுடன் டாக்டரின் ஆலோசனைப் படி
விட்டமின் பி 12 மாத்திரைகள் அல்லது ஊசி போட்டுக்கொள்ளலாம்.
17 March 2019
Christchurch Terror: Comprehensive coverage
Christchurch Terror: Comprehensive coverage from the Nine newsroom | Nine News Australia
15 March 2019
13 March 2019
"பாரம்பரியம்"-moulavi M. R. M. NIZAM
இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ரமழான் மாதத்தையொட்டி செவ்வாய்க்கிழமை 22/05/2018 இரவு 7.15 க்கு ஒலிபரப்பான "பாரம்பரியம்" பேட்டி நிகழ்ச்சி.
மக்கொன மஹல்லம் கதீப் மௌலவி எம். ஆர். எம். நிஸாம் (பஹ்ஜி) அவர்களை கலாபூஷணம் எம். எஸ். எம். ஜின்னா பேட்டி காண்கிறார். தயாரிப்பு - முஸ்லிம் சேவை பொறுப்பாளர் பாத்திமா ரினோஸியா. ஒலிப்பதிவு உதவி "பாத்திமா மைந்தன்" அன்சார்.
அண்மையில் மௌலவி எம். ஆர் எம். நிஸாம் (பஹ்ஜி) அவர்கள் இறையடி சேர்ந்தார்கள். அன்னாருக்கு வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க பிரார்த்திக்கிறோம்.
Thanks:Najmul Hussain
06 March 2019
மெட்போமின் (Metformin) போலி வதந்தி
Dr. Anfas Farook
மெட்போமின் (Metformin) போலி வதந்தி
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
ஒரு நாள் அவசர சிகிச்சை பிரிவில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறு குழந்தைக்கு சிகிச்சையளித்து
க்கொண்டிருந்த வேளை, சுய நினைவிழந்த நிலையில் இன்னுமொரு அவசர நோயாளி உள்ளழைத்து வரப்பட்டார். சுமார் 45 வயதுடைய நபர், மனைவி மற்றும் இரு குழந்தைகள் வெளியே அழுத வண்ணம் வீற்றிருந்தனர்.
சிகிச்சையின் முதல் படி, அவருடைய குருதி சீனி மட்டம் பரிசோதிக்கப்பட அது "HI" என காட்டப்பட்டது, அதாவது கருவியால் பெறுமானத்தை குறிப்பிட முடியாத அளவில் மிக அதிகமாக காணப்பட்டது. மேலதிக தகவல்கள் மனைவி அழைக்கப்பட்டு பெறப்பட்டு உடனடியாக சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டன.
"அவர் அண்மையில் தான் நீரிழிவு (சீனி வியாதி) ஆல் பாதிக்கப்பட்டார், வைத்தியர் அவருக்கு மெட்போமின் (metformin) மாத்திரை வழங்கினார். ஓரிரண்டு தினங்கள் தான் அதைப் பாவித்தார், எங்கட பக்கத்து வீட்டு தாத்தா இன்னும் நிறைய பேர் சொன்னாங்க, வட்சப்ல(whatsapp) கூட மெசேஜ் எல்லாம் வந்திச்சி... metformin அ மட்டும் கொடுத்திட வேணாம், அது kidney அ பாதிக்குமாம்......, வேர கைமருந்து இருக்கு அத கொடுங்க, சும்மா இருக்கிற மனுசன்ட kidney ய பழுதாக்க ஏலுமா?? நிறைய பேர்ட கிட்னி(kidney) பழுதாகி போய்ட்டாம்..... "
இதுதான் அந்த பெண் கூறிய கதையின் சாராம்சம். இன்று நிறைய பேர் இந்த மனநிலையில் தான் இருக்கிறார்கள். 5ம் ஆண்டு வரை படித்த பக்கத்து வீட்டு தாத்தாவின் கதை இன்னும் தெருவோர கதைகளையும் மனதார ஏற்றுக்கொள்ளும் அதே வேளை வைத்திய பரிந்துரையை உதரித்தள்ளி நடக்கின்றனர். மருந்துகள் பருகும் போது மாத்திரம் side effects , பாதிப்புகள் பற்றி அக்கறையாக கேட்பவர்கள், வெகு சாதாரணமாக சிகரட் புகைக்கின்றனர், உண்ணும் உணவுகள் கூட உடம்புக்கு பெரிதும் தீங்கு விளைவிப்பவையையே எடுக்கின்றனர். இந்த மருந்து பருகும் போதான தெளிவு உணவு மற்றும் ஏனைய நடவடிக்கைகளின் போது இருந்தால் மருந்து பருகுவதற்கான தேவையே ஏற்பட்டிருக்காது என்பது கசப்பான உண்மை.
மெட்போமின் (Metformin) என்பது பல தசாப்தங்களாக சர்க்கரை வியாதிக்கு பயன்படுத்துகின்ற மிகவும் பாதுகாப்பான ஒரு மருந்து வகையாகும். எனினும் சில அரைகுறைகளின் kidney பாதிப்பு போலிப்பிரச்சாரம் காரணமாக இதனை பாவிக்க தயக்கம் காட்டுகின்றனர். மருந்து பாவிக்காததன் காரணமாக குருதியில் உள்ள குளுக்கோசு அளவு அதிகமாக மாறுபடுவதன் காரணமாகவே kidney பாதிப்பு ஏற்படுகிறதே தவிர metformin காரணமாக அல்ல என்பதுவே உண்மை. எனினும் இவ்வாறு kidney பழுதடைந்த நிலையில் metformin மாத்திரை தவிர்க்கப்படுகின்ற காரணத்தைக்காட்டியே இந்த போலி பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்ட
ிருக்கிறது. இந்நிலை மெட்போமினுக்கு மாத்திரமன்றி ஏனைய பல மாத்திரைகள் மற்றும் உணவுகளுக்கும் பொதுவான விடயமென்றாலும் போலிப்பிரச்சாரம் metformin மேல் திணிக்கப்பட்டு அதன் பாவனை தவிர்க்கப்பட்டு சர்க்கரை நோயாளியின் நோயின் வீரியம் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது.
மெட்போமின் (Metformin) என்பது நீரிழிவு நோயின் போது பயன்படுத்தப்படுகின்ற பிரதான ஆரம்ப கட்ட மாத்திரையாகும். இது குருதியிலுள்ள குளுக்கோசு(சீனி) அகத்துறிஞ்சப்படும் வேகத்தை கூட்டி குருதியிலுள்ள குளுக்கோசு மட்டத்தை குறைத்து நோயை சிறந்த முறையில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.
மெட்போமின் என்பது சர்க்கரை வியாதிக்கு மாத்திரமன்றி இன்னும் பல நோய் நிலமைகளில் பயன்படுத்தப்படுகின்ற பாதுகாப்பானதொரு மருந்து வகையாகும்.
உதாரணமாக பெண்களில் ஏற்படுகின்ற policystic ovarian syndrome (PCOS) என்று சொல்லப்படுகின்ற மாதவிடாய் தொடர்பான பிரச்சினையின் போதும், obesity என்று சொல்லப்படுகின்ற அதிகரித்த உடல் நிறை காணப்படுகின்ற போதும் மெட்போமின் வழங்கப்படுகிறது. மெட்போமின் (metformin) என்பது சர்க்கரை வியாதி உள்ள நோயாளிகளின் kidney களை மாத்திரமன்றி மற்றைய சாதாரண மனிதர்களுடைய kidney களையும் பாதுகாக்கிறது என்பதே உண்மையாகும்.
Metformin ஒரு பாதுகாப்பான மாத்திரைதான் என்பதற்கு பல காரணங்களை கூறிக்கொண்டு செல்லலாம்.
சர்க்கரை நோய்க்கு பயன்படுத்தப்படும் மற்றைய மாத்திரைகள் மிகவும் அளவுக்கு அதிகமாகவே குருதி குளுக்கோசு அளவைக் குறைத்து சில வேளைகளில் ஆபத்தை ஏற்படுத்தினாலும் இந்த metformin ஆனது ஒருபோதும் அவ்வாரான ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தாது, உடலுக்கு பாதுகாப்பான சாதாரண பெறுமானத்துக்கே குறைக்கவல்லது.
மெட்போமின் ஆனது குருதி சீனி மட்டத்தை மாத்திரமல்லாது கொலஸ்திரோல் மட்டத்தையும் குறைப்பதோடு ஒருவருக்கு மாரடைப்பு போன்ற இதய நோயிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது. அதுமாத்திரமன்றி இவ்வாறான நோயுள்ளவர்களின் kidney களையும் பாதுகாக்கிறது.
மெட்போமின் பருகுவதால் வாந்தி, வயிற்றோட்டம் போன்ற சிறு பக்க விளைவுகளே ஏற்படுகிறது. சிலருக்கு தசை வலிகள் போன்றனவும் ஏற்படலாம். இந்த மாத்திரை பல்வேறுபட்ட வியாபார நாமங்களில் தற்போது சந்தையில் கிடைக்கிறது.
எனவே இவ்வாறான போலி வதந்திகளை நம்பி ஏமாறுவதனால் உங்கள் அன்புக்குறியவர்கள் உங்களை ஏமாற்றி இந்த உலகையே விட்டுச்செல்லும் நிலமை ஏற்பட்டு விடலாம். அரைகுறைகளினதும் தெருவோர வைத்தியர்களினதும் கைகளில் உங்கள் சுகாதாரத்தையும் உயிரையும் கையளித்து விடாமல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த வைத்தியரிடமே அறிவுறை பெற்று சந்தோசமாக வாழ்க்கையை கொண்டு செல்லுங்கள்.
Dr. Anfas farook