தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

10 July 2018

தாய்லாந்து குகை: மீட்புப்பணி வெற்றிகரமாக நிறைவு


கடந்த 17 நாட்களாக தாய்லாந்திலுள்ள குகையில் சிக்கியிருந்த 12 சிறுவர்கள், அவர்களது பயிற்சியாளர் மற்றும் இந்த மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த முக்குளிப்பு வீரர்கள், மருத்துவர்கள் என அனைவரும் குகையிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



தாய்லாந்தின் சியாங் ராய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை இன்னும் சற்று நேரத்தில் அவர்களது குடும்பத்தினர் சந்திக்கவுள்ளனர்.
முக்குளிப்பு வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
சிறுவர்களை மீட்பதற்காக குகைக்குள் சென்ற மீட்பு குழுவில் இடம்பெற்றிருந்த நான்கு கப்பற்படை வீரர்கள் மற்றும் ஒரு மருத்துவர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்கள் இன்னும் சில நிமிடங்களில் குகையை விட்டு வெளியே வந்துவிடுவார்கள் என்றும் மீட்பு பணியின் தலைவர் தெரிவித்திருந்தார்.
மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர் அனுமதிக்கப்பட்டுள்ள சியாங் ராய் மருத்துவமனையின் முன்பு கூடியுள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Source :BBC

09 July 2018

தாய்லாந்து குகையில் மீட்புப் பணி மீண்டும் தொடக்கம்: தொடக்கம் முதல் நடந்தது என்ன?


தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கிய மீட்புப் பணியாளர்கள் 4 சிறுவர்களை பாதுகாப்பாக நேற்று மீட்டு வந்தனர். மீதம் உள்ள சிறுவர்களை மீட்கும் பணி இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது
தேர்ச்சி பெற்ற இரண்டு முக்குளிக்கும் வீரர்கள் ஒவ்வொரு சிறுவருடனும் நீந்தி, நீரில் மூழ்கிய கடினமான குகைப்பாதையைக் கடந்து சிறுவர்களை அழைத்து வந்தனர். இதையடுத்து, மீட்பு வீரர்களின் காற்றுக் குடுவையை மாற்றுவது உள்ளிட்ட பணிகள் காரணமாக நேற்றிரவு மீட்புப் பணி தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

08 July 2018

தாய்லாந்து குகை: "சிறுவர்களை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்பு"


கடந்த இரண்டு வாரங்களாக தாய்லாந்தில் குகையொன்றில் சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை நான்கு நாட்களில் மீட்க வாய்ப்புள்ளதாக மீட்புப்பணி குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரை அங்கு சூழ்நிலை "கச்சிதமாக" உள்ளதாக நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார்.

ஆனால், தற்போது அந்த பகுதியில் பொழிந்து வரும் பருவமழை தொடர்ந்தால், குறுகிய பாதையை கொண்டுள்ள குகை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படும் என்ற கவலை நிலவுகிறது.
கடந்த ஜூன் 23ஆம் தேதி இந்த குகையை பார்ப்பதற்காக சென்ற கால்பந்து வீரர்களான இந்த 12 சிறுவர்களும், அவரது பயிற்சியாளரும் அங்கு நீர்மட்டம் உயர்ந்ததால் சிக்குண்டனர்.
குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணி தீவிரம்
குகையில் சிக்கியுள்ளவர்களுக்கு தேவையான உணவு, ஆக்ஸிஜன் மற்றும் மருத்துவ உதவிகளை மீட்புப்பணி குழுவினர் அளித்து வரும் வேளையில், அவர்களை குகையிலிருந்து மீட்பதற்கான பணியில் சர்வதேச குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.