தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

26 March 2016

கூகுள் Street View வும் நம்ம ஊரும்


மேற்குலகில் சில வருடங்களுக்கு முதல் அறிமுகத்திற்கு வந்த Google street view என்னும் வசதி இப்பொழுது இலங்கைக்கும் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இலங்கையின் பெரும்பாலான பகுதிகளை இந்த வசதியினூடாக பார்வையிடக் கூடியதாகவுள்ளது.
இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் வசிக்கும் மக்கள் அனைவரும் இப்போது தங்கள் கையடக்கத்தொலைபேசி அல்லது கணினியில் இருந்து 360-டிகிரியில் அழகான படங்களில் இலங்கையை பார்வையிட முடியும்
http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights

மிகத் தெளிவான வசதியினைக் கொண்டிருக்கும் இந்த கூகுள் Street View  மிகப்பெரிய வரப்பிரசாதமாக தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த வசதி உலகில் 76 நாடுகளிலே பாவனைக்கு உள்ளது.
கிடைக்கும் பாதை படத்தை(Street view) மக்கள் ஆராய்ந்து தாங்கள் செல்ல விரும்பும்இடங்களுக்கு செல்ல முடியும் என்று கூகுள் வரைப்படம் (Google Maps) தெரிவிக்கிறது.
கூகுள் வரைபடத்தில் ஒரு இடத்தை பெரிதாக்குவதன் மூலம் வீதி நிலை படங்களை அணுக முடியும், அல்லது வரைபடத்தின் கீழ் வலது மூலையிலிருக்கும் மஞ்சள் "pegman" Icon அழுத்துவதன் மூலம் இந்த சேவையை பெற்று கொள்ளலாம்.
Smart phone இல் பார்வையிட play store இல் Google Earth என்ற App மூலம் இலகுவாக பார்வையிடலாம்.





மக்கொன Radiant Nursery  சிறுவர் சந்தை(படங்கள் இணைப்பு)


மக்கொன Radiant Nursery  சிறுவர் சந்தை 24-03-2016 அன்று வியாழக்கிழமை காலை நடை பெற்றது.இச்சிறுவர் சந்தையில் ரேடியன்ட் முன்பள்ளி சிறார்கள் மிகுந்த உற்சாகத்துடன் பங்குபற்றிய அதேவேளை பெற்றோர்களும் ஆர்வத்துடன் கலந்து
கொண்டனர்.
கொடுக்கல்-வாங்கல் மற்றும் கணக்கு முறை அளவிடல் மற்றும் உரையாடல் ஆகியவற்றினை சிறுவர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இந்த சிறுவர் சந்தை முன்பள்ளிகளில் நடை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நிகழ்வுகளில் சில:










முன்னய பதிவுகள் சில
Link 1
Link 2

06 March 2016

ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.(வீடியோ இணைப்பு)



ஒளிபுகும் வடிவிலான தோற்றத்தை கொண்ட ஆக்டோபஸ் ஒன்று ஹவாயில் கடலின் அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த உயிரினம் கிட்டத்தட்ட ஒரு புதிய வகையைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நேக்கர் தீவிலிருந்து கிட்டத்தட்ட 2.5 மைல்கள் தொலைவில் வைத்து, நீரின் அடியில் பயணிக்கும் நீர்மூழ்கி வாகனம் ஒன்று இதனை கண்டுபிடித்துள்ளது.
கரங்கள் இல்லாத ஆக்டோபஸ் கடலின் ஆழத்தில் உள்ளது மிகவும் அரிது என என்.ஓ.ஏ.ஏ எனப்படும் தேசிய கடல் மற்றும் வளிமண்டலவியல் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உயிரினத்திற்கு கேலிச்சித்திரத்தில் வரும் ஆவியின் பெயரான `கஸ்பர்' என்ற பெயரிடப்பட்டுள்ளது.

05 March 2016

`புற்றுநோய்க்கு புதிய சிகிச்சை முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது'



மனித உடலில் `நோயெதிர்ப்புக் கட்டமைப்பை ஒழுங்குபடுத்தி' புற்றுநோயை அழிக்கும் முறைமை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, பிரிட்டனில் உள்ள ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோய் உள்ள செல்களுக்கு உள்ளே, இயல்பாகவே இருக்கும் பலவீனம் ஒன்றை தாம் கண்டறிந்துள்ளதாக யுனிவர்சிட்டி காலேஜ் ஆஃப் லண்டனைச் (யு.சி.எல்) சேர்ந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உடலில் உள்ள சிறப்பான நோய்த்தடுப்பு செல்களான T- செல்கள், புற்றுநோய் கட்டிகளை கண்டறிந்து அழிக்க வழி ஏற்படுத்துவதாக இந்த கண்டுபிடிப்பு உள்ளது.
இதன் மூலம் நோய் முற்றிய நிலையில்கூட, அதற்கு தனிப்பட்ட வகையில் சிகிச்சை வழங்க முடியும் என்றும், ஆய்வாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
பணச் செலவுமிக்க இந்த சிகிச்சை முறைமை, இன்னமும் மனிதர்களிடத்தில் பரிசோதிக்கப்படவில்லை எனவும், இரண்டு ஆண்டுகளினுள் அது மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் நோயைக் குணப்படுத்துவது சாத்தியமே எனத் தெரிவிக்கும் துறைசார் வல்லுனர்கள், ஆனாலும் இது ஒரு சிக்கலான முறை என தெரிவித்துள்ளனர்.
புற்றுநோய்க்கான இந்த புதிய கண்டுபிடிப்பினை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இந்த நோய்க்கான சிகிச்சை முறைகள் பல கண்டுபிடிக்கப்படலாம் என்ற நம்பிக்கையினை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்விற்கு ஆதரவு வழங்கிய கான்சர் ரிசர்ச் யு.கே நிறுவனம், இந்தக் கண்டுபிடிப்பை வரவேற்றுள்ளது.
நன்றி:BBC