தங்களின் வருகைக்கு நன்றி

date

relojes web website clocks

11 March 2012

'தயாரிப்புமுறையை' மாற்றும் கோலா நிறுவனங்கள்

அமெரிக்க சந்தையில் 90 வீதமான குடிபானங்களை கொக்ககோலா, பெப்சி நிறுவனங்களே தயாரிக்கின்றன

பொதுவாக, நாம் அன்றாடம் சுவைத்து பருகும் பல குடிபானங்களிலும் திண்பண்டங்களிலும் காணப்படும் ஒருவகை நிறக்கலவைப் பதார்த்தம் தான் 4மீ எனப்படும் 4மெத்யில்இமிடாசோல் என்ற இராசயனப் பொருள்.

இது உடலில் சேர்வது புற்றுநோயைக் கொண்டுவரலாம் என்ற அச்சமிருப்பதால் குடிபானங்களிலும் தின்பண்டங்களிலும் அந்தக் கலவை இருப்பதற்கான எச்சரிக்கை பொறிக்கப்பட வேண்டும் என்று சட்டம் வந்துள்ளதாலேயே அவற்றின் தயாரிப்பில் உள்ள உட்சேர்க்கைப் பதார்த்தங்களில் மாற்றம் கொண்டுவர நிறுவனங்கள் முன்வந்துள்ளன.

10 March 2012

இருதய மாற்றுப் பாதை சிகிச்சை!

பிரபல மருத்துவரும், ஸைன்ஸ் அண்ட் ஆர்ட் ஆஃப் லிவிங் ( SAAOL ) என்ற பெயரில் இதய சிகிச்சைக்கான நிகழ்ச்சிகளின் நிர்வாக இயக்குனருமான Dr. Bimal Chhajer அவர்கள் எழுதிய Natural Bypass Theraphy என்ற அரிய ஆக்கத்தினை தமிழில் வாசகர்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம் - சத்தியமார்க்கம்.காம்

கருப் பொருள் : இறைவன் நமது இருதயத்தில்ஆயிரக்கணக்கான தமனிக்குழாய்(Arteries)களைவழங்கியுள்ளான். இருதயத்திலிருந்து பிரியும் தலையாய மூன்று தமனிகள் பத்து கிளைகளாகப் பிரியத் தொடங்கி, அந்தப் பத்துக் கிளைத்தமனிக் குழாய்கள் நூறு கிளைகளாகவும் அந்த நூறு கிளைகள் பிரிந்து-பிரிந்து ஆயிரக்கணக்கான தமனிக் கிளைக்குழாய்களாக நம் உடலில் படர்ந்து வியாபிக்கின்றது. இந்தப் பல்லாயிரக் கணக்கான தமனிக் கிளைக்குழாய்கள் மயிரிழையை ஒத்த நுண்ணிய இழைகள் எனப்படுகின்றன; சுருக்கமாக இவற்றை தந்துகிகள் (Capillary) என அழைப்போம்.
இந்தத் தந்துகிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளதால் இரத்தத்தை இருதயத்திற்குச் செலுத்தவும் திரும்பப் பெறவும் தக்க இருவழி ஓடுபாதைகள் போன்று அமைந்திருக்கின்றன. இந்தத் துணைக் குழாய்களும் இருதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு சேர்க்கவல்லவையாதலால் பெருந்தமனியில்/தமனிகளில் ஏதேனும் சிறிய அல்லது பெரிய அடைப்பு ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில், மாற்றுப் பாதையாகப் பயன் படுத்திக் கொள்ளத் தக்க வகையில் கிளைக் குழாய்களை இறைவன் படைத்திருக்கிறான்.